கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
[Wednesday, 2011-06-15 21:36:15] முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சிறிலங்கா அரசு:செனல்-4 வினால் அல்ஜெஸீராவிடம் மாட்டிக் கொண்ட ரஜீவ் விஜயசிங்க எம்.பி அறிவிப்பாளரைக் கேள்வி கேட்கவிடாமல் கதையளக்கும் காணொளி.. http://youtu.be/sdrCR-X4iH0 http://www.seithy.com/breifNews.php?newsID=44922&category=TamilNews
-
- 0 replies
- 976 views
-
-
எட்டாவது அதிசயமே என் தலைவா !! எவர் கைகளுக்கும் நீ எட்டாத அதிசய -த்தை அறிவதற்கு-சில வல்லசருகள் வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப் -படையும் மெஞ்ஞானம் கொண்ட உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள் அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!! உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு வெற்றுடலை காண்பித்து அது உன் வித் -துடல் என்றார்கள் அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும் முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி -தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும் சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை -ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,, வான் சிவ…
-
- 9 replies
- 2.1k views
-
-
நீ என்னை பார்க்காதே, என் மனம் உன்னை காணாது! நீ ஒன்றும் சொல்லாதே, என் உள்ளம் கேட்காது! கண்முன்னே மறைந்தாயே, கானல் நீர் போல.... உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும், உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு! வராமல் போனதற்கு மன்னிப்பாயா.... தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள். மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள் வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின் வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி! முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால். அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக... வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ.... சந்திரிகா தேசம் தமிழ் கூடல்.
-
- 1 reply
- 833 views
- 1 follower
-
-
-
-
எங்களது தமிழ் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எல்லோருமே பெண்களின் இடுப்பின் மடிப்புக்களை மட்டுமே வைத்து கவிதையும் பாடலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இரனையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் நான் வீடு மாறியதில் வேலை அருகாமையில் இருந்ததால் அண்மையில் நான் வேலைக்கு போவதற்காக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அதுவும் கோடைகாலம். இன்று வேலைக்கு போய்க்கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னே ஸகூட்டரில் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தும் வந்து உதித்தது.. என் ஸ்கூட்டரின் முன் ஸ்கூட்டரில் முன்னமர்ந்து போகிறவளே மடிப்பேயில்லாத உன் இடுப்பில் வழுக்கி வழுக்கி விழும் என் மன அவதியில் சிக்னல் சிவப்பா பச்சையா என்கிற சிதறிப்போன பார்வையில் மஞ்சளாய் என்மனது அல்லாட அசையும்…
-
- 44 replies
- 4.4k views
- 1 follower
-
-
முத்துப் போன்ற தீர்மானம்-நம் முதல்வர் காத்தார் தன்மானம் ஒத்துப் போக அனைவருமே-நல் ஒற்றுமை காட்டி தமிழினமே சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ் சரித்திர முடிவு எடுத்தாரே பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த பாட்டில் முழுவதும் நான்சொல்ல அருளாதாரம் அணு அளவும்-என்றும் அறியா பக்சே உள்ளளவும பொருளாதார தடை ஒன்றே-சிங்களர் போக்கினில் மாற்றம் தருமென்றே ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த ஒற்றுமை கெடவே பண்ணாதீர் திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத் திசையும் தமிழினப் புகழ்பாடும் ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை உடனே செய்தீர் இன்றாமே குன்றே எதிரே மறித்தாலும-கை குறுக்கே குழியே பறித்தாலும நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம் ந…
-
- 1 reply
- 642 views
-
-
அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா
-
- 0 replies
- 940 views
-
-
.... "நல்லூர் புத்தசாமி கோயில்" ... நாலு வரி எழுதுங்கள்
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
உந்தப் பழைய பேப்பரை வைச்சு என்ன செய்யப்போறியள்? இது எங்கட சொந்த வீடேயப்பா? வீடு மாறேக்கை பிறகு எல்லாத்தையும் கொண்டு திரியேலாது................ என்றதும் ஒருமுறை வெள்ளம் கெல்லருக்குள்(நிலவறைக்குள்) புகுந்ததில் நனைந்தவை போக மிகுதியாக இருந்த எரிமலை, விடுதலைப்புலிகள் போன்றனவற்றைத் தட்டிப் பார்த்தேன். மனம் கனமானது. எப்போது எரிமலை, விடுதலைப்புலிகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த காலமொன்று இருந்தது. ஆனால் இன்று.......... அவற்றில் காலம் கடந்தாலும் இன்றைய காட்சிகளோடு அப்படியே பொருந்துகிறது. உலைக்களத்திலே வியாசனவர்களால் 2003 இல் எமுதப்பட்ட கவிதையான " கை தவறிப் போகிறது எம் காலம்" ஆம்! இப்போதும் அதே நிலமைதான்.............. படித்துப்பாருங்கள் யாழ்க் கள உறவுகளே! …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…
-
- 0 replies
- 861 views
-
-
புத்தம் புதியதோர் இராம கதை.....! முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும் முழுமையாய்க் கிடைக்கப் பெற்று ஒப்பரும் பதவியைத் துறந்து ஓதரும் கலைஞர் சென்றார் கட்டிய காவியோடு அன்னார் கால்நடை ஆகச் செல்ல கனிமொழி கண்ணீர் சிந்தி கதாநாயகன் பின்னே செல்ல சண்டையிட்ட மைந்தர்களும் சரிவரப் பின்னே செல்ல உற்ற நல் மனைவி மாரும் உளம் நொந்து வழி அனுப்ப காவியம் பாடிய கவிஞர் எல்லாம் கண்ணீர் சொரிந்து நிற்க சோனியா அம்மையாரும் இதை சோர்வுற்று பார்த்து நிற்க புத்தம் புதியதோர் இராமகாதை புவி மீது அரங்கேறிற்றன்றோ? இப்படித் தீர்ப்பை மக்கள் இணைத் தொன்றாய் அளிப்பாரென்று கற்பனைக் கனவில் கூட கண்டிரார் கலைஞர் அன்றோ? வித…
-
- 0 replies
- 1k views
-
-
வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில் முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில் புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப் பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத் தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல, எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு! இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும் துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின் சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும் புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள் விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய், வளரும் என்ற கனவி…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
என்னருமைத் தாய் நிலமே...... தசாப்தங்களாய்ப் போராடித் தாய் நிலத்திற்க்காய் உதிரமிட்டுக் கட்டிக் கட்டிக் காத்த கனவுகளை உன் பிள்ளைகளின் பெருவிருப்பைச் சிதைக்கும் ஊழிக்காலம் ஒன்று உன் மடியில் உருவான போது எப்படித் துடித்திருப்பாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... ஒட்டி உலர்ந்த வயிறுகளுடனும் வெடித்துப் பிளந்துபோன உதடுகளுடனும் எச்சிலைக்கூட விழுங்க இடைவெளியின்றி ஏவப்பட்ட செல்களின் நடுவே எங்கள் பச்சிளம் குழந்தைகள் பரிதவித்தனவாம் ஜயகோ.... எம்பிள்ளைகள் துடித்தபோது எப்படித்தாங்கினாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... கந்தகப்புகை நடுவே கண்ணுறக்கம் மறந்துவிட்டு உந்தனுக்காய் வெந்தணலில் நீராடிய வேகாத இலட்ச்சி…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
குருதியில் உறைந்த தேசம் -இதயச்சந்திரன் மே 18 ... தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள். கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள். தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள். இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று, ''நீ அழக்கூடாது'' என்கிற ஆறுதல் வார்த்தையை கூறிச் சென்றிருக்கின்றார்கள். இறப்பின் வலி புரிந்த, மனவிரிவுள்ள ஆளுமையின் சொந்தக்காரர்கள் அவர்கள். விழுப்புண் அடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள். வரவில்லை. சிங்களப்…
-
- 0 replies
- 841 views
-
-
கற்பு அது எனக்கும் இல்லை என்னவளுக்குமில்லை கடிதம் அதை அனுப்பமட்டுமே தெரியும் வஞ்சனை அது தான் மூலதனம் குழிபறிப்பு பிறந்ததிலிருந்து தமிழ் பற்று அது தமிழனை முட்டாளாக்க சினிமா பணம் மற்றும் பறவை சுட பத்திரிகை பந்தி பந்தியாக எழுதி உடன்பிறப்பை முடக்க தொலைக்காட்சி இனாம் என்று தொடங்கி இருட்டடி அடிக்க கட்சி அது குடும்பச்சொத்து பிள்ளைகள் உலகவரிசை பணக்காறராக உண்ணாவிரதம் அது உண்மையைப்புதைக்க.........
-
- 0 replies
- 735 views
-
-
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விர…
-
- 14 replies
- 3.6k views
- 1 follower
-
-
'யுத்த கால இரவொன்றில்...' கவின் மலர் 'உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும் நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப்போன்று, நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’ இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர். இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப…
-
- 6 replies
- 2.1k views
-
-
காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …
-
- 0 replies
- 867 views
-
-
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இன்று ஒரு சகோதரி எழுதியதை வாசித்தேன். நான் வாசித்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்த காலங்களில் நானும் பிறந்த மண்ணில் இருந்தேன். மொறிஸ் குறிப்பாக வடமராச்சியில் அந்நிய படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடன் ஜேம்ஸ், ஜூட், ரமேஷ் மாஸ்டர், ஜீவா, ஜெயம், ஐயன் இன்னும் பலர் களமாடினார்கள். அனைத்து மாவீரர் தெய்வங்களுக்கும் எனது வீர வணக்கம் - அகஸ்தியன். சுமை தாளாத சோகங்கள்! வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண…
-
- 1 reply
- 1.2k views
-
-
சங்கே முழங்கு ஈழத்தின் மானத் தமிழனம் உன்னத போராட்டத்தால், பல வீர மறவர்களின் தியாகத்தால் தமக்கென ஒரு நாட்டை ஆக்கி கொண்டதென சங்கே முழங்கு அன்றேல் ஈழத்திலிருந்த தமிழினம் மானத்தோடு உன்னதமாக போராடி அடிபணியாது முற்று முழுதாக அழிந்து போனது என்ற நெருப்பு வரிகளை சொல்லி முழங்கிடு இந்த யுகம் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட தலைவனை இந்த இனத்துக்கு தந்தது என்று உன் வரலாற்று பதிவில் எழுதி முழங்கிடு.
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-
-
நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான் குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்தது நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியை நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள் நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது கால் நனைக்கும் கடற்கரையில்தான் படகில் தப்பியோடமுயன்ற நிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்துபோனாள் கூடவே அவளோடு... நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான் மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல் கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந…
-
- 0 replies
- 1.1k views
-