Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். …

  2. ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்; சீனா ஜெர்மனி துணை இருக்கும்: ஏஞ்சலோ மெர்கல் ஈரானின் ஆணுஆயுத ஒப்பந்தத்துக்கு ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் துனை இருக்கும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறியுள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனா சென்றடைந்த மெர்க்கல் கிரேல் ஹாலில் சீனா பிரதமர் லீ கெக்கியாங் உடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மெர்க்கலின் இந்தச் சீன சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வணிகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழு…

  3. ஈரான் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும்வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது: அமெரிக்கா! 2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது. சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம்’ என கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடை…

  4. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் ‍எச்சரிக்கை! ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) ஈரானை அச்சுறுத்தினார். கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததிலிருந்து ட்ரம்ப் முதல் முறையாகப் பேசியபோது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாக அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுமாறு தெஹ்ரானை வலியுறுத்தி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஓமன் மூலம் ஈரான் பதில் அனுப்பியது. அ…

  5. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: கையெழுத்திடும் வல்லரசு நாடுகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 03:10.19 பி.ப GMT ] அமெரிக்காவில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று பல ஆண்டுகளாக வல்லரசு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது. மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. இருந்தபோதிலும், அதை ஏற்காமல் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஈரானின் அணு…

    • 2 replies
    • 671 views
  6. ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …

  7. ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுக்கிறது [27 - February - 2008] * ஐ.நா.வின் அணு கண்காணிப்பு பிரிவு ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுப்பதாக ஐ.நா.வின் அணு விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை 2003 இலேயே நிறுத்தி விட்டதாக கடந்த டிசெம்பரில் வெளியான அமெரிக்க புலனாய்வு அமைப்பொன்றின் அறிக்கை தெரிவித்திருந்த நிலையிலேயே ஐ.நா.வின் அணுக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுச்சக்தி முகவர் அமைப்பிற்கு (ஐ.ஏ.ஈ.ஏ) வழங்கப்பட்ட அறிக்கையிலேயே ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை நிராகரித்துள்ள ஐ.ஏ.ஈ.ஏ.க்கான ஈரானியத் தூதுவர…

  8. ஈரான் அமெரிக்காவில் சவூதி அதிகாரிகள் / தூதுவராலயம் மீது நடாத்த இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் - அமெரிக்கா சவூதி தூதுவரை கொள்ள, மற்றும் தூதுவராலயத்தை தாக்க திட்டமிட்டனர் என ஈரானை அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    • 4 replies
    • 1.1k views
  9. ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இதன்போது 2 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த 'காதிர்' ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவிக்கின்றது மேலும் காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft) ஒன்றையும் ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரானானது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருகின்றமையை நிரூபிக்கும் ஆதாரமொன்றும் வெளி…

  10. ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப் ஈரான் பிரச்சினைக்கு தீர்வுகான காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்த…

  11. ஈரானில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான மூன்று நாட்கள் அடக்குமுறையின்போது குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, 15 வயதான, 17 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக 208 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மன்னிப்புச் சபை மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில், குறித்த எண்ணிக்கைகளை அப்பட்டமான பொய்கள் என ஈரான் நிராகரித்துள்ளது. தேசியளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி பரவியதையடுத்து மோசமான அடக்குமுறையை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டதாக அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஈரானின் மோசமான அடக்குமுறை குறித்து பேசுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஆர்ப்பா…

    • 0 replies
    • 386 views
  12. இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது. [size=2][size=4]இன்று ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அமெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்தத் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஈரான் தயாரித்த டோர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூரம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.[/size][/size] [size=2][size=4]இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித்தொட போதுமான இலக்காக இருப்பதால் இது இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]ஏவுகணைகளை எடுத்துச் சென்று இலக்குத் தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானம்.[/si…

  13. ஈரான் இராணுவ தள வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவு உள்ளதாக புதிய தகவல் புதன், 16 நவம்பர் 2011 08:24 சுடர் World ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஈரான் இராணுவத்தில் ஏவுகணை பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இநத இராணுவ தளத்தில் ஆயுதங்களை இடமாற்றம் செய்யும் போதே இந்த வெடிப்பு இடம் பெற்றதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னணியில் “மொசாட்” …

  14. ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் …

    • 1 reply
    • 387 views
  15. ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …

  16. வாஷிங்டன்: பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன. இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி வரக்கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ்., கால் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது. ஏற்கனவே, வளைகுடா கடல் பகுதியில் யு.எஸ்.எஸ்., ஜான் ஸ்டென்னிஸ் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அலுவலக அதிகாரி கேப்டன் ஜான் கிர்பி கூறுகையில், "இது ஏற்கனவே திட்டமிடப…

  17. இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம் பேசி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நேற்று காங்கிரஸ் சபையில் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பேசியதாவது:இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக…

  18. ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில் 09 Jan, 2026 | 03:47 PM ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு…

  19. ஈரானிய தொலை தூர, நடுத்தர, குறுந்தூர ஏவுகணைகள் ஒரே நேரத்தில் விண்ணில் பாய்ந்து இலக்கை நோக்கிப் பறக்கும் காட்சி. மத்திய கிழக்கில் அண்மைக் காலமாக ஈரானுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவி வந்த வார்த்தைப் போர், சமீபத்தில் ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் பகிரங்க போர் ஒத்திகையின் பின் இராணுவ மயப்படுத்தப்பட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலிய F-16 மற்றும் F -15 ரக தாக்குதல் போர் விமானங்கள். இதற்கு பிள்ளையார் சுழியை இஸ்ரேல் தனது விமானப்படையின் 100 க்கும் மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி போர் ஒத்திகை ஒன்றைச் செய்ததன் மூலம் போட்டுக் கொண்டது. அதுபோதேதென்று அமெரிக்கா இஸ்ரேலின் செயலுக்கு வக்காளத்து வாங்கிக…

    • 26 replies
    • 4.1k views
  20. ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அந்நாட்டிற்கு எதிராக தினசரி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. முதலில் ஈரான் மீது உலகளாவிய பொருளாதார தடை விதித்தது. பின்னர் ஈரானின் பெட்ரோலிய கெமிக்கல் கம்பெனிகளுக்கு அமெரிக்க தடை விதித்தது. நேற்று ஒபாமா விடுத்த ஒரு அறிக்கையில் ஈரானின் கரன்சிக்கு தடை விதித்துள்ளார். ஈரான் பணத்தை பரிமாற்றம் செய்யக்கூடாது என்றும் மீறி பரிமாற்றம் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் ஈரான் பணத்தை வைத்திருக்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஒபாமாவின் இந்த அதிரடி உத்தரவால் ஈரான் நாட்டின் பொருளாதாரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அடுத்தடுத்து ம…

    • 0 replies
    • 538 views
  21. ஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது ஈரான் மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில் இடம்பெற்ற இந்த ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை ஏவி பரிசோதித்ததாகவும் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்ததனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/18419

  22. கனடிய பெண் போட்டோகிராபர் ஒருவர் ஈரானிய சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கனடிய பெண் போட்டோகிராபர் Zahra Kazemi, கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த ஈரானிய போலீஸார் சிறையில் அடைத்து துன்புறுத்தி கொலை செய்தனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த Zahra Kazemi மகன் ஈரான் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை திறமையாக நடத்திய ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், Zahra Kazemi செய்தது சட்டவிரோதமே என்று நிரூபித்தனர். எனவே தீர்ப்பும் ஈரான் அரசுக்கு சாதகமாகவே வந்தது. ஆனாலும் தனக்கு நியாயம…

    • 0 replies
    • 440 views
  23. ஈரான் சிவப்பு கோட்டை தாண்டி விட்டது - நத்தனியாகு

    • 0 replies
    • 467 views
  24. Published By: RAJEEBAN 29 JUN, 2024 | 12:54 PM ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி நிலவுவது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் கடும்போக்காளர் சயீட் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூட் பெசெக்கியானிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது - இருவரும் சுமார் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளனர். இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும். மே 19ம் திகதி முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயி…

  25. ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு விஜயம் செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி முகமட் அகமதி நிஜாத் மீது சப்பாத்து வீச முயன்றவரை அவருடைய பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு ‘கோழை’ எனக் கத்திக்கொண்டு சப்பாத்து ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மீது எறிந்தவரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கும் காட்சியடங்கிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவராத போதிலும், சப்பாத்து வீசியவர் ஈரானுக்கு எதிரியானவர் எனவும், சிரிய அரசிற்கு ஆதரவாகச் செயற்படுபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் பின் முதன்முதலாக ஈரான் ஜனாதிபதியாக முகமட் அகமதி நிஜாத் எகிப்திற்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.