உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா | இந்தியாவுடன் இணையுமா அமெரிக்கா
-
- 5 replies
- 669 views
-
-
பிரேசிலில் கொரோனாவால் ஐந்தரை இலட்சம் பேர் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 550,502 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பிரேசிலில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அத்தோடு, கொரோனா வைரஸால் உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு வசதியும், மூன்று பேரில் ஒருவருக்கு வென்டிலேட்டர் வசதியும் கிடைத்திருக்கவி…
-
- 0 replies
- 329 views
-
-
ஈராக்கில்... இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை, எதிர்த்துப் போராட இனி அமெரிக்க துருப்புக்கள் தேவையில்லை! நாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வாரம் பைடன் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பிற்கான கால அட்டவணை இருக்கும். ஈராக்கின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும், அமெரிக்க தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் இல்லாமல் நாட்டைக் காக்கும் திறன் கொண்டவை. ஈராக் பாதுகாப்புப…
-
- 0 replies
- 228 views
-
-
பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர் மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JUSTIN SULLIVAN படக்குறிப்பு, வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று. பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என…
-
- 0 replies
- 648 views
- 1 follower
-
-
வன்முறை போராட்டங்களின் பின் துனிசியா பிரதமர் பதவி நீக்கம் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து துனிசியாவின் ஜனாதிபதி, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் தவறாக கையாள்வது தொடர்பாக பல துனிசிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. இந் நிலையில் ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கைஸ் சையத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் இடையே அதிகாரங்களை பிரிக்கும் துனிசியாவின் 2014 அரசியலமைப்பிற்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் …
-
- 0 replies
- 236 views
-
-
ஆப்கான் பாதுகாப்பு படையின் சிறப்பு நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 262 தலிபானியர்கள் பலி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது. ஆப்கானிய படைகளின் விசேட நடவடிக்கைகளின் போது 176 தலிபான் பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், 21 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லக்மான், நங்கர்ஹார், நூரிஸ்தான், குனார், கஸ்னி, பக்தியா, காந்தஹார், ஹெராத், பால்க், ஜோவ்ஜன், ஹெல்மண்ட், குண்டுஸ் மற்றும் கபீசா ஆகிய மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரி…
-
- 0 replies
- 382 views
-
-
வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா !! அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும்…
-
- 0 replies
- 331 views
-
-
கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தில் 12,890 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 மில்லியன் மக்கள் தொகையில் சு…
-
- 0 replies
- 161 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில், கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு! டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் ப…
-
- 1 reply
- 240 views
-
-
பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும் ஃசைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது…
-
- 1 reply
- 273 views
- 1 follower
-
-
குரங்கம்மை பாதிப்பு: அமெரிக்காவில் 200 பேரை தேடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 27 மாகாணங்களில் 200 பேருக்கும் மேற்பட்டோர் அரிய வகை குரங்கம்மையால் (Monkey pox) பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புள்ள 200 பேரைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸிற்கு வந்த ஒரு நபர் மூலம் மக்களுக்கு இது பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கருதப்படுகிறது. அந்த நபர் மருத்துவமனையி…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் விற்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி ஆகியோருக்கு சொந்தமான டஜன் கணக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்ய தனியார் இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ் ஸ்பைவேர்' பயன்படுத்தப்பட்டது என்று வொஷிங்டன் போஸ்ட் மற்றும் 16 பிற செய்தி நிறுவனங்கள் நடத்…
-
- 3 replies
- 683 views
- 1 follower
-
-
சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா , இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் பாகிஸ…
-
- 2 replies
- 437 views
-
-
நெருக்கடிக்களுக்கு மத்தியில் ஹெய்டிக்கு புதிய பிரதமர் நியமனம் ஹெய்டியின் புதிய பிரதமராக ஏயல் ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸின் படுகொலை ஆழ்ந்த பிளவுபட்ட கரீபியன் தேசத்தை அதிக அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய இரண்டு வாரங்களுக்குள் இந்த நியமனம் வந்துள்ளது. முன்னாள் பிரதம அமைச்சர் கிளாட் ஜோசப் இந்த வார தொடக்கத்தில் "தேசத்தின் நன்மைக்காக" பதவி விலகுவதாகக் கூறினார். சனிக்கிழமையன்று சர்வதேச இராஜதந்திரிகளின் ஒரு முக்கிய குழு ஹென்றிக்கு ஆதரவாக வந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந் நிலையிலேயே செவ்வாயன்று தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நடைபெற்ற விழாவின்போது ஹென்றி, பிரதமர் பதவியை முறையாக ஏற்றுக்கொண்டார். …
-
- 2 replies
- 500 views
-
-
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்களாக நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பேர் மீட்பு வடமேற்கு நைஜீரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 100 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த குழு ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டது. இதன்போது நால்வரும் கொல்லப்பட்டனர். ஜம்பாரா மாநில அரசு எந்தவிதமான மீட்கும் தொகையும் இன்றி கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கவில்லை. இந் நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், அதன் பின்னர் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கும் நைஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை…
-
- 0 replies
- 353 views
-
-
புலம் பெயர்ந்தோரின்... எண்ணிக்கையைத் தடுக்க, பிரான்ஸ் – இங்கிலாந்து ஒப்பந்தம் ஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளது. லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள அமைச்சர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக இங்கிலாந்து 54 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்ததாகவும் செவ்வாய்க்கிழமை 287 பேர் இங்கிலாந்தை வந்தடைந்ததாகும் அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டு…
-
- 0 replies
- 325 views
-
-
1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவின் முக்கிய தளவாட மையமான ஹெனான் முழுவதும் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டு விமானங்கள் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகுதி வரை, 617.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானதாகவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2…
-
- 0 replies
- 561 views
-
-
ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை! பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீ, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை புறக்கணித்தல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அவசர அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்பகுதியில் 187 தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் மொத்தம் 100,000 ஹெக்டேர் (சுமார் 247,000 ஏக்கர்) ஏரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்…
-
- 1 reply
- 412 views
-
-
லெபனானிலிருந்து... இஸ்ரேல் நோக்கி, ரொக்கெட் தாக்குதல் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது. இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு திறந்த பகுதியில் வீழ்ந்தாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் இஸ்ரேலை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு படை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரொக்கெட்ட…
-
- 0 replies
- 513 views
-
-
ஆகஸ்ட் 9 முதல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கனடாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மார்ச் 2020 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, கோவிட் -19 பரவுவதைத் தணிக்க கனேடிய அரசாங்கம் அவசியம் என்று கூறியது. "COVID-19 தொற்றுநோய் சாதகமாக இருந்தால், செப்டம்பர் 7 முதல் சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்" என்று கனேடிய அரசாங்கம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கனடாவுக்குள் நுழைவது தடைசெய்யப்படும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிரு…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில்... நிரந்த அமைதியை, ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்! ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் ஆப்கான் நல்லிணக்க சபைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானில், …
-
- 3 replies
- 334 views
-
-
ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர். வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்மானிக்கப்பட்ட போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல். பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 540 views
- 1 follower
-
-
ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது. ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகான காலத்தில், 'ஹவானா சிண்ட்ரோம்' எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு கியூபாவில் 2016 - 17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல் ரோஜர் ஹர்ராபின் பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஐரோப்பிய வெள்ளம். ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர். ஆனால், அது போன்ற வா…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2021/1228…
-
- 18 replies
- 887 views
-