கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
Vagina அது ஒன்றும் Diana தங்கையல்ல..! கருப்பைக் குகையின் சுரங்கப் பாதை..! மள மளவென மொழுகிவிட்ட கணக்காய் மழமழப்புத் தசைகள் ஆள இழையங்கள் இணையப் பெண்ணோடு பிறந்தது..! சுரங்கப் பாதையெங்கும்.. சிற்சில சுரப்பிகள். ஆணின் தூண்டலில் அவை துலங்க ஆறாய் பெருகும் உராய்வு நீக்கி.. ஆணின் நுழைவிற்காய் ஏங்கியபடி..! மாதம் தோறும் கடமை மறவாத சேவகம் கருப்பையில் இருந்து கழிவு வர கால்வாய் வழியாகி கடத்தி வருவதும் அதன் கடன்..! சேதி ஒன்று தெரியுமா.. ஆணின் விறைப்பில் அதற்கும் ஓர் விருப்பம் இறுக அணைத்து இன்பமுற்று வீச்சுக் கூட்டிட ஆட்லறிகள் வீசும் எறிகணைகள் முட்டையை தாக்கும்..! அங்கு இழப்பு என்று ஒன்றுமில்லை இன்பமே என்கின்றார் …
-
- 11 replies
- 7.2k views
-
-
மரணத்தை வென்ற மனித வித்துக்களின் மா வீரம் பாடும் நேரம்-இது மணி விளக்கேற்றும் நேரம். மனிதத்துவத்தின் மேலான பண்புடன் மற்றவருக்காய் உடம்பதனில் மணிக்கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி மறத் தமிழனாய் வாழ்ந்த காவியச்செம்மல்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும் -கண்டு வீறுடன் துடித்தெழுந்தவர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய் தம் வாழ்வைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…
-
- 0 replies
- 668 views
-
-
(16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.
-
- 13 replies
- 3.2k views
-
-
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
-
- 0 replies
- 795 views
-
-
யாரது ? இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட குற்றவாழிகளாய் தனித்தனி அடையாளங்களுடன்..... தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில் அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள் பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப் பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது.... மணியாய் ஒலித்த குரல் மறக்காத குரலுக்குரிய மொழி மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ இருமருங்கும் தடுத்திருக்க ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் . செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய் சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய் அறிமுகமானவள்...... மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு களங்களில் நின்று காவியச் செதுக்கலில் தன் கடமைகள் செய்தவள்..... இன்று..., எல்லாம் எல்லாருமாய் ஆட்தேடும் வரிசையில் அவளும்…
-
- 0 replies
- 964 views
-
-
அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது யுகங்களுக்கு அப்பால் பெருக்கெடுத்த காலம் எம்மை அடிமையாக்கியே இன்னும் நீண்டு செல்கின்றது ஈழப் பெருங் கடலையும் கால நதி சப்பித் துப்பியது போர்ப் பரணி பாடி அணிவகுத்த ஆயிரமாயிரம் தோழர் போன திசை அழித்த காலம் பெரும் பசி கொண்டு அலையுது நெஞ்சில் கனல் கக்க தோழர்களை காத்த மக்கள் மீதும் நெருப்பு துகள்களை கொட்டி பெரும்பசியை தீர்த்தலைகின்றது காலத்தின் திசைகளை எமக்கு எதிரியாக்கியது யார் கொட்டும் குளவிகளின் நுகத்தடியில் எம் தலைவிதியை செருகியது யார் எதிரியின் கையில் காலத்தை ஒப்படைத்தது யார் எமக்கான காலத்தை நாமே எழுத முயன்ற ரட்சகனையும் கால ராட்சதனா கொன்றழித்தான் அடிமை…
-
- 13 replies
- 1.8k views
-
-
வனக்கம் என்னுடன் வேளை பார்க்கும் நபர் இவ் வசனத்தை கவிதை நடையில் தமிழ் மொழியில் எழுதி தருமாறு கேட்டுகொண்டார். கவிதைகள் எழுதி எனக்கு பழக்கமில்லை. யாராவது இதை கவிதை முறையில் எழுதி தந்தால் சந்தோசம். அன்புடன் நன்றி All you need is love /////////////////////////////////////////////////////////// God grant me the serenity to take things added which I can not change. The courage to change things that I can change. and the wisdom to distinguish one from another. ///////////////////////////////////////////////////////////////// The art is in the eye of the viewer ///////////////////////////////////////////////////////// www.t…
-
- 0 replies
- 595 views
-
-
தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…
-
- 7 replies
- 14.8k views
-
-
என் பேரு விடலை நிற்கிறதோ படலை - பெண்களை கண்டா போடுவேன் கடலை அண்டு பார்த்தன் ஒரு பிகரை கொடுத்தேன் என் உயிரை எழுதினேன் ஒரு மடலை அவளோ அதத் தொடலை பார்த்திட்டான் அவளண்ணன் முனி அண்டு பிடிச்சுது எனக்கு சனி படிச்ாான் என் மடலை உருவினான் என் குடலை அனுப்பினான் சுடலை என் பேரு விடலை இருப்பது சுடலை போடுவேன் மோகினிகள கண்டா கடலை ( குசா மட்டும் தான் கவிதை எழுதுவாரா நாமளும் பிச்சு உதறுவமில்்ல )
-
- 13 replies
- 1.7k views
-
-
____________________ எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள். யாரும் குற்றங்களை இழைக்கவில்லை என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன. குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள் மிக மிக கொடிய இரவுகளை பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே அவர்கள் சொன்னார்கள். எல்லாருடைய கைகளிலும் குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன. சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும் சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும் சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும் எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும் தந்திரம் வாய்ந்திருக்கின்றன. குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில் அ…
-
- 1 reply
- 627 views
-
-
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…
-
- 11 replies
- 1.9k views
-
-
புன்னகை செல்வனே... மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. தானைத் தலைவனின் தம்பியே தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. போர்க்களத்துலும் நீ வீரன் புன்னகையிலும் நீ மன்னன் நீ சிரித்தால் பூமி சிரிக்கும் நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே தாயகத்தை விட்டு எங்கு சென்றாய் கார்த்திகை கரி நாள் வந்ததுவோ காலனே உனக்கு கண் இல்லையோ எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்? தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள் என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..
-
- 12 replies
- 1.5k views
-
-
நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர் மீண்டும் உருப்பெறாத கனவுகள் இரவின் நடு நிசியையும் தாண்டி வருகின்றன கைகள் முளைத்த பல கனவுகள் கழுத்தையும், குரல்வளையும் நெரித்து கொல்கின்றன என் கனவுகளுக்கு மொழிகள் இருப்பதில்லை நிறங்கள் இருப்பதில்லை சத்தம் இருப்பதில்லை மெளனம் நிறைந்த கனவில் நேற்றைய மனிதர்கள் வந்துபோயினர் அவர்களின் கேள்விகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் துயரங்கள் அவர்கள் சொல்லும் உண்மைகள் எதற்கும் ஒலியிருப்பதில்லை ஆயினும் உயிர் துளைத்து ஓராயிரம் யுகங்களைக் கடக்கும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர் வலிய கனவொன்று இரவு கடக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் அச்சமுறுகின்றேன் கண்கள் மேல் படர்ந்த கனவின் சுமையில் பகலின் பொ…
-
- 7 replies
- 1.1k views
-
-
கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை ......... மழைக்கால ஆரம்பம் ,மண் மீது தூறல்கள் ஒவ்வொரு இதயத்திலும் இனம் தெரியாத சோகங்கள். மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது ஈழத்து மக்களின்,வீர வேங்கை களின் நினைவுகளும் பிறந்த தினமும் ஒரு சேர மகிழ்வுற்றா ஒரு பொழுதும் மண்ண்ணில் விதைத்த மாவீரருக்காய் , என்இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி. எத்தனை எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ... கார்த்திகை தோறும் கல்லறைத் தீபங்கள். மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள் இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே சிந்திய குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே .... சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு மண…
-
- 0 replies
- 890 views
-
-
காத்திருக்கும் இதயம் கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன் நினைவுகளால் வேகுகின்றன இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும் ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன் நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய் என் உள்ளம் தகிக்கிறது அசைவற்ற வெறு வெளியில் நினைவற்ற ஜடம்போல - என் மனவறையின் சுவர்களில் வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன உன் நினைவு சுமந்த என் இதயம் கனத்துப்போன இரும்பாக மரத்துப்போய்க்கிடக்கின்றது என் பாலைவனத்தின் வெண்மணலில் நீர் வார்க்கும் ஊற்றாக நீ வரும் நாள்பார்த்து - உன் நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால் தவமியற்றும் பற்றற்ற கொக்காக உனக்காக உனக்கேயாக - இன்னும் உயிர் சுமக்கிறேன் - இந்த உணர்வற்ற உடலில்
-
- 1 reply
- 786 views
-
-
எதுவரை...... கவிதை - இளங்கவி குளிர் நிலவை கைகளில் ஏந்தி.... கோடி மின்மினியை வானத்தில் காட்டி.... அப்பா வந்தால் அடித்திடுவார் சாப்பிடடி என் செல்லம் என்பாள்.... சோறுடன் சேர்த்து தமிழையும் ஊட்டிடுவாள்..... இது ஈழத்து மண் கண்ட இனிய பொழுதுகள்..... இன்று கனவுகளில் மட்டும் நாம் காணும் நினைவுகள்..... வாழ்ந்த நிலங்களெல்லாம் எரி நிலமாய் மாறிவிட..... எமை வாழவைத்த வயல்களெல்லாம் கந்தகத்தில் புதைந்து விட... நம் பிணக்குவியல் மேலே புத்த விகாரைகள் எழுகிறது.... எம்மை அடைத்து வைத்த சிறைகள் பூட்டியே இருக்கிறது.... அன்று உணவூட்ட நட்சத்திரம் அழைத்தாள்..... அருகில் இருத்திட நிலவையும் அழைத்தாள்.... இன்று முகாமில் நட்ச…
-
- 14 replies
- 1.5k views
-
-
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…
-
- 0 replies
- 613 views
-
-
அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை தீபச்செல்வன் ____________________ அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது. நண்பனே, உரையாடலின் பின்னர் கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன். அங்கிருந்து அகற்றப்பட்டு தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன் முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன். நான் இனி என்ன செய்வது என்பதை உன்னால் கூற முடியுமா? கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. கடல் மகிழ்ச்சியடையவில்லை. அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி எதையோ பேசிக்கொண்டிருந்தது. விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
____________________ லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை நான் செய்ய வேண்டியிருக்கிறது? நாறி வதைத்துக்கொண்டிருக்கும் எல்லாச் சொற்களையும் உனக்காக அசைத்து கொட்டுகிறேன். மழைக் காலத்திற்கிடையில் நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை அமைப்பதற்காகவே இரவுகளில் கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொன்னேன் குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை. அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை. வெயில் கொட்டிக்கிடந்த நாளில் மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை. யாரையும் குறைகூறக்கூடாது? எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கி…
-
- 1 reply
- 641 views
-
-
சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…
-
- 13 replies
- 1.6k views
-
-
____________________ பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி தயாராகவே வைத்திருக்கிறேன். எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும் எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன. எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில் பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது. பார்க்க முடியாதபடி நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன். கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய் நிதிலேகாவையும் குழந்தையையும் மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள். தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம் அவள் எனக்கே தந்திருந்தாள். என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த அவளது குழந்தையை நான்…
-
- 0 replies
- 675 views
-
-
"இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை" என்ற ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்றில் இருந்த கவிதை.. இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள் விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்... சிறுகதையைப் படிக்க: http://www.uyirmei.com/2009/08/blog-post_3304.html
-
- 0 replies
- 627 views
-