கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன் உன்னை கனவு காண்பதற்காகவில்லை நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக **** பட்டமரமாய் பாலைவனம் தன்னில் தனிமையில் தவித்திருந்த போது தென்றலாக என்னுள் புகுந்து என்ன சோலை வனமாக்கியவள் நீதான் **** அமாவாசைக் காலத்தில் நிலவிற்க்காக ஏங்குகிறது வானம் இரவு நேரத்தில் சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம் மழை நேர இரவில் நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள் அவற்றிற்கே தேடலிருக்கும் போது நான் உன்னை தேடக்கூடாதா............? கிறுக்கல்கள் தொடரும்............
-
- 43 replies
- 4.9k views
-
-
வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…
-
- 15 replies
- 2.3k views
-
-
கண்ணும் கண்ணும் பேசினும் கண்ணுக்குத் தெரியாதது... தொட்டுத் தொட்டு பேசினும் புலனுக்கு புலப்படாதது... சோடி போட்டு சுத்தித் திரியினும் சாட்சி சொல்லாதது... கட்டிப் பழகி கழற்றி விடினும் மெளனமாய் இருப்பது... புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது... மாற்றி மாற்றி பலது வந்து போயினும் குற்றம் காணாதது... இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும் கண்டுக்காதது... மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும் காட்டிக் கொடுக்காதது... ஓசிக் காரில, காசில பவனி வரினும் கெளரவமாய் நினைக்க வைப்பது... பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது... அப்பா அம்மா கண்டுபிடிக்க முடியாதது... நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்…
-
- 29 replies
- 3.9k views
-
-
"லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …
-
- 6 replies
- 1.4k views
-
-
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போரா…
-
- 4 replies
- 1.1k views
-
-
சஹாராவில் பூக்களா? பாலைவனத்தில் ... பா(ழ்) ல் பண்ணை ...? நிறுவ முடியுமா? முடிந்தாலும் ... பச்சை வயலை எரித்துவிட்டு,,,, பாலைவனத்தில்... பன்னீர் மழையா? வீணே போகுமே!! சூரியனுக்கு... கறுப்படிக்க நினைக்கிறானாம்.!. முடிந்தாலும்........(???) சுற்றி வர - இருட்டாகுமே ... கவலையில்லையா?! (யாருக்கோ)
-
- 3 replies
- 1.1k views
-
-
என்னைக் கோவப் படுத்தியதுக்காக உன் மேல் நீ கோவப்படுகிறாய் உன்னைக் கோவப் படுத்தியதுக்காக என் கோவத்தை வெறுக்கிறேன் * என்னால் உன் கோவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ஒரு விதத்தில் அதுவும் உதவி செய்கிறது எனக்கு ஆங்கிலம் புரியாததால் * உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன் உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க * உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா வார வாரம் என்கூட கோவம் போட்டு பேசாமல் விடுகிறாய் சில தினங்கள் * உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப் பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன் என் மேல் அடிக்க…
-
- 10 replies
- 1.6k views
-
-
« ம் அனைவரின் சொந்தம் கறுப்பு நாய் கறுப்பு நாய்க்கு அனைவரும் சொந்தம் அது சதா அலைகிறது. சர்க்கஸ் உலகம் கூடாரத்துள் மயிர்கூச்செறியும் சாகச வித்தைகள் காட்சிக் கேற்ப மாறும் பின்னணி இசை பசிதாகம் விற்பனையும் நடுவே இடையிடையே யாவற்றையும் நையாண்டி செய்கிற கோமாளிக் குள்ளர்கள் ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது அதன் முகம் கண்களில் தீக் கங்குகள் ஏதேன் தோட்டத்தில் பிறந்தவை அதனுடைய வார்த்தைகள் கருநாகங்கள் படமெடுத் தாடுகின்றன கழுத்திலிருந்து புதைத் தழுத்துகிறது அதனுள் கடைசிச் சொட்டு மிழந்து வெளிர்ந்து பொங்கி யதனைத்தையும் உறிஞ்ச பிய்த்து எறிந்த சதை கூரையிலிருந்து ஒழுகுகிறது …
-
- 2 replies
- 1.1k views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி - எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்…
-
- 10 replies
- 1.7k views
-
-
இறுதியாய் ஒரு யுத்தம்... இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்…
-
- 8 replies
- 1.4k views
-
-
மன்னிப்பு என்பது .. ஏரோது மன்னன் தேடிய இயேசுவே எங்கே போகின்றீர் ? பாரிலே வாழ்ந்தவர் பாவிகள் தானய்யா தேவனே ஏகி நின்றீர் ! நீரோடை போலே நீர் சொன்ன வேதங்கள் நீர்க் குமிழ் ஆனதுவோ ? வேரோடு மானிடர் வீழ்ந்திட்டார் .. பாவத்தில் வேதனை தானதுவோ ? அன்புடன் நேசித்த அப்போஸ்தலன் இராயப்பன் அறியேன் .. என்றுரைத்தான் முப்பது வெள்ளிக் காசுகள் வேண்டி யூதாசும் முத்தமிட்டான் அன்றாடம் உம் நிழலில் அலைந்த இச் சீடர்கள் வென்றார்களா விதியை ? இறைவா .. எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்மை புரிந்து கொண்டேன் எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
என்னுடைய வலைப்பதிவில் நான் போட்ட இந்த குரல்பதிவு எப்பிடி இருக்கென்று சொல்லுங்கள்...யாழில் audio எப்பிடி இணைப்பதென்று தெரியவில்லை அதனால் இங்கே சென்று கேளுங்கள். தத்தக்க பித்தக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
-
தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 7 replies
- 1.4k views
-
-
'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..'' எங்களின் மண்ணிலே ஏறியே வந்து உன் பிள்ளை அனுப்பியே ஊரதை அழித்தாய்... எம்மினம் அழிகையில் ஏனென்று கேட்கல இன்றேன் தாயே வெம்பியே அழுகிறாய்...?? நாளுமே..நாளுமே நரபலி எடுத்தாய் எம் தமிழ் வாழ்விலே இன்னலை அழித்தாய்.. கூடியே வாழ்ந்தவர் கூடதை சிதைத்தாய் எத்தனை அவலத்தை எமக்கன்று திணித்தாய்... இத்தனை மறந்தேன் இன்று நீ அழுதாய்...?? நின்மதி தொலைத்து நித்தமும் அழுதோம்... அத்தனை ரணமும் அனுபவி வேண்டும் உன் உடல் யாவுமே கிழியவே வேண்டும்... அங்க மிழந்து- நீ அலறவே வேண்டும் அது கண்டு அயலவர் கலங்கிட வேண்டும்... பஞ்சம் வந்துன்னை பற்றிட வேண்டும் உணவின்றி நோயினால்- நீ இறந்திட வே…
-
- 6 replies
- 1.6k views
-
-
பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…
-
- 3 replies
- 1.5k views
-
-
தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும் யவனிகா ஸ்ரீராம் சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
அம்மா உன் கருவறை மீண்டும் தருவியா... நல்ல சயனம் அங்குதானே மீண்டும் தாங்கவருவியா.. இந்த பூமி ரொம்ப இரைச்சல்.. அதுதானே என்னிதய எரிச்சல்.. நட்பு என்பதை நம்பி நான் மோசம் போனேன் தம்பி அன்பு என்ற அம்பு என்னைத்துளைகள் செய்தது நம்பு இது மனிதம் இறந்த காலம் புவி திரும்பச் சுழலக்கூடும்.. ஒழுக்கம்தானே உயர்வு பண்புதானே வாழ்வு நல்லதென்றும் யோசி -நன் மெய் அதையே பேசி.. தந்தை சொன்ன மந்திரம்-இன்று தவிக்கும் தனயன் மாத்திரம்
-
- 7 replies
- 1.3k views
-
-
எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.6k views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 946 views
-
-
காதல் கடலில மூழ்கினா முத்து காதலில் மூழ்கினா பித்து படிப்பைக் கொஞ்சம் யோசி குடும்பத்தைக் கொஞ்சம் நேசி சொந்தக் காலில் முதலில் நில்லு அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு இதுக்கு மேலும் வேணாம் மல்லு அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு வயசானா உதவிடும் கைத்தடி வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி o குடி வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு o இளசுகள்(பெண்கள்) செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு! வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!! o அரசியல்வாதி குடிகாரன் குடிபோதையில் உளறுவான்! அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!! கைகூப்பிக் கேட்பாங்கோ…
-
- 778 replies
- 81.3k views
-
-
சிவனெனும் பெருமான் ஓர்நாள் நகர்வலம் போனார். நடந்து நடந்தே ஊர்உலாப் போனார். தாகம் மேலிட தாகம் மேலிட "தண்ணீர்" "தண்ணீர்" சைகையில் கேட்டார். பெருமான் என்பதை ஊரறிந்தது. பஜனைகள் செய்து பக்தி கொடுத்தது. நாவுலர்ந்து போகப் போக பெருமான் "தண்ணீர்" "தண்ணீர்" நடனம் செய்தார். பக்தி மிகுந்து பக்தி மிகுந்து காணிக்கை அள்ளி ஊர் கொடுத்தது. பொன்னும் மண்ணும் பொருளுமென்று பெருமான் காலில் ஊர் குவித்தது. தாகம் மேலிட தாகம் மேலிட முடியாப்பெருமான் முடிவாய்ச் சொன்னார்... கடவுள் என்றே ஆனபோதும் முதலில் கொடுங்கள் தாகம்தீர குவளையில் தண்ணீர். - தயா ஜிப்ரான் - 03.04…
-
- 7 replies
- 1.4k views
-
-
நான் இராட்சதன்.... பூப்பொன்ற மனங்களை புரியாததாலா நான் இராடசதன்... புரிந்த மனங்களை வெளி மொழியாததாலா நான் இராட்சதன்.. கறந்த பாலாய் கண்ணுற்ற உன் காதலை காப்பாற்ற முடிந்தும் கல்லாக இருந்ததாலா நான் இராட்சதன்.. கல்லறை புகும் முட்டாள் காதலென காதலை இகழ்ந்து மென்மை அறியாததாலா நான் இராட்சதன்.. நண்பா.. உன் காதலை ..உலகுக்கு உணர்த்த உயிர்விட்ட நீயும் உன் காதலியும் இழந்தபோது உலகம் சொல்கிறது.. முட்டாள் காதலர்கள் என்று.. இல்லை இப்போது இராட்சதன் நான் சொல்கிறேன்.. காதல் அற்புதமானது.. காக்கப்படவேண்டியது சேர்த்துவைக்கப்படவேண்டியது.. இரக்கப்படவேண்டியது.. உதவவேண்டியது.. உணரவேண்டியது..ஆனால் உயிர்விட வேண்டியது அல்ல …
-
- 7 replies
- 1.3k views
-