கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கரும்புலி கவிஞர் தாமரை வார்த்தைகளற்ற உயிலும்... ஒரு வாழ்வின் செய்தியும்... அவன் புன்னகைத்துக்கொண்டே இருந்தான் நான்தான் அழுதேன் அவன் கண்களும் சிரித்தன காணச் சகிக்காமல் நான்தான் கண்களை மூடிக்கொண்டேன் ஒரு புன்னகையையும் ஒரு கண்ணீரையும் ஒருசேர விசிறிக்கொண்டு போன அன்றைய தென்றலில் உப்பும் குளிரும் சம அளவில் கலந்திருக்கும் அன்றைய நிலவு... அது ஏன் அப்படி ஒளிர்ந்தது அவன் முகத்தைப் போலவே...? உன் கைகளைத் தொடலாமா என்று கேட்டேன் 'இதோ' என்று நீட்டினான் என் நடுங்கிய கைகளால் தொட முயன்று முடியாமல் இழுத்துக்கொண்டேன் தொட்டிருக்கலாமோ... மோட்சம் பற்றிய என் விசாரணைகள் முடிவுக்கு வந்திருக்கும்! நிதானமாய் அவன் உண்டு முடித…
-
- 0 replies
- 1k views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! -------------------------------------------------------------------------------- என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விட…
-
- 0 replies
- 823 views
-
-
உலகத்தின் இயக்கத்தில் இதுவுமோர் நாடக மேடையாம் உயிர்களை வைத்தே காட்டுவாரிங்கு வேடிக்கையாம் பாரே! நீ வேடிக்கை பார்! விசித்திர ரசிகன் நீ! அவர்கள் சிரித்தால் நீ அழுவாய்! அவர்கள் அழுதால் நீ சிரிப்பாய்! உணர்வுகளின் கூடாரங்களுள் கருத்தரித்த சுதந்திரப் பிண்டங்கள் சருகுகள் போலிங்கு கருகிப்போகும் குருத்தான செண்டுகள்! இரவுகள் தோறும் மடியல்கள் இரத்தத்தில் தோய்ந்த விடியல்கள் மரண ஓலங்களின் மறைவில் மரணித்துப்போகும் மனிதநேயங்கள்! மாண்பு மிகு உலகே மறைந்திருந்தே வேடிக்கை பார்...! வீடு வாசல்கள் தோறும் இழவுகள் தினந்தோறும் காடுகள் மேடுகள் எங்கும் கல்லறைகளே நிறைந்து போகும்! வாழும் மண்ணில் வாழ வாழ்க்கை கேட்டு நின்றோர் பாழும் உலகில் இன்று பய…
-
- 3 replies
- 1.1k views
-
-
உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம் உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு. ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை எம்வாசல் நோக்கி அள்ளிவரு…
-
- 3 replies
- 1k views
-
-
இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு. "தீபன்" என்ற பெயர் ஓராயிரம் தீப்பொறிகளின் அடையாளம். தளபதியாய் தலைவனின் பெறுமதியாய் எல்லாமுமாய் எங்கள் வல்லமை நீ. பலங்கொண்டு வந்தவர்கள் எவரெனினும் பலம் திரட்டிப் படைநடத்திப் படைத்தவை விரல்களுக்குள் எண்ணி முடித்திட முடியாத வரலாறு நீ. களமாடி வெல்ல முடியாப் பலம் நீங்கள் என்பதறிந்தோர் நச்சுக்காற்றனுப்பிக் களக்கொலை புரிதலில் வெல்வதே வென்றியென்று முழக்கமிட்டுப் புலம்புகின்றார். வீரங்களே எங்கள் விடுதலையின் ஆழங்களே....! இது வீழ்ச்சியல்ல எழுச்சி. வண்ணப்படங்கள் காட்சியிட்ட உங்கள் முகம் இன்றும் எங்களுக்கு வரலாற்றுக் காட்சிகள் தான். புலிவீழ்ச்சி புலிவீழ்ச்சியென விட்டத்தை அ…
-
- 2 replies
- 924 views
-
-
மன்னித்துக் கொள்ளுங்கள் முத்துக்குமாரர்களே! எண்களில் தொலைந்தது இன முழக்கம்! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலை போயின அக்னி மரணங்கள்... உரத்து முழங்கியவன் சிறையிலிடப்பட்டான்! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான்! மேடைப்புலிகளின் வீரவாள் உறையிலிடப்பட்டது! தியாக தீபங்களே... உங்களைச் சற்றே மறந்திருந்து தேர்தல் முடிந்ததும் திரும்பிப் பார்ப்போம்! இன உணர்வுக்குக் குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன தான் செய்வது? மறதித் திலகங்களே.. வாருங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவோம்... இறையாண்மையைக் காப்போம்! போங்கடாங்...! ஆக்கம்: தாமிரா நன்றி:பெயர் தெரியாத தமிழக சஞ்சிகையொன்றிலிருந்து. எனக்குக் கிடைத்தது மின…
-
- 1 reply
- 1k views
-
-
என் காதலி தமிழீழச்சி...... இளங்கவி -தமிழீழ காதல் காணாத இறைவனிடம் வரம் கேட்கும் பக்தன் போல் நீ காட்டா பார்வைக்காய் காத்திருந்தேன் சிலவருடம் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்....... பெண்களின் உதடை கொவ்வைப்பழமாக வர்ணிப்பார் உன் உதட்டின் நிறமோ கரு நாவல் பழம் போல இருந்தும் முத்தமிட மனமேங்கிடும் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்...... பெண்ணின் மார்பழகு மாங்கனிக்கு உவமைகொள்ள உந்தன் மார்பழகோ தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள இருந்தாலும் ரசித்துக்கொள்வேன் காரணம் நீ தமிழீழச்சி என்பதால் நீ மறைந்திருக்கும் இதர அழகை வர்ணிக்க மனமேங்கிறது ஆனாலும் முடியவில்லை காரணம் நீ தமிழீழச்சி என்பதால் அதுதான் நம் தமிழீழத்தின் காதலின் சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழனென்று பெருமை கொள்வாய்.... சிறு கவிதை.... ஈழத்தின் மண்ணைப் பார் நீ வலிகளை உணர்ந்துகொள்வாய்....... மாவீரர் கல்லறையைப் பார் நீ தியாகங்களை புரிந்துகொள்வாய்..... இன்று தமிழரின் எழுச்சியை பார் நீ ஒற்றுமையை உணர்ந்து கொள்வாய்..... நம் தலைவனின் உறுதியை பார் நீ உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்வாய்...... வன்னியின் அடங்காத திமிரை பார் நீ தமிழனென்று பெருமைகொள்வாய்..... இளங்கவி
-
- 0 replies
- 537 views
-
-
-
சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... எப்போதும் போலவே அந்த நினைவுகள் வந்தெம் மனத்திரைஊசலாடுகின்றன... முகமில்லா உருவங்களுக்கும் நிசப்தமான வார்த்தைகளுக்கும் உரிமை கொண்டாடியபடி நீண்டு கொண்டிருக்கிறது எம் இரவுகள்... நாய்களின் குரைப்பொலிகள் ஊமத்தங் கூவைகளின் உறுமல் ஓசைகள் ஊரடங்கு இராத்திரிகளின் சுதந்திர ராகங்களாக... பதற்றமின்றி பட்டாசு வெடிக்க ஈர்க்குவானம் விட்டு இராத்திரிகள் களிக்க மாக்கோல…
-
- 0 replies
- 646 views
-
-
எங்கள் சாம்பல் மேட்டில். காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட எங்கள் மண்ணில், கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தம்மைத் திணித்தபடி இன்னும் எங்கள்மேல் தம் வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப் பாணங்கள் ஏவி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம் இல்லையேல் அரக்கர் நாமம் காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய் நீண்டு கொண்டிருந்தது. மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்ல ராமர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டிப் புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். அம்புகள் வீழ்ந்து மீண்ட…
-
- 3 replies
- 948 views
-
-
பச்சை இரத்தம் இயக்குநர் சேரன் அன்று பிஞ்சுக் குழந்தையின் பெருவிரல் நகக்கண்ணில் அழுக்கால் புண்ணு வந்து வெடீர் வெடீரென புடுங்க அழுது துடிச்சிருச்சே.. ராவெல்லாம் தூங்கலையே.. தாயார் காலையிலே திண்ணையிலே இருக்கையிலே ஸ்கூல் வாத்தியார் கடைக்கார செட்டியார் நாட்டாமை பெரியவுக காதுவளர்த்த கிழவின்னு எல்லாரும் கேட்டாக.. என்னடி வீட்டுல இம்புட்டு சத்தமுன்னு.. அம்புட்டு பேருக்கும் மனசு துடிச்சிருச்சாம் மறுகி நின்னாகலாம் விஷயம் தெரிஞ்சுக்க விடியிற வரைக்கும்.. இன்று இங்கே திருந்தாத நாடெல்லாம் திமிராலே ஒன்றுசேர்ந்து இரக்கமின்றி ரத்தக்குளியல்.. ரத்தம்னா ஆட்டு ரத்தம் மாட்டு ரத்தம் அப்பன் ரத்தம் ஆத்தா ரத்தம…
-
- 3 replies
- 1.9k views
-
-
கைகோர் தமிழா கைகோர்........! கைகோர் தமிழா கைகோர்........! இந்த பூமியில் வாழ கைகோர்...! தூய தமிழனாய் வாழ கைகோர்..! உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.! அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.! நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை......சின்னமாய் நாங்கள்! மூத்தவர் ஆண்டு சென்றுவிட... வந்தவர் நாம் மெனியாய் .. அடிமையாய் தொடர்கின்றோம் ......... எட்டு கோடியாய் உள்ளோம் ....! எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்...... பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்.... சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம........ தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து - சாகிறான் தமிழன் தினமும் ............. நிலாச் சோறு உண்ட முற…
-
- 2 replies
- 688 views
-
-
நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம் காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச் சாவின் வாயிலில்.... மூச்சிழுக்கவோ முழுமையாய் சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்.... மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய் மகிந்தவின் மந்திரமும் இந்திய மத்திய அரசின் தந்திரமும்.... குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள் எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு கண்களில் ஈரமின்றி எங்கள் காவியங்கள் முகம் மட்டும் கனவிலும் நினைவாக... பழைய புன்னகையும் பசுமையாய் நெஞ்சக்கூட்டில் தோழரும் தோழியரும் தொலைந்திடா நினைவோடு கண்ணயர முடியாமல் கனவிலும் அவர்களே கலையா நினைவுகளாய்..... பறிபோன தெருக்களெங்கும் அடுக்கடுக்காய் சடலங்கள் சாவுகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஓடி விளையாடு பாப்பா - தமிழை பாடி மகிழ்ந்தாடு பாப்பா கூடி களியாடு பாப்பா - விடிவை நாடி நடைபோடு பாப்பா தமிழனுக்கென உண்டு தாயகம் - நற் தமிழீழம் அதன்பெயர் பாப்பா தாய்க்கு நிகரான தாய்நாடு - அதைத் தலையாய்க் காத்திடு பாப்பா எதிரிப் படைவரும் பாப்பா - நீ ஏக்கம் கொள்ளலாகாது பாப்பா சீறும் விமானம்வரும் பாப்பா -நீ சிந்தை கலங்காதே பாப்பா கடவுள் மறந்துவிட்ட போதும் - உன் கடமையை மறவாதே பாப்பா மடமையை ஒழித்துவிடு பாப்பா -தேச உடமையைக் காத்துவிடு பாப்பா காணாதிருக்கும் தமிழரும் உண்டு -முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பா காட்டிக்கொடுக்கும் தமிழரும் உண்டு -அவரைக் காலால் மிதித்துவிடு பாப்பா மண்ணுக்காய் மாய்ந்த மாவீரர் - அவரை…
-
- 3 replies
- 1.4k views
-
-
எதிரியுடன் உனக்குத் தேனிலவு தமிழர்க்கு எல்லாம் தலைக்குனிவு நீயானாய் நாடாளும் அமைச்சனாய் தமிழர் காடெல்லாம் அகதிகளாய் ஆடுகிறாய் அழகியுடன் பெந்தோட்டையில் வாடுகிறோம் அழுகையுடன் இனவேட்டையில் உன்குடும்பம் பணத்துடன் வெளிநாட்டில் தமிழரெல்லாம் பிணத்துடன் சுடுகாட்டில் நீயின்று பகைவனுடன் படுக்கையில் தமிழினம் மரணத்தின் படுக்கையில் http://gkanthan.wordpress.com/index/eelam/bed/
-
- 1 reply
- 1.9k views
-
-
பல நாள் தவமிருந்து விரதங்கள் பல பிடித்து கிடைத்த வரம் இவள் கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில் மணம் வீசும் மலராய் தினமும் வளர்ந்து மங்கையானாள் வந்தான் ஒருவன் மலர் என்றான் தேன் என்றான் உலகில் நீயே அழகி என்றான் அன்பிற்கு நீயே அகராதி என்றான் மயங்கிப் போனாள் அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான் காதலை கண்ணால் கற்பித்தான் உறவை புது வழியில் ஒப்பித்தான் அவனின் காதல் மொழியில் அவள் சிறைப்பட்டுப் போனாள் தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள் பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான் காத்திருந்தாள் காதலன் வரவில்லை காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள் காதலனுக்காக அல்ல சூதுவாது எதுவும் அறியா அந்த பிஞ்சு உயிருக்காய் ........
-
- 26 replies
- 3.1k views
-
-
ஏன் மறுக்கிறாய் பெண்ணே!!!!! பட்டுப் புடவை அணிந்து பவுண் கணக்கில் நகை அணிந்து உண்மை முகம் மறைத்து மேக்கப் தனில் உனை அழித்து உன் அழகும் அந்தஷ்தும் காட்டி நிற்கவென உன் வீட்டு மௌசுக் காரில் உனை அழைத்து வந்து தெருவிலே அணிவகுத்து அன்ன நடை போடச் சொன்னால் அணி அணியாய் திரண்டு வர துடிதுடிக்கும் புலத்து பெண்டுகளே......... தாய் மண்ணில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகளிற்காய் பாலின்றி உணவின்றி தவிக்கும் பாலகருக்காய் அரக்கர்களால் தினம் தினம் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உன் போன்ற பெண்களுக்காய் ஒட்டிய மார்பை பசியால் துடிக்கும் தன் குழந்தையின் வாயில் திணித்து விட்டு மற்றய கையால் இறந்து போன தன்…
-
- 7 replies
- 1.4k views
-
-
என் விரக்தியின் அத்திவாரம் கொத்துக் கொத்தாய் வீழும் குண்டுகளுமல்ல கும்பல் கும்பலாய் சாகும் குடும்பங்களுமல்ல இன அழிப்புக்காய் நடக்கும் யுத்தமுமல்ல ஆறாய்ப் பெருகி ஓடும் இரத்தமுமல்ல வெறிச்சோடிக் கிடக்கும் வயல் வெளிகளுமல்ல நிரம்பி வழியும் புதை குழிகளுமல்ல சோற்றுக்காய் ஏங்கும் தமிழ் மழலைகளுமல்ல தொற்றுநோய் பரவும் அகதி முகாம்களுமல்ல போரை வாழ்த்தும் சில நாடுகளுமல்ல மௌனம் காக்கும் பிற நாடுகளுமல்ல இத்தனை நடந்தும் மனம் கலங்காமல் இன்னமும் பிறர் துயர் விளங்காமல் கண்மூடி இருக்கும் சிலதமிழரின் குணம்தான் என்அடிமன விரக்தியின் அடிப்படைக் காரணம் http://gkanthan.wordpress.com/
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறீ லங்கா தாயே நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ தாயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறை வான் மணி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை தாயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ தாயே நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ தாயே http://gkanthan.wordpress.com/index/anthem/
-
- 3 replies
- 1.6k views
-
-
-
-
அகர வரிசை அடுக்காக்கி அன்பே அமுதே அழகே என்று அடுக்கு மொழி பேசிலேன் அன்னைக்கு அடுத்ததாய் அகத்திலொரு அணியாய் கொண்டேன் அருகிருந்து நீ அன்பு வளர்க்க - இன்று அவதிப்படுகிறேன்..! அழகிய மலராய் அகிலம் வந்தாய் அகத்திலும் வந்தாய் அருகிருக்க மட்டும் அனுமதி மறுக்கிறாய் அன்பான உறவுக்கு அவசரம் ஏனோ அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...! அவலம் இவன் அன்பு தாழ் திறக்க அவதிப்படுவது அறியாயோ அருமலரே....! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்று அரிவரியில் அவசரமாய் உச்சரித்தது அர்த்தமாய் இன்று அதிர்கிறது மனத்திடலெங்கும்..! அது கேட்டு அரங்கேறத் துடிக்கிறது அன்பான குருவியதன் அருங்கவி..! அது ஒரு ஜீவகவி …
-
- 87 replies
- 12.4k views
-
-
நான் ஆசையோடு வளர்த்து வரும் என் செல்லச் சேவல் அதிகாலையில் குhவிட பறவைகளின் இதமான இசை என்னை மெய் மறக்க வைக்க கண்களை இதமாக கசக்கிய படி முற்ரத்தில் அம்மா விளக்கு மாற்றினால் குhட்டிய அழகான அடையாளத்தில் கால் பதித்து கிணற்றடி மட்டும் போய் அருகில் நிற்கும் வேப்ப மரத்து குச்சி பிடுங்கி பல் துலக்கி பின் ஐpல் என்ற குளிர் நீரில் முகம் கழுவி வேலி ஓரத்தில் கொத்துக் கொத்தாக புhத்துக் குலுங்கி நிற்கும் நந்தியா வட்டை புhப் பறித்து இன்றய நாள் நல்ல நாளாக இருக்க கடவுளை வணங்கி தொழுவத்தில் கட்டி நிற்கும் பசுவில் அப்பா கறந்த பாலில் அம்மா அன்போடு தந்த சுடு சுடு தேனீரை குடித்து விட்டு என் சைக்கிளை எடுத்து என் கிராமத்து தெரு வெல்லாம் சுதந்திரமாக நான் ஓடி மகிழும் …
-
- 2 replies
- 717 views
-
-
இலங்கையில் புதையல் .. தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ... ................................................................. காட்டுக்குள் கடுமையான போர் ... பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை அவைகள் தமிழ் பேசவில்லை ...
-
- 1 reply
- 799 views
-