உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
காஸாமுனை: போர் பெருந்துயரமானது.. அதுவும் பச்சிளங்குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ரணகளப்படுத்தி பலியெடுக்கும் போர் எத்தனை கொடூரமானது என்பதை காஸா பிஞ்சுகள் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வகைதொகையின்றி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 700 ஆகிவிட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கையோ 5 ஆயிரம். அப்பா.. இன்று நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின் துயரக் கேள்வி பலி எடுக்கப்பட்ட பாலகர்கள்: இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத…
-
- 0 replies
- 370 views
-
-
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உ…
-
- 0 replies
- 313 views
-
-
காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இரத்தவெள்ளதில் உயிருக்குப் போராடுபவர்களை, நோர்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவு பகல் பாராமல் காப்பாற்றி வருகிறது. இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நோர்வே மருத்துவர் கில்பர்ட் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு, “ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் க…
-
- 0 replies
- 568 views
-
-
தெலுங்கு சேனல் செய்தியின் புகைப்படப் பதிவு. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த ம…
-
- 0 replies
- 308 views
-
-
கனடா கியுபெக் மேயர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் காலமானாரென La Prairie நகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி தெரியவந்துள்ளது. 51-வயதுடைய Roussel -ற்கு குளவி கொட்டுவதால் அலர்ஜி உண்டாவதில்லை என நகர பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இவருக்கு பல தடவைகள், கிட்டத்தட்ட 15 தடவைகள் அவரது காலில் குளவிகள் கொட்டியிருப்பதாக நம்ப படுகின்றது. அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வந்து அவருக்கு அட்ரனலின் ஊசி போட முயன்றுள்ளனர் ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது ஒரு அதிர்ச்சியான நிலை எனவும் இது போன்ற ஒரு வழியில் ஒருரை இழப்பது என்பது மிகவும் கடினமானதெனவும் நகரத்தின டைரக்டர் ஜெனரல் Jean Bergeron, தெரிவித்துள்ளார். Roussel வெளிப்படையாக குளவிகளிற்கு அலர்ஜி அற்றவராக இருந்தாலும் எ…
-
- 0 replies
- 486 views
-
-
ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவர் வாயில், சிவசேனா எம்.பி.க்கள் வற்புறுத்தி சப்பாத்தியை திணித்ததாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில், ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனா எம்.பி.க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சி எம்.பி.க்கள், ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்த முஸ்லீம் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை வாயில் திணித்து சாப்பிட வைத்துள்ளனர் என்ற…
-
- 1 reply
- 579 views
-
-
காசா மீது தொடர் தாக்குதல் காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில், சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறியுள்ளார். அந்தத் தாக்குதலில், காசாவின் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு சிறார்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டது போலத் தெரிகிறது.ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள அவர், அது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்த அளவுக்கு துச்சமாக மதிக்கப்பட்டன என்பதை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில…
-
- 1 reply
- 406 views
-
-
நெருக்கடியான சூழலில் தாய்வானில் தரையிறங்க முயன்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் 47 பேர் பலியாகினர் எனவும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாய்வானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு தீவில் இருக்கும் மகோங் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததனர் என தாய்வானின் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. - http://malarum.com/article/tam/2014/07/23/3891/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%A…
-
- 0 replies
- 964 views
-
-
வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக…
-
- 6 replies
- 727 views
-
-
கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார். அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எட…
-
- 0 replies
- 498 views
-
-
கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன்| கோப்புப் படம். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதிய ஆதாரம் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி தெரிவித்துள்ளார். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தயாநிதி மாறன் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக போதிய ஆதாரம் இருக்கிறது என ரஸ்தோகி முடிவுக்கு வந்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ தரப்பு விசாரணை இயக்குநரின் கருத்துடன் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி ஒத்துப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கை விசாரித்து வந்த சிபிஐ விசாரணை அதிகாரி, ஏர்செல் - மேக்சிஸ் வழக…
-
- 0 replies
- 300 views
-
-
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவ்த் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டின் ஒரு ராணுவ வீரரை அவர்கள் கொன்றால், பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்.... பாகிஸ்தானுடன் நட்பு பாரட்டுவதை எப்போதும் சிவசோன எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும. அவர்களுடன் எந்த விதமான பேச்சும் நடத்த கூடாது. பாகிஸ்தான் நமது ஒருவீரரை கொன்றால், அவர்கள் நாட்டின் 10 வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்க அந்த மொழியே சரிதயானது என்றார். http…
-
- 0 replies
- 280 views
-
-
புதுடெல்லி: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் பாலிவுட் நடிகைகள் 4 பேரது பெயர்களை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அமைச்சகங்களிலும், இதர மத்திய அரசு துறைகளிலும் பணியாளர்களை நியமிப்பதற்காக,ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அண்மையில் எழுத்து தேர்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 வது கேள்வியாக பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, கத்ரினா கைஃப், ஹுமா குரேஷி ஆகிய 4 பேரது பெயர்களை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என கேட்கப்பட்டிருந்தது. அதேப்போன்று காதலர் தினம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது? என்ற மற்றொரு கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இந்த கேள்வியுடன் இந்த ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளு…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது, நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதில் தலையீடு செய்யக் கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாக, பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளரும், பாஜகவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்ரி சாரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், மாநில அரசாங்கங்கள், அதில் தலையிடக் கூடாது என்று நாங்கள் பலமாக உணர்கிறோம். அவர்கள் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடாது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. ஆனால், மோ…
-
- 0 replies
- 456 views
-
-
மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறு சிப்பாய்கள் இறந்த கவச வாகனத்தில் இவரும் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனத் தரப்பில் கிட்டத்தட்ட 6…
-
- 0 replies
- 334 views
-
-
ஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 2k views
-
-
மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/07/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 0 replies
- 525 views
-
-
பார்வையற்ற மாணவர்களை அடித்து துன்புறுத்திய பள்ளி முதல்வரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி ஒன்றில், அப்பள்ளியின் முதல்வர் மாணவர்களை தனது அறையில் அழைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி வெளியானதும், அப்பள்ளியின் முதல்வரையும், உதவியாளரையும் ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்களை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பெரும் சிரமப்பட்டு பொதுமக்களின் பிடியில் இருந்து அவர்களை மீட்டு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். காக்கிநாடாவில் இந்…
-
- 0 replies
- 598 views
-
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான போர்குறித்து நிலவும் தவறான கருத்துகளும், உண்மையும். இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் மீண்டும் ஊடுருவியதால் அப்பாவிகள் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துவருகிறது; இரு தரப்பிலிருந்தும் அரசியல்ரீதியிலான சாடல்கள் ஒரே மாதிரியாக ஒலிக்கின்றன. இருதரப்பினருக்கும் பொதுவாக, தவறான கருத்துகள் சில உள்ளன. அவற்றைப் போக்குவது நம் கடமை. கருத்து1: இப்போது நடப்பது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை அல்ல; நன்மைக் கும் - தீமைக்கும், சரியான கருத்துகளுக்கும் - தவறான கருத்துகளுக்கும் இடையிலான மோத லாகும். நம்மால் சும்மா இருக்கவும் முடியாது, சமரசம் செய்துவைக்கவும் முடியாது; வேறு வழியில்லை, எப்படியாவது நாம் செயல்பட்டே ஆக வேண்டும். நாம் நினைப்பதற்கு ம…
-
- 2 replies
- 672 views
-
-
'இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 500க்கும் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்' காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில் இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகின்றது.அங்கு பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13…
-
- 0 replies
- 267 views
-
-
கொல்கத்தா: பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரசாரம் தொடங்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ''பா.ஜ.க.வினர் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தலைகீழாகச் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் பிரசாரம் தொடங்க இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனவாத கட்சிக்கு இடம் கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வினர், அளவுக்கு அதிகமான பொய்களை பேசி …
-
- 0 replies
- 257 views
-
-
"முள்ளிவாய்க்கால் ஞாபகங்கள் மீண்டும் மனதை வதைக்கின்றன" தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- காஸாவில் காயம்பட்டவர்கள் மத்தியில் பணியாற்றும் பேராசிரியர் மாட்ஸ் கில்பேர்ட் தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சனல் 4 இற்கு எழுதியுள்ளார். கடந்த இரவு என்பது மிக பயங்கரமானது, காஸா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தரைவழி ஊருடுவல் காரணமாக மிகப் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர், அங்கவீனர்களாகி உள்ளனர், இறந்து கொண்டிருக்கின்றனர்- இவர்களில் எல்லா வகையான பாலாஸ்தீனியர்களும் உள்ளனர், சகல வயதினரும்--இவர்கள் அனைவரும் அப்பாவிகள் பொதுமக்கள். அம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அந்த மாமனிதர்கள் 24 மணிநேரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் களைத்துப் போயுள்ளனர், சாதாரண மனிதாகள…
-
- 0 replies
- 382 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக பலியாகி விட்டார். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் மரணம் அவரை வந்து தழுவிய கொடுமை நேர்ந்துள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17–ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா (வயது 38) என தெரிய வந்துள்ளது. இவர் கோலாலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 31 வயதில் நடிக்க வந்தார். ‘ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய சினிமா படங்களில் ந…
-
- 0 replies
- 310 views
-
-
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 295 பயணிகள் இருந்தனர். யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் இந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml
-
- 34 replies
- 2.9k views
-