உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்! ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார். எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை. ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் ந…
-
- 0 replies
- 93 views
-
-
பஞ்சாப் மாநிலம் வழியாக நுழைந்து தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வெவ்வேறு வாகனங்களில் வெடிப்பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தின் வழியாக டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தையும் தீவிர…
-
- 0 replies
- 283 views
-
-
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தாய்மை தொடர்பான சர்ச்சை டேவிட் கேமரனுக்கு பதிலாக பிரிட்டனின் கன்செர்வ்டிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் இடத்திற்கான போட்டியை, தாய்மைக்கான முக்கியத்துவம் தொடர்பான சர்ச்சை ஆட்கொண்டுள்ளது. தான் ஒரு தாயாக இருப்பதால், தனக்கு பிரிட்டனின் எதிர்காலத்தில் பெரிய பங்குள்ளது என்று தெரிவித்த ஆண்ட்ரியா லீட்சம், இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் ஆவர். இவர் இந்தப் போட்டியில் தனது சுயகருத்தை முன்னிறுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். தெரெசா மே தனக்கு குழந்தைகள் இல்லாததால், கவலைப்பட வேண்டும் என லீட்சம் கூறியதாக டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பற்றிய கருத்தை உருவாக்குவது பயங்கரமானதாக இருக்கும் என்று அவர் கூறியதாக…
-
- 1 reply
- 521 views
-
-
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார். வணிக சாம்ராஜ்யம் இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார். இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும…
-
- 0 replies
- 732 views
-
-
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்க…
-
- 16 replies
- 992 views
-
-
அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா அணு ஆயுதம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர பலமுறை அழைப்பு விடுத்த அமெரிக்காவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 13:26 PM பீஜிங் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் மட்டத்திற்குக் குறைக்கத் தயாராக இருந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா மகிழ்ச்சியாக பங்கேற்கும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவுக்கு அமெரிக்கா பல…
-
- 0 replies
- 443 views
-
-
டொரண்டோவில் கடந்த ஏழு வருடங்களுக்குப் பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக டொரண்டோ சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமை டொரண்டோவின் வெப்பநிலை 12C என்ற அளவு இருந்ததாகவும், இது கடந்த ஜூன் மாதம் 2006 ஆம் ஆண்டில் இருந்த அதிகபட்ச வெப்பநிலையான 9.6 C அளவை மிஞ்சியதாக இருப்பதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடாவின் பல இடங்களில் இரட்டை இலக்கங்களில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 10 முதல் 15 C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர்காலத்தின் இடைநிலை காலங்களில் இவ்வாறு அதிகபட்ச வெப்பநிலை இருப்பதை கனடிய மக்கள் வரவேற்று உள்ளனர். மேலும் ஒண்டோரியோ மற்றும் வடக்கு ஒண்டோரியொ பகுதிகளில் பரவியிருந்த பனிக்கட்டிகள் உருக தொடங்கியுள்ளது. சென்ற வருடத்தில் இத…
-
- 1 reply
- 343 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமலுக்கு வந்தது சிரிய போர்நிறுத்தம்; ஆனால் ஏற்கனவே நடந்திருக்கும் அழிவின் அளவென்ன? அதிகபட்ச தாக்குதலுக்குள்ளான அலெப்போ நகரிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திகள். * திபெத் ஆறுகளின் வெள்ள அளவு குறித்து, சீனா ரகசியம் காப்பதாக நேபாளம் புகார்; இந்தியா, வங்கதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாமென கூடுதல் கவலைகள். * ஒன்று போல் தோன்றும்—ஆனால் இவை வெவ்வேறானவை; ஒட்டகச் சிவங்கிகள் ஓரினமல்ல—நான்கு வெவ்வேறு இனங்கள் என்கிறது ஆய்வின் முடிவு
-
- 0 replies
- 358 views
-
-
விண்வெளிக்கு செல்ல ஈரான் அதிபர் ஆர்வம் ஈரான் சார்பில், விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் முதல் ஆளாக செல்ல தயாராக இருக்கிறேன்,” என, ஈரான் அதிபர், அகமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக, உலக நாடுகள் சந்தேகிப்பதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், தங்கள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம், குரங்கை, விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, உயிருடன் திரும்பியதன் மூலம், தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், “ஈரானின் விண்வெளி திட்டம் கவலைக்குரியது’ என, தெரிவிக்கின்றன. “ராக்கெட் சோதனை என்ற போர்வையில்…
-
- 3 replies
- 488 views
-
-
அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு 1000க்கும் மேற்பட்ட விமானஙகளின் சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதன் விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9-110800819.html http://www.cnn.com/2013/02/08/us/northeast-blizzard/index.html?hpt=hp_c1
-
- 8 replies
- 883 views
-
-
மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது. பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்! தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உ…
-
- 0 replies
- 923 views
-
-
சோனியாவின் தமிழக பயணம் ரத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 28ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனிடையே இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் காணரமாக பாதுகாப்பு கருதி ஸ்ரீபெரும்புதூர் பயணத்தை சோனியா ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உளவுத்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி தனது தமிழக பயணத்தை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4072 அந்த பயம் இருந்தால் சரி (செருப்படி பட்ட புஸ்ஸைப் பற்றி கேள்விப்பட்டிருப்பா என…
-
- 4 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் வோகோ பகுதியில் அமைந்திருக்கும் உர ஆலை ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பையடுத்து ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிப்புப் பகுதிகளில் தீ பரவியுள்ளது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர் மேலும் பலர் தீ பரவியுள்ள கட்டடங்களில் சிக்குண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போஸ்டன் குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்றுள்ள இந்த உர ஆலை வெடிப்பிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
-
- 7 replies
- 577 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, " பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது” என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், "டெல்லி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவள் காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரிப்பதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினார்களா என்பது குறித்தும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுவது குறித்தும் அறிந்துகொள்ள டெல்லி காவல்துறையின் கண்காணிப்பு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப…
-
- 0 replies
- 333 views
-
-
வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். 1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்…
-
- 1 reply
- 459 views
-
-
எல்லையில் நடப்பது என்ன? சீனா ஏன் இந்தியாவை கைபற்ற வேண்டும் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளே வந்து முகாமிட்டுள்ள அக்கிரமம் வர ஒரு வாரம் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடக்கு எல்லையாக இமயமலை கிடைத்தது இயற்கையின் வரம் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள். வரமா சாபமா என்று புரியாமல் இப்போது விழிக்கிறோம். அந்த அளவுக்கு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ஆன நமது எல்லை கண்காணிப்பு வளையத்துக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது. மனித நடமாட்டமோ மேய்ச்சல் வெளிகளோ இல்லாத பனிமலை பிராந்தியத்தில் நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகள் மாதிரி ஆங்காங்கே அமைத்து வீரர்கள் கையில் தொலைநோக்கிகள் கொடுத்து கண்காணிப்பது சாத்தியமில்லைதான். நமது நண…
-
- 0 replies
- 718 views
-
-
1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்…
-
- 4 replies
- 787 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய சந்தையை பிரிட்டன் இழந்தால் மாற்று நடவடிக்கை EPA பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் மக்கள் சுதந்திரமாக குடியேறுவதைக்…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெரியார்…
-
- 0 replies
- 843 views
-
-
சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர் மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ…
-
- 7 replies
- 1.1k views
-
-
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்! அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்கொட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக உட்துறை அமைச்சர் பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். அவுஸ்ரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்து…
-
- 0 replies
- 441 views
-
-
லே லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து சீனா மீண்டும் தனது முரண்பாடான பதிலை அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனை அடுத்து அங்கு இரு நாட்டு ராணுவ தளபதிகளும் கொடி அமர்வு பேச்சி ஈடுப்பட்டனர். அதைத்தொடர்ந்து சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோபுரம் அகற்றப்பட்டு அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஜூன் 17-ந்தேதி மீண்டும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஜுமார் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்திய ராணுவம் அமைத்திருந்த கண்காணிப்பு அமைப்புகளையும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைத்த…
-
- 0 replies
- 403 views
-
-
சீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து' 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஜெசிகா ரோசன்வார்செல் சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை "தேசிய பாதுகாப்பு" குறித்த காரணங்களால் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 'சீனா டெலிகாம்' என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது சீன அரசு செலுத்திய ஆதிக்கம், அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மாயமாகிப்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இவர்களின் பிரதான வாழ்வின் ஆதாரம் மீன் பிடி தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக மீன் பிடிக்க செல்பவர்கள் ஒன்று அல்லது கூடிப்போனால் 2 வாரத்திற்குள் வீடு திரும்புவர் . கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் குளச்சல் அதனையொட்டிய சுற்றுப்புற மீனவர்கள் சுமார் 80 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்த மீனவர் குடும்பத்தினர் காலம் தாழ்த்திட்டதால்…
-
- 1 reply
- 1.1k views
-