Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கோடீஸ்வர பல்வைத்தியர், மனைவியை கொலை செய்தாரா? அமெரிக்காவில், டென்வர் பகுதியில் ஒரு பல் வைத்திய நிலையம் வைத்திருந்தவர் லார்ரி ருடால்ப். இவரது மனைவி பியன்கா ருடால்ப். மனைவிக்கு வாழ்வில் ஒருமுறையாவது சிறுத்தை ஒன்றை வேட்டை யாடவேண்டும் என்பதில் பெரும் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். அதேவேளை 67 வயது பல் வைத்தியருக்கு, ஒரு கள்ள பொம்பிளை, லோரி மில்லிரோன். வைத்தியரும், மனைவியும் சாம்பியா நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே, பெருமளவில் சிறுத்தைகள் பெருகும் காலத்தில், வேட்டைக்கு தடை இல்லை. அதிகாரிகளிடம் கை துப்பாக்கியும் வாங்கிக் கொண்டனர். தான் குளியல் அறையில் இருந்த பொது, வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஓடிவந்து பார்த்த போது, மனைவி, நெஞ்சில் குண்டடி பட்டு, உயிருக்…

    • 0 replies
    • 588 views
  2. ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்ப…

  3. படத்தின் காப்புரிமை Getty Images பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக …

  4. 59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம் திருச்சி முதியவரின் லட்சிய சாதனை ஜூன் 15, 2007 திருச்சி: திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும். தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இ…

    • 6 replies
    • 1.5k views
  5. தி.மு.க., அ.தி.மு.க. என இரு திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்காக மன்னிப்பு கேட் கிறேன்!’ என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இரு கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள்? அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையா. ''அ.தி.மு.க. இனி பா.ம.க-வை சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. தி.மு.க-வோ மூழ்கிக் கொண்டு இருக்கும் ஒரு கப்பல். வேறு என்ன வழி, பா.ம.க. தனித்துத்தானே நிற்க வேண்டும். இதில் என்ன வாய் வீச்சு? 2016-ல் ஆட்சிக்கு வரப் போவதாக கூச்சமே இல்லாமல் சொல்கிறார் ராமதாஸ். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் நடைப் பந்தயத்தில் வெல்லப்போவதாக கருணாநிதி சொன் னால் எப்படியோ..…

    • 0 replies
    • 498 views
  6. ஜகார்த்தா: விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, 122 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேஷிய விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் அம்பன் விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் பதிக் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம் ஜகர்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம், அவசரமாக மகசார் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர். பின்னர் விமானம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தகவல் தவறானது என தெரிய வந…

    • 0 replies
    • 304 views
  7. நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்... உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம். ஆனால், அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இ…

  8. 09.10.11 ஹாட் டாபிக் அதிகாரம் கையில் இருந்தால், எளியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்கிற அரசுத்துறை அதிகாரிகளின் நினைப்பிற்கு சவுக்கடி வழங்கியுள்ளது ‘வாச்சாத்தி’ தீர்ப்பு. காலங்கடந்து கிடைத்தாலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிறது சித்தேரி வனப்பகுதி. இங்குதான் வாச்சாத்தி கிராமம் அமைந்துள்ளது. 1992 ஜூன் மாதம் 20-ம் தேதி காலை எழும்போது இவ்வளவு பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறோம் என வாச்சாத்தி மக்கள் அறிந்திருக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் இயற்கையோடு இண…

  9. மலேசியாவில் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள்! - அகதிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம். [sunday 2015-05-24 19:00] தாய்லாந்துடனான மலேசியாவின் எல்லைப் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட முகாம்களுக்கு அருகே பெருமளவு புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைகுழிகளில் காணப்பட்ட குறைந்தது நூறு சடலங்களும் மியன்மார் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகளுடையதாக இருக்கலாம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த கடத்தல் முகாம்கள் ஐந்து ஆண்டுகளாக அங்கு இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக மலேசியாவின் உள…

  10. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் வழித் தொற்று ( Urinary tract infection) பாதிப்பால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 88 வயது தலைவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக திமுக வட்டாரம் கூறியது. அதேவேளையில், சிறுநீர் வழித் தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. http://news.vikatan.com/?nid=5082

  11. சவுதி தாக்குதலில் பலியான தனது மகளை பார்த்து அழும் தந்தை ”எனது தங்கை எந்தத் தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை. தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு) ஆதரவாக செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான…

  12. Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில், …

  13. தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது. புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை …

  14. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே சிறு நிலப்பரப்புக்கள் பரிமாறிக்கொள்ளப்படும் நிலையில், இதுவரை நாடற்றவராக இருந்த பலருக்கு ஒரு அடையாளம் கிடைக்கவிருக்கிறது. ஆனால், வேடிக்கையென்னவென்றால், இதனால், இந்தியாவைவிட்டு சிலர் வெளியேற நினைக்கும் அதேவேளை, மறுபுறம் வங்கதேசத்தைவிட்டு இந்தியாவுக்கு செல்ல பலர் தயாராகுகிறார்கள். நல்ல வாழ்வைத் தேடி இந்தியாவுக்கு செல்வதற்காக தமது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை இது. ஆனால், நாடு விட்டு நாடு போவது ஒன்றும் இவர்களுக்கு இலகுவான ஒரு முடிவல்ல. பிபிசியின் ஒரு காணொளி http://www.bbc.com/tamil/global/2015/07/150731_banglavt இந்தியாவும் வங்கதேசமும் எல்லையில் உள்ள மற்றவரின் பகுதிகளை பரிமாறிக்கொள்கின்றன இந்த…

    • 0 replies
    • 475 views
  15. குடியேறிகளின் பிரச்சனைக்கான பொது யுக்தியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கிறது. ஆனால் அகதிகளை பகிர்ந்துகொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மத்தியில் முரண்பாடு நிலவுகின்றது. ஹங்கேரியில் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், பூடாபெஸ்டுக்கு மேற்கே அகப்பட்டிருக்கிறார்கள். பூடாபெஸ்ட் ரயில் நிலையத்துக்கு திரும்பிய சிலர் இப்போது ஆஸ்திரியாவுக்கு ''நடந்தே செல்ல'' முயற்சிக்கிறார்கள். கடுமையான சட்டம்: எல்லைகளில் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சட்டத்தை ஹங்கேரிய நாடாளுமன்றம் இப்போது அங்கீகரித்திருக்கிறது. ஐரோப்பாவுக்கு படகில் செல்லும் முயற்சியில் லிபிய கரையோர…

  16. அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் அமெரிக்காவில் உள்ள லூசியானா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த ஆந்திர மாநில மாணவர்களை அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்றனர். இறந்தவர்களில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்த கிரண் குமார் ஆலம்(33) மற்றும் கர்னூல் மாவட்டத்தை சேரந்த சந்திரசேகர் ரெட்டி கோமா (31) என பல்கலைகழக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இறந்த மாணவர்கள் வேதியயல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கூறுகையில் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை தேடிவருவதாக தெரிவித்தனர்

  17. சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்ட 4 பெண்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல, வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடி புரோக்கர்கள் 1,200 பேரை தமிழகம் முழுவதும் வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விபசாரத்திற்கு விற்பனை செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை உஷாராணி. சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இவர், விபசாரத்தில் தள்ளப்பட்டார். பின்னர் கடும் போராட்டம் நடத்தி, விபசார கும்பலிடம் இருந்து தப்பி வந்த உஷாராணி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனிடம் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் நாஞ்சில்குமரன் உத்தரவின்பேரில், விபசார தடுப்பு போல…

    • 0 replies
    • 1.3k views
  18. குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து? குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவு வசந்த காலத்தில் அல்லது கோடைகாலத்தில் பிள்ளைகளை பெற்றெடுப்பவர்களை விட இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களில் அதிகமாக இருப்பதை இதன்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்…

  19. ரஷிய விமானம் மீதான தாக்குதல்: தகவல் வழங்கினால் பெருந்தொகை சன்மானம் எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ம் திகதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிர…

  20. ஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி. வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அட…

    • 3 replies
    • 937 views
  21. யூரியூப்(youtube) இணையத்தளத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிப்பு [27 - February - 2008] பாகிஸ்தானில் இணையத்தள சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் `யூ ரியூப்' இணையத்தளத்திற்கான சேவையை நிறுத்துமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இறைமைக்கு மாறான தகவல்கள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்துள்ளது. முகமது நபிகள் தொடர்பாக கேலிச் சித்திரங்கள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்த தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கேலிச் சித்திரங்கள் முதன் முறையாக வெளியான போது முஸ்லிம்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்த…

  22. அமெரிக்காவில் பாலியல் முறைப்பாடுகளில் சிக்கிய பெண் காங்கிரஸ் உறுப்பினர் பதவி விலகல்! அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெண் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டி ஹில் (Katie Hill) தனது பதவியை துறந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தின் 25 வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு கேட்டி ஹில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஹில்லும் அவரது கணவரும் தங்களின் தேர்தல் பிரசார பணிகளில் பணியாற்றிய 20 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ரெட் ஸ்டேட் என்ற பழைமைவாத சமூக வலைத்தளம் செய்தி வௌியிட்டிருந்தது. ஹில்லும் குறித்த பெண்ணும் நெருக்கமாக இருந்த ஔிப்படத்தையும் அந்த …

  23. இஸ்ரோ நிறுவனம் இன்று சாதனை 28.04.2008 / நிருபர் வானதி உலகிலேயே முதல் தடவையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே றொக்கெற்றில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ இன்று சாதனை படைத்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு இந்த சாதனையை இஸ்ரோ நிறுவனம் தொடக்கியுள்ளது. றொக்கெற் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிக்கரமாக பிரிந்து சென்றுள்ளன. தற்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்கு நகர்த்திச் செல்லும் பணியில் இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. sankathi.com

    • 3 replies
    • 1.4k views
  24. [size=4]குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிப்பு[/size] [size=3][size=4]இந்தியாவில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது.[/size][/size] [size=3][size=4]ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான பிரணாப் முகர்ஜி அவர்கள், கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்படுகிறார்.[/size][/size] [size=3][size=4]வெளியுறவு, நிதி, உள்துறை, வணிகம் உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த அவர், கட்சியின் வேறு பல முக்க…

    • 2 replies
    • 501 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.