கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முந்தை வினை முழுதும் மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன் ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா முடிவுகள் அற்றதாய் வாழ்வு நீண்டுகொண்டே செல்கின்றது பிறவிப் பயன் அறிந்திடா பித்தம் தலைக்கேறிய மானிடராய் பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு படிந்தும் படியாமல் எப்பொழுதும் பயத்துடனே நகர்கின்றது பூனையில் காலின் எலியாய் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில் அகலமாகிக் கொண்டே செல்கின்றது ஆழ்மனதில் அசைக்கமுடியாது வேர்விட்ட நம்பிக்கைகள் இறுகப் பற்றியிருக்கும் இளையின் இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில் இல்லாமல் போய்விடுவதற்கான எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம் ஆழ்கடலில் மோ…
-
- 2 replies
- 727 views
-
-
துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்.. 2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கால அரக்கனின் நினைவுச் சின்னங்கள்.. துகிலுரியப்பட்ட வீடுகள் கட்டடங்கள் எச்சங்களாய்...!! களி மண் சகதியால் குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..! சேவைக்கால மூப்பு காரணமாக ஓய்வு வழங்கப்பட்ட பெரிய நீர்த்தாங்கி மல்லாக்காய் படுத்து மீளாத்துயில் கொள்கிறது..! எல்லையற்ற காணிகள்.. பிடிப்பற்ற வாழ்க்கை.. துளிகளாக சிலர் கண்களில்..! தூக்கத்தை கெடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது போல் யாழ்-கொழும்பு …
-
- 2 replies
- 656 views
-
-
நீ எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க.... எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என் காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன் நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.6k views
-
-
திரும்பக்கிடைக்குமா? சிறு வயது ஞாபகங்களும் எம் மண் வாசனையும்....... மழையின் சத்தம் தவளையின் கத்தல் சில்வண்டின் ஓசை மின்மினியின் வெளிச்சம் ஆலயமணியின் ஓசை ஆந்தையின் அலறல் மாலையில் வானத்தில் மாலை போல் பறக்கும் வௌவால்கள், அவை கொரித்துப் போட்ட கொட்டங்காய்கள் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் பறந்து செல்லும் பச்சைக் கிளிகள், அவை கொத்திப் போட்ட கொய்யாப் பழங்கள் குயிலின் கூவல் மயிலின் அகவல் மல்லிகையின் நறுமணம் பூக்களின் சுகந்தம் பூரணச் சந்திரன் பௌர்ணமி வெளிச்சம் இவை இத்தனைக்கும் ஏங்குது மனசு திரும்பக் கிடைக்குமா??????
-
- 2 replies
- 899 views
-
-
"அப்பா கவனமா போய் வாங்கோ " பிள்ளை எல்லாம் எடுத்து வைச்சியே ? "ஓமப்பா " ஈச்சம் பத்தை தாண்டி சைக்கிள் உருண்டது. வடலியின் நடுவே நாப்பது மரம். தடம் காலில் போட்டேன் அவள் சலங்கையும் மெட்டியும் கேட்டிருந்தாள். விறு விறுவென்று ஏறினேன். பெண்பூ தேடிஅறுத்தேன். அவள் தாலிக்கு வீட்டில் தவம் இருந்தாள். பாளையில் சத்தகத்தால் சீவினேன் அவள் இப்போ தலை சீவிக் கொண்டிருப்பாள். வயிற்றில் சுண்ணாம்பு பூசியிருந்த புது முட்டியை பத்திரமாக கட்டினேன். பழைய முட்டியில் பனையின் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளும் வீட்டில் அழுது கொண்டிருப்பாள். இடுப்பில் தொங்கிய முட்டியில் ஒவ்வொன்றாய் சேகரித்து இறங்கினேன். தவறணையில் கொடுத்து காசு வாங்கி திரும்புகையில். கள்ளுக்குடித்த கூட…
-
- 2 replies
- 718 views
-
-
நிறுவைக்கோளாறு. -------------------------------------------------- தராசின் ஒரு பக்கத்தில் என் உறுதிப்பாடுகளை வைத்தேன் மறுபக்கத்தில் என் சந்தேகங்களை அவிழ்த்துக் கொட்டினேன் சந்தேகப் பக்கம் தாழ்ந்து நின்றது பின் உறுதிப்பாடுகளுடன் சிறிது விவாதங்களை அடுக்கினேன் அப்பாடா அதன்பின் தாழ்ந்து நின்றது உறுதிப்பாட்டின் பக்கம் உறுதிப்பாடுகளால் சந்தேகங்களை அளந்தேனா ? அல்லது சந்தேகங்களால் உறுதிப்பாடுகளை அளந்தேனா ? நிறுவைப் படிகள் எவை? நிறுக்கப்படுபவை எவை ? மீண்டும் மேலெழுந்தது உறுதிப்பாடுகளின் பக்கம் இவ்வாறாக இவ்வாறாக தமக்குள் ஏதோ நானறியா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டவைபோல் எழுவதும் தாழ்வதுமாய் என்னை ஏளனம் செய்தவாறே தமத…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிலவே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல மலரே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல பெண்ணே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல என் சுவாச மூச்சே நான் நேசிப்பது உன்னை கூட அல்ல எல்லாவற்றுக்கும் மேலான என் அன்னையை தான்...
-
- 2 replies
- 828 views
-
-
மலர்போல் வந்து ....முள்ளாய் போன காதலும் உண்டு....!!!முள்போல் வந்து ....மலராய் மலர்ந்த ...காதலும் உண்டு....!!!காதலை காதலால் ...காதல் செய்தால் ...முள்ளும் ஒருநாள் ...மலராகும் ....!!!^முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
இரணைமடுத்தாயே ஏனம்மா? ------------------------------------------------- ஏனம்மா தாயே நீரோடு ஏனின்று நிலம் பிரிந்து நிற்கிறது யாரோடு யாருக்குப் புரிதலற்ற புதிதான புயலொன்றை உருவாக்கி யாழென்றும் வன்னியென்றும் ஏனையா கதைக்கின்றீர் போதாதா பெற்ற வலி தீராத துயரமுடன் மாறாத எங்கள் நிலை மாற்றிடத்தான் வேண்டாமோ! தேசியமாய் ஒன்றிணைந்து தாயகமாய் வாழ்ந்தோரை நீர்கொண்டு பிரிக்கின்ற நிலைமைதனை உணராமல் வாதங்கள் புரிந்திங்கு வளர்க்கின்றார் வேற்றுமையை யாரையா அது யாரையா! தமிழினத்தின் குருதியாற்றில் குளிர்காய நினைப்போரை சரியாக இனங்கண்டு எம் சந்ததிகள் தழைத்தோங்கச் சிந்திக்க வேண்டமோ! மோடையன் என்று சொல்லி விண்ணனர்கள் அடிபட்டு பலகூறாய் நின்பதொன்றே சிங்களத்தின் பெருவெற்றி சிரிப்பினிலே தெரிகிறது வேண்டா…
-
- 2 replies
- 695 views
-
-
நாங்கள் நிறைய பேசுகிறோம்! ஆனாலும்........ வரிகளால் - வரிசை வரிசையாய்- யுத்தம்! நாலு மூலையிலும் தீ மூண்டாச்சு........ நடுவிலிருந்து கொண்டு .... நடு நிலமை பேசுகிறோம்! எலும்புகள் முறியும்போது ..... ஒலிவம் இலைகளை பற்றி புராணமா? போர் வெறி எதுவும் இல்லை.....!! உங்கள் சீரிய சிந்தனைகள்....... சிதறும் இரத்ததுளிகளை,,,, நிறுத்த முடியுமானால்..... தங்கத்தாம்பாளத்தில் நீங்கள் சமாதானத்தை வைத்து தர முடியும் என்றானால்.................. நம்புவோம் - உங்கள் வீரம் நாவில் மட்டும் இருந்ததில்லை!
-
- 2 replies
- 975 views
-
-
தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும் யவனிகா ஸ்ரீராம் சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்புக்கொரு அடைக்கலமாய் அண்ணான்னு அழைத்திடும் மழலை மொழியாள் செந்தமிழாள் அஞ்சரன் அவன் தங்கை. வெந்தனள் போகினள் பூமகள் வெறுமையின் வெளிக்குள் அண்ணனை தள்ளி. ஆற்றுதற்கு வார்த்தைகள் இல்லை இவ்வுலகில்..! கேடும் தீதும் கொண்டு மனிதர் தாம் வருவதில்லை இவ்வையம்.. வந்த இடத்தில் கற்றுக்கொடுக்கிறார் அதை..! பாசத்தை நேசத்தை மனிதத்தை தொலைத்த மிருகங்களாய் சக மனிதர் தம் உணர்வுகள் சாகடிக்கும் நிலையில்.. தங்கமடா அவள் கை என்றே பற்றித் திரிந்த தங்கை ஒன்றை எப்படிக் காப்பான் இவ்வுலகில் ஓர் அன்பு அண்ணன்...?!
-
- 2 replies
- 937 views
-
-
முகாரி ராகங்கள் பாறைக்கு பச்சைப் பட்டுடுத்தி அழகு பார்க்கும் அலங்காரங்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டின் புதிய பரிநாமங்களின் புதிய பரிமாணங்கள் தேசத்திற்காய் தேகத்தையும் மறந்து தேயிலையிற்கை கறுக்கும் அவர்கள் பெருந்தோட்ட பயிர்களின் தலைமுறைகள் கொழுந்தெடுக்கவென குழந்தையையும் தொழுவத்திலிடும் மலிவான கூலிகள் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் முகவரிகளுக்காய் போராடும் ஆயுதம் ஏந்தா போராட்ட காரர்கள் இவர்கள் முயற்சி இல்லா முகாரி ராகங்கள்
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் ஆசையோடு வளர்த்து வரும் என் செல்லச் சேவல் அதிகாலையில் குhவிட பறவைகளின் இதமான இசை என்னை மெய் மறக்க வைக்க கண்களை இதமாக கசக்கிய படி முற்ரத்தில் அம்மா விளக்கு மாற்றினால் குhட்டிய அழகான அடையாளத்தில் கால் பதித்து கிணற்றடி மட்டும் போய் அருகில் நிற்கும் வேப்ப மரத்து குச்சி பிடுங்கி பல் துலக்கி பின் ஐpல் என்ற குளிர் நீரில் முகம் கழுவி வேலி ஓரத்தில் கொத்துக் கொத்தாக புhத்துக் குலுங்கி நிற்கும் நந்தியா வட்டை புhப் பறித்து இன்றய நாள் நல்ல நாளாக இருக்க கடவுளை வணங்கி தொழுவத்தில் கட்டி நிற்கும் பசுவில் அப்பா கறந்த பாலில் அம்மா அன்போடு தந்த சுடு சுடு தேனீரை குடித்து விட்டு என் சைக்கிளை எடுத்து என் கிராமத்து தெரு வெல்லாம் சுதந்திரமாக நான் ஓடி மகிழும் …
-
- 2 replies
- 716 views
-
-
நாங்கள் பயங்கரவாதிகளல்ல பாசமும் நேசமும் உள்ளவர்கள் நாங்கள் தீவிரவாதிகளல்ல தீரமுள்ள திராவிடர்கள் நாங்கள் நாடில்லா இனமல்ல இலங்கைத்தீவின் மூத்தகுடிகள் நாங்கள் இனத்துவேசம் உள்ளவர்களல்ல இனத்துவேசம் உள்ளவர்களால் இலிவாக நடத்தப்படுபவர்கள் நாங்கள் துஷ்டர்களல்ல துரத்தித் துரத்திக் கொல்லப்படுபவர்கள் நாங்கள் பேடிகளல்ல பெண்கள் மானம் காப்பவர்கள் நாங்கள் கொலைகாரர்களல்ல கடத்திக் கொலை செய்யப்படுபவர்கள் நாங்கள் சகோதரக்கொலை செய்பவர்களல்ல களை எடுப்பவர்கள் நாங்கள் பயந்து ஓடுபவர்களல்ல பதுங்கிப் பின் பாய்பவர்கள் நாங்கள் விடுதலைப்புலிகள்.
-
- 2 replies
- 1.5k views
-
-
"யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் …
-
- 2 replies
- 425 views
-
-
[size=1]எத்தனை தடவைகள் [/size][size=1] மயிரிழையில் உயிர்தப்பினேன் [/size][size=1] எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை [/size][size=1] கிளைமர் பாதைகளில் எமது பயணம் [/size][size=1] வாழும் ஒவ்வொரு நாட்களும் [/size][size=1] போனஸ் நாட்கள் - இருந்தும் [/size][size=1] மகிழ்ச்சிட்கு குறைவில்லை [/size][size=1] கடமைச்சுமையால் [/size][size=1] உடல் களைத்தாலும்[/size][size=1] உள்ளம் இளமையாய் இருந்தது [/size][size=1] இழந்தவரின் கனவையும் [/size][size=1] சுமந்து வாழ்கையில் [/size][size=1] எதையும் தாங்கிற்று மனம் [/size] [size=1] இன்று [/size][size=1] நடைப்பிணமாயிற்று வாழ்வு [/size][size=1] கவிதை வாழ்வு கந்தலாய்க்கிடக்கிறது [/size] [size=1] -நிரோன…
-
- 2 replies
- 476 views
-
-
தலையணையினடி- சர்ப்பம்! எலிகள்......... கீரிகளை பற்றி ....... கிண்டலாம்..! தமாசு! இனத்தோடு இனம் சேருமாம்(? ) எழுதி சென்றவனை ... இழுத்து வந்து குரல்வளை... நெரித்து கொன்றால்தானென்ன? காக்கைகூட தன்னினம் அழிந்தால் அழுமே....! ஈசல் கூட தன் இனத்தோடுதான் சேர்ந்து பறக்குமே! நடந்ததா....? இனமாம்- சேருமாம்............ வாய் கிழிய சொன்ன ஞானியே... வந்துபார்..ஈழ தமிழரிடை... நீ செத்தே போனாய்!! நடக்கிறது..... உன் வரிகளுக்கு வாய்க்கரிசி! சந்தோசமாய் மெல்லு!! உளறி தள்ளினாய்....... தருகிறார் பரிசு...... தாங்கி கொள்!!
-
- 2 replies
- 956 views
-
-
காலங்கள் கடந்தன தான் எனினும் கடந்து வந்த பாதைகளின் கால்த்தடங்களின் வடுக்கள் இன்னும் மனதில் அடையாளமாய் எத்தனையோ எண்ணங்கள் சுமந்து எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன் இறுமாப்புக்களும் கடந்து கடத்த முடியாத நாட்களுடன் கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும் கரை காணா மொட்டவிழ்தல்களுமாய் முகைவெடித்து மணம் பரப்பி முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய் எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு ஏகாந்தத்தின் எல்லைகளற்று எப்போதும் எதிர்வு கூறல்களோடாய் எப்படியோ கடந்து வந்த காலத்தின் கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள் கண்ணில் அப்பப்போ தெரிகின்றது காட்சிப் பிழைகளின்றி கனவுகளில் எதிர்க்க முடியா ஏக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்னுடனே எப்போதாகில…
-
- 2 replies
- 589 views
-
-
எதிர்கொள்ளமுடியாத நடுக்கமொன்றை சிலிர்ப்பால் கடத்தியது வாசலில் கூடுமுடைந்து அடைந்துகிடந்த தாய்ப்புறா. வீடும், நாளைய தன் குஞ்சுகளும் நினைவுகளில் நீண்டிருக்கும்... மரம் தேடி நிலைகொள்ளுமொரு கிளை பார்த்து சிறுசுள்ளி வளைத்து, துணைகூடி வீடமைத்து இயல்பான வாழ்வென்று இணைபுணர்ந்த நேற்றையை நினைத்திருக்கும். துயர் வரமுன் துணை வருமோ என்று தவித்திருக்கும் இறகுகோதி இயல்பாய் இருப்பதாய் நடிக்கலாம் என்றும் எண்ணமிட்டிருக்கும். எல்லாம் கடந்தும் அதன் நினைவுகளில், நான் வளரத்தொடங்கியிருப்பேன் ஒரு இரைதேடும் பூனையாக பாம்பாக குறைந்த பட்சம் ஒரு நாயாகக்கூட... காலத்தை மீறியொரு பெருங்கனவு அதன் விழிகளில் நிறைந்து வழியத்தொடங்கியது நான் மூழ்கத்தொடங்கினேன். நினைவு…
-
- 2 replies
- 687 views
-
-
இதயத்தில் காதல் .... தோன்றக்கூடாது ... இதயமாக காதல் .... தோன்ற வேண்டும் ....!!! புற அழகில் காதல் .... தோன்றக்கூடாது .... அக அழகில் காதல் .... தோன்ற வேண்டும் ....!!! காதலியை காதலுக்காக காதலிக்காதீர் .... காதலால் காதலியை காதலி ...!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 01
-
- 2 replies
- 925 views
-
-
நான் போட்ட உடுப்பு இடுப்பைத் தொடும் தலைமயிருடனும் அதில் , சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும் மிடியுடனும் புறொக்குடனும் இல்லாவிட்டால் , ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் வளைய வந்த எனது பெண்களில் , நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!! நான் அணிந்த உடைகள் நான் விரும்பி அணிந்த உடைகள் !!!! இந்த உடைகள் என்னைப் போன்ற பல பெண்களின் அடிமை வாழ்வை உடைத்தெறியும் ....... அதில் , எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும் எனது சொந்த மண்ணும் ஒருநாள் விடுதலை பெறும் ... அதுவரை , நித்திரை என் அகராதியில் இல்லை .... மைத்திரேயி 13 கார்த்திகை 2013
-
- 2 replies
- 711 views
-
-
என் ராஜியத்தின் இளவரசியானவளே.....! என் ஆளுகைக்குட்பட்ட அனைத்தையும் புன்சிரிப்பால் வளைத்தவளே....! மார்கழியில் மலர்ந்த செங்காந்தள் பூவே....! தேவதைகளை வெண்சாமரம் வீசப் பணித்த தேவதைகளின் தேவதையே....! எல்லாமுமாய் என் வாழ்வின் வசந்தமாய் திகழ்பவளே....! என் வானவில்லை வண்ணமிழக்கச் செய்துவிட்டுப் பறந்த வண்ணத்துப் பூச்சியே....! இழையோடிய சோகம் நிறைந்த வாழ்வுதனில் இமைப்பொழுதில் இன்பமூட்டிக் கொன்றவளே....! பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நடுவே வாழ்தலை மட்டும் விட்டுச் சென்றவளே....! இன்றுபோல் என்றும் என் மனதில் பூப்பாயாக.... # பாப்பா rip 06/01/11 - 21/01/11
-
- 2 replies
- 1.6k views
-
-
எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து …
-
- 2 replies
- 747 views
-
-
மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…
-
- 2 replies
- 859 views
-