Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுப்பேன் என்கிறாா் தூதுவர் மிச்சல் சிசன்! [Wednesday 2014-07-30 15:00] ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுக்கப் போவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் அமெரிக்க பிரதி பிரதிநிதி பதவிக்காக, அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா சிசனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.இந்த பரிந்துரை காங்கிரஸ் சபை அங்கீகரித்தால், நாட்டின் நலனை முதனிலையாகக் கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளதாக சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்காவின் நோக்கங்களையும் இலக்குகளையும் எட்டுவதற்கு முனைப்ப…

  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றன. இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா, இலங்கைக்கு சாதகமான முறையில் நடந்து கொள்ளுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அண்டை மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில் மனித உரிமை விவகாரங்களின் போது இந்தியா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த போதிலும், அந்த விடயங்கள் குறித்து ராஜதந்திர ரீதியில் கலந்துரை…

  3. ஐ.நா வில் ட்ரம்ப் அதிரடி முடிவு தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. …

  4. உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களை, கருத்து வேறுபாட்டு காரணமாக ஐ.நா சபையால் காப்பாற்ற முடியவில்லை என்று பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் அந்நாட்டிற்குள்ளாகவே அகதிகளாகியிருப்பதாகவும் பான் கீ-மூன் வெளியிட்டுள்ள அறிக…

  5. ஐ.நா-வின் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கண்டுகொள்ளப்படாத தாஜ்மஹால்! பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக் காக்கவும், உலக நாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நீக்கவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய பொது அமைப்பாகக் கருதப்படும் ஐ.நா.சபையின் 70 வது ஆண்டு விழா, அக்டோபர் 24-ம் தேதி உலகம் முழுக்க வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக பல நாடுகளில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் நீல நிறத்தில் மிளிரவுள்ளன. இரண்டு உலகப் போர்களால் சிதையுண்டு, வேற்று கிரகத் தீவுகள் போல் ஆகிப்போன பல தேசங்களில், வேற்றுமை காரணமாக மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலமே அழிந்துவிடும் எனக்கருதி வலிமை மிக்க ஒரு அமைப்பாக, பல்வேறு நாடுகள் …

  6. ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா! ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழ…

  7. ஐ.நா. அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதுவராக பிரபல ஹொலிவூட் நடிகை அஞ்ஜெலினா ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகக் கடந்த 10 வருடங்களாகப் பதவி வகித்த ஜோலி தற்போது பதவி உயர்வு பெற்று சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லெண்ணத் தூதுவராகப் பதவி வகித்தபோது உலகிலுள்ள 40 இடங்களுக்குச் சென்று அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி அரும்பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு ஒஸ்கார் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஆப்கானில் அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி செயலாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் அமைப்பு முதல் முறையாக சிறப்பு தூதர் பதவியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பதவிகள் பொதுவாக ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக…

  8. ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு எதிராக போராடுவோம்: சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற 49 அகதிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபு குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடு கடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எந்த நாட்டில் …

    • 0 replies
    • 392 views
  9. ஐ.நா. அமைதிப்படைகள் எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்தது [19 - February - 2008] [Font Size - A - A - A] * ஐ.நா. கடும் ஆட்சேபம் எரித்திரியாவிலுள்ள ஐ.நா.வின் நூற்றுக் கணக்கான அமைதிப் படைகளை எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்துள்ளமைக்கு ஐ.நா. தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. எரித்திரியா அரசாங்கம் ஐ.நா.வின் அமைதிப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து தனது படைகளை எதியோப்பியாவுக்கு செல்லுமாறு ஐ.நா. உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆறு வாகனங்கள் மட்டுமே எரித்திரியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தமது படைகளுக்கான விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில படையினர் துப்பாக்கி முனையில் அ…

  10. ஐ.நா. உப மனித ஆணைக்குழுவில் முல்லைப் படுகொலை [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 05:36 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஐக்கிய நாடுகள் சபையின் உப மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் "சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற சுவிஸ் நாட்டை தளமாக கொணடு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிறிலங்கா அரசின் கடந்த கால படுகொலைகளை சமர்ப்பித்துள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.08.06) நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சார்பாக திருமதி டியெற்றி மக்கோணால் அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார். http://www.eelampage.com/?cn=28291 அவர் தனதுரையில் கூறியதாவது: "இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசுகளினால் தமிழ் …

    • 0 replies
    • 706 views
  11. ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? - போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை: பெண் போட்டியாளர்கள் பின்னடைவு அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற் கான நடவடிக்கையில் போர்ச்சு கல் முன்னாள் பிரதமர் அந்தோ னியோ குட்டெர்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11 பேர் போட்டி இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான முறையில் பொதுச் செயலாளரை தேர்…

  12. மார்ச் 5 (டிஎன்எஸ்) 2031ஆம் ஆண்டில் இளைய தலை முறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கு ஒன்றை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசுவதற்காக நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா சபையில் அழைப்பை ஏற்று குஷ்பு, கென்யா செல்கிறார். இந்த கூட்டம் நைரோபியாவில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இளைஞர்களின் நலன்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கென்யா பயணத்தைப் பற்றி கூறிய குஷ்பு, "அடுத்த தலைமுறை இளைஞர்களின் கையில்தான் நாட்டின் எதிர்காலமே ஒப்படைக்கப்பட உள்ள…

  13. ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத் தொடர் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பம் வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கவுள்ளது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளினதும் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. பொதுச் சபையின் நிலையியற் குழு மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளினதும் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆகியோருக்கு இது குறித்த அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்öடம்பர் மாதம் 22 ஆம் திகதி நியூயோர்க் நகரிற்கு விஜயம் ம…

  14. ஐ.நா. செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி : அறிவிப்பு Monday, June 6, 2011, 9:00 உலகம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது இரண்டாவது தவணை பதவிக் காலத்திற்கு போட்டியிடுவது குறித்து இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். 66 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் தவிர்ந்த வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் எதுவும் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் மீண்டும் 5 வருட காலத்திற்கு இப்பபதவிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் தற்போதைய பதவிக்காலம் இவ்வருடம் டிசெம்பர் 3…

  15. ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் மியன்மார் சென்றடைந்தார் 22.05.2008 / நிருபர் எல்லாளன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மியன்மாருக்கு விஜயம் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முழு அளவிலான உதவிகளை முன்னெடுப்பதற்கு மியன்மார் இணங்கிய நிலையிலேயே பான்கீமூன் அங்கு சென்றுள்ளார். 1964ஆம் ஆண்டின் பின்னர் மியன்மாருக்கு முதன்முதலாகச் செல்லும் ஐக்கிய நாடுகள் தலைவர் பான்கீமூனே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை மியன்மார் சென்றடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இராவாடி கழிமுகத்துக்கும் செல்லவுள்ளார். வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு …

    • 0 replies
    • 511 views
  16. ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்! அமைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான். காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம். இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 593 views
  17. சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …

    • 0 replies
    • 432 views
  18. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித உரிமைகளை காக்கவும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் டெசோ மாநாட்டை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆய்வரங்கத்தை இன்று காலை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, பிரச்…

  19. ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவ…

  20. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா சர்வதேச சக்தியாக எழுச்சி பெற்று வருவதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதே என்றும் இந்தியாவுக்கு ஆதரவான இத்தீர்மானத்தை ஜனநாயக கட்சி எம்.பி. அல்சீ ஹேஸ்டிங்ஸ் கொண்டுவந்த அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உலகின் பலமான ஜனநாயக நாடாகவும், பொருளாதார ரீதியாக அமெரி்க்காவுக்கு முக்கிய நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறப்பட்ட இத்தீர்மானம் தற்போது அயலுறவு விவகாரத்துக்கான குழு…

  21. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதை ரஷ்யா ஆதரிப்பதாக அந்நாட்டு அதிபர் மெட்வெதேவ் கூறினார். இந்திய பிரதமரும், ரஷ்ய அதிபரும் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம். இதற்காக இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வெதேவ் நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கும், மெட்வெதேவும் சந்தித்து பேசினர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் உலைகள் அமைப்பது பற்றி ஆலோசித்தனர். பின்னர் ரஷ்ய அதிபர் மெட்வெதேவ், நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படும்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்பது ரஷ்யா…

  22. சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கத்திய நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் அலெப்போ நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிரியா விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சிரியா அரசு அந்நாட்டு மக்கள் மீது நடத்தி வரும் கொடூரமான தாக்குதல் குறித்து பிரிட்டன் தயாரித்த வரைவு அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர் நாடுகள் முன் செவ்வாய்க்கிழமை இரவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு ரஷியா…

  23. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 10:24[iST] பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார். சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவே…

  24. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியும், இந்தியாவின் தகுதியும்! உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு. இந்நி…

  25. ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்மிக உரிமை உள்ளது பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லி, ""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் போன்றவற்றால் உலக நாடுகள் இந்தியாவை அங்கீகரிப்பது அதிகரித்து வருகிறது. எனினும், நிரந்தர இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன'' என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார். நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில்கள் வருமாறு: வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறைகளில் இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நட்புணர்வுடன் அணுகச் செய்வதற்கு எங்கள் அரசு பல முக்கிய நடவடிக்கைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.