உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம் By SETHU 09 DEC, 2022 | 04:53 PM சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இன்று விநியோகிக்கப்பட்டது. சி919 (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது. அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் நகரிலுள்ள விமான நிலையத்தில் வைத்து, சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இவ்விமானம் கையளிக்கப்பட்டது. இவ்விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை. எனினும், போயிங் 737 ம…
-
- 1 reply
- 823 views
- 1 follower
-
-
சீனாவில் திபெத் பெண் துறவி தீக்கொளுத்தி மாண்டார் சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத்திய பௌத்த பெண் துறவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்ததுள்ளார் என்று சீனாவிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ள டாவு என்ற ஊரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நின்று இந்த 35 வயது பெண் துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய பெயர் கியு சியாங் என்றும், இவர் ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது. ஆனால் உயிர் விடும் நேரத்தில் தலாய் லாமாவை திபெத்துக்கு திரும்பி வர அனுமதியுங்கள் என்று இவர் கத்தியதை மற்றவர்கள் கேட்டுள்ள…
-
- 1 reply
- 556 views
-
-
சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம் சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த இடங்கள் இடிந்து விழுந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் போது சாலையில் சென்ற வாகனங்களும் த…
-
- 1 reply
- 424 views
-
-
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது அங்கு பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த வைரஸ் பரவும் வேகம் அசாதாரணமான வகையில் அதிகரித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸினால் 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பீஜிங், ஷங்காய் மக்களும் அதில் அடங்குகின்றனர். வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, மற்றும் தென் கொரியா நாடுகளிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோருக்கு நியூமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்படும் எ…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
சீனாவில் துப்பியவர்களுக்கு அபராதம் தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.
-
- 10 replies
- 1.8k views
-
-
தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…
-
- 0 replies
- 451 views
-
-
சீனாவில் நான்காவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! வெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக சீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்நாட்டவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரி…
-
- 0 replies
- 644 views
-
-
சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…
-
- 0 replies
- 262 views
-
-
சீனாவில் நிலஅதிர்வு: 381பேர் பலி; 12,000 வீடுகள் சேதம் திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014 08:42 தென் மேற்கு சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நில அதிர்வினால் 381இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி தெரிவிக்கிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. தென் மேற்கு சீனாவிலுள்ள யுன்னன் மாகாணத்தின் தலைநகலர் குன்பிங் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், நிலத்துக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி இருந்தது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்த போதிலும், 6.5 ரிக்டர் அளவில் தாக்கம் இருந்ததாக சீனா தெரிவித…
-
- 0 replies
- 443 views
-
-
சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது. சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத…
-
- 3 replies
- 445 views
- 1 follower
-
-
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரி…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
சீனாவில் நிலநடுக்கம் - 3200 வீடுகள் தரைமட்டம்! [Monday, 2013-03-04 09:29:58] சீனாவின் யுனான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 3,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜிஸான் நகர் பகுதியில் 9 ஆடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. குறிப்பாக மியான்மரின் எல்லையில் உள்ள சீனப் பகுதியான எரியுவான் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இங்குள்ள 3,200 வீடுகள் சேதமடைந்தன. இதில் 700 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. இப்பகுதியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்துக்கு…
-
- 0 replies
- 630 views
-
-
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 12 நொடிகள் நீடித்துள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தையடுத்து கன்சூ மற்றும் கிங்காய் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. http://tamil.…
-
- 0 replies
- 442 views
-
-
சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி - 20 பேர் காயம் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பிஜிங்: வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 8…
-
- 0 replies
- 281 views
-
-
சீனாவில் இன்று காலை 5.58 மணியளவில் கிக்சுவான், கன்சு ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து வடமேற்கு சீனாவில் உள்ள இலி என்ற பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரு நாட்டின் லிமாவில் 6.9 என ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 134 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
-
- 0 replies
- 685 views
-
-
சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானவோட்டி அவுஸ்திரேலியாவில் கைது By RAJEEBAN 04 NOV, 2022 | 12:46 PM சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானியொருவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மரைன் படைப்பிரிவிற்காக பணியாற்றிய டக்கன் (54) ஒக்டோபர் 21 ம் திகதி அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனா மேற்குலகின் ஓய்வுபெற்ற விமானவோட்டிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்வது குறித்து பிரிட்டன் எச்சரிக்கை விடுத்த அதேதினத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 72 பேராவது உயிரிழந்திருக்ககூடுமென அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தில் 600 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுமார் 20 வினாடிகளுக்கு மேல் பூமி குலுங்கியது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீனாவின் லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 12 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ள இந்த நிலநடுக்கம் யான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள …
-
- 4 replies
- 406 views
-
-
2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரசின் பரவல், உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சீனாவில் புதிய HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதன் காரணமாக உலக நாடுகள் பல அச்சத்தில் உள்ளன. எச். எம். பி. வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப…
-
-
- 3 replies
- 412 views
- 1 follower
-
-
சீனாவில் பரவும் புதியவகை கொரோனா சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த மே 22ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான நிஜாங் நன்ஷான், “ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் விரைவாகப் பரவுவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளையும் ப…
-
- 1 reply
- 468 views
- 1 follower
-
-
சீனாவின் வென்ஜோ கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த 'கிழக்கின் எருசலேம்' என அழைக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயம் சீன அரசினால் திட்டமிட்டு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவாலய இடித்தழிப்பு தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளின் கருத்துப்படி தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தின் அளவை 4 தடவைகள் சட்டரீதியற்ற முறையில் மாற்றியமைத்திருப்பதாகவும் இதனாலேயே தேவாலயம் இடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய செயற்பாடானது சீனாவிலுள்ள கிறிஸ்தவ மதத்திற்கெதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே அமைவதாக தேவாலய நிர்வாகத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=821342947602894862#sthash.EcPmXxsb.dpuf
-
- 0 replies
- 527 views
-
-
20 JAN, 2024 | 11:15 AM சீனாவில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹனான் மாகாணத்தின் யன்சான்பு கிராமத்தில் சிறுவர் பாடசாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பாடசாலையொன்றில் இந்த தீபத்து ஏற்பட்டது பாடசாலையின் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. ஒரு மணிநேரத்தின் பின்னர் தீயணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/174375
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது.இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட த…
-
- 6 replies
- 865 views
- 1 follower
-
-
சீனாவில் பாரிய நிலச்சரிவு: 30 பேர் மாயம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து,தனது அனுதாபத்தை…
-
- 0 replies
- 126 views
-
-
சீனாவில் பாரிய பூகம்பம் ; 46 பேர் பலி : 50 பேர் படுகாயம் 06 Sep, 2022 | 09:33 AM சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. பூகம்பத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த பூகம்பத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பூகம்பத்தில் உயிரிழந்…
-
- 0 replies
- 269 views
-
-
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு 03 Sep, 2025 | 11:24 AM சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/224075
-
- 4 replies
- 549 views
- 1 follower
-