உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
Published By: RAJEEBAN 12 SEP, 2024 | 12:02 PM மலேசியாவின் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உடல்ரீதியாக பாலியல்ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என கருதப்படும் 402 சிறுவர்களையும் பதின்மவயதினரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஒரு வயது முதல் 17 வயதானவர்களை மீட்டுள்ளோம் இவர்கள் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மத ஆசிரியர்கள் உட்பட 171 பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பிரபலமான இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது எனினும் அந்த அமைப்பு தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்த…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு என்ற ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கடலிலேயே வாழ்கின்றனர். ’கடல் நாடோடிகள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பசிபிக் கடல் போர்னியோவில் ஒரு பெரிய நில வளைவுக்குள் இப்பகுதி அமைந்துள்ளது. அதனால், அங்கு பெரிய அலைகள், ஆரவாரம் ஏதுமின்றி, அமைதியான கடல் பகுதியாக காணப்படுகிறது. இந்த கடல்பகுதியில் பஜாவு என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் கடல்மீது மரங்களாலும் பலகைகளாலும் ஆன சிறிய குடில்களை கடல் மட்டத்துக்கு உயரத்தில் அமைத்து அதில் வச…
-
- 2 replies
- 1.7k views
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 10:18 AM பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்ப…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தான…
-
- 1 reply
- 427 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்கு செல்வோர் அங்கு திருமணம் செய்யத் தடை பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர். வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது. எனினும் அவர்கள் திருமணம் மற்றும் வேறு வகையான சிவில் வாழ்க்கை பந்தங்களில் இணைவது தடுக்கப்படும். அத்துடன் பிரிட்டனில் க…
-
- 10 replies
- 837 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை வழிநடத்தும் யுக்ரேனிய வீரர் எழுதியவர், பாவெல் அக்செனோவ், ஓலே செர்னிஷ் மற்றும் ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - யுக்ரேன் இடையே போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் யுக்ரேனும் மாறி மாறி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்திய நாட்களில் இந்த தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. யுக்ரேன் ரஷ்யாவிற்கு எதிராக 80 ட்ரோன்களை செலுத்தியது. அவற்றில் சில மாஸ்கோவை இலக்காகக் கொண்டவை. மற்றொருபுறம் யுக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 140க்கும் மேற்பட்ட ட்ரோன்களை செலுத்தியது. இந்த மோதலில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை ஆயு…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது இவர்கள் ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிஞ்சார் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது அதற்கு அருகிலோ கண்டுபிடிக்கப்படும் ஆறாவது மனித புதைகுழியாகும் இது. கடந்த ஆண்டு அந்த ஜிகாதி அமைப்பினர் சிஞ்சார் நகரைக் கைப்பற்றிய பிறகு யாசிடி சிறுபான்மை இனத்தவர் ஏராளமானவர்களை சிறைபிடித்து, பாலியல் வ…
-
- 0 replies
- 660 views
-
-
"போபர்ஸ் ஊழலில் ராஜிவுக்கு தொடர்பில்லை': சுவீடன் முன்னாள் போலீஸ் அதிகாரி தகவல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவுக்கு, போபர்ஸ் ஊழலில் எந்த சம்பந்தமும் இல்லை என, சுவீடன் நாட்டு முன்னாள் போலீஸ் அதிகாரி தெரிவித்துள் ளார். ராஜிவ் பிரதமராக இருந்த போது, சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. ராணுவத்துக்காக வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேரத்தில், 61 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த ஊழலில் ராஜிவ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டதால், 1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி தோல்வியடைந்தது. குட்ரோச்சியை காப்பாற்ற முயற்சி: இதற்கிடையே, போபர்ஸ் ஊழல் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு, இது தொடர்பாக விசாரணை நடத்திய சுவீடன் …
-
- 0 replies
- 321 views
-
-
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்…
-
- 0 replies
- 514 views
-
-
ரஷ்யா, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பெயரிடப்படாத புதிய நீண்டதூர ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை ஊடுருவி செல்லும் வகையில் இந்த புதிய ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஐரோப்பாவில் தமது புதிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நேட்டோ செயற்படுத்தி சில நாட்களில் ரஷ்யா இந்த பரீசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ஆறாயிரம் கிலோமீற்றர் வரை சென்று இலக்கை தாக்கக் கூடிய திறன் கொண்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் தமது முதலாவது ஏவுகணை பரிசோதனை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், ரஷ்யா இந்த பரீசோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நேட்டோ தமது அணு செயற்பாட்டை த…
-
- 6 replies
- 985 views
-
-
[size=4]டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகியவை ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதன்படி இந்த நகரங்களில் தாக்குதல் ஏவுகணைகள் நிறுத்தப்படவுள்ளன.[/size] [size=3][size=4]இதுதொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த இரு நகரங்களிலும் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை நிறுத்தும் திட்டம் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வருகிறது. விரைவில் விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இரு நகரங்களிலும் ஏ…
-
- 9 replies
- 1k views
-
-
டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகைப்படம் வெள்ளை மாளிகை ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது. புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மேலும் அது 7 ஆம் திகதி கார்டினல்களின் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் குழு …
-
- 0 replies
- 411 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கான கருத்தை கேட்டு மத்திய அரசின் உட்துறைச் செயலருக்கு, தமிழக தலமைச்செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தின் இந்தக்கைதிகளை விடுதலை தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருக்கிறது மத்திய அரசு. குற்றப்புலனாய்வுப் பிரிவால் குற்றம் சட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்…
-
- 6 replies
- 526 views
-
-
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது. http…
-
- 0 replies
- 783 views
-
-
காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 18 JUL, 2025 | 08:02 AM முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது. உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன…
-
- 0 replies
- 221 views
-
-
ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், ‘கிடையாது’ என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் ‘டெசோ’ மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89வது பிறந்த நாளையட்டி 03.06.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 09.06.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், “தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண் பதற்காகவும் உயிரைவிடவும் விரும்புகிறேன்” என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னைக்…
-
- 0 replies
- 653 views
-
-
09 AUG, 2025 | 11:33 AM ஜேர்மனி இஸ்ரேலிற்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி இது குறித்து அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் காசா பள்ளத்தாக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய எந்த இராணுவ ஏற்றுமதிக்கும் ஜேர்மனி அனுமதியளிக்காது என ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு தன்னைபாதுகாப்பதற்கான உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் தனது பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் ஜேர்மனியால் சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்த…
-
-
- 5 replies
- 443 views
- 1 follower
-
-
ஈரானில் பாரிய மனித புதைகுழி – கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்! ஈரானில் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோம் நகரில் பாரிய மனித புதைகுழிகளை காண்பிக்கும் செய்மதி படங்கள் வெளயாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நியுயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினால் குறித்த செய்திமதிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரானின் புனித நகரத்தில் உள்ள மயானமொன்றில் தோண்டப்பட்ட நீளமான புதைகுழிகளின் செய்மதி படங்களே வெளியாகியுள்ளன. மக்சார் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மார்ச் முதலாம் திகதி இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளது. செய்மதிப் புகைப்படங்கள் ஈரானில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகயிருக்கலாம் என்ற சந்தேகங்கள…
-
- 0 replies
- 185 views
-
-
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனை…
-
- 0 replies
- 164 views
-
-
புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி அளித்ததும் ஆகும். மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டாலும்,முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசுக்கான ஆதரவை வெளியிலிருந்து தொடர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மம்தாவின் குடைச்சலிலிருந்து மீண்டு ஆசுவாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முலாயம் இன்று திடீர் குண்டை போட்டுள்ளார். தொலைக்க…
-
- 0 replies
- 667 views
-
-
ராதாபுரம்: இன்று இடிந்தகரைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை சந்தித்தார். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர். இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடிந்தகரை வந்த உதயகுமார் கடந்த 10-ம் தேதி இடிந்தகரை கடற்கரையில் பொதுமக்கள் அணு உலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்…
-
- 0 replies
- 676 views
-
-
வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள் வட கொரிய ஆளுங் கட்சியின் 4 நாள் கூட்டம் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் தலைநகரிலுள்ள கிம் இல் – சங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடினர். அந்நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடியிருந்த கூட்டத்தின் முன்பாகத் தோன்றி கையை அசைக்கவும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன்போது 'கொரிய தொழிலாளர் கட்சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க' என பொருள் படும் வாசகத்தைக் கொண்ட இராட்சத கொடி காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் அந்நாட்டில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் மு…
-
- 0 replies
- 227 views
-
-
பியர்ல் ஹார்பர், இரட்டை கோபுரம் தகர்ப்பு போன்ற கொடூரமான சேதம் கரோனாவால் இந்த வாரம் வரும்: அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ்: கோப்புப்படம் வாஷிங்டன், ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள், மிக,மிக எச்சரிக்கையாக இருங்கள் என்று அமெரிக்காவின் அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார் உலகம்முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸால் ஒவ்வொரு நாடுகளும் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. இதில் அமெரிக்கா கரோனா வைரஸின் தாக…
-
- 1 reply
- 415 views
-
-
மோடியின் கார் சாரதியான மெக்சிகோ அதிபர் ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இறுதியாக, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு மோடியை இரவு விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சரியப் படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிஸ்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பின…
-
- 1 reply
- 385 views
-
-
மைனஸ் 37 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை! ஏன் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி? கொரோனா வைரஸ் வந்த பின், பங்குச் சந்தை சரிவு, மக்கள் மரணம், கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை என எல்லாமே நம்மை வாய் பிளக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு கொடுமையைத் தான் நேற்று அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையும் சந்தித்து இருக்கிறது. அப்படி என்ன பெரிய விலை சரிவு? -37 டாலர் என்றால் என்ன பொருள் வாருங்கள் பார்ப்போம்.வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்கிற WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, New York Mercantile Exchange (NYMEX) சந்தையில், தாறுமாறாக விலை சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர்ஸின் விலை மைனஸ் 37 டாலரைத் தொட்டு, வரலாறு காணாத வீழ…
-
- 1 reply
- 394 views
-