Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…

  2. வரும் மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை தேசியக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. இதேபோல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள உயர்மட்டக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே இன்று சோலாப்பூரில் மராட்டி பத்திரிகை ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர் எனது அரசியல் குரு. அவரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். அதேபோல் சரத…

  3. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தற்போது ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் 9 சிலிண்டர்களே வழங்கப்பட்டு வருகிறது. இது நடுத்தர குடும்பத்து மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர்களை பெற ஒவ்வொரு தடவையும் ரூ.1,500–க்கு மேல் செலவிட வேண்டியதுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தினால் மக்கள் பாதிப்பு குறையும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 3–ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் அதுபற்றி ஆலோசிக்கவில்லை என்றார். இதற்கிடையே மக்களை கவர வேண்டுமானால் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எப்படி செயல் படுத்துவது என்று மத்திய பெட…

  4. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால், பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 17–ந்தேதி டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு இரு கட்சிகளும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஆண்டே பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எல்லா பணிகளையும் தொடங்கியது. இதனால் நாடெங்கும் ‘‘மோடி அலை’’ வீசுகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் நரேந்திர மோடியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். ஆனால் டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலை…

  5. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்வது, மோடியே பிரதமர் என்ற கோஷத்தை கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வது, அனைவரையும் வாக்களிக்க செய்வது போன்ற பணிகளில் கட்சியினருக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செயற்குழு கூட்டத்தில் லஞ்ச…

  6. நரேந்திர மோடிக்கே நான் வாக்களிப்பேன் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நேற்று அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கு நல்ல, வலுவான தலைவர் தேவை. இப்போதைக்கு மோடியே அதற்கு தகுதியான தலைவர்’’ என்று கூறி இருந்தார். கிரண்பேடியின் கருத்துக்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்தது. பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி ஒருபடி மேலே சென்று ‘‘கிரண் பேடியை பா.ஜ.க.வில் சேர்க்க அழைப்பு விடுக்க வேண்டும்’’ என்றார். பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் கிரண்பேடி முக்கியப் பங்கு வகித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள கருத்தால் நாடெங்கும் உள்ள அன்னாஹசாரே ஆதரவாளர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளத…

  7. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஊழல் ஒழிப்பு கோஷம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆம்ஆத்மி கட்சி நாடெங்கும் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது மக்களிடம் ஆதரவு பெற்றால் ஆம்ஆத்மி கட்சி நாடெங்கும் கணிசமான வாக்குகளை பெற்று விடும் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி எடுத்து வரும் இந்த விசுவ ரூபத்தை தடுக்கவே மத்திய அரசு சமீபத்தில் முடிந்த பாராளு மன்றக் கூட்டத் தொடரில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதா உடனடியாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து விட்டது. என்றாலும் மக்களுக்கு ஆம்ஆத்மி மீது ஏற்பட்டு வரும் மோகத்தை தடுக்க மேலும் ஊழல் எதிர்ப்பு சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று ராகுல்காந்தி வி…

  8. 2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். சோனியா சுற்றுப் பயணத் திட்டத்தை பிரியங்கா வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7–ந்தேதி கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு ஏற்ப சோனியா எந்தெந்த நகரங்களில் பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் காங்கி…

  9. டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள எளிமைக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநில முதல்– மந்திரிகளும் கெஜ்ரிவால் பாணியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவால் செயல்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கை களையும் அப்படியே ராஜஸ்தான் பா.ஜ.க. முதல்– மந்திரி வசுந்தரராஜே சிந்தியா செயல்படுத்தி வருகிறார். கெஜ்ரிவால் போலவே அவரும் அரசு வீட்டில் குடியேற மறுத்துவிட்டார். தற்போது தன் கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் எளிமையாக இருக்க வேண்டும். மக்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 100 ப…

  10. டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், மக்கள் குறைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி சனிக்கிழமை தோறும் தலைமை செயலகம் முன்பு உள்ள மைதானத்தில் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து (மக்கள் சபை கூட்டம்) மனுக்களைப் பெற்று குறைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் காலை 7 மணி முதலே மக்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். இதனால் டெல்லி தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகள் மூடப்பட்டன. என்றாலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் நடந்தே வந்து சேர்ந்தனர். 9.30 மணிக்கு கெஜ்ரிவாலும், அவரது மந்திரிகளும் வந…

  11. ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நிலுவை ஊழல் மசோதாக்கள்: தில்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நிலைக் குழுவில் இடம்பெ…

  12. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நேட்டோ படையின் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் 2 ராணுவ வீரர்கள், ஒரு ஊழியரும் பலியானார்கள். விபத்து குறித்த மற்ற விவரம், பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை தாக்குதலில் நேட்டோ படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போது விமான விபத்தில் 2 பேர் இறந்திருக்கிறார்கள் http://www.maalaimalar.com/2014/01/11032533/3-Americans-Killed-in-US-Milit.html

  13. மாநில அரசு முடிவு எடுப்பதில் கால தாமதமானால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டணியை விட்டு வெளியேறுவோம் மராட்டியத்தில் நேற்றுமுன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் பேசிய துணை முதல்–மந்திரி அஜித் பவார், மாநில அரசு முடிவு எடுப்பதில் காலதாமதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதே நிலைமை நீடித்தால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். அஜித் பவாரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவத…

  14. புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற…

  15. புதுடெல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:– மக்களிடம் க…

  16. Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி Tributes were paid Thursday to a high school student who officials say foiled a suicide bomb attack in an act of “bravery” that cost him his life. Aitazaz Hassan, 17, was killed instantly - but police and school officials said the lives of up to 1,500 other students at the school in Pakistan had been saved. "My son did a heroic job and I am proud of his bravery,” said the boy’s grieving father, Mujahid Ali. பெஷாவர், ஜன. 10– பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாத…

  17. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துத் தகவல் தர தொலைபேசி எண்ணை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆரம்பித்துள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இதேபோன்ற எண்ணை தாங்கள் எப்போதோ மக்களுக்கு வழங்கி விட்டதாக ம.பி. பாஜக முதல்வர் சிவ்ராஜ் செளகான் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கலாம். அவர்களை மக்களே கையும் களவுமாகப் பிடிக்க தாங்கள் ஆலோசனை வழங்குவோம் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஹெல்ப்லைன் இப்போது டெல்லி மக்களிடையே பிரபலமாகி விட்டது. தொலைபேசி அழைப்புகள் குவிந்து வருகின்றன. இந்த …

  18. சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்கா கடந்த 2013 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தனது புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி இறுக்குமதி 3.5 டிரில்லயன் என்ற அளவில் இருந்தது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. 1000 பில்லியன்கள் சேர்ந்தது ஒரு டிரில்லியனாகும். சீனப் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில ஐயப்பாடுகள் இருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங…

  19. வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என காங்., துணை தலைவர் ராகுல் இன்று தெரிவித்துளளார். இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விரைவில் வேட்பாளர் பட்டியில் இறுதி செய்யப்படும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1993473.ece

  20. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பெங்களூர் வருகிறார். காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 250 பேருக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார். http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%…

  21. கியூபாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. ஹவானா கிழக்குப் பகுதி மற்றும் ப்ளோரிடா பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/article1993186.ece

  22. ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் பாஜகவில் சேர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திர மோடிக்கு ஓட்டு: வியாழக்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில்: "எனக்கு இந்திய தேசத்தின் நலனே பிரதானம். மத்தியில் நிலையான, ஸ்திரமான, பொறுப்பான நல்லாட்சி அமைய வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்களராக எனது ஓட்டு நரேந்திர மோடிக்குத் தான்" என கிரண் பேடி அவரது கருத்தை வெளியிட்டிருந்தார். காங்கிரசுக்கு எதிரான போராட்டம்: இன்றும் அவர் மோடியை ஆதரித்து பேசியுள்ளார். நாட்டை வழிநடத்திச் சென்று நிலையான ஆட்சி செலுத்தும் தகுதி உடைய நபரை ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் போராட்டம் முழுக்க முழுக்க காங்…

  23. டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் சுறுசுறுப்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டிவரும் கெஜ்ரிவால் இம்முகாமின…

  24. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராராபர்ட் வதேரா டெல்லி புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். நேற்று அவர்ஆக்ரா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பின்னால் ஒரு மாருதி கார் வந்தது. அந்த கார் ராபர்ட் வதேராவின் காரை மிக வேகமாக முந்திச் சென்றது. இதனால் ராபர் வதேராவுக்கு பாதுகப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் வதேராவின் காரை மிந்தி கார் குறித்து வயர்லெஸ்சில் போலீசாருக்கு தகவ்ல் கொடுத்தனர் . அந்த மாருதி காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரை தொழில் அதிபர் சவுரப் ரஸ்டோகி என்பவர் ஓட்டிவந்தார். வதேராவின் காரை மிகவும் அபாயகரமான முறையில் முந்தியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிப்…

  25. நிலையான அரசை நரேந்திர மோடியால் கொடுக்க முடியும் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதல் மந்திரியும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் நிலையான அரசை கொடுக்க முடியும் என்று தனது டுவிட்டர் இணைய தளத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரேவின் உதவியாளருமான கிரண் பேடி கூறியுள்ளார். மோடியால் பொறுப்புள்ள மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கம் அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஓட்டு நரேந்திர மோடிக்கே என்று கிரண் பேடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-10-Kiran-Bedi-Openly-Endorses-Narendra-Modi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.