கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
[size=3] [/size] [size=3] பெண் ஒன்று கண்டேன்… மழையில் நனைந்தவொரு மான் மரத்தடியில் ஒதுங்கியதுபோல் மான்விழி மங்கையவள் மருண்டோடி மாமரத்தடியில் மறைந்து நின்றாள். கார்மேகம் அசைவது போல்- அவள் கருங்கூந்தல் ஆடியது. கண்வைத்தேன். காய் வேல்கள் பாய்ந்தவைபோல்- அவள் கரு விழிகள் என்மீது வேல்பட்டு வீழ்ந்த வேங்கைபோல் நான் ஆனேன் மீண்டும் வெருண்டசைந்து அப்; பக்கம் மெதுவாகப் பாதி விழிவைத்தேன். கோபங்கொண்டென்மீது கொதித்தெழுந்தாள். ஆடையெல்லாம் பாவை உடலழகில் ஒட்டியது அழகு மயில் நனைந்ததுபோல் அதில் நீர் கொட்டியது தோகைமயில் சிறகுவிரித்துபோல் உடல் அசைக்க துளித்துளியாய் நீர்மணிகள் என்மீது சிதறினவே. பனித்துளி பட்டுச் சிலிர்த்த மலர்போலே- நான்…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!
-
- 7 replies
- 891 views
-
-
பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…
-
- 3 replies
- 1.3k views
-
-
நெற்றிப் பொட்டை கழற்றி எறிஞ்சா விடுதலை கட்டுற சேலைய கழற்றி விட்டா விடுதலை நீண்ட கூந்தலை கத்தரிச்சா விடுதலை பியர் போத்தலை முழுசா இழுத்தா விடுதலை கட்டின மனிசனை கழற்றிவிட்டா விடுதலை கலியாணம் ஆகாமலே கருத்தரிச்சா விடுதலை கருவில உள்ளத்தை கலைச்சிட்டா விடுதலை கைகோர்த்து திரிஞ்சிட்டு கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை போய்பிரண்டு வைச்சிருந்து கறந்திட்டு விட்டா விடுதலை படிக்க என்று பள்ளிக்குப் போய் வம்பளந்தால் விடுதலை பஸ்ராண்டில கும்பலா லுக்குவிட்டு இழிச்சா விடுதலை ரேக் எவேயில சாப்பாடு வாங்க உழைக்க போனா விடுதலை அங்கங்க அங்கங்கள் தெரிய உடுப்புப் போட்டா விடுதலை பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடிச்சா விடுதலை காங் கூட சேர்ந்து கஞ்சா…
-
- 33 replies
- 8.3k views
-
-
பெண்ணே கண்ணே கனியே கனி அமுதே கட்டி அணைக்க"வா" கவ்விக் கொள்ள"வா" கருணை கொண்ட"வா" கண் காட்ட"வா"..! பாசைகள் பலவிதம் பரிமாறிட கற்பனை பொங்க கழிவிரக்கம் தொடங்க சிந்தை மகிழ சரசம் தவ்வ சரீரம் பிணைய சக்தி பீறிட பாய்ச்சல் நிகழ்ந்திட ஆடி அடங்கும் அகிலத் தொடையில் அடங்கிடும் அவன் இனவெறி..! கன்னி அவளும் கலவி கண்டு தேவை முடித்து சேவை தந்து அயர்ந்தாள்.. உருகி ஓடும் திரவங்கள் கலந்திட முந்தி ஓடும் ஒற்றை விந்தின் வெற்றியில் உயிர் ஒன்றை உருவாக்கும் இயற்கையின்.. இயந்திரமாய் முட்டை தந்து..!
-
- 42 replies
- 5k views
-
-
பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...
-
- 6 replies
- 1.8k views
-
-
கடலுக்கு அரசி கடற்காரிகைகளில் அவள் அழகு சுந்தரி..! கவிழ்ந்திடாத வரலாறு தந்து காலம் பல வாழ்ந்து காவியங்கள் படைக்க வந்தவள்..! அவள் தான் கொஸ்ரா கொன்கோடியா..! அன்றைய பொழுதும் நீலக் கடல் நடுவே.. அவள் பயணம் அமைதிப் பயணம்..! அரசியின் ஆட்சியில்.. ஆயிரம் ஆயிரம் பேராய் அரசவையில் அகம் மகிழ்ந்திருக்க இவள் வந்தாள்.. கண்ணிமை பொழுதில் அரசனைக் கவிழ்ந்தாள்.. அரசியும் கவிழ்ந்தாள்..! வரலாறு மாறிப் போனது.. கவிழ்த்திட முடியாது என்பதே பெண் என்பதன் முன் கவிழ்ந்து கிடந்தது…! உயிர்ப் பலிகளும் அங்கு..! பேயே கவிழும் போது கப்பல்…???! கப்பலே கவிழும் போது.. அர்ப ஆண்கள்..?! இது சதியா… விதியா..??! இயற்கையே உனக்கேனிந்தக் கொலைவெற…
-
- 2 replies
- 980 views
-
-
மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …
-
- 37 replies
- 5k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க http://vaseeharan.blogspot.com/ please click on here... பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள் அன்புடன் தமிழ்வானம் யாழ்கள உறவுகளுக்காக மட்டும்
-
- 25 replies
- 4.5k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் அளித்த கருத்துக்கள் விமர்சனங்களுக்கு எனது பதில் கருத்துக்கள். சுகன் உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்கவில்லை! யாழ்களத்தில் இருந்து இவ்வளவு உறவுகள் இந்தப்பாடலைக் கேட்டு இதற்கு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வழங்குவார்கள் என்று. அந்த வகையில் முதலில் மோகன் அண்ணாவிற்கு எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். யாழ்கள அனைத்து முகமறியா அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எங்கள் வளர்ச்சியில் யாழ்களமும் இணைய அணில்போல் பங்கெடுத்துக் கொள்வதையிட்டு நாங்கள் பெருமகிழ்வடைகிறோம். உங…
-
- 0 replies
- 671 views
-
-
பல்லவி பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே Girlfriend இல்லாத boysஇன் வாழ்க்கை என்றும் இனிக்காதே Tim Hortenபோகாத ஆண்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்காதே அட நம்பர் கொடுக்காமல் நீங்கள் போனால் Friendship வளராதே சரணம் 1 E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து disturbe disturbe செய்வோமே sms செய்து உங்களை எழுப்பி Dating Dating கேட்போமே பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா yahoo chat இலே searching செய்யாத handsome handsome boys நாங்கள் தானே Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத Good boys Good boys என்றும் நாங்கள் தானே கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம் …
-
- 8 replies
- 1.5k views
-
-
-
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்…
-
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
பெண்ணினத்தின் விடி வெள்ளி ( மாலதி) கன்னியவள் துப்பாக்கி கைய்யில் ஏந்தினாள்.... கரிகாலன் படையனில் வேங்கை ஆகினாள்... பெண்ணடிமை விலங்குடைத்து பெருமையாகினாள்.... அந்த பெண்களிற்க்கு விடி வெள்ளி இவளே ஆகினாள்... தாய் மாணம் காக்கயிவள் களமே எறினாள்... அந்த கரிய பகை அழித்தேயிவள் நிலத்தை மீட்டினாள்.... பெண்ணினத்தின் சுதந்திரத்தை இவளே மீட்டினாள்... புரட்சி பெண்ணாய் ஈழமதில் வழியை காட்டினாள்....!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.5k views
-
-
மகனின் பார்வையில் பெண்ணியம் தாய் சகோதரன் கண்களில் பெண்ணியம் சகோதரி காதலன் உணர்வில் பெண்ணியம் காதலி கணவன் கைகளில் பெண்ணியம் மனைவி கவிஞன் கற்பனையில் பெண்ணியம் மயிலாக ஆண்களுக்கும் பூமி பூமாதேவிப் பெண்ணாம்...... அதுதான் மிதிக்கின்றார்களா? ஆண்கள் பெண்மையை..... கங்கா யமுனா சரஸ்வதி நதிகளும் பெண்களாக..... அதனால்தான் முழ்கடிக்கின்றார்கள்? பெண்மையை... ஆண்கள் அரசியல்வாதிகள் கையில் பெண்ணியம்.... மேடைப் பேச்சளவில் வாக்குத்துண்டுகளாகப் பெண்ணியம் பெட்டிக்குள்...... தொ(ல்)லைக்காட்சியில் பெண்ணியம்..... கவர்ச்சி விளம்பரமாக.... தொடர் நாடகமாக விபச்சாரம்.... தொழில் நிலையங்களில் பெண்மை..... கவர்ச்சி பதுமைய…
-
- 6 replies
- 1.4k views
-
-
பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…
-
- 0 replies
- 342 views
-
-
பெண்ணியம் : பல கோணங்கள் ---------- பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 1) மிதவாதப் பெண்ணியம் இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது. 2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம் பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள…
-
- 2 replies
- 6.2k views
-
-
பெண்ணே உனக்கே உனக்காய் அடங்கி அடங்கி ஆண்டாண்டு காலமாய் அடுப்பங்கரையே உன் உலகமென்று முடங்கிக் கிடந்தது போதும். புதுமைகள் அறிந்து பழமைகள் களைந்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் சாதனை படைக்க - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா நதியென்றும் மலரென்றும் நிலவென்றும் அமுதென்றும் போகம் தரும் காதற் பொருளாய் கவிஞர் உன்னைக் கண்டது போதும் சரித்திரம் படைக்கும் புயலாய் அறியாமை களையும் தீயாய் அகிலம் உனைக்காண அடங்காத வேகத்துடன் - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா பின் தூங்கி முன்னெழுந்து தலை கோதி அடி வருடி அருகிருந்து தூங்க வைத்து தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் துணைவியாய் மட்டும் நீ வாழ்ந்தது போதும் அடக்கு முறைகளை உடைத்து எறிந்து…
-
- 13 replies
- 9.1k views
-
-
கல்பனா.. விண்வெளிக்கு போனாளாம் சில்பா... லண்டனில பரிசு வாங்கினாளாம் குஸ்பு.. தாலியை கேலி செய்தாளாம் "கற்பு என்றால் என்ன " துணிந்து கேட்டாளாம்..! இன்னொருத்தி இமயத்தில் கொடியை நட்டாளாம்.. இதெல்லாம் பெண் விடுதலையின் விளைவுகளாம்..! பெண் மேலாளர் ஆனாளாம் பெண் புத்தகம் தூக்கினாளாம் பெண் வாகனம் ஓட்டினாளாம் பெண் விமானம் செலுத்தினாளாம் பெண் வீட்டை என்ன நாட்டையே ஆள்கிறாளாம்..! வையகத்துள்.. பெண்ணில்லா துறைகள் இல்லை எனும் நிலையும் படைத்திட்டாளாம் இவை எல்லாம் சாதனைகளாம்..! பேதையரே எப்போ உம் நிஜக் கண் திறப்பீர்.. ஈழத்தில் சிங்கள இன வெறிக்கு தீனியாகும் தமிழச்சிகள் பெண்ணில்லையோ..???! அவள் ஆடை களைந்து மானம் விற்கும் சிங்…
-
- 17 replies
- 1.4k views
-
-
பெண்ணே நீ.. மலரல்ல வாட... மானல்ல இரையாக... கண்ணல்ல கரைய.. நிலவல்ல எட்ட வைக்க... தேனல்ல எறும்பு மொய்க்க.. வண்டல்ல ஏமாற..! பெண்ணே நீ மதுவல்ல மயங்க... தண்ணியல்ல அடிக்க.. மஞ்சமல்ல தூங்க.. தங்கமல்ல கிண்ட... புதையலல்ல தோண்ட... மாவல்ல பிசைய... "குவிட்" அல்ல போர்த்திக்க.. பொன்னல்ல பதுக்கி வைக்க தேசமல்ல கட்டிக் காக்க...! பெண்ணே நீ புயலல்ல வீச.. எரிமலையல்ல வெடிக்க.. பறவையல்ல பறக்க.. கூண்டுக் கிளியல்ல விடுவிக்க.. ஈழமல்ல சுதந்திரம் வாங்க..! பெண்ணே நீ சரக்கல்ல திருட... சக்கரையல்ல ருசிக்க.. பிகரல்ல மாட்ட... பாடமல்ல படிக்க.. முத்தல்ல மூழ்கித் தேட சிப்பியல்ல திறக்க..! …
-
- 27 replies
- 5.7k views
-
-
சமத்துவ உறவொப்பந்தம் ----------------------------------------------------------- வாசுதேவன். பெண்ணே, உன்னில் எத்தனை விழுக்காடு ஆணுண்டென்பதையும் என்னில் எத்தனை விழுக்காடு பெண்ணுன்டென்பதையும் அளவிடுவதற்கு இன்னமும் உயிரியற் கருவிகளேதும் கண்டுபிடிக்கப்படவில்லையென்
-
- 12 replies
- 2.5k views
-
-
தடமரித்த லாகா அலைஇ மகளிர் படமெடுத்துப் போட்ட அது தேடின் திரும்பா அலைநின் விழியிரண்டும் ஆடவள் கண்ணில் உளவே நுரைபால் இனிமை இலமே உளது நுரைக்கும் அவளின் நுரை இரைச்சல் அடங்கி அலைபுரளும் பெண்டிர் உரைச்சல் தவழ்ந்து வரின் முத்துக்கள் என்ப விலையில்லா நல்மணிகள் அத்துணையும் கேசத்தின் ஈறு அசையும் அதரத்தே தோற்குமே ஈர்ப்பில் இசையும் கடலின் அலை தொல்கவின் பேராழி நீலம்போல் எஞ்ஞான்றும் நல்கவின் பெண்டிர் சிறப்பு வற்றா கடலன்ன அன்புடையாள் வற்றினள்நீர் வற்றிய வற்றிலும் பற்று கடல்குடித்தால் தீராது தாகம் மகளிர் மடல்குடித்தால் தீர்ந்து விடும் அஞ்சுதல் துஞ்சுதல் விஞ்சுதல் எல்லாமே வஞ்சியர் பின்னும் உள
-
- 5 replies
- 2.2k views
-
-
[size=3]பெயரற்ற யாத்ரீகன் நூலிலுள்ள சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்[/size] [size=3]1[/size] இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன். இருந்தும், இதோ என்னிடம் வருகிறது மரணம், வெறும் எண்பத்தைந்து வயதே நிரம்பிய குழந்தையிடம். [size=3]0[/size] [size=4]ஹனபுஸா இக்கீய் ஆண். ஜப்பான். ? – 1843[/size] [size=3]2[/size] எதிலும் நம்பிக்கையின்றி சும்மா அமர்ந்திருக்கிறேன், என் சுவாசத்தைக் கவனித்தவாறு. முப்பது வருடங்களுக்கு பிறகும் அது வெளியில் போகவும் உள்ளே வரவுமாக இருக்கிறது [size=3]0[/size] [size=4]ஆல்பர்ட் கோல்ஹோ ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு[/size] [size=3]3[/size] எதிலும் முனைப்பின்றிச் சோ…
-
- 0 replies
- 6.9k views
-
-
பெயரிடப்படாதது இதோபார் நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும் இம்மரத்தின் பெயரை நானறியேன் இலைகளிலிருந்து வழிந்தோடும் மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா வசந்தகாலப் பசுமையைத் தாங்கும் மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும் பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன இலையசையும் திசைகொண்டு காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும் தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது இதோபார் பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்.. ----------------- கனவுகளில் காய்ந்த நிலத்தில் விதைகளைதேடுகிறேன் என் காதலை துளிர்ப்பதற்காய்.. மனவெளியெங்கும் இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல காய்ந்துகிடக்கிறது கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்.. ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்.. நாம்தான் கரைபிரித்துக்கட்டப்பட்ட துருவ நதிகளாக திசை பிரிந்து... எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத சோகத்தில் அழுதபடி கடந்துபோகிறது ஒவ்வொரு இரவும் நிலவு.. இப்போதெல்லாம் நாம்பேசிய வார்த்தைகளில் சிதறிக்கிடக்கின்றன அன்பைத்தொலைத்த கண்ணீர்ப்பூக்கள்... ஏன் மெளனம் உன் கரைகளில்..? உன் எண்ணங்களை வனையத்தெரியா வண்ணாத்திப்பூச்சி நீயோ..? இல…
-
- 14 replies
- 1.3k views
-