கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....
-
- 15 replies
- 2.5k views
-
-
மீள் நினைவு கொள்வோம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012 கால விதிகளின் கட்டறுத்தெறிந்த வீரத்தின் விலாசங்களோடு வனவாசம் போனவர்களுடன் ஆழுமையின் வீச்சாய் அடையாளம் காட்டப்பட்டவள் நீ. பெண் விதியின் முழுமைகளை நீ பேசிய மேடைகள் பதிவு செய்து கொண்டதோடு நீயொரு பெண்ணியவாதியாய் பெருமை கொள்ளப்பட்டவள். உன்னையும் உனது ஆழுமைகளையும் உச்சத்தில் ஏற்றி எழுதியோரும் உன் குரலில் பதிவு செய்தோரும் எண்ணிலடங்காதவவை.... எழுச்சியின் காலங்களை இப்படித்தான் காலம் கௌரவப்படுத்துவது வரலாறு. வீழ்ச்சியின் பின்னரே யாவும் விழித்துக் கொள்கிறது. அதுவே உனக்கும் உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது. 000 2009 மே, காலச் சூரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
மறந்தும் வலிக்கும் நினைவு மறைந்தும் தெரியும் தழும்பு அணைந்தும் எரியும் அகல் காய்ந்தும் தளிர்க்கும் காம்பு ஓய்ந்தும் வீசும் காற்று உறைந்தும் மீளும் உணர்வு அடங்கியும் எழும் ஆன்மா இறந்தும் வாழும் உயிர் எரியும் அகலில் வலிகள் விலக தளிர்க்கும் காம்பால் தழும்பு மறைய வீசும் காற்று உணர்வை மீட்க எழும்பும் ஆன்மா வாழும் இனி....
-
- 9 replies
- 754 views
-
-
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…
-
- 0 replies
- 613 views
-
-
சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. குமுதத்தில் வெளிவந்தபோது ஜெயமோகன் கருத்து எழுதியிருந்தார். இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் …
-
- 2 replies
- 1.5k views
-
-
1970ல் எழுதிய என்னுடைய இரண்டாவது மூன்றாவது கவிதைகள் இவை . இரானுவ புவியில் ஆர்வத்தில் ஈழத்து காடுகளைத் தேடி அலைந்தபோது எழுதியவை. அது வன்னி நமது விடுதலை வரலாற்றின் மையமாகாத காலமாகும். விரக்தி கனலும் கடும் கோடையில் மாரிதனைப்பாடும் வன்னிச் சிறுவன் காலமுள்ளளவும் ஈழத்தின் மீண்டும் நிமிரும் நம்பிக்கையின் படிமமாக இருப்பான். 1 நம்பிக்கை துணை பிரிந்த கயிலொன்றின் சோகம் போல மெல்ல மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது. என்ன ருகே வெம் மணலில் ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன் என்றாலும், எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரி தன்னைப் பாடு…
-
- 2 replies
- 596 views
-
-
பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
____________________ இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில் கம்பிகளுக்குள் நிற்கிறார்கள். அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன. இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது. தனது அம்மா அப்பபாவின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள். உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன். கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன். குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிற
-
- 0 replies
- 761 views
-
-
முகநூல் சுயவிளம்பரம் செய்வோருக்கு சுதந்திரமான வெளி இங்கு கட்டுப்பாடின்றி கண்டபடி புளுகலாம் அண்டப் புளுகென்ன ஆகாசப் புளுகென்ன அனைத்தையும் புளுகலாம் அது செய்தேன் இதுசெய்தேன் என தன்னைத் தானே தம்பட்டமும் அடிக்கலாம். விபரமும் சொல்லலாம் வீண் வாதமும் புரியலாம் வீட்டிலே இருந்தபடி வெளியுலகுக்கும் சொல்லலாம் ஆண்பெயரில் பெண்ணும் பெண் பெயரில் ஆணும் ஏமாறி ஏமாற்றிப் பித்தலாட்டமும் செய்யலாம். இங்கே கன்னியரும் வருவார்கள் காளையரும் வருவார்கள் கருத்துப்பரிமாறி காதலும் கொள்வார்கள். தாய் தந்தையரை ஏமாற்றி தாமும் ஏமாறிக் கண்ணீர் வடிக்கக்; கன்னியரும் வருவார்கள் காதலும் உண்டு காமமும் உண்டு காமலீலைகள் வீசும் காமுகரும் உண்டு கணவனைவிட்டு காமுகரை நாடுவோரும் மனைவியை…
-
- 4 replies
- 780 views
-
-
உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வலி நான் உணரவில்லை… தாவணிப்பருவத்தில் தோழி வீடுசென்று தாமதமாக திரும்பும் நாட்களில் உன் அவஸ்தையின் வலி நான் உணரவில்லை… கல்லூரிப்பருவத்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… மணப்பந்தலில் உன் காலில் விழுந்தெழுந்த போது என் உச்சி முகர்ந்த உனது முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…
-
- 12 replies
- 14.2k views
-
-
முகப் புத்தகம் இணைய இணைப்புகளிட்கு இங்கு அவசியம் இல்லை இதய இணைப்புகள் இருந்தால் போதுமே - உன் முகப்புத்தகத்தை தரிசிக்க . உனக்கு மட்டும் நண்பர்களை பரிந்து உரைக்க மாட்டேன் உலகமே என்னை மட்டும் நண்பனாக உனக்கு பரிந்து உரைக்கட்டும் . உன் சிரிப்புகளை அப்லோட் பண்ணுகின்றாயே சிதறிப் போகின்றேன் சில்லறைகளாக . புறநிலை எல்லாம் புறம் தள்ளிவிட்டு -உன் புரபைலினை மட்டும் உச்ச்சரிகின்றேன் . துனிசியா ,எகிப்து ,லிபியா முகப் புத்தகம் வீழ்த்திய இராச்சியங்கள் உன் முகப்புத்தகம் வீழ்த்திகொண்டிருக்கும் பூச்சியம் நான் மட்டும் . by Jeyashankar Somasundaram
-
- 3 replies
- 2.2k views
-
-
முகமரியா தேசத்தில் நம் தேசம் - தொலைத்து தூர தேசசம் வந்தும் . . ஆறறிவை தொலைத்து - சிலர் நிர்வாணமாய் திரிகின்றார்கள்...... அகதி முத்திரையோடு அகங்காரமாய் ஆயுதங்களுடன் அதிகாரமாய் உறவாடும் கால் முளைத்த.. பிசாசுக்களாய்..... அரியாலை மன்னார் வல்வெட்டித்துரை - இன்னும் எத்தனையோ...எத்தனையோ.... தாய் மண்ணில்தான் ஊர் சண்டையென்றால்.. வற்த இடத்திலுமா - தங்கள் கசாப்புக்கடை .. தத்துவங்கள்....... தம்முடைய புதைக்குழியை தாமே வெட்டுமளவுக்கு இரத்த தாகம் கொண்டலையும்...காட்டேறிகளாய்.... உயிர்க்கும் பிழைப்புக்கும் இடம் தேடி வந்தவர்கள் வந்த இடத்தில் - பிழைப்போ உயிர் வதைப்பு.... உலக நாடுகளில் மரண தண்டனையை சட்ட யாப்புகளிலிருந்த…
-
- 5 replies
- 1.5k views
-
-
முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
முகம் தெரியா முகநூலில் நட்புறவாட மறந்து கலவி செய்ய எத்தனிக்கும் கயவர்களை இனம் காணுவோம்... ஓட ஓட விரட்டிடுவோம்... வளைதளத்தில் வக்கிரம் வரையறை மீறி இன்று முகப்புத்தகத்தில் முடிவில்லாமல் தொடரும் தொடர்கதையாய்.... முகப்புத்தகம் சிலருக்கு அவர்கள் காம இச்சையை தீர்க்கும் வடிகால் என்றே உருவாக்கிவிட்டார்கள்.... முகம்தெரியா ஆண் பெண்ணுடனோ அல்லது பெண் ஆணுடனோ அந்தரங்கங்களை பகிர்வதால் வருகிறது இந்த வினை.... எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது யார் அந்த கோட்டை தாண்டினாலும் அந்த உறவுக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைக்க அறிய வேண்டும் அனைவரும்... உலகில் வாழவே தகுதியற்ற சில ஈனப்பிறப்புகள் போலி அடையாளத்தில் உலவும் இடமாக மாறிபோய் இருக்கிறது முகப்புத்தகம்...... ஒருபுறம் நல்லவர் போல் உறவ…
-
- 2 replies
- 841 views
-
-
முகம் தெரியாத நண்பனும் நாங்களும் “வணக்கம்” அங்கிருந்தொருவன் அருகிருப்பதுபோல் பேசுவான் தொலை தூர வாழ்வில் அதிகாலைப்பொழுதில் தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில்.. தனித்தேசக் கனவை தன்மான உணர்வை செயல் திறன் ஆற்றலை எங்களுக்குள் இன்னும் அதிகமாக்கியவன் இறுதி நாட்களில்.. முள்ளி வாய்க்கால் இப்போது என்ன சொல்லுதென்று வரி விடாமல் சொல்லுவான் நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி நிமிர்ந்து வந்து குரல் தருவான். எங்களைப்போல் முகம் தெரியா நண்பர்கள் அவனுக்கு அதிகம். அத்தனை பேரும் தேடுகின்றோம் அவனை. இப்போது நீண்ட நாட்களாய் காணவில்லை. அவனை? அவன் குரலை? இ…
-
- 8 replies
- 2.1k views
-
-
முகம் தேடும் முகவரிகள். ஈழத்தின் வாசலே இந்தியத் தாய் மண்ணே! உயிரிங்கு உருகி நிற்கும் என் வணக்கம் உந்தனுக்கு! உறவுகளும் தோழருமாய் மகிழ்ந்திருந்த என் பூமி மயான பூமியான செய்தி நீ அறிந்திருப்பாய்! ஐந்தாட்டுத் திட்டம் என போட்டுவைத்த போர் நிறுத்தம் கடந்து இரண்டு நாட்கள் காற்றோடு போயாச்சு! ஐந்தாண்டும் நாம்பட்ட இன்னல் ரணம் அறியாயோ? தமிழ் உயிர்கள் மலிந்த நிலை தமிழகமே அறியாயோ? வியர்வை சிந்தி உழைத்த மண்ணில் தமிழ் இரத்தம் சிந்திக் கிடக்கிறது!. பயிர்கள் விளைந்த பூமியெங்கும் தமிழ் உயிர் விதைத்துக் கிடக்கிறது! தமிழரின் வாசல் எங்கும் "கண்ணி'வெடிக் கோலங்கள் எங்களின் வீதியெங்கும் கண்ணீரின் ஓலங்கள்! ஒரே…
-
- 1 reply
- 853 views
-
-
முள்ளிவாய்க்காலுடன் முடிந்தது ஆண்டுகள் நான்கு மனிதம் தொலைந்து மானுடத்தின் மரணவீடானது. கொத்தணிக் குண்டுகள் கொட்டிய மழையில் கொத்துக் கொத்தாய் உடல்கள் மட்டுமா வீழ்ந்தது ? முற்று முழுதாய்த் தமிழினம் முகம் தொலைத்த நாளது மூடர்கள் மூட்டிய தீயினில் முழுவதும் எரிந்து போனது மொத்தமும் இழந்து மூளிகளாக்கி முழுதும் அழித்து மீண்டது சொத்து சுகங்கள் சொந்தம் எல்லாம் எதிரிக்கென்றானது ஊர் இழந்து உறவுகள் இழந்து உடைமைகளும் தானிழந்து ஒப்பாரி ஒன்றே ஊர்முழுதும் கேட்கும் ஒலியானது சிங்களன் மூட்டிய சிதையின் நடுவே சித்தம் கலங்க சிதைந்து அன்றோ போனது சீருடன் வாழ்ந்த வாழ்வு வீடிழந்து வீதி இழந்து வேர்களுடன் விழுதுகள் இழந்து ஓடிவிளையாடிய ஊரிழந்து கூடிக் களித்த உறவுகள் இழந்து கொட்டும் …
-
- 3 replies
- 608 views
-
-
முகவரி இடப்படாத கடிதம் முகவரி இடப்படாத கடிதம் இது முடிந்தால் எவராவது உரியவரிடம் சேர்ப்பிப்பீர்களா? ஓலமிட்டு அழுகின்றோம் ஓடி ஓடி நீதி கேட்கின்றோம் ஆனால் எந்த விழிகளிலும் மனித நேயத்தை காணமுடியவில்லையே. மார்ச் எட்டு என்றவுடன் உலகமெங்கும் அனைத்துலக பெண்கள் நாள் ஆடம்பரமாக கொண்டாடப்படும். ஆனால் ஒடுக்கப்பட்டோர் எம் குரல் கேட்க உலகில் எவருக்கும் நேரமில்லை. காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் எங்கள் உறவுகள். கணவன்,மகன்,தந்தை என நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடுகின்றோம் ஆறு ஆண்டுகளாக உளவலிகளால் அலைந்து உலைந்து கொணடிருக்கின்றோம் அழுது அரற்றுகின்றோம். எந்த நாட்டுப் பிரதிநிதி வந்தாலும் ஓடி ஓடி அவர்களிடம் எங்கள் நிலைமையை எடுத்தரைத்து எவராவது எம் உறவுகளைத் தேடித்தர உதவ மாட்டார்களா என…
-
- 8 replies
- 809 views
-
-
இலைகளைந்து மரங்களெல்லாம் நிர்வாணமாகும். வெட்கத்தில் பனித்துளிகள் ஆடைநெய்து போர்க்கும். வெண்பனிகள் ஊர்முகட்டில் சித்திரங்கள் கீறும். சிற்றோடை தானிறுகி சிற்பமெனவாகும். வெள்ளாடை புூண்டதனால் - ஊர் தேவதை போலாகும். அழகழகு இதுவென்றே மனம் சொல்லியாடும். வானுக்கும் மண்ணுக்கும் ஊடல் இது போலும். ஊடலினால் கதிரவனின் முகமழிந்த தாகும். கதிரவனின் முகம் நினைத்து முகிலினங்கள் உருகும். உருகிவிடும் கண்ணீரே பனித்துளியாய் வீழும். மண் வீழ்ந்த பனித்துளியில் மனமுருகிப் போகும். அழகருந்தி மனமுருக உடல் நடுங்கலாகும். உடல் நடுங்க, திடம் ஒடுங்க வாழ்வு வெறுப்பாகும். வாழ்வு வெறுப்பாக - மனம் முகவரியைத் தேடும். வாழ்வு வெறுப்பாக - மனம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
முகாரி ராகங்கள் பாறைக்கு பச்சைப் பட்டுடுத்தி அழகு பார்க்கும் அலங்காரங்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டின் புதிய பரிநாமங்களின் புதிய பரிமாணங்கள் தேசத்திற்காய் தேகத்தையும் மறந்து தேயிலையிற்கை கறுக்கும் அவர்கள் பெருந்தோட்ட பயிர்களின் தலைமுறைகள் கொழுந்தெடுக்கவென குழந்தையையும் தொழுவத்திலிடும் மலிவான கூலிகள் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் முகவரிகளுக்காய் போராடும் ஆயுதம் ஏந்தா போராட்ட காரர்கள் இவர்கள் முயற்சி இல்லா முகாரி ராகங்கள்
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆழ்கடலின் அலை அயத்தமானது அது புரியாது நானும் அதன் அழகில் மயங்கி அலையின் சீற்றம் புரியாது கடலின் ஆழம் தெரியாது கரையின் ஓரமாய் நின்று ஆர்ப்பரிக்கும் அலை கண்டு அகமகிழ்ந்தே காத்திருந்தேன் அலை உயந்து பின் தணிந்தது சுழன்ற காற்றின் திசையெங்கும் சுழற்றி வாரி நீரை இறைத்தது என்மேல் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் மேனி நனைக்க அலையின் மகிழ்வில் நானும் ஆர்ப்பரித்து நின்றேன் எழுந்தது எதிரியாய்ப் பேரலை என் அங்கம் அத்தனையும் சுருட்டி ஆத்மாவின் மூச்சை நிறுத்தி சிந்தனை எல்லாம் அழித்து சிகரங்கள் எல்லாம் தொட்டவளை தன்னை நம்பியே நின்றவளை ஆழ்கடலின் இருண்ட அறையில் எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது என்ன செய்வேன் நான் எழுந்துவர முடியவில்லை எ…
-
- 9 replies
- 907 views
-
-
முடிவின்றி தொடரும் இந்த அவல நிலை என்று மாறும் ??
-
- 0 replies
- 895 views
-
-
திசைகள் கிழிந்துபோக வெளிகள் வறண்டு கிடக்கின்றது. எழுகதிரும் முகமிழந்து ஒளிய மொழியிழந்து வெற்றுடல் அலைகிறது மண் தின்ற பெரும் அரக்கன் மாலை சூடியின்று அங்கதம் கொள்கிறான். கொத்துக் குண்டுகளாலும் குறிசொல்லிகளாலும் கொன்றொழித்தை, பிணங்களையும், இயல்பிழந்த பெண்களையும் புணர்ந்ததை, மகுடமென்று சூடிக்கொள்கிறான். அறப்பரணியைப் புறம் சொல்லி, தீவிரவாதம் தோற்றது இனவாதம் இனியில்லையென்று கட்டியமடிக்கும் பல்லக்குத் தூக்கிகளே பாருங்கள். இன்னும் எங்கள் தரவைகளும் சதுப்புக் காடுகளும் உடலங்களை சுமக்கின்றன. கரியவால் குருவிகளும் காட்டுக் கோழிகளும் ஓலங்களால் ஒடுங்கி நிற்கின்றன.. நீண்ட மரங்களும் நாயுருவிப் பற்றைகளும் கொடிய கொலைகளுக்குச் சாட்சியாகின்றன.. …
-
- 1 reply
- 444 views
-