Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பயங்கரவாதி -தீபச்செல்வன்.. பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்டி புத்தரை குடியேற்றி எனை பயங்கரவாதி என்பாய் எனதுடலை நிர்வாணமாக்கி இராணுவச் சீருடையை போர்த்துவாய் எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து உனது வெறிச் சின்னங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் பிழையாய் எழுதியென் மொழியை அழித்து உனது மொழியை திணிப்பாய் எனது பாடல்களை அழித்து புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி எனை பயங்கரவாதி என்பாய் எனது நிலங்களை அபகரித்து உனது பெயர்களை சூட்டுவாய் எல்லைகளை மெல்ல …

  2. Started by pakee,

    [size=4]ஜென்மங்கள் மீண்டும் வந்து காதல் செய்வேன் நானே என் உயிரை எரிக்கும் காதல் தேவதையே என் மனசை குத்தி ரசிக்கின்றாயே எனை தவிக்க வைத்து தைக்கின்றாயே...[/size]

    • 0 replies
    • 530 views
  3. Seelan Ithayachandran கைபேசி மூலமாக 5 மணி நேரம் முன்பு: · இருள் கொஞ்சம் அதிகம்தான் : ச.நித்தியானந்தன் நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம் போவோமா புதையுண்டு சாவோமா…! மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா …

  4. தீர்வுகள்தராத தினமேன்? தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள் சுமந்தபடி உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைகின்ற மாந்தரினம் அடிப்படை உரிமைக்காய் அன்றாடம் பிணமாகி அலைக்கழிந்து வீழ்கின்ற அவலநிலை தொடர்கையிலே நீயேன் இருக்கின்றாய் ஐநாவே! உனக்கு எதற்காகத் தினங்களென உரிமையற்ற மாந்தர்கள் உரத்துக் கேட்பது உனக்குப் புரியாது காற்றுக்கூடப் புகாத கண்ணாடி மாளிகையில் கழுத்துப்பட்டியுடன் அமர்ந்து குளிரூட்டிக் காற்றுவர குளிர்பாணம் குடித்தபடி எத்தனையாம் என்றுகேட…

    • 0 replies
    • 872 views
  5. காட்டை அளித்து வீட்டை கட்டியவன் காரும் சோறும் கடையில் தின்றவன் மூட்டை கட்டி முதலீடு செய்தவன் நாட்டை காக்க மறந்துவிட்டான்...... சொகுசும் பவுசும் போதுமென்று சொக்காய் போட்டு திரிந்தவன் பரம்பரை வழக்கத்தை மாற்றவே பவுடர் பூசி வாழ்கிறான்.... கோடி கோடி சேர்க்கவே குற்றம் நிறைய செய்கிறான் கணினி யுகம் மாறியும் கடமை மறந்து வாழ்கிறான் சுமைகள் கோடி இருந்துமே சுகமாய் வாழ தெரியாமல் பகைமை கொண்ட நோக்கிலே பார் உலகை மறந்துமே வேறுலகில் சென்றுமே வேண்டிய வசதி பெற்றுமே நாசம் கொண்ட ஆசையால் நாடும் வீடும் மறந்துமே நன்மையெல்லா தொலைத்துமே பாதி உயிர் போகவே மீதி உயிர் மண்ணிலே சேரும்போது சொர்க்கமே... இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா! ஹிஷாலீ http://w…

  6. மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …

  7. ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை, திருடன் என்றோம் மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு. தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை இரண்டு கவளம் அரிசிக்காக குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம். கனிகளை எமக்குப் பரிசளித்தவனை ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி கனிகளை எமக்குப் பரிசளித்தவனின் உடலைக் கிழித்து பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்…

    • 0 replies
    • 895 views
  8. காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். தமிழ்மொழி பதைக்கிறது தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம் எல்லாமே- போராடும் தமிழன் கைகளில் ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன. இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும். வேவு பார்க்கப்படுகின்றன விசாரணைக்குக்குள்ளாகின்றன. அர்த்தங்கள் மாற்றி வைக்கப்ப…

  9. தீயதை தீய்த்தி டு! வேண்டாம் தீக்குளிப்புகள் உங்களை நாங்கள் சந்தேகப்படவில்லையே?! ஏன் உறவுகளே எங்களுக்காய் ஒலிக்கின்ற உங்கள் குரல்களை நெருப்புக்கு வார்க்கின்றீர்கள்?! நாடற்று நாதியற்று கதியென்று தாயக உறவுகளே உமைத்தானே நம்புகின்றோம் தீயிட்டு உங்களை நீங்களே எரித்திட்டால்! நாம் இனி எங்கு போவோம்?! தமிழர் வாழ்வழித்து கொக்கரிக்கும் சிங்கள அரசுக்கு எம் உணர்வுகள் புரியுமா?! தீ வைத்து உங்களை நீங்களே கொளுத்தினால் தாயக விடுதலை பிறக்குமா?! நியாயத்தை நீதியை மனிதாபிமானத்தை நேசிக்கும் இனமான உணர்வுகள் எரிந்திட்டால்!... நஞ்சினை மட்டுமே கக்கிடும் துரோகிகள் மட்டுமே மிஞ்சுவர் தாயக உறவுகள் என்றிங்கு சொல்வது வெறும் வார்த்தைக்காக …

  10. Started by pakee,

    நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...

    • 0 replies
    • 1.7k views
  11. மரணித்த தியாகிகளே நான் சிறு துரும்பென உணர்கின்றேன் உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில் வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின் உயிர் என் வயது தான் உங்களுக்கும் சில வருடம் குறையலாம் பெண் சுகம் என்னவென்று தெரியுமா? அல்குளின் இன்பம் தெரியுமா? உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று? சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி போவதன் சுகம் என்னவென்று இனம் காக்க மண் மேல் வீழ்வதன் சுகம் என்னவென்று பல இலட்சம் அடிமைகளின் விலங்கு உடைக்கும் சுகம் எனக்கு தெரியாது பல் கோடி சதிகளின் கண்ணி உடைக்க தெரியாது ஆயினும் அல்குளின் சுகம் என்னவென்று நான் சொல்வேன் சொல்லுங்கள் ஏன் என்னை போல நீங்கள் இல்லை ஏன் பெண் சுகம் நாடவில்லை காட்டாறுவ…

  12. இருபத்தேழு ஆண்டு முன்னால் இதே போன்ற ஒரு நாளில் இருளிலே வெடிச் சத்தம் இஷாவின் பின் உலுக்கியது புலி நாய்கள் பூந்து புள்ளைகளையும் ஆட்களையும் பலியாக்கிப் போட்டாண்டா பாதையிலே அவலக் குரல். பக்கத்துப் பள்ளிக்கு பறந்து வந்த செய்து கேட்டு திக்கற்று ஓடினோம் விக்கித்துப் போனோம் அள்ளாஹ் அள்ளாஹ் என்று அடங்கும் உயிரோடு பிள்ளைகள் துடி துடிக்க.. உள்ளம் நொறுங்கியது இருண்ட பள்ளிக்குள் எங்கும் மரண ஓலம் கரண்டிக் கால் நனைய காட்டாறாய் ரத்தம் காயப் பட்டோரை கைகளால் தூக்கும் போதே சாய்கின்ற தலை கண்டு வாய் விட்டு அழுதோம். கலிமாவைச் சொல்லி கண்களை மூடி விட்டோம் புலி நாயைப் பிடித்து பொசுக்க வெறி கொண்டோம் நூற்றி சொச்சம…

    • 0 replies
    • 423 views
  13. சந்தையில் மலியும் வரை விந்தையான உள்ளத்தில் உறங்காதிருப்பவை

  14. Started by கோமகன்,

    [size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!

  15. Started by கோமகன்,

    [size=5]கிரிக்கெட்[/size] நடு ரோட்டில கிரிக்கெட் ஆடினதும் நடுச்சாமத்தில அவுட்டான மாதிரி கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பினதும் அடிச்ச ஸ்கோரை கொப்பியில எழுதி வச்சதும் வீணாக ரன் அவுட்டானதுக்கு அழுது ஃபீல் பண்ணினதும்... இனிமையான கிரிக்கெட் வாழ்க்கை! இப்பொழுது ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரன்! நன்றி : கவிதையின் கவிதைகள்

  16. பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான் இன்பசோதி' பெயரோடு இணைந்த சோதிபோல் நீயும் ஒளிபொருந்தியவன். காற்றிலேறிக் கைவீசிச் செல்லும் வண்ணத்துப் பூச்சியாய் உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில் நீயொரு ராசகுமாரன். காலம் உனக்காய் கட்டியெழுப்பிய கோட்டையில் நீயே கடவுளாய் காலவிதியின் கதையாய்....! நிலவாய் நீல வானமாய் நீயுருவாக்கிய காலத்தின் கோலம் உனது எண்ணங்கள் போல வர்ணங்களாய்.....! காலச்சக்கரம் மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி உனது வர்ணங்களாலான உலகை இரத்தச் சிவப்பாக்கிய போது நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....! ஊரான் உனது பெயர் போலவே ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ. உன் போல உருவாக உன்போல உடையுடுக்க உன்போல …

    • 0 replies
    • 771 views
  17. பத்துபொருத்தம் பார்த்து பத்தும் பொருந்தி இருக்கும் யார் என்று கூட தெரியாத என் பெற்றோர் பார்த்த மணமகள் ஒருபக்கம் பத்து பொருத்தம் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லும் பத்து வித்தியாசங்களை எம்மிடையே கொண்ட நீ மறுபக்கம் இப்போது நான் என்ன செய்ய...

    • 0 replies
    • 1.1k views
  18. 1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். 5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! " 6. “சர்க்கரை இல்லை... கொழுப்பு இல்லை... எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி...!” 7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட…

  19. Started by yakavi,

    படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.

    • 0 replies
    • 744 views
  20. நாள்கள் நெருங்கிறது .. நினைவெல்லாம் நாட்டை நோக்கி .. சிறகுகள் இருந்தும் பறக்க முடியா .. பறவைகள் எல்லாம் கூட்டில் .. அமைதியா வேடிக்கை பார்க்கிறது .. தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ... இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா .. சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா .. என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ... உணவு தேடி போன என்னவன் வரும்வரை .. கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ... கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ... எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் .. பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ... மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை .. மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை .. இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் .. தனிமரத்தில் நான் மட்டும் உற…

  21. நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…

    • 0 replies
    • 663 views
  22. பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் அளித்த கருத்துக்கள் விமர்சனங்களுக்கு எனது பதில் கருத்துக்கள். சுகன் உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்கவில்லை! யாழ்களத்தில் இருந்து இவ்வளவு உறவுகள் இந்தப்பாடலைக் கேட்டு இதற்கு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வழங்குவார்கள் என்று. அந்த வகையில் முதலில் மோகன் அண்ணாவிற்கு எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். யாழ்கள அனைத்து முகமறியா அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எங்கள் வளர்ச்சியில் யாழ்களமும் இணைய அணில்போல் பங்கெடுத்துக் கொள்வதையிட்டு நாங்கள் பெருமகிழ்வடைகிறோம். உங…

  23. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்61-ம் ஆண்டு பிறந்தநாள்:26.11.2015வாழ்த்து-----------இயற்கை எனது நண்பன்...!வாழ்க்கை எனது தத்துவாசிரியன்...!வரலாறு எனது வழிகாட்டி...!மொழிந்தாய் முன்னாளில் தெளிந்தேதறிகெட்ட தமிழர் தமக்கோஅனைத்து மானாய் நீயே!வாழ்க நின்தவம் பல்லாண்டு!!அறம் அறிவு வீரம்சேர்ந் ததோர் வடிவாய்...ஈனம்சார் உலகில் மானம்சார்தலைவன்! தம்பியு மானாய்!!தமிழ்வீர மரபின் விளைவாய்போருலகில் புதுமை கண்டுஉலகில் தமிழர் முகமானாய்!வாழ்க நின்வீரம் பல்லாண்டு!!பெளத்த நெறிவிடுத்து மகாவம்சகதைப்படித்த மொக்குச் சிங்களன்பகைமுடித்து ஈழம் வென்றெடுத்துஆளவா தமிழி னத்தைபுவி போற்றவா நம்குலத்தை!வாழ்க நின்புகழ் பல்லாண்டு!!-----------------------------------இவண்: வன்னிவேலன்

  24. நெஞ்சுக்குள் தரிசனம்.! எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று.. நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு மட்டும் அனுமதியாம்! எனது எண் 301 ஆனால்…. நெஞ்சு தளர்ந்தேன்! நெஞ்சுக்குள் நின் அழகு தரிசனம் காணும் நினைவிலே அமைதி காண்பேன்.!! – சண்முக பாரதி https://www.vanakkamlondon.com/nallur-sanmugaparathi-25-07-2020/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.