Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவின் அரசபடைகள் அலெப்போவை முழுமையாக வெற்றிகொள்ளவுள்ள சூழலில், கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்படுவதாக ஐ நா குற்றஞ்சாட்டியுள்ளது. * இந்தோனீசியத் தலைநகரின் மேயர்,மதநிந்தனைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், தான் இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என அவர் கூறுகிறார். * மருத்துவ உலகில் ஒரு சாதனை. ஒலி அலைகளின் மூலம் மாத்திரம் மூளையின் உள்ளே அறுவைச் சிகிச்சை செய்யும் பிரிட்டிஷ் மருத்துவர்கள்.

  2. உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : காணொளி இணைப்பு சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது. தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது தரையிலிருந்து சுமார் 1850 அடி உயரத்திலும், 4400 அடி நீளத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் உயரமானது 200 மாடிகட்டிடத்தின் உயரத்திற்கு சமமானதாகும் என கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பாலத்தை அமைப்பதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என சீன ஊடகங்க…

  3. ஐரோப்பா : கடும் குளிரில் குடியேறிகள் தவித்து வருவதாக ஐ.நா கவலை குடியேறிகளுக்கு சில நாடுகள் ஆதரவு தாராததால், ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக, ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கிரேக்க தீவுகளில் பல வெப்பமடையாத கட்டிடங்களில் பலர் தங்கியுள்ளனர் என்றும், பல்கேரியாவில், குளிர் மற்றும் சோர்வு காரணமாக பல குடியேறிகள் இறந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு இட்டுச் செல்லும் பால்கன் பாதையில் உள்ள நாடுகள், குடியேறிகளை வரவிடாமல் தொடர்ந்து தடுப்பதாகவும் , காவல் …

  4. ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய தகவல் ஒன்றை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22ம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் தீவிரவாத தடுப்பு தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மைசூர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது சித்தராமையா பல புதிய தகவல்களை வெளியிட்டார். 1991ம் ஆண்டு மே மாதம் 2…

  5. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்க…

    • 6 replies
    • 704 views
  6. வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தை புறக்கணிக்கும் டிரம்ப்..! வெள்ளை மாளிகையின், நிருபர்கள் ஆணையத்தின் வருடாந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வெள்ளை மாளிகை நிருபர்கள் ஆணையத்தின் விருந்துபசாரத்தில், தான் கலந்து கொள்ள மாட்டேன் என தனது சமூக வலைத்தளம் மூலம் கருத்தொன்றை டிரம்ப் பதிவு செய்துள்ளார்.அத்தோடு குறித்த விருந்துபசாரத்தின் போது, அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவிக்கும்படியும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் 1920ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் குறித்த விருந்துபசாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஹொலிவுட் நட…

  7. சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி சுவிட்சர்லாந்தின் பேசல் நகரத்திலுள்ள உணவு விடுதியில் நடத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பேசல் நகரிலுள்ள உணவு விடுதியில் இரு நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு வந்து துப்பாக்கியால் பலமுறை சுட ஆரம்பித்தனர். இதில் உணவு விடுதியிலிருந்த வாடிக்கையாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பிறகு, அந்த நபர்கள் ரயில்வே நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களின் உள் நோக்கம் இதுவரை தெரியவில்லை இது தொடர்பா…

  8. குண்டு வெடிப்பில், சிக்கினார்.... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காயமடைந்த மொஹமட் நஷீத், ஏ.டி.கே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது…

  9. லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்; அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAP Image captionவெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார் தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர். .மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52. காவலர் கீத் பால்மர், ஆய்ஷா ஃபரேட் என்ற பெண் மற்றம் அ…

  10. ஆப்கானிஸ்தானில் மசூதியொன்றில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி ஆப்கானிஸ்தானில் காபூலின் ஷகர்தரா மாவட்டத்திலுள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் அந்த மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. இந்நிலைய…

  11. எம்மால் ஏன் முடியாது? அறுபது ஆண்டுகளைக் கடந்த பெரும் இன அழிப்பிற்கான தண்டனையை யேர்மனியால் வழங்க முடிகிறது. தனது முன்னாள் ஆட்சியாளரான கிட்லரது படைப்பிரிவிலே பணியாற்றி இன அழிப்பை புரிந்ததற்கான தண்டனையை பெற வைக்க யூதர்களால் முடியுமாயின் இன்றைய நவீன இலத்திரனியல் காலத்தில் எம்மால் ஏன் முடியாது என்பதை நாமனைவரும் சிந்தித்து எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனஅழிப்பையும் அதற்குக் காரணமானவர்களையும் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனையை கொடுக்கச் சர்வதேசத்தை நாம் கோர வேண்டும். செய்தியை முழுமையாகத் தொடர்ந்து வாசிப்பதற்காக.............. http://www.spiegel.de/international/german...,635825,00.html நன்றி - ஸ்பீகல் இணையம் மொழிபெயர்ப்பாற்றலுள்ளோர் மொழிபெயர்த…

  12. கத்தாரின் சேக் தமீம் பின் ஹமத் அல் தானி. இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன. வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவை தெரிவித்துள்ளன. ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆகாய, கடல் வழிப் பயணங்கள் என்னவாகும்? அனைத்து நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகி…

    • 2 replies
    • 730 views
  13. தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி ஆரிஃப் ஷமீம் பிபிசி உருது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் கொண்ட இந்த சிறிய நாட்டின் 'ராஜதந்திர' வெற்றிகளைப் பார்ப்போம். …

  14. பிரித்தானியாவில்... எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்! பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் 150 இராணுவ லொறி ஓட்டுனர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 100,000க்கும் மேற்பட்ட லொறி ஓட்டுனர்கள் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சமீபத்திய மாதங்களில் உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல தொழில்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் எரிபொருள் தீர்ந்து பல எரிபொருள் நிலையங்களில் வரிசைகளை…

  15. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு பொலிசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே கடந்த 11ம் தேதி இரவு இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது. இதில் 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் 35 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கில் தோட்டாக்கள் இருந்தன. இதுதொடர்பாக கியூ பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து கப்பல் கேப்டன் உள்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த தண்டபாணி என தெரியவந்துள்ளது. இ…

  16. டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…

  17. அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவ…

  18. ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…

  19. நியூயார்க்கில் பயணிகள் மெட்ரோ ரயில் விபத்து: 4 பேர் பலி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் டிசம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தையடுத்து ஹட்சன் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைவான …

  20. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பல்வேறு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசி நாள் கூட்டத்தில் மட்டும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட…

  21. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்ற…

  22. யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? அமெரிக்கா புது எச்சரிக்கை 14 மார்ச் 2022, 09:52 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களு…

  23. களியக்காவிளை: கேரளா வில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல்​ பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல்​ பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு,​​ அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல்​ பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை…

  24. கம்போடியா வரை நீண்டிருந்த தமிழர் ஆட்சியில்.. கோலோஞ்சி இருந்த கோவில்களில் இருந்து அமெரிக்கா.. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் திருடப்பட்ட விலைமதிக்க முடியாத அருங்காட்சியக சொத்துக்களை மீள கையளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. அண்மையில் அமெரிக்கா.. தான் திருடி வைத்திருந்த துரியோதனன்.. மற்றும் பீமன் சிலைகளை மீளக் கையளித்துள்ளது. அதேபோல் பிரிட்டன் திருடியவற்றையும் மீளத் தரக் கேட்கப்பட்டுள்ளது. அதுபோக.. தமிழர்களிடம் இருந்து திருடிய கம்போடியாவை தமிழர்களிடம் எப்ப தருவார்கள்.. அதுசரி.. தமிழர்களே அதைப்பற்றி கதைப்பதில்லை. ஏலவே ஈழத்தில் பெளத்த ஆக்கிரமிப்பைக் கூட கண்டும் காணாமலும் இருக்கும் தமிழர்களிடம் போய்.. இதை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது தான். இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.