உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ஆம் திகதி திருப்பதிக்கு சென்று 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசி நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகள…
-
- 1 reply
- 429 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்காமல் நிரந்தர தீர்வு காணுவதற்கான மாநாடு, சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்றைய தினம் மாலையில், 'இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி', 'இந்திய மீனவர்கள் பிரச்சினையில்…
-
- 0 replies
- 1k views
-
-
பீஜிங், கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்படி மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து, பிற நோயாளிகளுக்கு வழங்குவது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.இந்த நிலையில், இந்த வழக்கத்தை அடுத்த மாதம் 1–ந் தேதி முதல் விட்டொழிக்க சீனா திடீரென முடிவு செய்துள்ளது. இதை சீன அரசின் செய்தித்தாள் தெரிவித்தது. இது தொடர்பாக சீன மனித உறுப்பு நன்கொடை கமிட்டியின் தலைவர் ஹூவாங் ஜீபு கூறுகையில், ‘‘உறுப்பு மாற்று அறுவை…
-
- 2 replies
- 345 views
-
-
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஸ்ரீநகர் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்:ஏ.எப்.பி. ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிகாலை முதல் அடுத்தடுத்து தொடர் தாக்குதலை நடத்தினர். மதியம் பாராமுல்லா பகுதி போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மூன்றாவது முறையாக மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீஸார் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்த…
-
- 0 replies
- 409 views
-
-
வாஷிங்டன், ‘டைம்ஸ்’ பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்து உள்ளது. பிரபலமானவர்கள் பட்டியல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது. 2014–ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த நகரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி …
-
- 0 replies
- 312 views
-
-
புதுடெல்லி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி குழு தெரிவித்துள்ளது. வருங்காலங்களில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் மாதிரியை உருவாக்க, மத்திய அரசின் அறிவுரைப்படி குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு எந்த ஒரு தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வைக்கக்கூடாது என ரிச…
-
- 0 replies
- 442 views
-
-
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்ட நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியொன்றும் நடைபெற்றன. பிரெட்டோரியா நகரில் தேசிய விடுதலை வீரர்களுக்கான சுதந்திர பூங்கா கட்டடத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றிய இனத்துவ தலைவர் ரொன் மார்ட்டின் மண்டேலாவாலேயே 25 வருட ஜனநாயகம் சாத்தியமாகியுள்ளது என்று கூறினார். மேலும் 5 மீற்றர் உயமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மடிபா (நெல்சன் மண்…
-
- 0 replies
- 261 views
-
-
ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை வகைப்படுத்தப்பட்டது. தற்போதும் தற்காலிக வீடுகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள், உடனடியாக முகாம்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளனர். ஃபிலிப்பைன்ஸில் யோலண்டா என்று அழைக்கப்பட்ட ஹையான் புயல்தான் நிலத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிகச் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2013ஆம் ஆண…
-
- 0 replies
- 485 views
-
-
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன. வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி | உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. | நாட்ட…
-
- 0 replies
- 556 views
-
-
வண்ண ஒளியில் 'புர்ஜ் அல் அராப்' நேற்று (02-12-2014) நடைபெற்ற ஐக்கிய அமீரகத்தின் 43 வது தேசிய நாளன்று துபை ஜுமெய்ரா(Jumeirah Beach) கடற்கரையின் கரையிலிருந்து 300 மீட்டர்கள் கடலுக்குள்ளே அமைந்துள்ள உலகின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அராப்' தனது 15 வருடத்தை எப்படி கொண்டாடியுள்ளது என்பதை இக்காணொளியில் காணலாம். யூ ட்யூப் செட்டிங்கில் ஃபுல் கெச்.டி-யில்(1080p) மாற்றி காணொளியை பாருங்கள் இன்னும் ரசிக்கலாம்.. A spectacular show - must watch..! http://youtu.be/7uLT7TZ6OCk
-
- 7 replies
- 760 views
-
-
தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டத்தை செனட்டில் வெற்றிபெறச் செய்யும் நோக்கில், ஏற்கனவே முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், செனட் இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்க…
-
- 0 replies
- 411 views
-
-
உலகம் முழுவதும் உள்ள 68 நாடுகளில் உள்ள சிறைகளில் 6500 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “68 நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 6483 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக சவுதி அரேபிய சிறைகளில் 1469 பேர் உள்ளனர். இந்த ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 572 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் விடுவிக்கப்பட்டதுபோக, தற்போது 421 பேர் உள்ளனர். 322 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இதில், 276 பேர் பாகிஸ்தானிலும், 43 பேர் வங்கதேசத்திலும் உள்ளனர். இந…
-
- 1 reply
- 265 views
-
-
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையால், 28 நாடுகளுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் குழு அதிகாரிகள் இந்தியா வந்து, மாம்பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும் இடம், பெட்டக முறை, விதம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கிக் கொள்ளப்படும் என்று இந்திய ஆய்வுக் கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121967&category=IndianNews&am…
-
- 0 replies
- 205 views
-
-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 2 ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கூறினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் மகா தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்களின் வசதிக்காகவும் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 நுழைவு வாயிலிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட…
-
- 0 replies
- 418 views
-
-
இந்தியா தகுந்த ஆதாரங்களை அளித்தால், கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் லினஸ் ஓன் கேஸ்டெல்மர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் உடனடியாக மீட்கப்படும் என தேர்தலின்போது பாஜ வாக்குறுதி அளித்தது. இதுவரை கருப்பு பணத்தை கொண்டுவரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கருப்பு பண விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போரின் 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் சமர்ப்பித்தது. இப்பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து …
-
- 0 replies
- 457 views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் தீவிரமாகி உள்ளதால் இரண்டரை லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாத்து, கோழி, முட்டைகள் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை காய்ச்சல் தாக்கிய வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள…
-
- 0 replies
- 224 views
-
-
சீனாவில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் செய்தி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்களை கிராமங்களில் வசிக்க அனுப்பப் போவதாக சீனா அறிவித்திருக்கிறது. கலைஞர்கள் சோஷலிஸ விழுமியங்களை பரப்புவதற்குப் பதிலாக தங்களுக்கு சொந்தப் புகழைத் தேடிக்கொள்ளும் வகையில் அருவருக்கத்தக்க கலைப் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் ஆற்றிய ஒரு உரையில் விமர்சித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிபர் ஷி கருத்து மாறுபடுபவர்களையும், மேலை நாட்டு கருத்துக்கள் என்று அவர் கருதும் கருத்துக்களையும் ஒடுக்க நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார். பல கலைஞர்கள் தங்களுக்கு உள்ள மிகப் பெரிய பி…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…
-
- 2 replies
- 856 views
-
-
ஜெர்மனியில் 2-ம் உலக போரின் 1.8 டன் வெடிகுண்டு: செயலிழக்க செய்ய 8,500 பேர் வெளியேற்றம் ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ்(Mainz) நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர். இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகு…
-
- 2 replies
- 570 views
-
-
ஈராக்கில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9–ந் தேதி பிடித்து, அப்போது மொசூலில் யுரேனியம் கொள்ளையடிக்கபட்டது. அங்கு இருந்த அணு ஆயுத வளாகத்தையும் கைப்பற்றினர். மொசூல் பல்கலைக்கழகத் தில் 40 கிலோ யுரேனியத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொள்ளையடித்தனர். தொடர்ந்து அடுத்த இரண்டு நாளில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தையும் கைப்பற்றினர். இதையடுத்து தொடர்ந்து தலைநகர் பாக்தாத் நோக்கி தீவிரவாதிகள் முன்னேறினர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு இணைய தளத்தில் தீவிரவாதிகள் இங்கிலாந் துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். அதில், ‘‘லண்டனை குண்டு வைத்து தகர்ப்போம்’’ என மிரட்டல் விடுத்து இருந்த னர். இந்த நிலையில் தற்போது வெளியான…
-
- 0 replies
- 776 views
-
-
இணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த 'ஏடி கியார்ன…
-
- 0 replies
- 365 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட பறவையை ஆய்வு செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரி. ஆப்கானிஸ்தானில் இதுவரை மனித வெடிகுண்டுகளை பயன் படுத்தி வந்த தலிபான்கள் தற் போது பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பார்யப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பறவை பறந்தது. அந்தப் பறவையை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயங்களுடன் கீழே விழுந்த பறவையை பாதுகாப்புப் படை யினர் சோதனை செய்தனர். அப் போது அந்த காட்டுப் பறவை யின் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. அந்த பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்…
-
- 2 replies
- 605 views
-
-
உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும். மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற…
-
- 26 replies
- 2k views
-
-
சிங்கப்பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா எதிர்வரும் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்நாட்டின் நான்காவது உத்தியோகபூர்வ மொழியான தமிழில் புதிய தேசிய தின கீதமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 5 பேரை கொண்ட குழுவினர் 6 மாதங்களை செலவிட்டு இந்த கீதத்திற்கான பாடலை எழுதியுள்ளனர். இதற்காக மேற்படி பாடல் உருவாக்க குழுவின் தலைவரான லோகபிரியன் ரெங்கநாதனுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%…
-
- 0 replies
- 515 views
-
-
ஹாங்காங்கில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸார். | படம் - ராய்ட்டர்ஸ் ஹாங்காங்கில் சுமார் ஒரு மாத காலம் ஓய்ந்திருந்த ஜனநாயக ஆதரவு போராட்டம் மீண்டும் தொடங்கியது. பெரும் திரளான மாணவர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே முக்கிய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தின் சின்னமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குடையை கையில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர். போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தகர்க்க முயன்றனர். இதனை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் பலர் முக்கிய சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுப…
-
- 0 replies
- 404 views
-