கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பதுங்குகுழி ஓடிப்போன மகிந்தவுக்கு.... முடிச்சுப் போட்டமெண்டு மாத்தையா மூச்சுவிட முன்னம் அடிச்சுப் போட்டுது வான் புலி. அலரி மாளிகை அந்தப்புரம் அடிச்சு விழுந்து பங்கருக்கை துடிச்சுப் பதைச்சுப் போயிருக்காம். தமிழர் தினமும் இப்பிடித்தான் துடிச்சுப் பதைச்சு ஓடுதுகள். குடும்பமாகத் தனியனாக குழந்தை குட்டி இளசு பழசு எந்தப் பிரிவும் மிச்சமின்றி செத்து செத்து வீழுறதை எந்தச் சிங்களவன் பார்த்திருப்பான்...? கொழும்பும் இனிமேல் பயம்கொள்ளும் கோட்டைக் கனவில் உள்ளவரின் கொழுப்படக்கும் நாளுமினி கொஞ்சத் தூரம் சொல்லி வைப்போம். தமிழன் நிலமும் தமிழன் கடலும் தனக்குச் சொந்தம் என்றவனை தமிழர் படை வென்று வரும் தரணியெங்கும் சென்று வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
"எந்த நாளோ?' -கவிஞர் கோ. கலைவேந்தர் போரினை நிறுத்த வேண்டிப் புலம்பினோம் உலகி னோடும்! வீதிகள் எங்கும் உணாது வாடினோம் உறவி னோடும்! போர்வெறிக் கண்ணோட் டத்தில் புலமிழந்த இராச பக்சே ஓநாயின் இழவ றிந்தே உவக்குநாள் எந்த நாளோ? போர்க் களத்தின் அழுகை வெள்ளம் வடியுநாள் எந்த நாளோ? போர்க்களத்தின் உள்கா யங்கள் ஆறுநாள் எந்த நாளோ? போர் வெறி வல்லாட் சிக்குள் மீளுநாள் எந்த நாளோ? பேரொழிந்த இராச பக்சே புதையுநாள் எந்த நாளோ? மண்வெறி கொண்டார் தாமும் பிடிசாம்பல் ஆவார்! - சென்ற உயிரினைப் பொருத்து வாரும் ஒழியுநாட் கொள்வார்! - ஞாலத் தண்பரப்பில் உன்னைப் போற்றித் தொழுவாரும் யாவர்? - மீண்ட கண்பரப்பை …
-
- 0 replies
- 1.5k views
-
-
மாய உலகமிது எதுவும் உண்மையில்லை - நம்பாதே எதையும் நம்பாதே யாரையும் நம்பாதே எல்லாம் பொய் யாரையும் எதையும் உன்னால் மாற்ற இயலாது மாற்றவும் வேண்டாம் யாருக்காகவும் நீ மாறாதே ! நீ நீயாகவே வாழ் - முழுமையாக உண்மையாக ! உறுதியாக ! நீயாக மாறிவிடு..... உன்னைத்தேடு கண்டுப்பிடி நீ யார் என்றறி நீ உன்னை அறிந்தால் இவ்வுலகமே உன்னை அறியும்...
-
- 0 replies
- 1.3k views
-
-
தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா
-
- 0 replies
- 1.5k views
-
-
ஊரடங்கு தளர்த்தப்படும் அப்பா படலையை எட்டிப் பார்பார் தெருநாய்கள் குரைக்கும் படலையை திறக்கப் போன அப்பா திரும்பி வருவார் வீதி சுத்தம் செய்யும் படைச் சிப்பாய்கள் வருவார்கள் நாய்கள் அலரி அடித்து ஓடி வரும்....
-
- 0 replies
- 1k views
-
-
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித…
-
- 0 replies
- 1.6k views
-
-
காதல் சிட்டுக்கள்..... கவிதை - இளங்கவி அந்தி மாலைப்பொழுது மங்கிய மின்னொளியில் உணவகமொன்றில் ஜோடியாய் இரு காதல் சிட்டுக்கள்.... காம்புடன் குடிய கருஞ்சிவப்பு ரோஜாவை நீட்டியது ஆண்புறா... ரோஜா கொடுக்கிறாய் ஆனால் ஏன் அதை அழகில்லாத காம்புடனும் முள்ளுடனும் தருகிறாய் என்றது பெண் சிட்டு.... அழகில்லாத இந்தச் செடி அழகிய ரோஜாவை எப்படி தாங்கி நிற்கிறதோ நானும் உன்னை என் தேவதைபோல் என்றும் தாங்கி நிற்பேன் என்று சொன்னது ஆண் சிட்டு.. அவன் காதல் வார்த்தையில் மயங்கிய பெண் சிட்டு தன் இரு கைகளாலும் அவன் முகத்தைத் தழுவி ஒட்டிய முத்திரை போல் தன் இதழைப் பதித்தாள் அவன் இதழில்.... முத்தத்தின் சில நிமிடமும் சில யுகங்…
-
- 0 replies
- 596 views
-
-
அழகிய தமிழ்மகன்..... பிறந்த நாள் வாழ்த்து மடல்..... தமிழரின் வாழ்வு மீட்க உலகில் தமிழனின் புகழ்பரப்ப ஜம்பத்தினான்கு வருடங்கள் முன் வட கடலெல்லாம் ஓசைதர கடல்பறவையும் இசைபாட மணற்காட்டு மண்ணெல்லாம் மலர்போல மண்தூவ அழகிய தமிழ்மகனாய் அழுதபடி அவதரித்தான் சூரியன்போல் ஒர் குழந்தை.... அவனின் முதல் அழுகை அன்னையின் பாலுக்கு வேண்டியல்ல அடிமை மண்ணின் சுவாசத்தை அந்தக் கணம் சுவாசித்ததற்காய்... அவன் என் நாளும் வளர்கிறான்..... தன் வாழ்வின் சரித்திரத்தை அவன் நாளொன்றாய் அறிகிறான்.... அடிமைச் சரித்திரத்தை அவனன்று அறிந்ததுமே வீரனாய் அன்று வீறுகொண்டு எழுகிறான்.... தன் இளமையின் சுகமிழந்து தமிழனின்…
-
- 0 replies
- 806 views
-
-
யாயும் ஞாயும் - கவிதைகள் ஓவியங்கள்: ரமணன் பழைய முகப்படக்காரி தன் பழைய புகைப்படத்தை பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள் புதையுண்ட இளமை கிடைத்தவளாய் உற்றுப் பார்க்கிறாள். இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் இரட்டை ஜடைப் பின்னலை விரலால் தடவிப்பார்க்கிறாள். தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள். கடன்வாங்கி அணிந்திருந்த தோழியின் நீலநிறத் தாவணியில் நட்பின் வாசத்தை நுகர்கிறாள். `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் தவறவிட்டப் புன்னகையை நினைவூட்டிக்கொள்கிறாள். அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தின…
-
- 0 replies
- 3.3k views
-
-
கார்முகில் திரை போட்டு வெண்பனி தூபம் இட மின்னல் தீபம் காட்ட சிங்காரமாய் தேரில் வீற்றிருக்கும் தேவதைக்கும் நாட்கணக்கில் தவமிருந்து வாரம் தோறும் பூஜை செய்து பூச்சரங்கள் மாலையாக்கி அர்ச்சனை செய்ய காத்திருக்கும் பக்தனுக்கும் உறவுகள் பலர் சேர்த்து வைத்து ஊர்வலமாய் கொண்டு செல்ல மங்கலமாய் நிறைவு பெரும் பந்தத்தின் ஆரம்பம் .
-
- 0 replies
- 616 views
-
-
[size=5]ஆணிவேரை வாந்தியெடுத்த அகண்ட மரங்கள்... [/size] அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூல…
-
- 0 replies
- 593 views
-
-
உயிரே நீ என்னை விட்டு சென்ற பின்பு நாம் இருவரும் பேசிக் கொண்டதை நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன் வேறு என்ன நான் செய்ய முடியும் உன்னை நோக அடிக்கவா முடியும் உன் இதயம் நொந்தால் என் இதயத்துக்குதானே வலி என் என்றால் உன் இதயம் என்னுடையது அல்லவா?
-
- 0 replies
- 741 views
-
-
தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு கவிதை போட்டி From: media@tyouk.org வணக்கம் தமிழீழ தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்படும் கவிதை போட்டியின் பதாகையை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் நாங்கள். இவ் மின்னஞ்சலுடன் இணைத்திருக்கும் பதாகையை தயவுசெய்து உங்கள் இணையத்தில் அல்லது பத்திரிகையில் இணைக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி சஞ்சய் தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்.
-
- 0 replies
- 864 views
-
-
என் கண்ணனே நான் உனக்காக எதையும் விட்டு குடுப்பேன் நான் எவருக்காகவும் உன்னை விட்டு குடுக்க மாட்டேன்......
-
- 0 replies
- 741 views
-
-
தமிழர் அலையென எழுந்தனர் பார் தேம்ஸ் நதிக்கரை அதிருது பார் உலகம் முழுவதும் தமிழர் இணைந்தனர் உணர்வின் எழுச்சி இதுதான் கனடா நோர்வே பாரிஸ் லண்டன் தமிழகம் பொங்கி எழுந்தது பார் உலகே உலகே போரை நிறுத்து-தமிழன் வேரை அறுக்கும் போரை நிறுத்து சரணம்-1 விழித்திடு விழித்திடு உலகத் தமிழா நாங்கள் வீழ்வது சரியா? இலங்கை என்ற காடு பிளந்து தமிழீழம் காண்பது பிழையா? நாற்பத்தியெட்டில் வாங்கிய சுதந்திரம் ஈழத் தமிழன் பெற்ற தரித்திரம் கற்கண்டு பூமி நெருப்பில் குளிக்க உலகம் ஊமையாய் இருப்பது விசித்திரம் எழுவோம் ....எழுவோம் - இனிவரும் தடைகள் உடைப்போம் உலகத் தமிழினம் இணைந்தது என்று எதிரி படைக்குச் சொல்வோம் சரணம்-2 இனிமேல் இனிமேல் ஓய்வுகளில்லை …
-
- 0 replies
- 694 views
-
-
இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள். http://www.youtube.com/watch?v=_L3lpj80ItU
-
- 0 replies
- 1k views
-
-
அவர்கள் பேனைகள் எடுத்தனர் ...நாங்கள் ஆயுதம் எடுத்தோம் ..அவர்கள் வாட்டாரி எடுத்தனர் ...நாங்கள் ஏகே துடைத்து கொண்டு இருந்தோம் ..அவர்கள் திசைகாட்டி எடுத்தனர் ... நாங்கள் மோட்டாருக்கு பாகை பிடித்தோம் ... அவர்கள் வரைபடம் பார்த்தனர் .. நாங்கள் ஜிபிஸ் இல் இலக்கு வகுத்தோம் .. அவர்கள் கட்டிடம் கட்டினர் அழகா ... நாங்கள் அவைகளுக்கு குண்டு வைத்தோம் ... அவர்கள் அரசியலை படித்தனர் .. நாங்கள் அரசியல் படிப்பித்தோம் .... அவர்கள் நல்லுறவு பற்றி பேசினார் .. நாங்கள் நாலுபேரை போட்டா சரி என்றோம் .. அவர்கள் நாடுகளை அணைத்து வந்தனர் ... நாங்கள் உள்ளவன் எல்லாம் துரோகி என்றோம் .. அவர்கள் எம்மை அழிக்க வேண்டியவர்கள் என்றனர் .. நாங்கள் முடிந்தா செய்யேன சவால் விட்டோம் .. அவர்கள் முன் நகர முன் நகர .. நாங…
-
- 0 replies
- 786 views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (11.5.16) வெளியாகியுள்ள எனது கவிதை "முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!", யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் வீடு! போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம் “எங்கே எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா. ஒரு திருப்பத்தில் சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும், “ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?” கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி. முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த சூரியனின் வீட்டுக்கு …
-
- 0 replies
- 537 views
-
-
-
"இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி" "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !" "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !" "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !" "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்ட…
-
- 0 replies
- 157 views
-
-
முள்ளிவாய்க்கால் பாடல் – தீபச்செல்வன்… May 18, 2019 நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் பட்டன தடித்துறைந்த இறுதிச் சொற்கள் சொற்களை அடுக்கினாள் மலைபோல் கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும் படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல் பறவைகளின் சிறகுகள் அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான் இன்னமும் புரண்டு கிடக்கிறாள் இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து, கடல் வெளியில் போட்டான் கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கீழே செல்ல வாயிற்குளிரு…
-
- 0 replies
- 1k views
-
-
கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!
-
- 0 replies
- 871 views
-
-
-
- 0 replies
- 739 views
-
-
தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து ம…
-
- 0 replies
- 940 views
-
-
கணமொன்றில் நிகழவிருப்பவை - கவிதை கவிதை:கார்த்தி, படம்: அருண் டைட்டன் யார் முதலில் சொல்வதெனும் காத்திருப்புகள் துயரம் கண்கட்டாத உறியடிபோல் உடைக்கத்தான் வேண்டும் சில மௌனங்களை. மழையினூடான தேநீர் உரையாடலில் கரைக்கவிருப்பது கெட்டிப்பட்டுப்போய் தேங்கிக்கிடக்கும் சில கசப்புகளை. எங்கோ தூரத்தில் யாரும் பார்த்திடாதபடி காட்டுப்பூக்கள் சேகரித்திருப்பது பிரியத்தின் அடைக்கான சில வாசனைகளை. பிம்பங்களற்ற தனிமையில் ரசம் குறையும் நிலைக்கண்ணாடி இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது நீங்கிடாத சில முகங்களை. சிவப்பின் எரிச்சலோடு பச்சைக்கான காத்திருப்பில் சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும் கண்ணாடி இறக்கி அள்ளிக்க…
-
- 0 replies
- 873 views
-