Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs). உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்? உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எத…

  2. யுறோ வலயத்தில் கிறேக்கம் தொடர ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. கிறேக்கம் யுறோ வலயத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும், வழங்கிய உறுதிமொழிகளை அந்த நாடு கடைப்பிடிக்கவேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விரும்புவதாக ஐரோப்பிய சபையின் தலைவர் ஹேர்மன் வான் றொம்புயி தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பிறஸல்ஸில் இடம்பெறும் ஐரோப்பிய உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது, கிறேக்கம் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான சீர்திருத்தங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, அந்நாடு பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமானதென கூறினார். 2010 ஆம் ஆண்டில் இருந்து, கிறேக்கத்திற்கு உதவியாக 150 பில்லியன் யுறோவை, ஐரோ…

  3. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அமெரிக்காவை எகிறி அடித்த ரஷ்யா..!! திமிர் பேச்சை நிறுத்த எச்சரிக்கை..!! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத ்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியிருப்பது சுயநலத்தின் உச்ச கட்டம் என்றும், குழப்பமான மனநிலையின் வெளிப்பாடு என்றும் ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவையும் , உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த வைரஸை சீனாவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும், ஆரம்பத்திலேயே இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்க சீனா தவறி விட்டது என்றும் , உலகில் ஏற்பட்டு வரும் பேரழிவுக்கும் ச…

  4. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாதங்களுக்கு …

    • 11 replies
    • 2.3k views
  5. பொறுப்புக்கூறாவிடின் அரசுக்கு ஜெனிவாவில் கடும் நெருக்கடி! சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோ…

  6. பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா விலக முடியாது! - சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு!! ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணிய சுவாமியிடம் அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் நேரடியாக தெரிவித்துள்ளதாக அறியமுடிகின…

  7. லண்டன்: மறைந்த இந்திராகாந்தி காலத்தில், பஞ்சாப் பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவரான ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கே.எஸ்.பிரார், லண்டனில் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராரைத் தாக்கியவர்கள் சீக்கியர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. 1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கியப் போராளிகளைப் பிடிக்க இந்திரா காந்தி, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினார். அந்தப் படைப் பிரிவுக்கு பிரார்தான் தலைமை தாங்கிச் சென்றார். பொற்கோவிலுக்குள் நடந்த பயங்கர சண்டையில் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். ஓய்வு பெற்ற பிராருக்கு தற்போது 78 வயதாகிறது. இசட் பிரிவு பாதுகா…

  8. இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு அந்தத் தாக்குதலுக்கு உதவியது என்று குறிப்புணர்த்தும் தமது அரசின் அதி கூடிய ரகசிய ஆவணங்கள் குறித்து ஒரு விசாரணக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உத்தரவிட்டுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கேள்விகள் இந்தத் தாக்…

  9. பொலிசார் தொடர்பான நம்பிக்கை கனேடியர்கள் மத்தியில் அதிகம் பெரும்பான்மையான கனேடியர்கள் கனேடியப் பொலிசாரை வரவேற்கினறனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் நாட்டின் இரு பிராந்தியங்களில் பொலிசாருக்கு நல்ல பெயில்லை. கடந்த வருடம் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வில் 84 வீதமான மக்கள் கனேடியப் பொலிசாரில் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்த அதேவேளையில் பிரிட்டிஸ்கொலம்பியா மற்றும் யுகொன் ஆகிய இடங்களில் 73 வீதமாகவும் 69 வீதமாகவுமே இது இருந்தது. தலைநகரிலும் சராசரியாக பொலிசாருக்கு ஆதரவு தெரிவித்தோர் வீதத்தைவிடக் குறைவாக இருந்தது. அந்த இடங்களில் அவ்வாறு குறைவாக இருந்தமை ஒன்று ஆச்சரியமானதல்ல என முன்னாள் பொலிஸ் அதிகாரியும் குற்றவியலாளருமான றொப் கோர்டன் தெரிவித்தார். …

    • 0 replies
    • 834 views
  10. பொலித்தீன் உறையால் ஜோர்ச் புஷ் பட்ட அவஸ்தை! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யு புஷ் பொலித்தின் உறையை அணிந்து, மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அவஸ்தையுறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார்வையாளர்கள் முதல் விருந்தாளிகள் வரை மழையில் நனைய வேண்டியேற்பட்டது. இந்நிலையில் பார்வையாளர்களுக்கு மழையிலிருந்து காக்கும் விசேட பொலித்தின் உறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த உறையை ஜோர்ச் டபிள்யு புஷ், தலையில் அணிவதற்கு தடுமாறியுள்ளார். மேலும் முகத்தை மூடிய உறையால் அசௌகரியம் அடைந்தநிலையில், குறித்த உறையை புன்னகையுட…

  11. பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு! தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார். கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்தத…

  12. பொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும்…

  13. தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ரோடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழைக்கு மலை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லா பாஷில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால் பலர் சேற்றுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் லாபாஷ் நகரில் இது போன்ற கடுமையான நிலச்சரிவு இதுவரை ஏற்பட்…

    • 0 replies
    • 557 views
  14. 27 JUN, 2024 | 10:08 AM பொலிவியாவில் சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட இராணுவீரர்கள் தலைநகர் லா பாஸில் உள்ள அரண்மணை மீது தாக்குதலை மேற்கொண்ட சில மணிநேரத்தின் பின்னர் சதிப்புரட்சி குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியை தொடர்ந்து தலைநகரில் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தில் கவச வாகனங்களுடன் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டனர் - பின்னர் அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் மறுசீரமைக்க விரும்புவதாக கிளர்ச்சி குழுவின் தலைவரான ஜெனரல் ஜூவான் ஜோஸ் ச…

  15. தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் நான்கு பொருளாதார செழிப்பு மிக்க பிரதேசங்கள் தன்னாட்சி பிரகடனம் செய்யும் வகையில் வரி சம்பந்தப்பட்ட விடயங்களை மாற்றியமைத்ததை அடுத்து பொலிவியாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பொலிவிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த பொருளாதார கட்டுப்பாட்டுக்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்து இந்த நிலை எழுந்துள்ளது. அரசு தற்போது இந்த தன்னாட்சி நகர்வுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸை ஏவிவிட்டுள்ளது. Bolivia tense amid autonomy push Security forces are on alert in Bolivia, ahead of rallies planned in four of the country's richest regions. The four provinces are set to declare autonomy at the demonstrations, after the wealthiest province, Santa C…

  16. பொலிஸாரின் தடுப்புக் காவலிலிருந்தவர் இறந்ததால் மாலைதீவில் பதற்ற நிலை மாலைதீவில் பொலிஸாரின் தடுப்புக் காவலில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட நபரை பொலிஸாரே கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ஹூசைன் சனா என்பவரின் உடல் தலைநகரின் துறைமுகப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட பின்னரே அவர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் அலைந்து திரிவதாகவும் பலரை கைது செய்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அமைதியின்மையை உருவாக்கின…

  17. பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …

  18. பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்கள்: பிரதமர் ஜஸ்டின் யோசனை இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, ந…

  19. பொஸ்டன், பாரிஸ், பிரஸல்ஸ் ஆகிய 3 தாக்குதல்களிலும் உயிர்த்தப்பிய இளைஞர் 2016-03-24 12:47:38 பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் காயடைந்த இளைஞர் ஒருவர், ஏற்கெனவே அமெரிக்காவின் பொஸ்டன் குண்டுத்தாக்குதல் மற்றும் பாரிஸ் தாக்குதல்களிலும் நூலிழையில் உயிர் தப்பியவர் என்பது தெரியவந்துள்ளது. 19 வயதான மாசன் வேல்ஸ் எனும் இந்த இளைஞருக்கு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது, முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாசன் வேல்ஸ் எதிர்கொண்ட 3 ஆவது பயங்கரவாத…

  20. பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார். 1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radov…

    • 4 replies
    • 658 views
  21. பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது துல்ஸா ஆர்ப்பாட்டம் பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டினர். ஐ.எம்.எப் ஐயும் உலக வங்கியையும் அழைத்துவந்து நாட்டை அடகுவைத்தனர். இரண்டு தன்னாட்சி கொண்ட பிரதேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பொஸ்னியா வழமையான முதலாளித்துவ அரசுகளைப் போன்று ஊழல், எதேச்சதிகாரம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தது. இன முரண்பாடு ஆட்சியாளர்களதும் பணக்காரர்களதும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ள உதவியது. எஞ்சியவற்றை ஐ.எம்.எப் உம் உலகவ…

  22. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள ப…

  23. போகிமான் கோ விளையாடிய கனேடிய இளைஞர்கள்; சர்வதேச சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது போகிமான் கோ (Pokemon Go) எனும் ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டில் தீவிரமாக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் சர்வதேச விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த இவ்விருவரும் போகிமான்களைத் தேடிக் கொண்டு படகொன்றின் மூலம் ஏரியொன்றில் சென்று கொண்டி ருந்தனர். இதன்போது இவர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துவிட்டனராம். கனேடிய எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்டனாவிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்விரு இளைஞர்க…

  24. போகோ ஹராமால் 40 பேர் கடத்தப்பட்டதாக சந்தேகம் நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. போகோ ஹராம் குழுவினர்புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த ஆயுதமேந்திய போகோ ஹராம் அமைப்பினர், தம்முடைய உரையைக் கேட்குமாறு கிராமத்திலிருந்த ஆண்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்படி அவர்களின் பேச்சைக் கேட்கச் சென்ற இளம் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுக…

    • 0 replies
    • 428 views
  25. போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக தகவல் நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போகோ ஹராமினுக்கும் 'ISWAP' என்ற மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த மே 18 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அபுபக்கர் ஷெகாவ், மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த வெடி‍ பொருட்களை வெடிக்கச்செய்து போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.