உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
[size=2] [size=4]பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளனர்.[/size][/size][size=2] [size=4]இதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4] மீட்பு பணியும் தொடர்ந்து இட…
-
- 3 replies
- 542 views
-
-
பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…
-
- 0 replies
- 421 views
-
-
பங்களாதேஷ் வங்கியை சவூதி இளவரசர் கொள்வனவு பங்களாதேஷின் ரூபாலி என்ற வங்கியை ரூ.4,200 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்குகிறார் சவூதி இளவரசர் பந்தர் பின் முகம்மது பின் அப்துல் ரெஹ்மான். பங்களாதேஷில் 4 ஆவது பெரிய வங்கி இது. கொடுத்த கடனை திரும்பப்பெற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படவே விற்றுவிடுவது என்று அரசு முடிவு செய்தது. இவ்வங்கியின் 93% பங்குகளை இளவரசர் வாங்கிக் கொள்கிறார். மிகச் சாதாரணமாக விலை நிலவிய இவ்வங்கியின் பங்குகள், வங்கியை விற்கப் போகிறார்கள் என்ற தகவலுக்குப் பிறகு விலை மதிப்பில் உயர்ந்து இப்போது ஆறு மடங்காகிவிட்டது. ஒரு பங்கின் விலை சுமார் ரூ.4,000 ஆகிவிட்டது.
-
- 0 replies
- 626 views
-
-
பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 03:46.15 AM GMT ] பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர் நடந்த போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அப்பாவி இந்து மக்களை கொடூரமாக கொன்று குவித்தனர். அங்கு அப்படி சுமார் 30 இந்துக்களை கொன்று குவித்ததுடன், 450 கடைகளுக்கு தீயும் வைத்ததாக பாகிஸ்தான் துணைப்படையான ரஜாக்கர் பானியின் ஒபைதுல் ஹக் தார் (வயது 66), அதாவுர் ரகுமான் நானி (62) ஆகிய இருவர் மீது குற்ற…
-
- 0 replies
- 338 views
-
-
பங்காளதேசத்தில் ரோனு புயலின் கோரத் தாண்டவத்துக்கு 24 பேர் பலி : 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம் பங்காளதேசத்தில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய ’ரோனு’ புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர். வங்கக்கடலில் உருவான ரோனு புயல் இலங்கையில் கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சிட்டகாங் துறைமுகத்திற்கு தென்மேற்கில் 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் பரிசால்-சிட்டகாங் இடையே கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறி…
-
- 1 reply
- 390 views
-
-
ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதைக் குறிக்கின்றது இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன. அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும். சமூகவலையமைப்பு மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நஸ்டக் (Nasdaq stoc…
-
- 3 replies
- 864 views
-
-
[size=5]பங்குச்சந்தையில் நுழைய எண்ணும் மான்செஸ்டர் யுனைட்டெட் [/size] [size=1] [size=4]பிரித்தானியா நாட்டின் பிரபல கால்பந்து விளையாட்டு குழுவான [/size][size=4]மான்செஸ்டர் யுனைட்டெட் அமெரிக்க பங்கு சந்தையில் நுழையும் எண்ணத்துடன் முதற்கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இன்றி அமெரிக்காவில் இது சம்பந்தமாக அது சட்ட பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. எடுக்க விரும்பும் பணம் - நூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள்.[/size][/size] [size=1] [size=4]ஏன் இதை மான்செஸ்டர் யுனைட்டெட் செய்கின்றது: இதன் மூலம் அதிகளவு பணம் திரட்டுவதே நோக்கம்.[/size][/size][size=1] [size=4]ஏன் பணம் : இதன் மூலம் நல்ல விளையாட்டு வீரர்களை வாங்க முடியும். அதன் மூலம் வெற்றி கூடும். அதிகம் இலாபம் வரும். [/size]…
-
- 0 replies
- 490 views
-
-
அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம். முகநூலின் சில தரவுகள் : வயது - எட்டு வருடம் பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள் பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள் நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள் http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html
-
- 19 replies
- 1.5k views
-
-
வெற்றி திருமகள் ” பசாரா நகரை குறிவைக்கும் ஈராக்கிய அணுகுமுறைகள்” திங்கள், 12 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] ஈராக்கின் பசாரா மாநிலத்தில் பிரித்தானிய அமெரிக்க படைகள் கூட்டாக களமிறக்கப்பட் டிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக பேசப் படும் இத்தருணத்தில், பசாரா மாநிலத்தின் முக்கியத்துவம் பற்றியதாகவும் பசாரா மாநிலத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கும் சியா இஸ்லாமிய பிரிவினர் பற்றிய தாகவும் அமைகின்றது இச் சிறுகட்டுரை. ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுப் படைகள் பசாரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியா இஸ் லாமிய பிரிவினரை உள்ளடக்கிய மெகிடி போராளிகளுக்கு எதிராகவும், பாக்தாத்தில் சியா இஸ்லாமிய பிரிவினர் பிரதேசத்தில் வாழும் போராளிகளுக்க…
-
- 0 replies
- 576 views
-
-
பசிபிக் கடலில் 8.5 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்-சிலி, பெரு, ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை சனிக்கிழமை, பிப்ரவரி 27, 2010, 10:56[iST] சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் மிக பயங்கர நிலநடுக்கம் [^] ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று காலை சிலி அருகே உள்ள கன்செப்சியான் நகர் அருகே கடல் பகுதியில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரி்க்டர் அளவுகோளில் 8.5 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலியின் நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் மிக பயங்கர…
-
- 2 replies
- 601 views
-
-
பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி 17 Dec, 2025 | 01:48 PM பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
பசிபிக் சமுத்திரத்தில் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ! சிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 7.1 ரிச்டர் அளவுடையதாக இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. நேற்று இதே பகுதியில் 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/254691
-
- 0 replies
- 241 views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 234 views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் - டிரம்பின் தொடர் அதிரடியால் பரபரப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்காளித்துவ உடன்படிக்கையிலிருந்து வாபஸ் பெறுவதற்கான நிறைவேற்று ஆணையில் கைச்சாத்திட்டு அது தொடர்பில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை பூர்த்தி செய்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட் நாம் ஆகிய 12 நாடுகளுக்கிடையிலான மேற்படி வர்த்தக உடன்படிக்கையானது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கைகள் தொடர்பான அச்ச…
-
- 0 replies
- 461 views
-
-
10 JUL, 2024 | 04:02 PM காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள…
-
- 1 reply
- 549 views
- 1 follower
-
-
பசியால் வாடும் பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ட்ரஸ்ஸல் டிரஸ்ட்” (Trussell Trust)என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர், உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களி…
-
- 66 replies
- 3.9k views
- 2 followers
-
-
பசுபிக் தெற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசுபிக் கடலின் தெற்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூகலிடோனியா தீவின் டைடனில் இன்று மாலை இலங்கை நேரப்படி 3.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. டடைனுக்கு 324 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 89 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக சேத விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. …
-
- 0 replies
- 622 views
-
-
பசுபிக்கில் அதி நவீன ஏவுகணையை பரிசோதனை செய்தது அமெரிக்கா-வீடியோ இணைப்பு சீனா மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகளில் சீனா தனது புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை அமெரிக்கா பசுபிக்கில் தனது புதிய அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. குவாமின் கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படை கலமான யுஎஸ்எஸ் கப்பிரியலீ கிவ்வொர்ட் அமெரிக்காவின் புதிய கடற்படை தாக்குதல் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. பசுபிக்கில் இடம்பெற்ற சின்;கெக்ஸ் என்ற ஒத்திகையில் கப்பிரியலீ கிவ்வொர்ட் என்ற போர்க்கப்பலில் இருந்து புதிய வகை எவுகணைகளும் ஏனைய ஆயுதங்களும் அமெரிக்கா தற்போது பயன்படுத்தாத கடற்படை கப்பலொன்றை நோக்கி ஏவப்பட்டதாக சிஎன்என் தெரிவித்…
-
- 1 reply
- 702 views
-
-
பசுமை ஐதரசனில் இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் By NANTHINI 20 OCT, 2022 | 11:49 AM (ஏ.என்.ஐ) இந்தியாவும் பிரான்ஸும் 'பசுமை ஐதரசனின் வளர்ச்சிக்கான இந்தோ-பிரெஞ்சு திட்ட வரைபடத்தை' ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆற்றல், அதிக அறிவுப்பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக தொழில்துறை கூட்டாண்மை உட்பட பல துறைகளில் பணியாற்றும் வகையிலேயே இந்த திட்டம் அமைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான மாநில அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபௌலூ, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். பிரான்ஸ் தூதரக அறிக்கையின்படி…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை! பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் ப…
-
- 21 replies
- 3k views
-
-
சென்னை, ஜூலை 31 (டி.என்.எஸ்) பசுமை வீடுகள் கட்டுவதற்காக ரூ.1260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி சூ…
-
- 0 replies
- 297 views
-
-
பசும்பொன் தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும். தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்கால…
-
- 2 replies
- 1.2k views
-
-
பசுவை வழிபடும் இந்துக்கள் கொல்லப்படுவர்! : ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டல்! இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு பத்திரிக்கையான தபிக்கில் தீவிரவாதி ஒருவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பசுக்களை வழிபடும் இந்துக்களை குறிவைத்து கொலை செய்வதற்காக எமது ஐ.எஸ். அமைப்பில் கோரசான் என்ற தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். இயக்கம் இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நுழைய விரும்புகிறது இதற்காக இந்துக்களை மட்டும் அல்ல ஷியா முஸ்லிம்களையும் கொல்வ…
-
- 0 replies
- 365 views
-
-
பச்சிளங்குழந்தையொன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்பவம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவியை ஜலந்தர் அரசு பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையுடனும் உடல் நலக்குறைவுடனும் பிறந்ததால், அதனை இன்கியூபேட்டரில் வைத்திருக்க மருத்துவமனை வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அப்போதும், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்பதால் சஞ்சீவ் குமார் தனது மனைவியுடன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் ச…
-
- 0 replies
- 410 views
-
-
பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு : அதிர்ச்சி காணொளி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி தொகுப்புகளில், அவ்வமைப்பை சேர்ந்த சிறுவர் படைகளின் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை படமாக்கி வெளியிட்டுள்ளனர். பாலர் பாடசாலை செல்லும் வயதை ஒத்த பாலகன் தன்னிலை அறியாமல் விளையாட்டு பூங்காவில் கட்டப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் 7 இலிருந்து 10 வயது மதிக்கத்தக்க சிறுவ…
-
- 0 replies
- 472 views
-