உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
பஞ்சாப்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை பஞ்சாப் மாநில சீக்கியர்களின் கட்சியான டல் கல்சா கடுமையாக கண்டித்திருக்கிறது. மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கும் அக்கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டல் கல்சா கட்சியின் தலைவர் தாமி கூறுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டைவேடம் காட்டி வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். இலங்கை இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு சாட்சியமாக இருப்பது பிரபா…
-
- 0 replies
- 592 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலுள்ள Emerson கல்லூரியில் Donnie Collins(20) என்பவர் படித்து வருகிறார். பிறவியில் பெண்ணாக அவதரித்த போதிலும் 17 வயதிற்கு மேல் இவருக்கு ஆண் போன்ற உணர்வு ஏற்படத்தொடங்கியது. எனவே ஆண் நண்பர்களுடனேயே தங்குகிறார். இதனால் அவருக்கு ‘செக்ஸ்’ மாற்று அறுவை சிகிச்சைக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதன் செலவுக்காக மாணவர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிப்ரவரி 9ஆம் தேதி நிதி திரட்ட ஆரம்பித்த மாணவர்கள் $4800 வரை மொத்தம் நிதி திரட்ட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு $16000 வரை நிதி குவிந்துள்ளது. இன்னும் நிதி வந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் மாணவரி…
-
- 0 replies
- 542 views
-
-
விளக்குகளை அணைக்க வழியில்லாத புதிய விமான நிலையம் - கேலிக்குள்ளாகும் ஜேர்மனியின் தொழில்நுட்பம்! [Monday, 2013-03-04 09:41:28] பலகோடி ரூபாய் செலவில், ஜெர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின், மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என, கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில், டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற, இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, அதி நவீன வசதிகளுடன், "பெர்' என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி, நடக்கிறது. இந்த ஆண்டில், இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், 2017ல் தான் புது விமான நிலையம் தயாராகும்.இவ்விமான நிலையத்தை உருவாக…
-
- 5 replies
- 567 views
-
-
ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகப்பெரிய சவால்! ஊடகத் துறை தொடர்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருது வழங்கினார். பின்னர் பேசிய மோடி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் நம்பகத்தன்மை என்பது ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- நம்பகத்தன்மையை தக்கவைத்து கொள்ளது ஊடகங்களுக்கு முக்கியமானது. மக்களுக்கு தற்போது நிறைய செய்திகள் சென்று சேர்கிறது. ஆனால் அந்த செய்திகளில் நம்பகத் தன்மை என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றின் மீதும் எல்லோர் மீதும் கருத்து சொல்ல ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதும், அது மற்றவர…
-
- 0 replies
- 283 views
-
-
ஜெனிவாவில் எடுபடாமல் போன இந்தியாவின் திருத்தங்கள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 01:29 GMT ] [ கார்வண்ணன் ] திமுகவைத் திருப்திப்படுத்துவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில், இந்தியா ஏழு திருத்தங்களை முன்வைத்ததாகவும், ஆனால் அவற்றை அமெரிக்கா முறைப்படி நிராகரித்து விட்டதாகவும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாதுகாப்பதற்கு, திமுகவை மீண்டும் அதனுள் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த புதன்கிழமை இந்திய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. …
-
- 2 replies
- 564 views
-
-
அணைகளில் நீர் வற்றிப்போனால் சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா என்னும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அஜித் பவாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, தனது நிலத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புனேயில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நி…
-
- 0 replies
- 334 views
-
-
ஸ்லம்டாக் மில்லியனேர்படத்தில் நடித்த சிறுமி ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க அவரது தந்தை முயற்சி வீரகேசரி இணையம் 4/20/2009 11:06:15 AM - இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை. ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறி…
-
- 2 replies
- 1.6k views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ ஏற்கவில்லை. இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் தொலைதொடர்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இந்த விளக்கத்தை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்க வ…
-
- 0 replies
- 275 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டம் : ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை (காணொளி இணைப்பு) Published by Kumaran on 2017-01-25 09:56:04 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் குவிந்து மறியல் செய்து வந்ததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் சிப்பந்திகளும் குறுக்கு வழியால் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டி ஏற்பட்டது. இதன்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த முள் வேலிகளின் ஊட…
-
- 0 replies
- 503 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது. பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என…
-
- 3 replies
- 448 views
-
-
பாகிஸ்தானுக்கு வழங்கிய இலங்கை விமானத்தை பின்தொடர்ந்த இங்கிலாந்து போர் விமானங்கள் : அநாமதேய தொலைபேசியால் வந்த விளைவு இலங்கை விமான சேவை பணியாளர்களுடன் குத்தகை அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கை விமானம் ஒன்று இங்கிலாந்து வான் பரப்பில் செல்லும் போது அவசரமாக நேற்று மாலை இங்கிலாந்தில் தறையிறக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குத்தகை அடிப்படையில் இலங்கையால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிகே757 என்ற விமானம் தற்போது பாகிஸ்தானால் சர்வதேச விமான சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த விமானம் 150 பயணிகளுடன் லாகூரிலிருந்து இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது. இதன்போது குறித்த …
-
- 0 replies
- 445 views
-
-
சுவிட்சர்லாந்தில் கருப்பு பணம் பதுக்கும் பாகிஸ்தானியர்கள் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அங்கு அதிக அளவில் கருப்பு பணம் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த முதலீடு ரூ.9200 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியர்களின் கருப்பு பண முதலீட்டை விட அதிகமாகும். ஏனெனில் இந்தியர்களின் முதலீடு 9 ஆயிரம் கோடியாக உள்ளது. மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவை விட பாகிஸ்தான் மிகச் சிறிய நாடு. இருந்தாலும், அது கருப்பு பண முதலீட்டில் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. இருந்தாலும் இது கடந்த ஆண்டை ஒப்பீடுகை…
-
- 0 replies
- 2.5k views
-
-
போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!செவ்வாய்க்கிழமை, ஜூன் 9, 2009, 12:51 [iST] டெல்லி: 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்ற லேபிளுடன் ஏராளமான போலி மருந்துகளை தயாரித்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)' என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதுவரை இந்த படுபாதகத்தை இந்தியாவே செய்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்தன. ஆனால் கடந்த வாரம் நைஜீரியா அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்ஸி ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த ம…
-
- 4 replies
- 2.4k views
-
-
'இரவுப் பணிக்கு சிவப்பு விளக்கு சிறந்தது'-ஆய்வு இரவு ஷிப்ட் பணியாளர்கள் சிவப்பு விளக்குகளுக்கடியில் வேலை செய்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஹேம்ஸ்டர்கள் எனப்படும் எலியினங்கள் ( மூஞ்சுறு போன்றவை) இரவு நேரத்தில் நீல நிற அல்லது வெள்ளை நிற விளக்குகளுக்கடியில் இருந்தால் அவை உணர்வு ரீதியாக சோர்வடைகின்றன என்றும் அவை இருளிலோ அல்லது சிவப்பு நிற விளக்குகளுக்கடியிலோ இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக நரம்பியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கூறும் இந்தக் கட்டுரை, இந்த ஆய்வு முடிவுகள் இரவு நேரப்பணியாளர்களுக்கு மேலும் சிறப்பான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று …
-
- 4 replies
- 1k views
-
-
அமெரிக்காவில்... துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு, முடிவு? ஜனாதிபதி பைடன் புதிய நடவடிக்கை! அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார். துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக, ஜனாதிபதி ஜோ பைடன் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இந்த 5 பணிக்குழுக்கள் நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும். இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமை…
-
- 0 replies
- 278 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…
-
- 0 replies
- 234 views
-
-
பெனாசீர் பூட்டோவின் கொலையுடன் பேர்விஸ் முஷாரப்பிற்கு தொடர்பு? பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் அமரர் பெனாசீர் பூட்டோவின் கொலையுடன், முன்னாள் பிரதமர் ஜெனரல் பேர்விஸ் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த போது பூட்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பூட்டோ கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துடன் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்…
-
- 2 replies
- 398 views
-
-
மும்பை: இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன் டோகோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே லாகோஸ் என்ற இடத்தில் சென்ச்சுரியன் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். கடற்படை அதிகாரிகள் போன்று உடை அணிந்து 30 முதல் 35 கொள்ளையர்களை கப்பலுக்குள் வந்துள்ளனர். கடற்கொள்ளையர்கள் கேப்டன் சுனில் மற்றும் மாலுமிகளை ஒரு நாள் சிறைப்பிடித்து வைத்து அதன் பிறகு அவர்களை விடுவித்துள்ளனர்.ஜூலை 31ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப…
-
- 1 reply
- 400 views
-
-
இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில், சௌதி அரேபியாவை அடுத்து தற்போதுஇஸ்ரேலை வந்தடைந்துவிட்டார். படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான சௌதி அரேபியாவில் இஸ்லாமிய தலைவர்களிடம் பேசிய பிறகு, விமானம் மூலம் இஸ்ரேல் வந்தடைந்தார். தனது இரண்டு நாள் பயணத்தில், டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இஸ்ரேலிய-பாலத்தீன தரப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய ஒரு அமைதி ஒப்பந்தத்தை ''இறுதி ஒப்பந்தம்'' என்று அதிபர் டிரம்ப் கூறியி்ருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தம் எந்த வடிவை எடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இல்லை. இரு நாடுகளும் அ…
-
- 2 replies
- 634 views
- 1 follower
-
-
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…
-
- 0 replies
- 306 views
-
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி முடங்கும்: வெள்ளை மாளிகை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியேறுவதை உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பது போன்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முகமூடிகள் அணிந்து நடித்து காட்டும் காட்சி | படம்: ஏபி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பெருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தும் …
-
- 0 replies
- 240 views
-
-
தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். மேடக் மாவட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து அவர் சங்காரெட்டி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் தெலுங்கானாவை அடைய நாங்கள் நடத்தப் போகும் கடைசிப் போராட்டமாகும். சித்திப்பேட்டை என்ற இடத்தில் நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தெலுங்கானா அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம் என்றார். முன்னதாக தனது போராட்டம் வெற்றி பெற வேண்டும் கரீம் நகரில் சிறப்புப் பூஜைகளை நடத்தினார் சந்திரசேகர ராவ். சி்த்திப்பேட்டை போராட்…
-
- 0 replies
- 976 views
-
-
மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! மூன்று வெவ்வேறு நேரங்களில் - மூன்று வெவ்வேறு இடங்களில் - இரண்டு வெவ்வேறு நாடுகளில் - பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் - நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால பிரதமருமான ராகுல் காந்தி. அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை - இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட குழுவிடமே இருக்கிறது. …
-
- 4 replies
- 742 views
-
-
இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது; நாட்டில் இன்று ஊழல், வறுமை மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஊழல் நமது மக்களின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத சுமையாக உள்ளது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஊழலை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இது ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம். வளர்ச்சி இல்லாமல் வறுமைக்கு எதிராக போராடி அதனை ஒழிக்க முடியாது. ஒழுங்குமுறை அமைப்பு முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையான உடன்பாடு தேவை. உங்கள் பணியில் போராட்டம் என்றால் மெதுவாக முடிவெடுப…
-
- 4 replies
- 583 views
-
-
கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி: இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப் பலமாக குரல் எழுப்பினீர்களே? இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான். நா…
-
- 8 replies
- 1k views
-