உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார். அமெரிக்காவில் இனக்கலவரம் வெடித்துள்ளதாலும், ஈராக் விவகாரத்தாலும் அவர் தனது விடுமுறையைக் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோடை விடுமுறையை தற்காலிகமாக ரத்து செய்து விட்டு தலைநகருக்கு வந்து விட்டார். கோல்ப் ஆடுவது, சைக்கிளிங் செய்வது, கடற்கரைக்குப் போய் ஜாலியாக குடும்பத்துடன் செலவிடுவது என பல திட்டங்களை வைத்திருந்தார் ஒபாமா. ஆனால் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனக் கலவரம் வெடித்துள்ள நிலையில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிபர் ஒபாமா, கோடை விடுமுறைக்குப் போனது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்: சீக்கியர் மீது துப்பாக்கி சூடு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்களுக்கு இடையே முன்விரோதம் எது…
-
- 0 replies
- 279 views
-
-
[size=3][size=4]அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின், தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) ஓட்டுகள் மூலம், அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மொத்தம், 538 ஓட்டுகளில், 270 ஓட்டுகள் பெறுபவரே அதிபராக நியமிக்கப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன், அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளர்கள் …
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகல் 30 September 2025 அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்த நாட்டு அரசு ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் பதவி விலகவுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாகக் குறையும…
-
- 0 replies
- 255 views
-
-
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 இலட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூ…
-
- 0 replies
- 326 views
-
-
Tennessee-துப்பாக்கிதாரி ஒருவர் பணியமர்த்தல் மையம் மற்றும் ஒரு யு.எஸ்.இராணுவ தளம் ஆகிய இரண்டிலும் துப்பாக்கி குண்டுகளை பொழிந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது. இச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது நான்கு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்கியவரும் கொல்லப்பட்டார்.இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என கருதப்படுவதாகவும் இந்த வழக்கின் பொறுப்பை FBI ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி 24-வயதுடைய மொகமட் யுசுவ் அப்துல்லாசீஸ் என்ற Tennessee சேர்ந்தவரெனவும் இவரது முதல்பெயர் சர்ச்சைக்குரியதாகவும் கருதப்படுவதோடு இவர் குவைத்தில் பிறந்தவர் எனவும் நம்பபடுகின்றது. இவர் யு.எஸ். பிரசையா அல்லது குவைத் பிரசையா என்பது தெளி…
-
- 2 replies
- 496 views
-
-
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி by : Litharsan அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெர…
-
- 4 replies
- 645 views
-
-
ஞாயிறு 08-01-2006 22:20 மணி தமிழீழம் [அமெரிக்க நிருபர் ] அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை. அமெரிக்காவின் சண்ரைஸ் பிரதேசத்தில் இரு இலங்கைப் பெண்களது சடலங்கள் அப்பிரதேச காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சொர்ணமணி முத்துலிங்கம்(வயது 63) அவரது மருமகள் ரசேல் லவன் (வயது 43) ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்களுக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரசேல் லவன் கணக்களாராக மியாமி-டேட் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாமியார் தனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக அன்மையில்தான் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்தார். விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விச…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா! அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெ…
-
- 4 replies
- 407 views
-
-
அமெரிக்காவில் இருந்து போதைப் பொருள் கடத்திய 2 விமானங்களை வெனிசுலா ராணுவம் சுட்டு வீழ்த்தியது மத்திய அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டின் வான் எல்லை வழியாக போதைப் பொருட்களை கடத்தி சென்ற 2 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வெனிசுலா அறிவித்துள்ளது. வெனிசுலா வழியாக போதைப்பொருட்களை கடத்தி செல்லும் விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த 2ம் தேதி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இன்றிலிருந்து எங்கள் நாட்டின் வான் எல்லையின் மீது பறக்கும் மர்ம விமானங்களுக்கு முதலில் அமைதியான முறையில் தரையிறங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவை மதிக்காத விமானங்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும் என போதைப்பொருள் கும்பல்க…
-
- 0 replies
- 719 views
-
-
அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! by : Anojkiyan அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயற்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுவயதி…
-
- 0 replies
- 358 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…
-
- 0 replies
- 284 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …
-
- 0 replies
- 242 views
-
-
அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு! உலகம் முழுவதும் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் நேற்று உயிரிழப்புக்கள் சடுதியாகக் குறைந்துள்ளன. உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் 88 ஆயிரத்து 997 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41 இலட்சத்து ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 80…
-
- 7 replies
- 705 views
-
-
அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்…
-
- 3 replies
- 376 views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் கோர்ட்டுகளில் அவ்வப்போது வினோத வழக்குகள் வரும். இதுபோல அமெரிக்காவில் ஒஹியோ பகுதியில் சின்சினாதி என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஆப்ரே(21) என்பவர் தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் நான் கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போனில் கண்காணிப்பு சாப்ட்வேரை பொருத்தி உளவு பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாணவியை விட்டு 500 அடி தள்ளியே இருக்க வேண்டும், தொடர்பு வைப்பதை நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டார். பெற்றோர் மீது வழக்கு தொடுத்த கல்லூரி மாணவியின் படம் பார்க்க....
-
- 0 replies
- 725 views
-
-
அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம் அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் படுகாயம் அடைந்டதுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீஸ் அதிகாரி ஜரோட் புர்குவான் கூறுனார். இதுகுறித்து புர்குவான் தெரிவித்ததாவது, வடக்கு எச் தெருவில் உள்ள பார்க் தொடக்கப்பள்ளியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத…
-
- 0 replies
- 171 views
-
-
தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி ஜனாதிபதி ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச உடன்படிக்கைகளை புறக்கணித்து வடகொரியா 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. 3 முறை அணு குண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அதிரடியாக அணு குண்டை விட அதிபயங்கர சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதற்காக உலக நாடுகள், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பிப்ரவரி மாதம் 7-ந் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது ராக்கெட் சோதனை என்று கருதப்ப…
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பதிவு: மே 10, 2020 09:59 AM வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் பிளசன்டன் என்ற இடத்தில் அப்னா பஜார் என்ற பெயரில் இந்தியரான ராஜ்விந்தர் சிங் என்பவர் பிரபலமான மளிகைக்கடையை நடத்தி வந்தார் இவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட் களை அநியாய விலைக்கு, அதுவும் 200 சதவீதம் அளவுக்கு விலைகளை உயர்த்தி விற்பனை…
-
- 1 reply
- 812 views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமா…
-
- 1 reply
- 176 views
-
-
அமெரிக்காவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தவறாக கருதி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெப்ராஸ்கா மாகாணத்தின், ஒமாஹா நகரில் உள்ள பிரபல உணவகத்தில் இந்தியாவை சேர்ந்த சுதாகர் சுப்புராஜ்(30), சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று சுப்புராஜ் உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுப்புராஜை பலமாக முகம் மற்றும் வாயில் தாக்கினர்.இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நபர் சுப்புராஜை அடிக்கும் போது ஐஎஸ் எங்கள் நாட்டை விட்டுவெளியே போ என்று உரக்ககத்தி விட்டு, அங்கிருந்து ஓடி விட்டார். இதை அறிந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இது…
-
- 0 replies
- 343 views
-
-
அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூ…
-
- 0 replies
- 369 views
-
-
மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” - இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது. நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது By T. SARANYA 07 OCT, 2022 | 02:55 PM அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-