உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா அணு ஆயுதம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர பலமுறை அழைப்பு விடுத்த அமெரிக்காவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 13:26 PM பீஜிங் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் மட்டத்திற்குக் குறைக்கத் தயாராக இருந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா மகிழ்ச்சியாக பங்கேற்கும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவுக்கு அமெரிக்கா பல…
-
- 0 replies
- 443 views
-
-
பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் …
-
- 0 replies
- 432 views
-
-
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவு: ஜூலை 08, 2020 06:24 AM ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதய நிலவரப்படி உலக அளவில் கொரோனா …
-
- 0 replies
- 263 views
-
-
கொரோனாவை பழித்த பிரேஷில் ஜனாதிபதிக்கு கொரோனா! பிரேஷில் ஜனாதிபதி ஜய்ர் பொல்சனரோவுக்கு (65-வயது) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வெறும் சிறிய காய்ச்சல் மட்டுமே என்று பொல்சனரோ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கொரோனாவை-பழித்த-பிரேஷில்/
-
- 0 replies
- 336 views
-
-
பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரேல்! by : Anojkiyan மேற்காசிய நாடான இஸ்ரேல், பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணிப்பது மற்றும் பிராந்தியத்தில் உள்ள அபாயங்களை கண்காணிப்பது ஆகியவற்றுக்காக, இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் கூறியுள்ளது. மேம்பட்ட திறன்களைக் கொண்ட மின்ஒளியியல் உளவு செயற்கைக்கோளான ‘ஒபேக் 16’ உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்…
-
- 1 reply
- 558 views
-
-
அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்து உள்ளனர். பதிவு: ஜூலை 07, 2020 12:17 PM நியூயார்க் மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நெக்லேரியா பவுலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழைந்துள்ளது இந்த மிக நுண்ணிய அமீபா இது ஒரு செல் மட்டுமே உடையது. இந்த அமீப…
-
- 0 replies
- 408 views
-
-
ஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா.! சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு…
-
- 0 replies
- 479 views
-
-
பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் பதிவு: ஜூலை 06, 2020 14:23 PM பாரீஸ் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்ககின் நடைபயணம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். 2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக…
-
- 0 replies
- 499 views
-
-
எத்தியோப்பியாவை உலுக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களினால் 166 பேர் பலி! பிரபல பாடகர் ஹாகலூ ஹுண்டீசா படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் எத்தியோப்பியாவை உலுக்கிய வன்முறை ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 166 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி ஹாகலூ ஹுண்டீசா இந்த பின்னர், பிராந்தியத்தில் ஏற்பட்ட அமைதியின்மையில் 145 பொது மக்கள் மற்றும் 11 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தின் துணை பொலிஸ் ஆணையாளர் கிர்மா கெலாம் சனிக்கிழமை அரசுடன் இணைந்த அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 10 பேர் தலைநகர் அடிஸ் அபாபாவில் உயிரிழந்துள்ளதாக அறியப்படும் அதேவேளை 167 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், 1,084 பே…
-
- 0 replies
- 460 views
-
-
ஈரானின் அணுசக்தி நிலையமொன்றில் பாரிய தீ விபத்து July 6, 2020 ஈரானின் பிரதான அணுநிலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நட்டன்ஸ் யுரேனியம் பதப்படுத்தும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். யுரேனியத்தினை தயாரிப்பதற்கு பயன்படும் சென்ரிபியுஜ்களை உருவாக்குவதற்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரி இதற்கு சைபர்சதிமுயற்சி காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஈரானின் அணுசக்தி அமைப்பின் அதிகாரியொருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் மேலதிக தகவல்களை வெளியிட மறுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது ஆனால் உயிர் இழப்புக…
-
- 0 replies
- 422 views
-
-
ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் நீரிழ் முழ்கின. இதனையடுத்து, 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு …
-
- 0 replies
- 254 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள் அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு இதுவரை, 2,935,770 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 132,318 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,260,405 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடத்தி வருகிறார். இதில், கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், இராணுவ வ…
-
- 1 reply
- 609 views
-
-
லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 09:34 AM வாஷிங்டன் உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது.இதில், சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. லடாக் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம், இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறிஉள்ளத…
-
- 4 replies
- 810 views
-
-
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்துவரும் ஹேஸைச் சேர்ந்த சபியா ஷேக், ( வயது -36) பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலைகுண்டுதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் , ஒருவரைக் கொல்வதைவிடவும் கொடூரமான செயல்களை செய்வதை விரும்புவதாக பொலிஸ…
-
- 0 replies
- 548 views
-
-
சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 15:13 PM வாஷிங்டன் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்…
-
- 0 replies
- 461 views
-
-
மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 436 views
-
-
பாகிஸ்தான் விமானங்கள், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பினால் ஆறு மாதங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு சொந்தமான PAKISTAN AIRLINES இல் பணிபுரியும் விமான ஊழியர்கள் பலர், உரிமம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே PAKISTAN AIRLINES விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு சொந்தமான விமான சேவைகளில் பணிபுரிந்து வந்த 860 விமானிகளில், 262 பேர் போலியான உரிமம் மற்றும் விமானி தேர்வில் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது. பாகிஸ்தானின…
-
- 1 reply
- 395 views
-
-
கனடாவில் பிரதமர் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல முயன்ற இராணுவவீரர் கைது July 3, 2020 கனடா பிரதமர் ஒட்டாவாவில் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதத்துடன் வாகனத்தை செலுத்த முயன்ற இராணுவவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓட்டாவாவின் விசேட பகுதியொன்றிற்குள் காணப்பட்ட பாதுகாப்பு கதவுகளை தகர்த்துக்கொண்டு டிரக்கினை செலுத்த முயன்ற இராணுவவீரர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் ரீடோ ஹோல் வீடு அமைந்துள்ள பகுதியை நோக்கியே குறிப்பிட்ட இராணுவவீரர் தனது டிரக்கினை செலுத்தியுள்ளார். ரீடோ ஹோல் வீட்டை சுற்றி அமைந்துள்ள இரு பாதுகாப்பு கதவுகளை உடைத்துக்கொண்டு சென்ற அந்த இராணுவவீரர் வாகனத்தில…
-
- 0 replies
- 385 views
-
-
மெக்ஸிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி சூடு: 24பேர் உயிரிழப்பு! மத்திய மெக்ஸிகன் நகரமான இராபுவாடோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 24பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோவின் இராபுவாடோவில் நேற்று (புதன்கிழமை) நடந்த தாக்குதல் குறித்து, குவானாஜுவாடோ மாநில பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 3பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குவானாஜுவாடோவின் சட்டமா அதிபர் கார்லோஸ் ஜமரிபா, இந்த கொலையை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளார். இதை அவர் ‘கோழைத்தனமான குற்றச் செயல்’ என்று விப…
-
- 0 replies
- 248 views
-
-
மியன்மார் மண்சரிவில் 162 பேர் பலி! மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (02) காலை 6:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 200 சுரங்க தொழிலாளர்கள் வரை மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த 54 பேர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://newuthayan.com/மியன்மார்-மண்சரிவில்-162-பே/
-
- 0 replies
- 401 views
-
-
சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 15:52 PM பீஜிங் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந…
-
- 0 replies
- 470 views
-
-
அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன. இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ? "ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தி…
-
- 19 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவை... பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சுகாதார நலன் கருதி குறித்த தடையினை ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுக்கு வருவதுடன், நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்தும் அனும…
-
- 0 replies
- 262 views
-
-
2036 வரை அதிபராக பதவி வகிக்கும் புதினின் சட்ட திருத்தம்- ரஷ்ய மக்கள் ஆதரவு ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பதிவு: ஜூலை 02, 2020 07:05 AM மாஸ்கோ, ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார். வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்க…
-
- 0 replies
- 313 views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம் பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணு…
-
- 0 replies
- 972 views
-