Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தீவிரவாத அமைப்பு என தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமத் சயீத் காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வெளியேறுகிறது. இந்நிலையில், இந்தியாவும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஹபீஸ் அடவாடியாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் இதனை தெரிவித்துள்ளார். ஹபீஸுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயகத்திற்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின்படி இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dailythanthi.com/2014-01-13-India-will-be-forced-to-Kashmir-just-like-US-in-Afghanistan-Hafiz-S…

  2. ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை ந…

  3. துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil

  4. Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 12:48 PM ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இராணுவஇரகசியங்களை திருடி அம்பலப்படுத்தியதை மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது. யுத்த குற்றங்கள்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம…

  5. ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர். தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர். இந்த வாரம் அமெரிக்கப் பட…

    • 2 replies
    • 533 views
  6. ஆப்கானில் இரண்டு ஜனாதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் உள்நாட்டு போர் உருவாகும் அபாயம்! by : Anojkiyan ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கானி, நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்க…

  7. ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்! இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார். 38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெல…

  8. ஆப்கானில் இளவரசர் ஹாரி . Friday, 29 February, 2008 02:30 PM . லண்டன், பிப்.29: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி பங்கெடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகிவுள்ளது. . கடந்த கிருஸ்துமஸ் பண்டிகை முதலே இளவரசர் ஹாரி "புல்லட் மேக்னட்' என்ற புனை பெயரில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு சாதாரண வீரனாக செயல்பட்டு வருகிறார் என்று "தி டிரட்ஜ் ரிப்போர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கிற்கு சென்று இளவரசர் ஹாரி போர் பயிற்சி பெற திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஆப்கானிஸ் தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் போர…

  9. இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரி தான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமா…

  10. ஆப்கானில் உள்ள 5 இராணுவத் தளங்களை மூடியது அமெரிக்கா நான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து இராணுவ தளங்களை அமெரிக்கா மூடியதாக பென்டகன் அதிகாரி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹெல்மண்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களையே அமெரிக்கா இவ்வாறு மூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவா…

  11. ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு சன்மானம் வழங்குகின்றது ரஸ்யா- புலனாய்வு அதிகாரிபரபரப்பு குற்றச்சாட்டு June 28, 2020 ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு ரஸ்ய புலனாய்வு பிரிவு தலிபான் அமைப்பினை சேர்ந்தவர்களிற்கு சன்மானம் வழங்குகின்றது என ஐரோப்பிய நாடொன்றின் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ரஸ்யாவின் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியாதபோதிலும் அந்த நாடு வழங்கிய சன்மானம் காரணமாக ஆப்கானில் உள்ள சர்வதேச படையினர் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். ரஸ்ய புலனாய்வு பிரிவினரின் இந்த அணுகுமுறை திடுக்கிடவைக்கின்றது கண்டித்தக்கது என …

  12. ஆப்கானில் எல்லைக் கிராமங்கள் தலிபான்கனால் கைப்பற்றப்பட்டன புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] ஆப்கானிஸ்தானில் தனிபான் அமைப்பினரால் எல்லைப்புறக் கிராமங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான ஆக்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தலிபான்களால் பல எல்லைப்புறக் கிராமங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் இப்பகுதிகளுக்கு குவிக்கப்பட்டு எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகத் தெரிவியவருகிறது. தலிபான்களால் பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டிடங்களில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. pathivu.com

  13. ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில்... தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட்…

  14. ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் - யுனிசெவ் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீது 68 தாக்குதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள யுனிசெவ் 2018 இல் 192 பாடசாலைகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வி தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ள யுனிசெவ் பாடசாலைகள் மீதான இந்த அர்த்தமற்ற தாக்குதல்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கொல்லப்படுதல், காயமடைதல் கடத்தப்படுதல் மற்றும் கல்வி…

  15. Published By: SETHU 01 APR, 2024 | 01:15 PM ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180130

  16. காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது.தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில், ஆப்கனை சேர்ந்த, 10 லட்சம் பேரும், 15 ஆயிரம் ரஷ்ய வீரர்களும், கொல்லப்பட்டனர். மேலும், 200 ரஷ்ய வீரர்கள் காணாமல் போயினர். இவர்களில், 20 பேர், தாமதமாக நாடு திரும்பினர்.காணாமல் போனவர்களில், சிலர் இறந்து விட்டனர். எனினும், ஒரு சிலர் பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பாக்ரடின் காகிமோவ் என்ற ரஷ்ய வீரர், ஆப்கானிஸ்தானின், ஹெராத் மாகாணத்தில், வசித்து வருவதாக …

  17. ஆப்கானில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா காபூல்: ஆப்கானில் ஐ.எஸ். புதுங்கியுள்ள பகுதி மீது அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ‛‛மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்ததாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் செய்தி வெளியிட்ட…

  18. ஆப்கானில் சீன ஹோட்டல் மீது தாக்குதல் By RAJEEBAN 12 DEC, 2022 | 05:31 PM ஆப்கான் தலைநகரில் சீனா ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சீனா மற்றும் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் சீனா ஹோட்டலிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/142932 செய்தியில் உள்ளடக்கம் இல்லை! புகை படம் போட்டிருக்கு.

  19. ஆப்கானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 28 படையினரும் 2 பொது மக்களும் பலி [01 - October - 2007] [Font Size - A - A - A] ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 இராணுவத்தினரும், 2 பொதுமக்களும் பலியானதுடன் 21 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸின் மீது நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் பஸ் இரண்டாகத் துண்டாடப் பட்டிருப்பதுடன் தாக்குதல் இடம்பெற்ற இடத்தினைச் சுற்றி மனித உடல்கள் சிதறிக் காணப்படுகின்றன. 2001 இலிருந்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் வரிசைப்படுத்தலின்படி இத் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது. …

    • 0 replies
    • 917 views
  20. ஆப்கானில் தலிபான் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கின்ற அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இன்னும் ஒருமாதகாலமே இருக்கின்ற நிலையில் தலிபான் பாரிய வன்முறையில் ஈடுபட்டு;ள்ளதால் ஆப்கானின் பலபகுதிகளில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. கந்தஹாரின் ஸ்பின்பொல்டாக் மாவட்டத்தில் பொதுமக்களையும் முன்னாள்மாகாண அதிகாரிகளையும் தலிபான் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலை செய்துள்ளது. காஸ்னி மாகாணத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளை தலிபான் அமைப்பு கொலை செய்துள்ளது. அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் தலிபானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை யுத்த குற்றம் என வர்ணித்துள்ளன. சர்வதேச சட்டங்களினால் பாதுகாக்கப்…

    • 0 replies
    • 332 views
  21. ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா! ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்க…

  22. ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர். அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்…

  23. ஆப்கானில் தீவிரவாதிகளுக்கெதிராக பிரிட்டன் படையினரால் பாரிய படை நடவடிக்கை [11 - December - 2007] [Font Size - A - A - A] ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பலத்த கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீட்கும் நோக்குடன் பிரிட்டன் படையினர் பாரிய படை நகர்வொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்ட இப்படை நடவடிக்கையில் ஆயிரக் கணக்கான பிரிட்டன் படையினர் ஈடுபட்டிருப்பதுடன் இது போன்ற பாரிய அளவிலான படை நகர்வு முன்னெப்போதும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படவில்லை. இம் மோதல் நடவடிக்கைகளில் இதுவரை இரு பிரிட்டன் துருப்புகள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனரென பிரிட்டன் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் தரைப் படைக்கு உதவியாக ஹெலிகொப்டர்கள் மற்றும் ஜெ…

  24. ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு! கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. ஒரே இரவி…

  25. ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் ‘செப்.11’ மீளப்பெறப்படும்! ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள அழைப்பதில் உறுதியாகவுள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இதுதொடர்பான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, நியூயோர்க் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் உயிரிழந்ததோடு 25ஆயிரத்திற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.