உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு! இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன், இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்…
-
-
- 21 replies
- 1.1k views
-
-
திபெத்தில் தனிநாடு கோரி கலவரம் ; புத்த துறவிகள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சுடு : 7 பேர் பலி திகதி : Saturday, 15 Mar 2008, [saranya] 1950 முதல் திபெத் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. தனிநாடு கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புத்த துறவிகளும் திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் லாசா நகரில் சீன அரசை கண்டித்தும் தனிதிபெத் கோரியும் போராட்டம் நடந்தது. இதில் புத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போதுகலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கலவரம், துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தை தீபெ…
-
- 5 replies
- 1.6k views
-
-
துருக்கி கப்பலை விரட்டியது ரஷ்யா துருக்கி சரக்கு கப்பலை விரட்டியடித்த ரஷ்யாவின் கடலோர காவல் படை ரோந்து கப்பல். ரஷ்ய எல்லைப் பகுதியை நெருங்கிய துருக்கி கப்பலை அந்த நாட்டு கடற்படை விரட்டியடித்தது. இதனால் இருநாடுகளிடையே பதற்றம் எழுந்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் ரஷ்ய விமானம் சுடப்பட்டது என்று துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சிரியா எல்லையில்…
-
- 0 replies
- 460 views
-
-
திங்கட் கிழமை அதிகாலை 4.50 மணிக்கு சீனா அதன் தென் மேற்கு மாநிலமான சிச்சுவானிலிலுள்ள க்சிச்சாங் ஏவுகணைத் தளத்திலிருந்து பெயிடோவு-2 எனப்படும் இரு செய்மதிகளை Long March - 3B எனும் ராக்கெட்டின் மூலம் பூமியைச் சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் சீனா பெயிடோவு ரக செய்மதிகள் 11 ஐ விண்ணில் செலுத்தியிருந்தது. இச் செய்மதிகள் புவியியற் கண்காணிப்புக்காகவும் தகவல் தொடர்பு வலைப் பின்னல்களின் குறித்த இலக்குகளை நிர்ணயிப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இரு செய்மதிகளை ஒரேயொரு ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவது சீனாவுக்கு இதுவே முதன் முறையாகும். இம்முறை செலுத்தப்பட்ட இச் செய்மதிகள் பெயிடோவு நெட்வேர்க்கின் துல்லியத்தை அதிகரிக்க அல்லது அத…
-
- 0 replies
- 703 views
-
-
அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…
-
- 1 reply
- 1.1k views
-
-
தென் சீனக் கடல் பகுதியில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டப் போருக்குத் தயாராகவில்லை என்று சீனா கூறியுள்ளது. தென் சீனக் கடல் பரப்பில் பாரம்பரியமாக தங்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்றும் பிற நாடுகள் அங்கு வருவதும் எண்ணெய் துரப்பணப் பணிகள், ஆய்வுகள் போன்றவற்றைத் தங்களிடம் அனுமதி பெறாமல் மேற்கொள்வதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சீனா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் பிலிப்பின்ஸ் நாடு தென் சீனக் கடலில் உள்ள ஹுவாங்யான் தீவு தங்களுக்கே உரியது என்றும் அதன் பெயர் பனடாக் ஷால் என்றும் கூறி வருகிறது.இந்த இடம் எங்களுடையது தான், உங்களுக்கு ஏதாவது நேருவதற்கு முன்னால் இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போங்கள் என்று சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் பிலிப்பின்ஸை எச்…
-
- 0 replies
- 435 views
-
-
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்திற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 159 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த சட்ட வரைவு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய சட்டமானது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எல்லை கடந்து செய்ய அனுமதித்துள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு படைகள் மத்திய ராணுவ ஆணையத்தின் அனுமதியை பெற்று அத்தகைய செயல்களில் ஈடுபடலாம். …
-
- 0 replies
- 576 views
-
-
தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரி…
-
- 0 replies
- 198 views
-
-
பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’. https://www.polimernews.com/dnews/91113/கிறிஸ்தவ-ஆலயத்தில…
-
- 0 replies
- 538 views
-
-
அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலுள்ள பியர்ல் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜப்பான் விமானப்படை, கடற்படை நடத்திய தாக்குதலில், அமெரிக்கர்கள் 2390 பேர் பலியாகினர். அந்நாட்டின் ஏராளமான போர் கப்பல்கள், விமானங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.polimernews.com/dnews/91932/பியர்ல்-ஹார்பர்-தாக்குதல்சம்பவத்தின்-78ஆம்-ஆண்டுநினைவு-தினம்-அனுசரிப்பு
-
- 0 replies
- 571 views
-
-
[size=4]அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம் [/size][size=1] [size=4]சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார் என்று குறம் சாட்டப்பட்ட பென் ஸ்டேட் [/size][size=4] [/size][size=4]'சொக்கர்' பயிற்றுனரின்[/size][size=4] ஜோ பெர்ரோநோவின் சிலை நீக்கப்பட்டது. [/size][/size][size=1] [/size][size=1] [size=4]இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலத்தில் இறந்துவிட்டார். [/size][/size] [size=1] [/size] [size=1] [size=4]இந்தக்கல்லூரியில் நீண்டகாலமாக இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடந்தும் பலரும் இதை மறைத்து செயல்பட்டனர் என்று நிரூபிக்கப்பட்டது. [/size][/size] [size=1] http://espn.go.com/college-football/story/_/id/8188530/joe-paterno-statue-removed-p…
-
- 1 reply
- 551 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி! நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி…
-
-
- 5 replies
- 414 views
- 1 follower
-
-
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி! குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன் அங்கு குறித்த அசோதா பரீசிலனை செய்யப்படும். இதேவேளை குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால…
-
- 0 replies
- 117 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கைது பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகங்கள் கூறுகின்றன. விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நேற்று செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் செவென்டம் (Zaventem) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் நடந்த இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்க…
-
- 1 reply
- 400 views
-
-
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்! தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எனது பிரதிநிதிக…
-
- 2 replies
- 199 views
- 1 follower
-
-
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 31 தொழிலாளர்கள் பலியாகினர்; 25 பேர் காயமடைந்தனர். மேலும் சுமார் 100 பேர் சிக்கி தவிக்கும் நிலையில்,அவர்களை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணியில் 184 தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.40-க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது.இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது.அங்கு இருந்த அனைத்து பட்டா…
-
- 34 replies
- 2.2k views
-
-
சிரிப்புடன் விடைபெற்றார் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதிகள், ஆண்டுதோறும் உரையாற்றும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இறுதியாகக் கலந்துகொண்டார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், பிரபலங்களெனப் பலர் கலந்துகொண்டனர். வழக்கத்தைப் போலவே, அமெரிக்க ஜனாதிபதி, நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார். 8ஆவது முறையாக உரையாற்றின ஜனாதிபதி ஒபாமா, கடந்த காலங்களில் தான் உரையாற்றின புகைப்படங்களைக் காண்பித்து, தனக்கு வயதாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தியதோடு, முன்னெரெப்போதுமில்லாததைப் போன்று, அவருக்கான ஆதரவு, அமெரிக்காவில் அதிகரித்துள்ளதையும் …
-
- 0 replies
- 783 views
-
-
மு.கருணாநிதியின் துரோக டெசோ கூட்டமும் - குல்தீப் நய்யாரின் குற்ற உணர்வும்..! ஈழதேசம் செய்தி..! வரும் அக்டோபர் - 3 ந் தேதி டெசோ மாநாட்டின் தொடர்ச்சியாக டெசோ கூட்டம் நடைபெறும் என்று இன்று தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அன்று காலை பத்து மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும், இந்தக் கூட்டத்திற்கு டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற டெசோ மாநாட்டின் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொண்டு போய் கொடுத்தார். தி.மு.க.வின் நாடாளுமன்ற கொறாடாவான டி.ஆர்.பாலு மற்றும் மு.க.ஸ்டாலின் கூட ஏனைய நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள். டெசோ மாநாடு முடிந்ததும் ஐ.நா.சபை…
-
- 2 replies
- 927 views
-
-
சிரியாவில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேலினால் இந்த வாரம் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயர் ஹிஸ்புல்லா தளபதியான முஸ்தபா பட்ரெட்டினே கொல்லப்பட்டதாக லெபனானிய ஷியா குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 1982ஆம் ஆண்டு தொடக்கம், இஸ்லாமிய தடுப்பாற்றலின் பெரும்பாலான நடவடிக்கையில் பட்ரெட்டினே பங்கேற்றதாக, அவரின் மரணத்தை அறிவிக்கும் இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, அவரை சிறந்த ஜிஹாதி தலைவராக வர்ணித்துள்ளது. 55 வயதான பட்ரெட்டினே, ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட அதிகாரி என்பதோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டோடு இணைந்து மோதலில் ஈடுபடும் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான…
-
- 0 replies
- 358 views
-
-
ஐரோப்பா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் - அமெரிக்கா ஐரோப்பா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் 10ம் திகதி முதல் அடுத்த மாதம் 10ம் திகதி வரையில் பிரான்ஸில் கால்பந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படக் கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸில் நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டியை கண்டு ரசிக்க ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்குள் வருகை தருவார்கள…
-
- 0 replies
- 237 views
-
-
20 Nov, 2025 | 12:15 PM உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய X-101 குரூஸ் ஏவுகணைகளே இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப் படையினர் கூறுகின்றனர். ரஷ்யாவால் ஏவப்பட்ட 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளில் 442 ட்ரோன்கள்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! adminJanuary 1, 2026 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த வேளையில், அங்குள்ள ஒரு பாரில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம்).சுமார் 01:30 மணியளவில் கிராஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பிரபல பார் மற்றும் உணவகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட…
-
-
- 2 replies
- 262 views
- 1 follower
-
-
ம.தி.மு.க. சார்பில் "ஈழத்தில் நடப்பது என்ன?'' என்ற தலைப்பில், கடந்த 21-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப் பன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். வைகோ பேசும் போது, `நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம். ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்தி செல் வான்' (கூட்டத்தினரை பார்த்தும் நீங்கள் ஆயுதம் ஏந்த தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் என்று குரல் கொடுத்தனர்) ஆயுதம் ஏந்தி போராட முடியும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசினார். கண்ணப்பன் பேசும் போது, `தமிழ்நாடு தனி நாடு' என்று சொல்லக்கூடிய காலம் விரைவில் வரும் என்று பேசினா…
-
- 0 replies
- 887 views
-
-
ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. [size=3][size=4]ஐ.நா., சபையில் சமீபத்தில் நடந்த, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கக்கோரும் மசோதா 193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது…
-
- 0 replies
- 454 views
-
-
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியது வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண…
-
- 0 replies
- 375 views
-