கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…
-
- 6 replies
- 2k views
-
-
அம்மா தாய் அவள் தந்த உயிர் துடிப்புக்கள் சேயாய் தந்தவிட்ட சிறு சிணுங்கல்கள் தாய் மடி மீது கண் உறங்கிய பொழுதுகள் பாய் மீது படுத்த போதே தொலைந்ததே தாய் மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் தாய் மண் மீது கொண்ட பற்றுதலுக்கும் பாய் சொல்லி விட்டு பவித்திரமாய் ஹாய் ஆக புகுந்துவிட்ட வாழ்வின் அந்நியம் தேயாமல் மறையாமல் வளரும் நினைவுகள் தாய்மைக்கு தாயாக நானிங்கே பார்த்திட இயலாமல் இயங்குகின்ற பொழுதுகளில் தாயின் நோய் கண்டு மனம் நொந்து அம்மா என்றே வாய் விட்டு அழைக்கும் ஆன்மா இங்கே
-
- 23 replies
- 3.4k views
-
-
உனக்கு சந்தேகம் அதிகம்தான் இல்லையென்றால் எதற்காக உன்னோடு நட்சத்திரங்களையும் கூட்டிப் போகிறாய் * என் இதயக் கரும்பலகையில் உன் பெயரே நிலவு * உன் இதழைத் தொட்டுக் கொடுப்பதால்தான் கேட்டு வாங்குகிறாய் என் முத்தங்களை * முத்தக் கவிதைக்காய் என் காது மடலையும் விட்டு வைக்கவில்லை உன் இதழ்கள் * அம்மா எவ்வளவுதான் சுற்றிப் போட்டாலும் உன் கண்படும் இடத்தில் எப்போதும் நான் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
கண்மணி சுகமா.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... விதி வரைந்த இடைவெளி விடியல்தேடும் நினைவடி... நிலவில்லாத நீலவானம்.. அழகில்லையே... நீயில்லாமல் இங்கு ஏதும் சுகமில்லையே... என்னுயிரை அங்கு வைத்து உன்னுயிரை இங்கு வைத்து இறைவன் நடத்தும் கூத்து இளமை கருகும் காத்து.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... தொட்டுஇட்ட முதல்முத்தம்.. நெஞ்சை தொடும் இளரத்தம்.. உன் கடிதம் விழிநீரில் கரைகிறதே.. என்னுயிரை எண்ணி உயிர் கரைகிறதே.. ஆறுகடல் தாண்டி ஒன்று ஆசைகொண்ட ஜோடி இன்று காதல் என்னும் காடு மாட்டிப் படும் பாடு கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் …
-
- 20 replies
- 5k views
-
-
கடற்கரைச் சாலையோரம் அந்தி சாயும் மாலை நேரம் கடல் மகள் கலைந்த கோலம் கண்களில் காதல் ஜாலம் அலைகளின் ஆட்டம் எல்லாம் கரைகளை கரைத்து சீண்டும் கடலிடை நாரைக்கூட்டம் காத்திடும் இரைகள் தேட மணலிலே நண்டுக்குடைகள் கடலுடன் தூது பேசும் தவழ்ந்திடும் தென்றல் காற்று உடலதை வருடிச்செல்லும் கரைந்திடும் காக்கை உறைவிடம் நாடிச்செல்லும் இயல் இசைக்கவிதையாக இயற்கையைப் போற்றிப்பாடும்
-
- 11 replies
- 1.8k views
-
-
தலைப்பின்றி ஒரு கவிதை அவள் பெயர் * வார்த்தைகள் வற்றிவிட்டது கலந்து பேச வரச் சொல்லுங்கள் என்னை ஏமாற்றியவளை ஆணையிட்டான் கவிஞன் * காதலியின் பெயரை வைக்க சம்மதித்தாள் என்னால் தாயான மனசை புரிந்த மனைவி * தாரம் தாயானதில் புரிந்து கொண்டேன் ஏன் தாரத்துக்கு முன் தாய் என்பதை * இருந்த இடத்தில் இருந்து உலகம் சுற்றுகிறாள் என் கவிதையில் அவள் * கவிஞனின் கல்யாணவீட்டில் கவலைப்பட்டாள் கவிஞனாக்கியவள் * கவனமாக இருக்கிறான் காதலிக்கு கவிதை எழுதுபவன் ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது என்பதில் * காதலிக்கே மிஞ்சவில்லை எப்படித் தானம் செய்வேன் என் கவிதைகளை அன்னைக்கு சொன்னான் கவிமகன் …
-
- 10 replies
- 1.6k views
-
-
போலிக் காதல் மயக்கத்தில்_மது போதை வகுத்த ஒழுக்கத்தில் நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர் நிகழ்காலங்கள் இறந்து போகின்றன இரை தேடி வந்து இரையாகும்_விதி எண்ணி சிரித்திருக்கலாம் சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண் கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம் மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில் கண்ணீர் விழிந்தன் கனவில் நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல் நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை
-
- 31 replies
- 4.7k views
-
-
எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..
-
- 19 replies
- 3.8k views
-
-
அன்பே: ஏன் பிரிந்தாய்? நம் பிரிவை உயிர் மட்டும்தான் பிரிக்கும் என்றுதானே நானிருந்தேன். எப்படி பிரிந்தாய்? நீ இல்லாமல் வாழத்தெரியாத நான் நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன். சொல் கண்ணே சொல் நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய் வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில் நான் கல்லறையாய் வாழலாம். எங்கே நீ சொல் அன்பே சொல்.. உனக்கான என் காதல் மரத்தில் இருந்து தினமொரு கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது என் கண்ணீர் எனும் மழையாலும் உன் நினைவெனும் புயலாலும். வா அன்பே வா... நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்…
-
- 1 reply
- 887 views
-
-
-
திருமணவாழ்த்து, அரங்கேற்ற விழா வாழ்த்து எங்காவது தமிழில் வாழத்து மடலாக எடுக்க முடியுமா? யாழ் இணைய கவிஞர்களே தமிழில் பொதுவான திருமணவாழ்த்துப்பா எழுதி இணையுங்களேன் இணைப்பவர்களுக்கு நன்றி.
-
- 3 replies
- 7.2k views
-
-
இந்து நான் இந்தியா புனிதம் எனகென்றாய் கிறிஸ்தவன் நான் ஜெருசலம் புனிதம் எனகென்றாய் முஸ்லிம் நான் மக்கா புனிதம் எனகென்றாய் வடக்கு கிழக்கின் பூர்விக குடிமகன் என்பதற்காக என்ன ஆதாரம் காட்டினார் நீ புத்தன் ஆசிர்வதித்த சிறிலங்கா அவனது பூர்வீகம் உரிமை கூறுகிறான் சிங்கள பேரினவாதி- இப்படி சிறிலங்கா அவனுக்கு புனிதமாம்
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து ம…
-
- 0 replies
- 943 views
-
-
வணக்கம் நண்பர்களே! இக்கவிதைப் பூங்காவில் ஒரு புதிய அறிமுகம், 'வேங்கையன் பூங்கொடி" எனும் தொடர் காவியம். கவிதையா? உரை நடையா? பிரித்துப் பார்க்காமல் இரண்டுக்குள்ளும் பயணிக்கும் ஒரு கதைவடிவம். பல அங்கங்களைக் கொண்ட சில பாகங்களான இக்காவியம் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொரு அங்கமாக இத்தளத்தில் வெளியாகும். தொடர உள்ள இக்காவியத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இவ்விடத்தில் இணைக்கும் திரியில் பதியுங்கள். 'வேங்கையன் பூங்கொடி" எண்ணப்பதிவு விமர்சனப்பகுதி
-
- 26 replies
- 8.9k views
-
-
வணக்கம் நண்பர்களே! இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.
-
- 70 replies
- 11.5k views
-
-
ஆயிரம் கைகள் கூட்டி மறைத்திட வானம் மறைந்திடுமோ - இப் பாரில் நடந்திடுமோ - எங்கள் செந்தமிழ் மீதினில் ஏறி மிதிக்கநம் வீரம் குறைந்திடுமோ - எங்கள் மானம் மறைந்திடுமோ பொய்கள் விதைக்கிறார் புரளி கிளப்பிறார் ஒன்றும் பலிக்காது - அட பொய்கள் விதைத்துப்பின் நாளை விளைச்சலில் மெய்கள் முளைக்காது சூது என்றும் ஜெயிக்காது யாரும் அழுத்தலாம் கேடும் நினைக்கலாம் கண்ணீர் வடிக்கோம் யாம் - எவர் காலும் துடைக்கோம் யாம் இப்பாரில் தமிழினம் ஓங்கி வளர்ந்திட யாகம் வளர்ப்போம் யாம் - அதில் வாழ்வைக் கரைப்போம் யாம்
-
- 7 replies
- 1.7k views
-
-
கடலேறி பொருள்கொண்டு கரையேற சென்றாய்-புரியாத கரியாரால் கைதாகி நின்றாய்.... உடலினுள் நோய்வந்து வாட்டையில் கூட துவளாது அவையேறி நோன்பது இருந்தாய்... பகை வந்து தமிழ் உயிரை பலியது கொள்ள பார்த்தே தான் நின்றதே பாரத தேசம்.. சதியோடு விளையாடி சதியாணை புரிந்தார் அரியணை காத்திட அவரைதான் தடுத்தார்... எதிரென்ன வரிகினும் எழுந்தேதான் நடந்தார் ஆவிதான் துறக்கினும் அவைகாக்க துணிந்தார்... இவரது ஆற்றலை இதயமா மறக்கும்...?? தமிழீழ தேசமே தலையிலே தூக்கும்... அண்ணனே உனக்காக அணியாக திரள்வோம் தூங்காது உன்னரு தூணாகி நிற்போம்... கலங்காதே அண்ணனே கண்ணீர் துடை உண்ணாமல் நீ வேண்டாம் உடல்தேறி நீ வேண்டும்....
-
- 13 replies
- 4.2k views
-
-
கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள் கண்களில் ஏன்படவில்லை உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை எங்கள் இனமது ஏதிலியான எதுவும் அடைந்திட அருகதையற்ற செத்துப் போகவே பிறந்த இனமென்று செய்வத…
-
- 14 replies
- 2k views
-
-
நாளை நான் உயிரோடு இருப்பேனா ஈழத்தில் நண்பனின் இறந்தவிட்டில் இன்று நான் * அம்மா அங்கே அம்மாக்காக அகதியாய் இங்கே நான் * காணாமல் போனால் கண்டுபிடித்து தருவார்கள் பிணமாக * தினமும் இறப்பவர்களின் பட்டியலில் சேரதவர்கள் சுனாமியால் இறந்த ஈழத்தமிழர்கள் * வகுப்பறையில் மகள் படிக்காட்டியும் உயிரோடு திரும்ப வேண்டும் சாமியறையில் தாய் * நான் இறந்தால் கொள்ளிவைக்க வந்துவிடாதே நான் பெற்றதில் உன்னை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது * அம்மாவோடு ஆசையாய் பேச தொலைபேசி எடுத்தால் அம்மா கவலையாய் பேசுவதை கேக்கவே நேரம் முடிந்துடும் * என் தாயை நான் பார்த்தே இருபது வருசமாச்சு எப்படி சொல்ல…
-
- 4 replies
- 1.3k views
-
-
பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …
-
- 18 replies
- 2.9k views
-
-
காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு பாட்டில் கதைகளில் நீ பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே நாற்றில் பயிரெனவே நல்லறிவோடு நான் செழித்து விட்டேன். எத்தனை கற்பனைகள் அங்கே எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள் முத்தேன நெஞ்சில் வைத்தாய் என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய். ஒலிவடிவம் http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321 கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினீலே இலையற்ற தனி மரமாய் உன்னையே நினைத்திருந்தேன். என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று ஏங்கிடும் வீணையைப்போல் துயருறுதே நெஞ்சம். பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும் புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள் தேற்றுமுன் காதலில் பாரதியி…
-
- 17 replies
- 2.9k views
-
-
பேனாவோடு நான்... என்னவளே... என்ன யோசிக்கிறாய்.. உனக்காய் நான் எழுதுவதை இன்னும் என் பேனா நிறுத்தவில்லையென்றா..? ஆமாம்.. அதைத்தான் நானும் யோசிக்கிறேன் உனக்கு தெரியுமோ தெரியாது ஏன் என் கவிதைகளில் எழுத்து பிழைகள் அதிகமென்று ஏன் தெரியுமா... என் கவிதைகளை நான் வாசிப்பதில்லை வாசித்தால் ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன் என்பதை படித்துக் கவலைப்படுவேன் என்பதால்தான். பேனா எடுத்தவர் யாரும் பேனாவால் இறந்ததில்லை நான் மட்டும்தான் உனக்காய் எழுதி எழுதி இறந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகம் கவலைப்படுகிறது உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்று உண்மைதான் அதற்காக நான் அதிகம் வருத்தப்படுவதுண்டு ஆனால் அவர்களுக்கு எப்ப…
-
- 20 replies
- 3.1k views
-
-
தலைவன் வழியிலே.. தலைவன் வழியிலே.. புலிகள் பாய்ந்திடும் வேளை வந்ததே தோழா... தரணியாண்டிட தமிழைக் காத்திட நேரம் வந்ததே தோழா.. நான் சொல்வதெல்லாம் நடக்கும்.. ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்... வெற்றிச்சேதி வீடு தேடி வருதே.. கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா.. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமடா.. அம்மனை நகர்த்திவிட்டார்... அங்கு புத்தர்சிலை பூக்குதடா.. திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில் எதிரிக் கவசங்கள் உறுமுதடா குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில் முட்களின் சோலையடா..அதற்கு தமிழ்ப்பிணங்களே உரங்களடா.. ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால் ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்.. துடிப்பவர் தலைவரடா.. துண்டிப்பார் அரக்கரின்…
-
- 21 replies
- 3.3k views
-
-
ஆரிடம் முறையிடுவோம்? ஆரிடம் முறையிடுவோம்? எவரை நம்புவோம்? அவனியிலே எம்மை அணைத்திட யாருளர்? போரியல் வாழ்வினைப் பழக்கத்திற் கொண்டோம் புதியவை யல்லஇத் துன்பங்கள் எமக்கு சூரியத் தலைவனங்கு எதிர்வு கூறுகின்றான் சாற்றும் நூறாண்டு நூறாண்டு காலம் நேரிய பாதையிற் பதிலடி கொடுத்திட நேரம் வந்ததெனத் திடமுரைக் கின்றான் மனிதநேயப் பணியாளர் தாமங்கு செயலாற்ற மிக்கவே அச்சுறுத்தல் நிறையிழி நாடென மனிதவுரிமை அமைப்பொடு ஐ நா சபையினரும் மட்டிலாக் கண்டனம் மனதாரக் கூறுகிறார். நனிவுயர் எம்மக்கள் நாடோறும் மடிதல் நன்றாக அறிந்துமிவர் எதுவுமே செய்திலர் கனியமுத வார்த்தையிற் சிங்களர் அவரைக் கட்டுக்குள் வீழ்த்தித் தம்பக்கம் சாய்க்கின்றார் அறிக்கைகள் விடுகி…
-
- 2 replies
- 1.1k views
-
-