உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே! “நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார். ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.…
-
- 1 reply
- 486 views
-
-
போதைப் பொருட்களுக்கு பதிலாக பாலாடையைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் போதைப் பொருட்களை நுகர்ந்து கண்டுபிடிக்க வேண்டிய மோப்ப நாய்கள் விமானப் பயணிகளிடமிருந்து பாலாடைக்கட்டி மற்றும் பன்றிக்கறி சாசேஜ்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றன என்பதை ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. மோப்ப நாய்கள் பல பொருட்களை நுகர்ந்து கண்டறிய பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்ட்டர் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறிய ஆறு உயர்ரக நாய்கள் உள்ளன. அவற்றை பராமரித்து இயக்க இரண்டு மில்லியன் டாலர்கள் செலவாகின்றன. அந்த நாய்கள் சட்டவிரோத போதைப் பொருட்கள், புகையிலை, பணம், காட்டு விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை நுகர்ந்து கண்டுபிடிக்க பயிற்சியளிக்…
-
- 8 replies
- 2k views
-
-
தலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானோட தனது உறவுகளை வேகமாக விரிவாக்கி வந்த இந்தியா இன்று 450 மில்லியன் அமெரிக்க வெள்ளி அபிவிருத்தி உதவியை அறிவித்துள்ளது. இதுவரை கணனி கல்வித்துறை பயிர்ச் செய்கை போன்றவற்றிக்கு பயிற்சி அளித்து உதவி செய்து வந்தது. எதிர்வரும் காலங்களில் ஆப்கானிஸ்தானிய தரைப்படைகளை பயிற்சி போன்றவற்றிற்கு விரிவாக்கமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 0 replies
- 639 views
-
-
முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும். ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். “அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார். தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் ந…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
[size=4]அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றைகார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைதானார். [/size] [size=4]இது தொடர்பாக புலனாய்வு பிரவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசாபெற்று கடந்தஜனவரி மாதம் வந்துள்ளார். [/size] [size=4]நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தககட்டடங்கள் உள்ளிட்ட இடங்களைகார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக எப்.பி.ஐ. போலீசார்நபீஸை இன்று கைது செய்தனர்.தற்போது புரூக்ளின் கோர்ட்ட…
-
- 1 reply
- 582 views
-
-
சுட்டவர்கள் இறந்தார்களா என்பதை சோதித்த கொலையாளி அமெரிக்காவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தன்னால் சுடப்பட்டவர்கள் இறந்து விட்டார்களா என்பதை உறுதிசெய்ய அவர்களிடம் எப்படி திரும்ப வந்தார் என்பதை விவரித்துள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்து, ஓர்லாண்டோ மருத்துவனையில் இருக்கும் ஏஞ்சல் கோலன், தான் காலில் மூன்று முறை சுடப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட 29 வயது ஒமர் மடீன் தனது தலையில் சுடுவதற்கு குறிவைத்ததாகவும் ஆனால் அந்த குண்டு குறி தவறியது என்றும், பின்னர் தான் இறந்தவர் …
-
- 0 replies
- 350 views
-
-
கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வ…
-
- 1 reply
- 195 views
-
-
பிரிட்டன் வெளியேறிய பிறகே புதிய வர்த்தகப் பேச்சுவார்த்தை' பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, அடுத்து, புதிய உறவு ஆகிய இரு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படிதான் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மம்ஸ்ட்ரோம் தெரிவித்தார். சமீபத்தில் கனடாவுடன் மேற்…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை! போலி ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பில் இலங்கையர்கள் இருவருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கையர்களான புஸ்பராஜ் கபில் (21) மற்றும் ராமசந்திரன் கிஷோ பிரசாத் (32) ஆகிய இருவருக்கே தலா 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி சிங்கப்பூர் கடவுச் சீட்டு மற்றும் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டை என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சிங்கப்பூர், டுவாஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடந்த பெப்ரவரி 29ம் தகிதி சந்தேக நபரொவருர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மற்றைய சந்கைநபர் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 638 views
-
-
பிரிட்டனில் நிலவும் தற்கால அடிமை முறையை அகற்ற பிரதமர் தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறையை ஒழிக்க தெரீசா மே தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே தலைமை தாங்கவிருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து மனிதர்களை கடத்துவதோடு தொடர்புடைய அடிமைமுறை காட்டுமிராண்டித்தனமான தீமை என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார். அடிமை முறைமைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓராண்டுக்கு முன்னர், பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தாலும், காவல்துறையினருக்கும், குற்றவியல் நீதி அமைப்புகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் இன்னும் முரண்பாடுகள் இருப்…
-
- 0 replies
- 372 views
-
-
இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொன்மையான பாறைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கண்டங்கள் உருவானது தொடர்பான முக்கிய விஷயங்களைக் கண்டறிந்தனர்.இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோரக்பூர் ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர் தேவாசிஸ் உபாத்யாயவும், ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாஸ் மெஸ்கரும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி…
-
- 0 replies
- 479 views
-
-
உலகை மிரட்டும் கொரோனா....4 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் வெள்ளிக்கிழமை 1.4 கோடிய கடந்துவிட்டது எனவும், முதன் முறையாக கடந்த 100 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ராய்டர்ஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது முதல் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் சீனாவில் பதிவாகியது, மேலும் 10 லட்சம் பாதிப்புகளை எட்ட மூன்று மாதங்கள் ஆனது. ஜூலை 13 அன்று பதிவு செய்யப்பட்ட 1.3 கோடியில் ல் இருந்து 1.4 கோடி வழக்குகள் ஏற நான்கு நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. அரசாங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் தகவல்படி கொரோனா நோய் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருவதை காட்டுகிறது, இது உ…
-
- 1 reply
- 598 views
-
-
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர் டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுக்களை மர…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் அகதிகளை குடியமர்த்த புதிய சட்டம் கோப்புப்படம் ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அகதிகள் எங்கு தங்க வேண்டும் என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற அனைத்து அகதிகளும் மாகாணத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ அவர்களுக்கான வீடு ஒதுக்கித் தரப்படும். அங்கு அவர்கள் மூன்றாண்டுகள் வசிக்க வேண்டும். ஜெர்மானிய சமூகத்தில் அகதிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட பல சட்டத்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஒரே நாடுகளிலிருந்து வந்த பல அகதிகளை ஒன்றிணைப்பதற்கு பதிலாக இந்த நடைமுறை கையாளப்படுகிறது. …
-
- 1 reply
- 418 views
-
-
சுவீடனில் குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: கலவரமாக மாறிய போராட்டம் EPA சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது போலீஸ். போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. மேலும் குரான் எரிக்கப்பட்ட அதே…
-
- 0 replies
- 595 views
-
-
டொரண்டோ அருகில் உள்ள Osler St. near Davenport Road என்ற இடத்தில் நடந்த ஒரு பயங்கர தீ விபத்தில் சுமார் $500,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகக்கடுமையான தீக்காயத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைக்கும் படையின் மூத்த அதிகாரி Div. Commander Bob O’Hallern அவர்கள் இதுகுறித்து கூறுகையில் தீப்பிடித்த கட்டிடத்தின் கூரைப்பகுதி முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், எனவே அந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தீயை அணைப்பதற்காக 18 டிரக்குகளில் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீப்பிடி…
-
- 0 replies
- 340 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 288 views
-
-
அமெரிக்கா தலைமையில் மற்றுமொரு அரபு நாடு இஸ்ரேலுடன் ஐக்கியம்! அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலுடன் உறவகளை மேம்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மற்றொரு அரபு நாடான மொராக்கோ இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இந்நலையில், கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேலுடன் விரோதப் போக்கை விலக்கிக் கொண்ட நான்காவது அரபு நாடாக மொராக்கோ வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அமெரிக்கா தலைமையில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தன. இதேவேளை, மேற்கு சஹாரா பகுதி குறித்து மொராக்கோவுடன் பல தசாப்தங்களாக பிராந்திய சர்ச்சை நிலவி வருகின்றது. இந்நிலையில், மொராக்கோவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி …
-
- 0 replies
- 456 views
-
-
கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்து அது தொடர்பாக வெளியிட்ட காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்ற சிப்பாய் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுக்கு காலை உணவாக ஒரு கோப்பை தேனீரும், கருகிய பரோட்டாவும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘’ எங்…
-
- 0 replies
- 331 views
-
-
லண்டனில் வீடுகளிலும் கடைகளிலும் வாங்கும் பொருட்களில் ௦20 % சதவீதம் விரயமாவதை தடுக்க பல்வேறு உத்திகளை உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது. உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, அதைப் பிற்பாடு எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவு மற்றும் பானங்களில் இருபது சதவீதத்தை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்படுகிறது. 1. உணவு உற்பத்த…
-
- 12 replies
- 988 views
-
-
சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறு, எமக்கான பாடம் – பங்களாதேஷ் 25 Views சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்ளையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையினால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு நிர்பந்திக்க…
-
- 2 replies
- 773 views
-
-
டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கா டிரம்ப் அமெரிக்க தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம் என்பதை தனது முக்கிய கொள்கையாக முழங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப், சீனாவில் இருந்து 53 டன் அளவிலான சீனத் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளார். பெய்ஜிங்: அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களையே அமெரிக்கர்கள் வாங்க வேண்டும் என முழங்கினார். அவரது வெற்றிக்கு இந்த முழக்கமும் ஒரு காரணமாக இர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்ரேலில் பாரிய அனர்த்தம் : ஏராளமானோர் உயிரிழப்பு இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் சிக்கி பலியானார்கள், 103 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர். …
-
- 0 replies
- 853 views
-
-
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று: அடுத்த 24 மணிநேரம் மிகவும் சிக்கலானது!! அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின் புதிய கொத்து மூன்று நாட்களில் 15 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலிய கால்பந்து லீக் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 23,400 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் ஆயிரக்கணக்கான இரசிகர்களை சுய தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இதேவேளை நகரில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் …
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு பிரிந்தது முதல் இன்று வரை இரு நாடுகளும் எதிரி நாடுகளாகவே இருக்கின்றன. காஷ்மீருக்காக அடித்துக்கொண்டபோது, ஐ.நா. தலையிட்டதால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின்னர் வங்கதேச சுதந்திரத்தின்போது இரு நாடுகளுக்கிடையே போர் நடந்தது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைய, வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. பின்னர் 1972ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் மட்டும்தான் ஏற்பட்டதே தவிர இரு நாடுகளுக்கிடையிலும் சுமுகமான சூழ்நிலைக்கு வழியில்லாமல் போனது. காஷ்மீர் பிரச்சினை, எல்லைத் தகராறு, தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் இரு தரப்பும் முறுக்கிக்கொண்டு நிற்பது தொடர்கிறது…
-
- 1 reply
- 383 views
-