கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
பா.விஜயின் கவிதை நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி- உன் நம்பிக்…
-
- 12 replies
- 21.6k views
-
-
கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…
-
- 0 replies
- 686 views
-
-
எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி! விழிகள் திறந்து உன்னைச் சுற்றி நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி! எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை? தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை! பொய்மை என்னும் போர்வை அகற்றி உண்மை நெறியினில் செல்வது வெற்றி! அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி செய்வது அல்ல உண்மை வெற்றி! அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும் விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி! சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து அடையும் வெற்றி உனக்கே உரித்து! நல்லோர் என்று உலகம் போற்றும் அதுவே என்றும் மாறா வெற்றி! …
-
- 3 replies
- 920 views
-
-
_______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 14 replies
- 1.7k views
-
-
தமிழீழம் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல்........ அந்த வழியால் வந்தனர் தமிழ் அரசியல்வாதிகள்... சம்பந்தம் இல்லாமல் ஒரு அரசியல்வாதி சொன்னார்.... "இதற்கு வழி, தெரியவில்லை. ஒரே வழி திரும்பி செல்வதே!" தவளை வாயை திறந்து ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு பாதுகாப்பை திருப்பி தருவதே!" தொண்டைய கனைத்து ஒரு அரசியல்வாதி சொன்னார்..... "இதற்கு வழி, போட்ட நாராயணனை வைத்து கல்லை தூக்குவதே!" வெள்ளை வானில் வந்த ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எதிரியின் தலைவனின் காலில் உருண்டு புரள்வதே!" கருணை இல்லாத ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு எதிரியிடம் உபதலைவர் பதவி பெறுவதே!" வாகன விளக்கை பார்த்த (தொங்கு) மான்கள் போல்... கல்லை பார்த்து பேச…
-
- 5 replies
- 1.6k views
-
-
சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!
-
- 6 replies
- 1.2k views
-
-
நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…
-
- 32 replies
- 4.3k views
-
-
o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது.... எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்.... மேமாத முடிவுகளைத் தைமாதமே உரைத்த நீ மாசி27 கிபீரடியில் உன் கொள்கையும் இலட்சியமும் தமிழீழ தேசத்தின் கனவுடனே கரைந்த…
-
- 3 replies
- 827 views
-
-
-
- 45 replies
- 4.5k views
-
-
தேடுகிறோம் இப்போது?????? மனிதத்தன்மையை மக்களிடம் என்கவிதை இத்தலைப்பில்.. எங்கே மனிதன்????????என்றே...... அரசியலில் பெரும்புள்ளி ஆளுயர மாலையோடு அவர்வீட்டு வாசலிலே அயராது தொண்டர்படை ... பாமரனும் வந்தானாம் பெருந்தலைவர் புகழ்காண தலைவரவர் குணமறிய தாளாத ஆவலுடன்........ வழியிலே வழிமறித்தார் வலதுகையாம் உதவியாளர் அடுக்கடுக்காய் அளந்தாரே அண்ணலவர் அரும்பெருமையை... சிங்கமென முழங்குவார் சீற்றமுடன் மேடையிலே... புலியென பாய்ந்திடுவார் சட்டசபை கூட்டத்திலே... தொகுதி பத்தி கேட்டாலோ முழிப்பாரே ஆந்தையாய்....... குரைப்பாரே நாய்போல கும்பிட மறந்தாலோ... செவியுந்தான் பாம்பாச்சே வம்புமது கேட்பத…
-
- 6 replies
- 1k views
-
-
பள்ளிச் சீருடையில் பட்டென்று வந்தவளா இவள்.. கண்கள் அகல விரிய பார்வை விழுந்தது அவள் மீது..! நேற்று அவள் வகுப்பில் என்னோடு கதிரைக்கு சண்டை பிடிக்க தள்ளி விட்டதில் சிறு உரசல் கத்தியே உயிரை எடுத்தாள் வாத்தியார் தந்த அடியோடு அது நினைவில் பதியும் வரை. அன்று அவள் சிறுமி நான் சிறுவன். வளர்ந்தோம் இருவரும் பருவமும் வந்து சேர்ந்தது அவள் கடைக்கண் பார்வை வீச நானும் பதிலுக்கு பேச ஆசைகள் அரும்பின அதற்கு அன்பு என்று பெயரிட்டோம். கடிதங்கள் பரிமாறி கடலையும் போட்டு கையும் கோர்த்து வலண்டைனும் கொண்டாடினோம். காலமோ ஓட்டமாய் ஓடியது.. ஓர் நாள் சொன்னாள் "அப்பாக்கு லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது நாங்களும் போகப் போறம்." மின்னலா…
-
- 146 replies
- 22.2k views
-
-
இலைகளைக் கழுவிச் சொட்டுகிற பெரு மழையில் கடைசியாய் நனைகிறது அமைதியின் ஓசை, மேகத்தில் மறைந்த கவலையின் வடுக்களை தன் கோடொன்றில் கீறி விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம், தொலைந்த வானத்தைத் தேடி அலையும் நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல், கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில் கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின் இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட, மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............ "மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்
-
- 6 replies
- 4.5k views
-
-
புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 898 views
-
-
காதல் காதல்......! ------------------- தவழும் வயதில் தாய் மீது காதல் நடக்கும் வயதில் முற்றத்தின் மீது காதல் படிக்கும் வயதில் பாடங்கள் மீது காதல் இரசிக்கும் வயதில் இயற்கை மீது காதல் துடிக்கும் வயதில் பெண்மீது காதல் மயங்கும் வயதில் மன்மதக் காதல் முதிரும் வயதில் இறைவன் மீது காதல் முடியும் வயதில் பாய் மீது காதல் முடிவின் வழியில் தீயின் மீது காதல்
-
- 6 replies
- 1.1k views
-
-
இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் என்ற மூன்றெழுத்தை கண்டு சொன்ன கடவுள் யார்? மந்திர வித்தை கொண்டிந்த சொல்லை செய்த சிற்பி யார்? சீறும் புலியாய் இருந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன ! கையால் எழுதா, காதால் கேளா வாயால் பேசா மொழி இதுவே இரு இதயம் மட்டும் பேசுகின்ற கடவுள் தந்த அன்பு மொழி ஒன்றை ஒன்று விட்டகலா ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற அன்பு என்னும் ஆலயத்தின் அர்ச்சனை மந்திரம் காதல் மொழி எத்தனை ஆண்டு, எத்தனை தூரம் எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும் அத்தனை நாளும் என்னிதயம் உன்னை நினை…
-
- 9 replies
- 1.3k views
-
-
காதல் மொழியை புரிய வைத்த அகராதியே காலை எனை எழுப்பும் காணக் கடிகாரமே மாலை எனை மயக்கும் மந்திர மகுடியே உன்னை தனிதனியாக வர்னித்தால் சக அங்கம் என் மீது வழக்கு தொரலாம் என முழுதாய் வர்னிக்க வார்தைகளை தேடினால் பாவிக்கவிஞர்கள் சகலதையும் திருடி விட்டார்கள். காப்புரிமை இல்லையாம்.அதானாலென்ன உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் இருக்கும் உரிமை பிரிவு இல்லாது நிலைக்கும்
-
- 2 replies
- 766 views
-
-
காதல் சிட்டுக்கள்..... கவிதை - இளங்கவி அந்தி மாலைப்பொழுது மங்கிய மின்னொளியில் உணவகமொன்றில் ஜோடியாய் இரு காதல் சிட்டுக்கள்.... காம்புடன் குடிய கருஞ்சிவப்பு ரோஜாவை நீட்டியது ஆண்புறா... ரோஜா கொடுக்கிறாய் ஆனால் ஏன் அதை அழகில்லாத காம்புடனும் முள்ளுடனும் தருகிறாய் என்றது பெண் சிட்டு.... அழகில்லாத இந்தச் செடி அழகிய ரோஜாவை எப்படி தாங்கி நிற்கிறதோ நானும் உன்னை என் தேவதைபோல் என்றும் தாங்கி நிற்பேன் என்று சொன்னது ஆண் சிட்டு.. அவன் காதல் வார்த்தையில் மயங்கிய பெண் சிட்டு தன் இரு கைகளாலும் அவன் முகத்தைத் தழுவி ஒட்டிய முத்திரை போல் தன் இதழைப் பதித்தாள் அவன் இதழில்.... முத்தத்தின் சில நிமிடமும் சில யுகங்…
-
- 0 replies
- 603 views
-
-
இந்த கவிதையை வாசித்து விட்டு அவசரப்பட்டு பெண்ணியவாதிகள் என்னைத்திட்டவேண்டாம். நகைச்சுவையாக (dark comedy) நான் எடுக்க இருந்த ஒரு குறும்படத்திற்காக எழுதிய கவிதை. ஆனால் அப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சுயநலம் சுயநலம் சுயநலம் பெண்ணியத்தின் மறுபெயரே சுயநலம் கணவனுக்கு பணிவிடை செய்தால் கசக்கும் பிள்ளைகளை பராமரித்தால் புளிக்கும் மாமா மாமியைக் கண்டால் வயித்தைப்பிரட்டும் சுயநலம் மட்டுமே இனிக்கும் இனிக்கும் இனிக்கும்.
-
- 5 replies
- 1.2k views
-
-
இளமையை தொலைத்த தலைமுறை இளமையை புதைத்துவிட்டு விடுதலைகையில் ஏந்திஉலகை உலுப்பியவர்கள்எம் இளையேர். தொலைக்காட்சி பெட்டியிலே கிரிகட்டைப் பார்துவிட்டு மைதான்ம் போய்நின்று பந்தடிக்க இவனுக்குஎங்கே நேரம். தாயைப் பார்பானோ தங்கயை நினைப்பானோ நம் ஊரின் அலறல்களை உடல் பிளந்த உறவுகளை தொலைக்காட்சி பெட்டியிலேதினம் பார்தவன் துடுப்பாடப் போவானோ துயர் துடைக்கப் போவானோ அடிவாங்கி இடிவாங்கி தமிழன் சாகும் நாளில் ஆடு களம் ஒன்றில் மட்டும் ஆட்டமிளக்காமல்ஆடவேண்டும் அது அரசியல்க் களம் - பொன் பாலராஜன் -
-
- 1 reply
- 784 views
-
-
(அடியேனுக்கு கவி மணத்துக்கும் வராது, இரசித்தவைகளை கத்தரித்து காவி வரமட்டும் முடிகிறது.)
-
- 0 replies
- 601 views
-
-
-
- 33 replies
- 4.8k views
-
-
புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …
-
- 5 replies
- 1.7k views
-