உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
அணு ஆயுத நீக்கப் பேச்சுவார்த்தை: வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர் அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது. இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன. மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது. வட கொரியாவில் 3 நாட்கள் பயணம்…
-
- 0 replies
- 546 views
-
-
அணு ஆயுத பரிசோதனை முயற்சிகளை எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை – வட கொரியா! அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சிகளை, எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) வட கொரியா இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அணு ஆயுதம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவிருந்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தை நடைபெறாமை தொடர்பாகவும் வடகொரியா அமெரிக்கா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிருகத் தனமானதும் மனிதாபிமானம் அற்றது எனவும் வட கொரியா தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணு-ஆயுத-பரிசோதனை-முயற்ச/
-
- 0 replies
- 331 views
-
-
அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா அணு ஆயுதம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர பலமுறை அழைப்பு விடுத்த அமெரிக்காவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 13:26 PM பீஜிங் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் மட்டத்திற்குக் குறைக்கத் தயாராக இருந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா மகிழ்ச்சியாக பங்கேற்கும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவுக்கு அமெரிக்கா பல…
-
- 0 replies
- 442 views
-
-
அணு ஆயுத போர் நடக்காமல் தடுத்த ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் 77 வயதில் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய அணுஆயுத பேரழிவை தடுத்தவர் என்று போற்றப்படும் சோவியத் ராணுவ அதிகாரி ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். 1983-ம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப…
-
- 0 replies
- 234 views
-
-
அணு ஆயுத லட்சியங்களை வட கொரியா அடையும்: கிம் ஜோங் -உன் ஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் நாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளார். வெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது வட க…
-
- 0 replies
- 434 views
-
-
அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்! அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, எதிர்வரும் தனது ஆட்சியில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இந்த கருத்து அமைந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, “ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம…
-
- 0 replies
- 227 views
-
-
அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது. ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல…
-
- 3 replies
- 411 views
-
-
அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள்: திடுக்கிட வைக்கும் தகவல் அணு ஆயுதங்களுடன் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள் குறித்த திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷிய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் தேதி, நான்கு ரஷிய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக சுவீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை செ…
-
- 6 replies
- 498 views
-
-
முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார். கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் …
-
- 0 replies
- 300 views
-
-
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2,000 கிமீ (1,240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது. பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து, ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தப் போகிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்திய தொடர்ச்சியான ஆயுத ஏவுதல்களில் இது சமீ…
-
- 0 replies
- 265 views
-
-
பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது, என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரசு கொள்கைகளை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் ஆய்வுக் குழு, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை அளித்தது.இதுதொடர்பாக, பென்டகனில் நேற்று முன்தினம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, நிருபர்களிடம் கூறியதாவது:பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் அபாயம் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொதுவான நோக்கம் வேண்டும் என, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். பயங்கரவாதிக…
-
- 5 replies
- 575 views
-
-
அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது. இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் “ஹ்வாசோங்-18” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் கடந்த ஆண்டில் இருந்…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=167872
-
- 0 replies
- 328 views
-
-
அணு ஆயுதத் தாக்குதல்; பென்டகனுக்கு எச்சரிக்கை - ட்ரம்ப்பைத் தொடரும் சர்ச்சை! அதியமான் ப ட்ரம்ப் தொடர்ச்சியாக ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, சர்ச்சையாகி, பின் நீக்கியவற்றைத் தொகுத்தால், அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெறும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குத் தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்துவரும் ஆட்சி மாற்றம் …
-
- 0 replies
- 615 views
-
-
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது. எரிபொருட்களின் விநியோகத்தைப் பெறுவதற்கு மாற்றீடாக, யொங்பியோனில் உள்ள தனது முக்கிய அணு ஆலையை 60 நாட்களில் மூட வடகொரியா ஒப்புக்கொண்டதாக, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்தனர். மேலதிக உதவிகளுக்குப் பிறகு, அணு ஆலையை முழுமையாக அது கைவிடும். இந்த ஆலை மூடப்படுவது சர்வதேசக் கண்காணிப்பாளர்களால் மேற்பார்வை செய்யப்படும். இந்த உடன்படிக்கை உறுதியான ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்றும், ஆனால் முழுமையான அணு ஆயுதக் களைவை நோக்கிய ஒரு ஆரம்பமே இது என்றும், அமெரிக்க தூதுவர்…
-
- 0 replies
- 639 views
-
-
அணு ஆயுதத்தை கைவிடுவதா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANDEL NGAN அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்…
-
- 0 replies
- 385 views
-
-
அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள் --- ------ ------- *ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்? *ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். *அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை. -------- ------------- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன. சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் …
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு! அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார். ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடி…
-
- 12 replies
- 1.3k views
-
-
அணு ஆயுதமொன்றை விருத்தி செய்வதுடன் தொடர்புடைய பரிசோதனைகளை ஈரான் நடத்தியிருப்பதை வெளிப்படுத்தும் தகவல் தமக்குக் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்தது. அணு குண்டொன்றை விருத்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி மாதிரிகள் என்பன ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தொடர்பான தனது பிந்திய அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது மேற்படி அணுசக்தி முகவர் நிலையத்தால் ஈரான் தொடர்பில் இதுவரை வழங்கப்பட்ட அறிக்கைகளிலேயே மிகவும் கடுமையானதாக கருதப்படுகிறது. மேற்படி அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றென ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ""இந்த அறிக்…
-
- 0 replies
- 970 views
-
-
அணு ஆயுதம் குறித்த புதின் பேச்சை உளறல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவ…
-
- 0 replies
- 658 views
- 1 follower
-
-
பாக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. இஸ்லாமிய தேசம் சிரியா மற்றும் ஈராக்கில் தமது அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து "இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாடும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக பக்தாதி அறிவிக்கப்பட்டும் இருக்கிறார். இவருக்கு கீழ்தான் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்…
-
- 1 reply
- 752 views
-
-
அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்…
-
- 0 replies
- 307 views
-
-
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 1993ம் ஆண்டு வட கொரியாவுக்குச் சென்றபோது முக்கிய அணு ரகசியங்களை தனது கைப்பட வட கொரிய அரசிடம் வழங்கியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷியாம் பாட்டியா என்பவர் எழுதியுள்ள, பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங்கிற்குச் சென்றார். அப்போது முக்கிய அணு தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தனது மேலாடையினுள் வைத்துக் கொண்டார். அவற்றை வட கொரிய அரசின் முக்கிய அதிகாரிகளிடம் தனது கைப்பட பெனாசிர் பூட்டோ வழங்கினார் என பாட்டியாவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 718 views
-
-
[size=3][size=4]ராதாபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை செல்கிறார்.[/size][/size] [size=3][size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர். மேலும் இடிந்தகரை ஆலயம் முன்பு மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/s…
-
- 1 reply
- 556 views
-
-
[size=4]கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதை எதிர்த்துப் போராடி வருவோரை நேரில் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவிக்க வந்த கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம்மின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் செவ்வாய் காலை தடுத்து நிறுத்தப்பட்டார்.[/size] [size=3][size=4]தனது ஆதரவாளர்களுடன் வந்த அச்சுதானந்தனை தமிழக போலீசார் தடுத்தபோது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் நான் இடிந்தகரை சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று போலீசார் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்லும் முயற்சியைக் கைவிட்டு கேரளம் திரும்புகிறேன். ஆனால் எனது ஆதரவு போராட்டக்காரர்களுக்கு உண்டு எனக் கூறிவிட்டுத் திரும்பினார்.[/size][/size] …
-
- 1 reply
- 466 views
-