உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சுவிடலாம்!) ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம். ''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்களேன்?'' ''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ள…
-
- 0 replies
- 799 views
-
-
2ஜி விவகாரம்: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல் டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தில் முன்பு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குனர்ர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து பாஜக குழு வலியுறுத்தியது. வழக்கமாக சிபிஐ இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜாவதேகர் தலைமையில் 5 எம்பிக்கள் அவரை சந்தித்த அனுமதி கோரியதையடுத்து, சிங் அவர்களை அனுமதித்தார். இதையடுத்து ஜாவேத்கர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய குழு ஏ.பி.சிங்கை இன்று சந்தித்து ஸ்பெக்ரம் லைசென்ஸ் விற்பனைக் கொள்கைக்கு ப.சிதம்பரம…
-
- 2 replies
- 368 views
-
-
பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை பிரித்தானியப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குறுகியகாலத்துக்கு பயணம்செய்வதற்கு பிரெக்ஸிற்றின் பின்னரும் விசா அவசியமில்லையென ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விசா விலக்கு பட்டியலில் பிரித்தானியாவை இணைத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஆணையர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும் பரஸ்பர விசா அவசியமின்மை அணுகலை ஐரோப்பியஒன்றிய குடிமக்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் வழங்கும்பட்சத்தில் மாத்திரமே இக்கொள்கை நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறுகியகால பயணங்களுக்கான விசா தேவைகளிலிருந்து இங்கி…
-
- 1 reply
- 400 views
-
-
காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் காஸாவில் இருந்த சில பகுதியில் பற்றி எரிந்தன. 27 அக்டோபர் 2023, 18:26 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீது தரைப்படைகள் தாக்குதலை தொடங்கப் போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அவர் அறிவுறுத்தினார். கடந்த சில வாரங…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
செங்கடலில் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள பன்னாட்டு படை – அமெரிக்கா யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு பன்னாட்டுப் படையைத் தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ் மற்றும் பிரித்தானியா என 10 நாடுகள் இதில் இணையும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு…
-
- 0 replies
- 246 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 04:59 PM ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. மலேரியா நோயால் பாதிக்க…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
உடன்படிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு! 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கையில் இருந்து சனிக்கிழமையுடன் தற்காலிகமாக விலகவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது உடன்படிக்கை மீறப்படுவதை மொஸ்கோ நிறுத்தவில்லை என்றால், உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்குள் முறையாக விலகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார். இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை மீறுவதை மறுக்கிற ரஷ்யா, ஒப்பந்தத்தில் இணங்கிக் கொண்டால், அது ஐரோப்பாவில் குறுகிய மற்றும் நடுத…
-
- 0 replies
- 743 views
-
-
அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம். - நேபாள பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில்? ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். நேபாள நாட்டின் பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில் இவர் தொடர்பாக அச…
-
- 0 replies
- 804 views
-
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228
-
-
- 13 replies
- 857 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஒலிம்பிக் ஸ்பான்சராக போபால் விஷவாயு கம்பெனியா? எதிர்ப்பு வலுக்கிறது ஒலிம்பிக் போட்டியில் டெü கெமிக்கல் நிறுவனம் விளம்பரதாரராக இருக்கும் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் தெரிவிப்போம் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா தெரிவித்தார். போபால் விஷவாயு கசிவுக்குக் காரணமான டெப் கெமிக்கல் நிறுவனம் அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. போபால் விபத்தில் பாதிப்புக்குள்ளான ஏராளமான மக்களுக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடுகளை வழங்காத நிலையில், ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம…
-
- 0 replies
- 489 views
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2024 | 05:45 PM ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களி…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
வட கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் ஜோன்-இல் தனது 69வது வயதில் காலமானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் காலமானார். இவருடைய இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளன. இவருடைய மறைவை அடுத்து 17ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29ம் திகதிவரை வட கொரியாவில் துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. http://youtu.be/klzg5MHHuG8 http://www.saritham.com/?p=44470
-
- 1 reply
- 544 views
-
-
நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல் May 1, 2019 வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நாட்டைவிட்டு வெளியேறுவதாக எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் எனினும் அவர் பின்னர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடிய போதும் ராணுவம் மறுத்துவிட்டது.மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார் …
-
- 0 replies
- 695 views
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 11:49 AM பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது. இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 525 views
- 1 follower
-
-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் பீகார் மாநில சட்டசபை தேர்தல், நாட்டின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கருதி இருந்தனர்…
-
- 1 reply
- 279 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி முண்டோ பதவி, பிபிசி நியூஸ் 12 ஆகஸ்ட் 2024 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது. பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது. …
-
-
- 16 replies
- 1.2k views
- 1 follower
-
-
விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால், கடைசி நேரத்தில் வந்த 2 பயணிகளை, விமான கழிப்பறையில் உட்கார வைத்து கூட்டிச் சென்றுள்ளார் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர். லாகூர்-கராச்சி இடையிலான விமானத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்தபோதுதான் இப்படி நடந்துள்ளார் விமானி. வி்மானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியுள்ளது. அந்த இரண்டு பேரையும் டாய்லெட்டில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ள…
-
- 3 replies
- 1k views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியுள்ளனர். நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறுமீனவர்கள் கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர். பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீன…
-
- 6 replies
- 940 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலைக்கு நீதி கேட்டு கனடாவில் சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. எழுதியவர், குஷ்ஹால் லாலி பதவி, பிபிசி செய்தியாளர், பிராம்டன் "நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்", என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார். இந்தியா - கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனட…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
இந்தியாவிற்குச்செல்கிறீர்க
-
- 4 replies
- 1.7k views
-
-
கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் இரண்டு மாத்ததுக்குள் செயல்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் உலைக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை இயக்குவது மக்கள் போராட்டம் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போய் உள்ளது. தமிழக அமைச்சரவை அணுமின் நிலையப் பணிகளைத் துவங்கலாம் என்று அனுமதி அளித்த அடுத்த நாளில் இருந்து அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டன…
-
- 2 replies
- 567 views
-
-
பிரெஞ்ச் தலைநகர் பாரிஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பிரான்ஸ் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா உதவும் என ஒபாமா துருக்கியில் அறிவித்துள்ளார். துருக்கியில் இன்று தொடங்கிய ஜி-20 உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே பராக் ஒபாமா இதைத் தெரிவித்தார். திரிபுபடுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், மனிதர்களை கொலை செய்வது என்பது, நாகரீக உலகின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என, துருக்கிய அதிபர் எர்துவானுடன் இணைந்து உரையாற்றும் போதே ஒபாமா கூறினார். I பாரிஸில் உயிரிழந்தவர்களுக்கு அ…
-
- 2 replies
- 705 views
-
-
பிரான்சின் , பாரிஸ் நகர தாக்குதல் திட்டத்தை தீட்டியவர் என கருதப்படும் அப்துல்ஹமீட் அபாவுட் கொல்லப்பட்டமையை பிரான்ஸ் நேற்று அறிவித்தது. 27 வயதான , பெல்ஜியப் பிரஜையான அவரின் மரணம் , மரபணு பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. 'செயிண்ட் - டெனிஸில் ' இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 6 மணித்தியால துப்பாக்கிச் சண்டையின் பின்னரே அபாவுட் கொல்லப்பட்டுள்ளார். ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்பட்ட துடன் , கைக்குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அபாவுட் இதற்கு முன்னரும் பிரான்சில் நான்கு முறை …
-
- 0 replies
- 561 views
-