உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்? on 03-11-2008 03:15 அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். …
-
- 66 replies
- 5.9k views
-
-
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் தற்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியாகியுள்ளது.மேலதிக விபரம் இன்னமும் இணைக்கப்படவில்லை. தற்ஸ்தமிழ்
-
- 18 replies
- 3.8k views
-
-
நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு: இருவருக்குத் தொற்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக்…
-
- 0 replies
- 310 views
-
-
துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்! எர்டோகன் டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம் கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும். நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவ…
-
- 0 replies
- 223 views
-
-
ஐரோப்பாவிற்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்படலாம்? எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல், வெளி எல்லைகளை மீண்டும் திறக்க திட்டமிட, ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்தையின் போது, ஐரோப்பிய எல்லைக்குள் அமெரிக்கா நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. சில ஐரோப்பிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்களது எல்லைகளை திறக்க ஆர்வமாக உள்ளன. ஆனால் மற்றநாடுகளில் வைரஸ் தொற்று பரவுவதால் இதுகுறித்து அந்நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. பாதுகாப்பான பட்டியலை முடிவெடுப்பதற்கு முன…
-
- 0 replies
- 601 views
-
-
உலகின் மிகப்பெரிய கான்கிரீட் கால்வாய்கள் நீர்பாசன திட்டமான நர்மதா திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது குஜராத்.
-
- 0 replies
- 460 views
-
-
சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார். ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை. அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது. கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை. இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப…
-
- 0 replies
- 963 views
-
-
இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒ…
-
- 8 replies
- 770 views
-
-
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html
-
- 2 replies
- 881 views
-
-
ஆப்பிள் நிறுவனத்துக்கு 14 பில்லியன் டாலர் வரி: சீறும் டிம் குக் ஐரிஷ் அரசாங்கத்துக்கு ஆப்பிள் நிறுவனமானது 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணையத்தின் உத்தரவு அரசியல் சார்ந்தது மட்டுமின்றி நியாயமற்றது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஐரோப்பிய ஆணையத்தின் இந்த முடிவை தொடர்ந்து, டிம் குக் அளித்த முதல் பேட்டியில், சட்டவிரோதங்களுக்கு துணைபோவதாக சொல்லப்படுவது ஆப்பிள் நிறுவனத்தை ஆத்திரமூட்டுகிறது என்றும், ஆணையத்தின் கணக்கீடுகளை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேல்முறையீடு செய்வதன் மூலமாக இந்…
-
- 1 reply
- 528 views
-
-
அகதிகள் கடத்தல் சந்தேகத்தில் 21 பேர் கைது; இத்தாலி காவல்துறை அதிரடி பழைய கார்களின் தொடரணியை பயன்படுத்தி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குள் அகதிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஐரோப்பா முழுவதுமுள்ள 21 பேரை, இத்தாலி காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். போலியான நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்த வாகன வலையமைப்பை பயன்படுத்தி, வடக்கு பகுதிக்கு குடியேறிகளை அனுப்புவதற்கு, பயணிக்கு தலா 500 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இந்த சந்தேக நபர்கள் கட்டணம் வசூலித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சரியான ஆவணங்கள் இல்லாத பல குடியேறிகள் இருந்த காரோடு இத்தாலியர் ஒருவர் ஹங்கேரியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த ப…
-
- 0 replies
- 460 views
-
-
ஹைதரபாத்: ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது. தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தின் செயலாளர் சத்ரபதியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் தெலுங்கானாவை வென்றெடுக்க முடியாது. தெலுங்கான…
-
- 20 replies
- 1.1k views
-
-
இப்போதெல்லாம் கனடாவில் பொது தொண்டுகளிற்காக நிதி சேகரிப்பதற்காக பலவித புதுப்புது நிகழ்ச்சிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த வகையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிக்ரன் என்னும் இடத்தில் குளிரால் உறைந்திருந்த ஆற்றுக்குள் துளை போட்டு மீன் பிடிக்கும் போட்டியொன்று இடம்பெற்றது. குறிப்பாக குளிர் காலத்தில் இவ்வாறு உறைந்த பனியில் நடந்து சென்று ஆற்றின் மத்தியில் துளைபோட்டே மீன் பிடிப்பது வழக்கமாயினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மேலாடையேதுமின்றி கலந்து கொண்டதே இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். அன்று ஏதோ வர்ணபகவானின் துணையால் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே 8 பாகையாக இருந்தாலும் அதுகூட தாங்கமுடியாத ஒரு குளிராகும். எனினும் இந்த இலக்கமே கீழ்நோக்கி இரட்டை இ…
-
- 7 replies
- 732 views
-
-
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களைச் செய்து வருகிறது எனவும் இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும் எனவும் ஈரான் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய கிழக்குப் பகு…
-
- 0 replies
- 544 views
-
-
கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ சீர்காழி ரவி காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவனேஅல்ல! தீக்குளிக்கிறவன் காங்கிரஸ்காரன் அல்ல, அடுத்தவனை தீக்'குளிப்பிக்கிறவன்' தான் உண்மையான காங்கிரஸ்காரன் !! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ தொடர்புடைய பதிவு: சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !
-
- 5 replies
- 1.8k views
-
-
கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ 2018ல் ஓய்வு கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது இரண்டாம் தவணைக்கால நிறைவுடன் ஓய்வு பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.81 வயதான ராவுல் கஸ்ட்ரோ, நோய் வாய்ப்பட்ட தனது சகோதரரான பிடேல் கஸ்ட்ரோவின் பதிலீடாக 2008ம் ஆண்டு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர், 52 வயதான துணை ஜனாதிபதி டியாஸ் கானேல் ஜனாதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1959ம் ஆண்டு கியூப புரட்சியின் பின்னர், தொடர்ச்சியாக கஸ்ட்ரோ சகோதராகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஐந்து தசாப்த காலமாக பிடெல் கஸ்ட்ரோ நாட்டை ஆட்சி செய்து …
-
- 1 reply
- 369 views
-
-
போலீசார் திட்டமிட்டு நடத்திய வன்முறை நாடகம்:மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர். அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. வரலாறு காணாத இந்த மோதல் சம்பவத்தால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம். இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், ‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவி…
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்களை காவு கொண்ட கோர விமான விபத்து ; கடைசி தருணத்தில் ஆசனம் மாறியதால் உயிர் பிழைத்த வீரர் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள். குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து ந…
-
- 0 replies
- 298 views
-
-
இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள் ஆட்டம் இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது. எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரமும், தொடர்பும் த…
-
- 0 replies
- 322 views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டடங்கள் கடுமையாக இடிந்து தரைமட்டமானது. இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். அதேநேரம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர்…
-
- 0 replies
- 510 views
-
-
வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம் தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொ…
-
- 6 replies
- 505 views
-
-
கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு... சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…
-
- 4 replies
- 945 views
-
-
உலகளவில் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம்- யுனிசெஃப் எச்சரிக்கை! குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சியை அளவிடும் குறிகாட்டிகள் அனைத்தும் கடந்த ஒரு வருட கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டமை, வறுமை, கட்டாயத் திருமணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சிறார்களின் வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்படும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், பசி, தனிமை, துஷ்பிரயோகம், பதற்றம், வறுமையில் வாடும் மற்றும் திருமணத்திற்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ய…
-
- 0 replies
- 585 views
-