Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார். இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ்…

  2. பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை…

  3. பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒண்டோரியோவை சேர்ந்த ஒரு நபர், அந்த நோயை பிறருக்கு பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு பெண்களிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Gary Beckford என்ற ஒண்டோரியோவை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஓரு ஆண்டாக பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அவர், தன்னுடைய நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதத்தில் இரு பெண்களோடு வேண்டுமென்றே பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி உடலுறவு கொண்டுள்ளார். இதை மிகவும் தாமதமாக அறிந்த அந்த இரண்டு பெண்களும் கொடுத்த புக…

  4. கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். New Brunswick என்ற பகுதியை சேர்ந்த பெண், கடந்த 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய குழந்தையை snowbank என்ற இடத்தில் உயிரோடு புதைத்ததாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்தை தோண்டி, குழந்தையின் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குழந்தையை உயிரோடு புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை Moncton provincial court என்ற நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மீண்டும் ம…

    • 0 replies
    • 487 views
  5. கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி ஒருவர் எவ்வித ஆபத்தும் இன்றி சனிக்கிழமை மீட்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்க்ழமை இரவு 8.30 மணியளவில், Islington and Finch avenues அருகிலுள்ள Moneterrey Drive என்ற இடத்தில் Roshelle Sookram என்பவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்களால் புகார் கொடுக்கப்பட்டது.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த டொரண்டோ போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பயனாக சனிக்கிழமை மாலை 3 மணியளவில் Roshelle Sookram கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார், இரவு முழுவதும் அவருக்கு என்ன ஆனது என்பதை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட…

    • 0 replies
    • 461 views
  6. பிரிட்டிஷ் வங்கியாளர்கள் (bankers)முகங்களில் கவலை தோன்றியுள்ளது. காரணம், இவர்களுக்கு கிடைத்துவரும் ‘வானை தொடும்’ போனஸ்களுக்கு ஒரு கூரை வரப்போகிறது. கூரையை தாண்டிச் செல்ல முடியாது! ஐரோப்பிய ஒன்றிய வங்கி அதிகாரசபை (European Banking Authority) வங்கியாளர்களின் போனஸ்களுக்கு உச்சவரம்பு கொண்டு வருகிறது. ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்து வந்த பிரிட்டிஷ் பேங்கர்கள் பலர் (இவர்கள் பெரும்பாலும் லண்டனில் இருந்து இயங்குபவர்கள்” இதனால் பாதிக்கப்படவுள்ளனர். சரி. லண்டனில் அப்படி எத்தனை பேர் வங்கிகளில் ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு (£420,000) மேல் சம்பாதிக்கிறார்கள்? ஒரு சிறிய கணக்கு சொல்கிறோம், பாருங்கள். லண்டனில் உள்ள Barclays வங்கியின் தலைமையகத்தில் மட்டும், க…

  7. ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம் நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள். இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது. இந்த விபத்தில…

    • 0 replies
    • 382 views
  8. துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம் உலகிலேயே அதிக மக்கள் பாவிக்கும் விமான நிலையமாக, "துபாய் சர்வதேச விமான நிலையம்" என்ற முதலிட சிறப்புத் தகுதியை முதல் முறையாக துபாய் விமான நிலையம் பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (Airports Council International) கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்களின்படி, 2013 ஜனவரி மாத நிலவரப்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் 5.53 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதே சமயம் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம் 4.86 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. இதுவரை கடந்த காலங்களில் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையமே இந்த விடயத்தில் முதலிடத்தில் நிலைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்திலிருந்தே துபாய் சர்வதேச விம…

    • 31 replies
    • 2.5k views
  9. சி.பி.ஐ. விசாரணையில் யாரும் குறுக்கிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: ப. சிதம்பரம் Written by tharsan // May 17, 2013 // பிரதமர் மன்மோகன் சிங் சி.பி.ஐ. க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டறிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார். இது மூன்று வார காலத்திற்குள் புதிய சட்ட வரைவை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் இது குறித்து கூறியதாவது:- சி.பி.ஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவோம். அது விசாரணையில் முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்பதற்கு உறுதி அளிக்கிறோம். ஆனால் உலகில் உள்ள அனைத்து அமைப்புகளும் யாரோ ஒருவருக்கு பதில் சொல்ல பொறுப்புடையவர்கள…

  10. இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார். இப்போது திறக்கப்பட்டாலும், இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளா…

  11. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான மக் கள் யூனியன் பொதுச்செயலாளர் ஜெயா விந்தயாள், சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமாஞ்சி கிருஷ்ணமோகன் ஆகியோர் மீது சர்ச்சைக்கிடமான வகையில் கருத்துக்கள் வெளியிட்டார். இது தொடர்பான புகாரின்பேரில், பிரகாசம் மாவட்ட போலீசார் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின்படி வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். ஏற்கனவே மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்தபோது, அவருக்கு எதிரான கருத்தினை இதே 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில் ஷஹீன் ததா என்ற பெண் கருத்து வெளியிட்டதாலும், அந்த கருத்துக்கு அவரது தோழி ரேணு சீனி…

    • 0 replies
    • 583 views
  12. அசாம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார் மட்டுமே மன்மோகனிடம் உள்ளதாம். ராஜ்சபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில், அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தனது வேட்புமனுவில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்…

    • 1 reply
    • 583 views
  13. தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங், வினய் சர்மா, 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன் குறித்து தனியாக விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்த முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வினய்சர்மாவை, சக கைதிகள் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ரத்த வாந்தி எடுத்தார். கடுமையான காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார். கவலைக்…

    • 0 replies
    • 482 views
  14. புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…

  15. பாகிஸ்தான் - சீனாவுடன் இந்தியா போருக்கு தயாரகிறது: சீன சிந்தனையாளர்கள் குழு தகவல் சீனா அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் சிந்தனையாளர்கள் வெளியிட்டுள்ள புளூ புக்கில் இந்தியா குறித்து எழுதியுள்ளனர். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவுள்ள பாகிஸ்தானை கண்காணிக்கவும், ஆயத்தமாக இருக்கவும் இந்தியா அதிகபட்ச அக்கறை எடுத்துகொள்கிறது. மேலும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து, அதி நவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் மேம்படுத்தி படைகளை வலுவூட்டி ஒரு வரையறுக்கப்பட்ட போருக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மிரட்டல் விடுத்து வருகிறது.மேலும் சமீப காலமாக இந்தியா கப்பற்படையை விரிவுபடுத்தி, சீனாவிற்கு மிகப்பெரிய கவலையை கொடுக்கிறது. இந்தியாவின் பக்கத்து …

  16. சீரமைக்குப்பின் லெனின் நினைவிடம் திறக்கப்பட்டது உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது. கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் லெனினின் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதை புதைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கே அடிக…

    • 0 replies
    • 363 views
  17. புது டில்லியில் கடந்த ஆண்டு ஒடும் பேருந்தில் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், இக்குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் பெண்கள், வன்முறை இந்தியா முழுவதும் கோப அலைகளைத் தோற்றுவித்த டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 20 வயதான வினய் சர்மா சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தற்போது அவர் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் ஏ பி சிங் கூறியுள்ளார். திகா…

  18. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குற…

  19. மும்பை: தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புனே சிறையில் சரணடைய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சஞ்சய் தத், நாளை தடா கோர்ட்டில் சரணடைகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக, சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே அவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. இந்நிலையில் தாம் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால், த…

  20. இத்தாலியின் பிரதமராக இருந்து பெண் விவகாரத்தில்சிக்கி பதவியை இழந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்களுடன் பார்ட்டி, உல்லாசம், உற்சாகமாக இருந்து கும்மாளமிட்ட இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 76 வயதான பெர்லுஸ்கோனி 17 வயதுப் பெண்ணையும் கூட விடவில்லை. இதயத் திருடி என்ற செல்லப் பெயர் கொண்ட ரூபி என்ற 17 வயதுப் பெண்ணுடனும் இந்த இடத்தில்தான் ஜாலியாக இருந்தார் பெர்லுஸ்கோனி என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இதைத் தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு சிக்கல் வந்து விலக நேரிட்டது. பூமிக்குக் கீழே உள்ள இந்த ரகசிய மாளிகையில்தான் பெர்லுஸ்கோனியின் அத்தனை அஜால் குஜால் வேலைகளும் நடந்ததாக கூறப்படுவதால் இந்த மாளிகை குறித்த தகவல்கள் பரபரப்பாக படிக்கப்படுகின்றன…

    • 0 replies
    • 696 views
  21. மேற்கு வங்க மாநிலம், புர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பிண்ணத் தொடங்கியுள்ளனர். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது. உங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான். நாங்கள் மாயாவதியை தொட்டுப்பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்…

    • 2 replies
    • 617 views
  22. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?: முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு Written by tharsan // May 14, 2013 // நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் அஸ்வினிகுமார், பவன்குமார் பன்சால் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இருவரையும் காப்பாற்ற பிரதமர் மன்மோகன்சிங் தீவிரமாக முயன்றார். ஆனால் சோனியா வற்புறுத்தியதால் 2 மந்திரிகளும் பதவியை பறிகொடுக்க நேரிட்டது. 2 மந்திரிகள் விலகல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் அதை மறுத்தனர். மந்திரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவை பிரதமரும், சோனியாவும் சேர்…

  23. பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நவாஸ் செரீப் அழைப்பு பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. விரைவில் அவர் பிரதமர் பதவியை ஏற்க இருக்கிறார். இதை யொட்டி அவரை பாராட்டி, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நல்லுறவு மேம்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும்படி நவாஸ் செரீப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்த போது பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அழைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பிரதமர் மன்மோகன…

    • 0 replies
    • 515 views
  24. சிரியாவில் பஷார் அல் அசாத் ஆதரவு படைகளுக்கு எதிரான மோதல் உக்கிரமடைந்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியொன்று பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் கிளர்ச்சியாளரொருவர் அசாத் ஆதரவுப் படை வீரர் ஒருவரின் இதயத்தைக் கிளித்தெடுத்து உட்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறித்த காணொளி உள்ளது. தன்னார்வ அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டுள்ள இக்காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில் காட்டப்பட்டுள்ள நபர் 'பாருக்' எனும் படையணியின் ஸ்தாபகரான அபு ஸகார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் இதயத்தை உன்ணும் முன்னர் “I swear to God we will eat your hearts and your livers, you soldiers of…

  25. உலகளவில் பசிக் கொடுமையை ஒழிப்பதில் எதிர்காலத்தில் மனிதர்களால் உட்கொள்ளக் கூடிய பூச்சிகள் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஐ நா அறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது. பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது. அதேநேரம் பூச்சியை சாப்பிடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.