உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
[size=5]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்[/size] [size=4]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் (Barclays) வங்கியின் தலைமை செயல் அதிகாரி பொப் டையமன்ட் (Bob Diamond) பதவி விலகினார். வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் வட்டி வீதத்தில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக கடந்த வாரம் அந்த வங்கிக்கு சாதனை அளவாக 450 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் பதவி விலகினார். வங்கி மீது வெளியில் இருந்து ஏற்பட்டுள்ள அழுத்தம் வங்கிக்குக் பாதிப்பாக அமைவதால் அந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த முடிவை பிரித்தானிய நிதித்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் ; (George Osborne) வரவேற்றார். பலமா…
-
- 3 replies
- 608 views
-
-
கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு! கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்த…
-
- 4 replies
- 889 views
- 1 follower
-
-
அணுவாயுத திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் [10 - June - 2008] * இஸ்ரேல் பிரதிப் பிரதமர் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமென இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்த பிரதிப் பிரதமர் சௌவுஸ் மொவாஸ் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் பயனற்றவை எனவும் தெரிவித்துள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்களில் ஒருவரான மொவாஸ் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக மொவாஸ் மேலும் தெரிவிக்கையில்; அணு ஆயுதங்களின் அபிவிருத்திக்காக அணுத்திட்டத்தை…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழக மீனவர் பிரச்னை: முடிவு பிரதமர் கையில்- முதல்வர் கருணாநிதி தமிழக மீனவர் பிரச்னையில் சுமுக முடிவு ஏற்படுவது பிரதமரின் கையில்தான் இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல…
-
- 0 replies
- 913 views
-
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஐ.நாவில் வைத்து நிராகரித்தது பாலஸ்தீனம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்டுள்ள அமைதி திட்டத்தினை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றிய போதே பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘நான் இங்கு வந்திருப்பது பாலஸ்தீனம் – இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது என்பதைக் கூறுவதற்குத்தான். இந்தத் திட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளின் நியாயத்தன்மையையும், சுயநிர்ணய உரிமையையும் இரத்து செய்கிறது. இது சட்டவிரோதமான குடியேற்ற…
-
- 0 replies
- 367 views
-
-
ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி 21 Jul, 2025 | 10:57 AM ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர். 248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியா…
-
- 0 replies
- 283 views
-
-
[size=3][size=4]கனடாவின் ஒரு மாகாணமாக இருந்து வரும் கியூபெக்கில் நடைபெற்ற தேர்தலில் தனிநாடு கோரும் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை தற்போதைக்கு அந்தக் மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]கியூபெக் மாகாணத் தேர்தல் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் பிரிவினைவாதம் கோரும் "பிகியூ" கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த லிபரல்கள் கட்சி 48 இடங்களையே கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 64 இடங்களைப் பெற்றிருந்தது.[/size][/size] [size=3][size=4]இத்தேர்தலில் பிகியூ கட்சி வெற்றி பெற்றதன் …
-
- 15 replies
- 919 views
-
-
01 AUG, 2025 | 01:37 PM பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் வீடியோவை நீக்க அமெரிக்கா வேண்டுகோள்- கூகுள் நிராகரிப்பு சான்பிரான்சிஸ்கோ: யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்த…
-
- 0 replies
- 749 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்…
-
- 1 reply
- 505 views
-
-
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இளவரசர் சார்லஸ் மற்றும் சீமாட்டி கமிலா தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். மேலும், கடந்த சில தினங்களாக சார்லஸ் வீட்டில் இருந்தபடியே தமது அலுவல் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இளவரசரும் சீமாட்டியும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிறத…
-
- 5 replies
- 782 views
-
-
பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு! புதுடெல்லி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி…
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்களில் 50 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக "கால்அப்' இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.அந்த இணையதளம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறியது: வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதத்துக்குப் பின்னர், ஒபாமாவைவிட ரோம்னிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. ரோம்னி 4 சதவீதம் ஆதரவை அதிகம் பெற்றுள்ளார். அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3,100 பதிவு செய்த வாக்காளர்களில், வாக்களிக்க விரும்பும் 2,723 பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒபாமா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெனை விட 7 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று, வெற்…
-
- 6 replies
- 902 views
-
-
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் - ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்தே அவர் அவ்வாறு தெரிவித்தார். அதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருந்ததை காண்பிப்பதாகவும் ஜென்ஸ் தெரிவித்தார். எனினும், இத்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்…
-
- 0 replies
- 342 views
-
-
2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள் Nishanthan SubramaniyamJanuary 1, 2026 1:15 pm 0 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன. Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். பணியிட…
-
- 0 replies
- 188 views
-
-
சுவிஸ்லாந்தில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி! பொது மற்றும் தனியார் நிகழ்வுகளில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கும், தன்னிச்சையாக 30 பேர் வரை கூடுவதற்கும் சுவிஸ்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறைந்துவரும் நிலையில் சுவிஸ்லாந்து அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது. அத்துடன், 1,000 பேர் வரை நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஜூன் 24ஆம் திகதி அரசாங்கம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 1,000 இற்க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் பெரிய நிகழ்வுகள் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை சாத்தி…
-
- 0 replies
- 329 views
-
-
நீஸ் தாக்குதல்: பாதுகாப்பு அறிக்கை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு நீஸ் நகரில் எண்பதுக்கும் மேலானவர்களை கொன்ற டிரக் தாக்குதல் நடந்த இரவன்று இருந்த பாதுகாப்பு குறித்த அறிக்கையை மாற்றுமாறு தன்னை துன்புறுத்தியதாக மூத்த பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறிய குற்றச் சாட்டை மறுத்துள்ளார் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ்நொவ். நகரின் வீடியோ கண்கானிப்பு பொறுப்பாளரான சாண்ட்ரா பெர்டின் என்ற அந்த போலிஸ் அதிகாரி, போலிஸ் இல்லாத பகுதிகளிலும் போலிஸ் இருந்ததாக அறிக்கை தர அதிகாரிகள் கோரியதாகவும், ஆனால் அவர்கள் சொன்ன இடங்களில் போலிசார் இருக்கவில்லை என்றும் சான்ட்ரா பெர்டின் பிரான்ஸ் நாட்டு செய்தித்தாள் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஆனால் உள்துறை அமைச்சர் பெர்நார் கஸ…
-
- 0 replies
- 217 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கிய விமானப்படையால் ரஷ்ய ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். இராஜதந்திர உறவுகள் மேம்படுமா? * உங்கள் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானத்துக்கு எதிரான போராட்டம். ஆண்களின் குற்றக்குழுவால் வழி தவறிய பிரிட்டனில் உள்ள ஆசிய முஸ்லிம் பெண் ஏனையவர்களுக்கு உதவ முயல்கிறார். * தன்சானியாவில் சர்க்கரைக்கான தட்டுப்பாடும், விலை மற்றும் வரி அதிகரிப்பும் வணிகங்களின் இலாபத்தை பாதிக்கின்றதாம்.
-
- 0 replies
- 408 views
-
-
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டது சென்னை உயர் நீதி மன்றம். கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு, உரிமையியல் வழக்கு ஒன்றில் வாதாட ஆஜரான வழக்கறிஞர் பாரி, தமிழில் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நடந்தது இதுதான்... நீதிபதி சிவக்குமார்: ''நீங்கள் ஏன் தமிழில் வாதாடுகிறீர்கள்? ஆங்கிலம்தானே நீதிமன்றத்தின் அலுவல் மொழி…
-
- 4 replies
- 709 views
-
-
பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார். இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். உயிரை காப்பாற்றிய சிறுவனை பலர…
-
- 0 replies
- 554 views
-
-
தற்போது நான் சிறப்பாக உணர்கிறேன்: ஹிலரி கிளிண்டன் முக்கியத்துவம் வாய்ந்த செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியின் போது, சுகவீனம் அடைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், தற்போது தனது உடல் நலன் மேம்பாடு அடைந்துள்ளது என்று உணர்வதாக தொலைபேசியின் வாயிலாக அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கோப்பு படம் தனக்கு நிமோனியா இருப்பதாக கண்டறியப்பட்ட தகவலை, முதலில் வெளியிடாததற்கு காரணம் அதனை தான் ஒரு தீவிர பிரச்சனையாக கருதாதது தான் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார். நிமோனியா என்ற நுரையீரல் தொற்று இருப்பதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று …
-
- 0 replies
- 376 views
-
-
சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது. சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது. சீன வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா? சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்' என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அல் கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977-ம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு என்பதை, சவுதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. http://www.vikatan.com/news/world/69995-saudi-arabia-executes-a-prince.art
-
- 1 reply
- 639 views
-
-
நாடகமாடுகிறார் கருணாநிதி... நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி) புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' ''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் …
-
- 2 replies
- 650 views
-
-
பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு மில்லியன் சதுர மைல்கள் பரப்புக்கொண்ட அதற்கான பகுதி நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும். http://www.bbc.com/tamil/science-37803415
-
- 0 replies
- 315 views
-