கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" உன் வார்த்தைகள்.. என்னை உன் செல்லப் பிராணியாக்க.. நீ அழைத்த போதெல்லாம் அலுக்காமல் ஓடி வந்தேன்.. உன் காலடித் தடம் பார்த்தே பாதைகள் நடந்து வந்தேன்..! அப்பப்ப ஏதேதோ கோலம் கொண்டு.. நீ வார்த்தைகளால் எட்டி உதைகையில் உள்ளூர நொந்தாலும் வெளியூரா உன் காலடி சுற்றினேன்.. உன் பாதங்களே சரணெனக் கிடந்தேன்..! நான் வாங்கி வர நீ உண்ண.. வாய் பார்த்து எச்சில் வடித்தேன்.. அதில் அன்பின் உச்சம் நான் கண்டேன்..! இறுதியில்.. உன் கார் கதவடியில் தாவி ஏற நான் முயல்கையில் நீயோ.. அட நாயே Get out என்றாய்..! உன் காதல் காலநிலை போல என்றே அறியாமல்.... அது போட்ட அன்புப் பிச்சையில் உயிர் வாழ்ந்த …
-
- 23 replies
- 7.7k views
-
-
மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…
-
- 23 replies
- 3.1k views
-
-
அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே! இதயத்தில் இடி விழுந்தது! எம் தேசத்தின் குரல் ஒடிந்தது! விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக் கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது! ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே! எப்படித் தாங்குவோம் உன் இழப்பை! தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு! நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது நீர் இல்லாத குளம்! நோய் வந்த போதும்-புலிக்கு ஓய்வு மரணத்தில் தான்!-என்று சிரித்தபடியே நீ செப்பியதை! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான் நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை! பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்! பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ பேச வருகின்றாய் என்றால் எ…
-
- 23 replies
- 3.9k views
- 1 follower
-
-
வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு பந்தம் பிடித்தவன் …
-
- 23 replies
- 2.6k views
-
-
களத்தில் ஓர் காதல்..... கவிதை.... என் அன்புக் கண்ணனுக்கு உன் ஆசை மலர் எழுதும் மடலிது.... எனக்கான உந்தன் காதல் பரிசும் கிடைத்தது கார்த்திகை பூவும் கிடைத்தது..... கார்த்திகைப் பூவின் நிறங்களிலே எங்கள் ஈழத்தின் புலிக்கொடி பறக்கக் கண்டேன்..... எக்கணமும் அந்தப் பூ என் சொந்தம் ஆகலாமென்ற உன் உள்மனது சொல்லும் சேதியும் அறிந்தேன்.... நீ கொடுத்த; வெற்றுத் தோட்டா எண்ணிக்கையில் நீ வீழ்த்திய எதிரியின் என்ணிக்கையும் கண்டேன்... இதுதான்..! இந்த வீரத்தின் பாய்ச்சல்தானே எனை உன்பால் ஈர்ப்படைய வைத்தது காதலின் மரபு நீங்கி கார்திகைப் பூவில் காதலைச் சொன்னாய்.... எங்கள் காதல் மலர்ந்து சில நாளில் கதை…
-
- 23 replies
- 2.9k views
-
-
அம்மா தாய் அவள் தந்த உயிர் துடிப்புக்கள் சேயாய் தந்தவிட்ட சிறு சிணுங்கல்கள் தாய் மடி மீது கண் உறங்கிய பொழுதுகள் பாய் மீது படுத்த போதே தொலைந்ததே தாய் மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் தாய் மண் மீது கொண்ட பற்றுதலுக்கும் பாய் சொல்லி விட்டு பவித்திரமாய் ஹாய் ஆக புகுந்துவிட்ட வாழ்வின் அந்நியம் தேயாமல் மறையாமல் வளரும் நினைவுகள் தாய்மைக்கு தாயாக நானிங்கே பார்த்திட இயலாமல் இயங்குகின்ற பொழுதுகளில் தாயின் நோய் கண்டு மனம் நொந்து அம்மா என்றே வாய் விட்டு அழைக்கும் ஆன்மா இங்கே
-
- 23 replies
- 3.4k views
-
-
வாசித்ததில் பிடித்தது.... I Love You! I யப்படாதே கண்ணே! L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல O ருங்கிணைந்த இதயம் இருந்தும் V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே! E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி போல இடம்பெறும் நம்காதல் Y யாரக் கன்னியே O ருநாள் இந்த U கத்தின் சரித்திரத்தில் நம்காதல் இடம்பெறும்!
-
- 23 replies
- 3.1k views
-
-
இதயம் அனலில் வேகுதடி- எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி! செல்லமாய் என்னை கிள்ளு- உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு! சுட்டெரிக்கும் வெய்யில் கூட மழையென்றாச்செனக்கு! சுந்தரி நீ கள்ளி - பாரேன் உன் உதட்டு சிவப்பில் என் உயிர் ஒளிந்து கொண்டதடி! நெருப்பை நீர் அணைக்கும்! மழையை மண் அணைக்கும்! நான் கொண்ட காதலை நீ அணையேன்- மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்! ஆயிரம் பாஷை இங்காகலாம்! உந்தன் செல்ல அதட்டல் பேச்சே- தாய் மொழிடி எனக்கு! ஏய்டா என்பாய் குட்டிமா- என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே! ஏது வாழ்வு ? அதுவல்லவோ ? என் இருகரங்களில் -தலை சாய்த்து குழந்தை என்றாகி நீ தூங்கு! நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன் தந்தையென்றாகாமலே - உன்னை …
-
- 23 replies
- 3.7k views
-
-
பாடுக மனமே வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும் பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும் நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே. வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின் எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால் கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே. உறவுகளின் ஓலங்களை அமுக்கும் தோழ தோழியரின் போர்முரசுகளே என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள். அம்மா தமிழ் மண்ணெடுத்து இன்பப் பொழுதொன்றில் நீயும் எந்தை…
-
- 23 replies
- 5.2k views
-
-
நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…
-
- 23 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி உன் பார்வைகாய்........ கவிதை...... கிளிநொச்சி..! கிளிநொச்சி...! வாயில் சொல்லப்பட்ட தடவைகள் அதிகம் எதிரியின் வாயிலல்ல தமிழனே..! இன்று உன் வாயால்.... கிளிநொச்சி போய்விட்டதாம்...! கிளிநொச்சி போய் விட்டதாம்...! அழுதழுது இன்றுடன் ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...! அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால் மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....! எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..! உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..! தமிழீழமே உன் குறிக்கோள் கிளிநொச்சி அல்லவே...! கிளிநொச்சி எங்களின் தமிழீழத்தின் நகரம் தான் அழகான நகரந்தான் இன்று எதிரியின் வல்வளைப்பில் சிக்கிவிட்ட நகரந்தான்... முழுமையாய் செத…
-
- 23 replies
- 4.7k views
-
-
திருமலை தந்த சீலனே திரும்பி பார்க்க மறந்தனர் புல தமிழன் புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ உன் முதல் இலக்கு சிங்க கொடி உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை தந்தையும் தனயனும் நெஞ்சில் சுமந்தனர் அக்கொடியினை புலத்தில் சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில் விளையாட்டு வேறு அரசியல் வேறு விளக்கம் கொடுத்தனர் கனவான்கள் விளையாட்டு பருவத்தையே துறந்தாய் விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர் படைத்தான் தலைவன் உன் பெயரில் படையணி உன் உறவுகள் தொடர்ந்த்னர் உன் பணியினை தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி காவி விமானங்கள்,நிலையங்கள் காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள் விளக்கம் கொடுக்கின்றனர் நடுநி…
-
- 23 replies
- 3.6k views
-
-
அது ஒரு நிலம்... விடுதலைக் கனிதனைச் சுவைக்க உயிர்தனைக் கருவியாக்கி உடல்தனை வித்தாக்கி வலிதனை தனதாக்கி... தசாப்தங்கள் மூன்று குருதி பாய்ச்சி செய்த விளைச்சல்தனை அறுவடை செய்யக் காத்திருந்த நேரம்...... முதுகு கூனியதுகளும் முள்ளந்தண்டு விலகியதுகளும் சகுனிகளும் சோனியாக்களும் தம் பழி தீர்க்க உயிர்ப் பலி தனை ஒரு இனம் மீதளிக்க.. விடியற் சூரியனின் திசையில் அன்றி நிலமே சிவப்பானது தமிழர் குருதி தோய்ந்து..! கற்புக்கு அரசி கண்ணகியும் சிலையாகி மெளனமாக.. சேலை வழங்கி மங்கை தன் மானம் காத்த கண்ணனும் கண் மூட சிங்கள ஓநாய்களின் துகில் உரிதல் இச்சைப் பசிக்கு அனுதினம் ஆளாகின்றார் தமிழ்ப் பெண்டிர்..! வீரத் தமிழன்…
-
- 23 replies
- 3.3k views
-
-
அத்தை மகளோ... அம்மான் மகளோ.... எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ....... நானறியேன்.....! சிந்தைக்குள் உன் நினைவிருக்கு சிதையாதே என் கனவிற்கு - என கதைகதையாய் பல சொல்லி உன் காலடியில் போட்டவளே..... மடியோடு எனைச் சாய்த்து தலைகோதி தாலாட்டி மனதோடு ஒன்றி போனவளே.... நான் கேட்டா உன் மடி தந்தாய்.... நீதானே என் பதியென்றாய் நீயாக நெருங்கிவந்து - எனை தீயாக்கி போகாதே... அணைத்து முத்தமிட்ட உன் இதழில் பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான் தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று உணர்வுகள் தரும் உறவை விட உன் உறவுகள் சொல்லும் உரைகளோ சரி உனக்கு....? மனசுகள் பேசும் வாழ்வை விட உன் மாமன் மகன் மதனா பெரிது உனக்கு.....? காய்வெட்ட நி…
-
- 23 replies
- 4.3k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் (NYjumper) லண்டன் ஸ்ரைலில் (style) அரைப் பென்ரர் (pender) தெரிய டெலிம் (denim) போட்டு.. பி.எஸ் 3 (ps3) வாங்க பிளாசா (plaza) போனேன்..! அங்கே.. பிற்சா கட் (pizza hut) பிற்சாவோடு (pizza) ஸ்ரைலா நிற்கையில் லப் ரொப் (laptop) அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் (3D vision) உன்னைக் காண ஐ.ஆர் (IR) கொண்டு ஸ்கான் (scan) செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல திறில்லாய் (thrill) இருந்தாய்..! உடனே.. புளூருத் (bluetooth) சிக்னலாய் என்னைத் தந்தேன் பதிலுக்கு.. மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera) நீ என்னைப் பார்த்தாய். அதுதான் சாட்டென்று.. ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி…
-
- 23 replies
- 3.5k views
-
-
எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்? இன்னும் நீ எழவில்லை. சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை. கன்னங்கள் சிவக்கவும், காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும், நீண்ட மயக்கத்திலும், உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும் கட்டுண்டே கிடக்கிறாய். நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து தேவிட்டாத மொழியில் பேசியபோது காதினிக்கக் கேட்டாய், கண் விரித்து இரசித்தாய். இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள். இன்றும் பார்த்தாய் பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால் உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது. யார் அவள்? உன் தாய் உன் சேய் உன் தோழி உன் மண்ணின் மானம் காத்தவள். …
-
- 23 replies
- 3k views
-
-
நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்காகவே வாழும் வரை!
-
- 23 replies
- 7k views
-
-
கவிதை துளிகள் சிகரட் மனிதா என்னை தானே தீயிட்டாய் பின்பு உனக்கு ஏன் மரணம்... கசிப்பு காசு கொடுத்து என்னை வாங்குங்கள் போனஸ் ஆக உங்களுக்கு மரணம் அளிக்கப்படும் ஜாதி இரத்தம் இன்றி உயிரை எடுக்கும் இருபதாம் நூற்றாண்டு காட்டேறி... காதல் வென்றவனுக்கு வேடிக்கை தோற்றவனுக்கு வாழ்க்கை பிரியம் பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக பிரிந்திருக்கும் தொலை தூரத்தில் எப்படி??? எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் தெரியாத எமக்குள் தேனாக ஓர் உறவு எப்படி வந்தது......?
-
- 23 replies
- 5.1k views
-
-
வாழ்வு சூறையாடப்பட்ட தேசத்தில் இருந்து வந்த சுடலைக் குருவி எனக்கு கதை சொல்லிற்று தம் நிலங்களில் ஊழித்தாண்டவம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆயினவாம் மேய்ப்பனும் அவனது ஆடுகளும் அறுக்கப்பட்ட நிலத்தில் அறுக்கப்படா உயிர்களின் கேவல்கள் இன்னும் அடங்கவில்லையாம் பின்னிரவில் கதவுகள் தோறும் கடக்கும் இராணுவ சிப்பாயின் சப்பாத்துகளில் ஒவ்வொரு முறையும் மரணம் வந்து குந்தி இருந்து கணக்கெடுத்து போகுமாம் ஊரெல்லாம் அடங்கிய பின் உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து உழுதப்பட்ட உடலங்களின் பெருமூச்சு பெரும் காற்றாய் வீசுமாம் தம் ஆத்துமா இளைப்பாற ஒரு சிறு விளக்குத்தானும் இல்லையென அழுது அரற்றுமாம் மம்மல் அப்பிய பொழுதொன்றில் மாட்டு வண…
-
- 23 replies
- 4.6k views
-
-
செவ்விளநீர் மர நிழலில் மண்ணழைந்து- செம்பருத்தி பூ இதழ்பிரித்து பொட்டு வைத்து மெல்லிய காற்றில் அணிஞ்சில் பழ கோது கொண்டு விசில் ஊதி.......... ஐஸ் பழ வான் பின்னால் ஓடி அடித்து பிடித்து சில்லறை கொடுத்து நாவில் பனியுருக நாவால் உதட்டை துடைத்து துடைத்து சுவைத்தோமே வருமா வருமா? மீண்டும்-அந் நாட்கள் ? சுகம் தருமா தருமா? பாட நேரம் வெளியோடி காளிகோயில் மாமரம் மீதேறி பறித்து வந்த மாம்பிஞ்சை ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே அக்காலம் வருமா வருமா? சுகம் தருமா தருமா? கள்ளன் பொலிஸ் விளையாடி கள்ளனுக்கு பொலிஸ் "ஊண்டி போட " அவன் அழுதுகொண்டு வீட்டை -ஓட அப்பா கிட்ட உதை வாங்கினோமே வருமா வருமா அந்நாள்? சுகம் தருமா தருமா? …
-
- 23 replies
- 3.3k views
-
-
அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் எவர்க்கும் பணியா வன்னி பிள்ளைகளைப் பறிகொடுத்து விம்மி அழுகிறது. எதிரிகள் அறிக எங்கள் யானைக் காடு சிந்துவது கண்ணீர் அல்ல மதநீர். விழு ஞாயிறாய் பண்டார வன்னியனும் தோழர்களும் கற்சிலை மடுவில் சிந்திய குருதி செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில் எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை புதைத்து வருகின்றோம். புலருகிற ஈழத்தின் போர்ப்பரணி பாடுதற்க்கு. எங்கள் மூன்று அம்மன்களும் பதினெட்டுக் காதவராயன்களும் முனியப்பர்களும் எங்கே ? அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய் வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது. போராளிகளுக்காக தேன் வாசனையை வாகை மலர் அரும்புகளில் பொதிந்து காத்த…
-
- 22 replies
- 4.9k views
-
-
-
- 22 replies
- 3.8k views
-
-
அல்லி மலரோடு நான் தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி விளையாட்டிலே…
-
- 22 replies
- 3.2k views
-
-
மௌனக்காதல்...... ஒத்தையடிப் பாதையில ஒதுங்கிநான் நடக்கையில ஓரக்கண்ணாலே என் உசிர்குடிச்சுப் போனவளே அப்போ போனஉசிர் அப்புறமா திரும்பலையே இப்போ தனிச்சுஎன் உடல்மட்டும் நிக்கிறதே சின்னச் சிரிப்பாலே சிதறவிட்ட புன்னகையால் கன்னக் குழியோரம் கவுத்துஎனைப் போட்டவளே கன்னங் கருங்கூந்தல் காற்றிலாடும் ரட்டைஜடை கண்ணில் இளசுகளை கட்டிவைக்கும் பேரழகு என்னை ஒருசிரிப்பில் எங்கோ தொலைச்சுப்புட்டேன் இன்னும் தேடுகிறேன் இருக்குமிடம் நீயறிவாய் கரும்புப் பார்வையொன்றை காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய் கலைஞ்ச எம்மனசு இப்போ காற்றிலாடும் இலவம்பஞ்சு *** ஊரும் ஒறங்கிருச்சு ஊர்க்குருவி தூங்கிருச்சு பச்சைப் பாய்விரிச்சு பயிர்கூடத் தூங…
-
- 22 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்.. நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!
-
- 22 replies
- 4.2k views
-