Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???

  2. உலா - வ.ஐ.ச.ஜெயபாலன் நீலப் பாவாடையில் குங்குமமாய் எழுஞாயிறு கசிய பூத்தது விடலை வானம். வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள். எனினும் அன்பே உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான் இந்த வசந்த நாளை அழகாக்கியது, வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக. காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான் உலாவை ஆரம்பித்தோம். காடு வருக என கதவுகளாய்த் திறந்தது. சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய் வண்டாடும் மரங்களின்கீழ் உதிரிப்பூ கம்பளங்கள். என் அன்பே முகமறைப்பில் இருளில் இணையத்தில் கண்காணா தொலைவில்தான் இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க ம…

    • 18 replies
    • 2.1k views
  3. உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது

    • 18 replies
    • 2.3k views
  4. வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி கவிதை - இளங்கவி ஐந்து சந்தி வீதியிலே ஆளுயரப் பனையின் கீழ் பனம்பழம் எடுத்து வந்து பாதி தந்த மகராசா...! என்னை பாதியாய் தவிக்கவிட்டு பாடையிலே சென்றீரோ.... பச்சைப் புல்வெலியில் பாதணியும் போடாமல் உன் பங்குக்கும் புல்லுவெட்டி என் பசுவின் பசிதீர்த்த மகராசா...! பட்டினியால் உன் உயிரை பறித்து தான் சென்றனரோ...! புலியின் ஆட்சியிலே நாம் பசியை கண்டதில்லை... கிளி நொச்சி விட்டோடி; கடைசியிலே வதை முகாமுக்குள் வந்திருந்தோம்.... இங்க என் ராசா நீ பசிதாங்க மாட்டயென்று என் பாதிக்கஞ்சி தந்திருந்தேன் இங்கே பிணிதாங்க முடியாமல் என்னை பிரிந்துதான் சென்றீரோ...! பாவியவன் குண்டு போட்ட; நாமும் படுகைய…

  5. ஈழம் என் உயிர் என்பார் தடைகள் உடைத்து தலைவன் வழியில் ஈழம் காண்போம் என்பார் வீர வசனம் பேசித் தம்மை விசுவாசி என்றும் கூறி வீணே காலத்தைக் கழிக்கின்றார் உணவின்றி மக்கள் உழல்கையில் உள்ளம் இரங்கார் ஒருபிடி உணவும் கூட உண்மையில் கொடார் கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு காப்பாற்றுவார் போல் மாற்றார் முன் கதறித் துடித்து நாடகமும் ஆடுவார் தன்னைத்த் தானே பீற்றித் தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து தானே தன்மானத் தமிழன் என்றுவேறு எக்காளமிடுவார் வார்த்தைகளில் வண்ணம் வைத்து வருவோரை மயக்கி வக்கணையாய்ப் பேசி வலைவீசி வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார் இத்தனை கேடு கேட்ட தமிழனை தெரிந்தும் போற்றுவோர் மனிதம் தெரியாத மூடர்களே உணர்ந்தும் உறவு கொள்வோர் உலகறியா மூடர்கள் …

  6. உள்ளாடையும் கிழிந்து அந்தரங்கம் காட்டுகிறாள் கோயில் பிச்சைக்காரி.. அவளையும் தாண்டிச்செல்கிறார்கள் சாமிக்கு பட்டுச் சேலை சாத்த... http://www.ilankathir.com/?p=2593

    • 18 replies
    • 1.8k views
  7. விரல்களுக்கிடையில் புகைக்கும் வெண்சுருட்டைப் போலவே... என் இதயமும் கருகிச் சிறுக்கிறது! புகைந்த சாம்பலைப் போல... என் நினைவுகள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது! எல்லாம் தீர்ந்து... மூன்றாவது விரல் வந்து தூக்கி வீசும்வரை... அதன் போதையிலேயே கிடந்தேன்! என்றாவது ஒருநாள்... அது எனைச் சாகடிக்கும் எனத் தெரிந்திருந்தும், அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்! நெருப்பும் புகையும் பழகிவிட்டது! சுட்டாலும் மீண்டும் மீண்டும் பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு! உள்வந்து செல்லும் புகையோடு என் பெரு மூச்சுக்களும் ஒருநாள் அடங்கிப்போகும்! அதுவரை இருட்டில் இந்த சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!

  8. பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை நீண்டவால்க் குருவி. வானத்தின் சோகங்களையும் வீதியின் தனிமைகளையும் பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும் துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை இழைத்துக் கூவியழுகின்றது. சேர்ந்து இசைக்கும் குரலொன்று வருமென்ற தேடலில் நியமம் தப்பாத இடைவெளிகளை சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது. நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில் சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான். இருளின் பெருக்கத்தொடு இயைந்து மௌனத்தின் இடைவெளியும் நீண்டு கனக்கத் தொடங்குகையில், அந்த இடைவெளிகளின் நிசப்தத்தில் மூச்சின் ஒலிகளை நிறுத்திக் காவலிருக்கத் தொடங்குகிறேன். இன்னொருகுரல் எங்காவது ஒலித்துவிடாதா.... நீள்கின…

  9. சுதந்திரத்தின் வலி தெரியாது தந்திரத்தால் வந்த சுதந்திரத்தை கொண்டாடுதாம் சிங்களம் தமிழனின் ரத்த வாடையுடன் கொண்டாடுதாம் சுதந்திரத்தை கேடுகெட்ட சிங்களம் ரெண்டுக்கும் சுதந்திரம் போய் கனகாலம் வடக்கில் ஒரு கூட்டம் சுதந்திரம் எங்கேயெண்டு தேட கிழக்கிலே ஒரு கூட்டம் உதயமாகுதெண்டு லூசுக் கதை கதைக்குது சுதந்திரம் போய் கனகாலம் வெள்ளை போட்ட பிச்சையை போராடி பெற்றதெண்டு கொண்டாடும் பே சிங்களமே சுதந்திரம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதை எப்பொழுது உணரப்போகிறாய்...?

  10. நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…

  11. Started by Puyal,

    தாய் மீது கொண்ட அன்பினால் தமிழ் வார்த்தைகள் என்னைக் கண்டு ஒழிந்திட துளியாய்க் கிடைத்த ஓர் துளியாம் தமிழ் எடுத்து கவிப்படையலுடன் கவியஞ்சலி செலுத்த வந்திருப்பது கோயிலும் சுனையும் கூடவே பனையும் தென்னையும் கடலோரக்காற்றிற்கு கவிதை பாடி நிற்கும் மேலல்வை பதி வாழ் வள்ளிப்பிள்ளை பெற்றெடுத்த பிள்ளை, உயிர் கொடுத்த தந்தையே உன் பணி ஓர் நாளில் உருக்கொடுத்த அன்னையே நீ என்னைக் கருவறையில் அமைதியாகத் து}ங்க வைத்து விளையும் காலம் வரும் வரை வரும் துன்பம் என்னும் வெய்யிலைத் தாங்கி உன் அன்பு என்னும் குடைக்குள் என்னைத் தாங்கி நிற்பாய் இயற்கையில் காலங்கள் மாறி மாறி வரலாம் இலத்திரனியல் நு}ற்றாண்டுகள் பல வந்தாலும் அணுவளவு கூட அன்னையே உன் அன்பு சிதைவதில்லை வ…

    • 18 replies
    • 2.8k views
  12. இன்று மொட்டவிழ்ந்த இனிய பூவே! உனக்கு இதயபூர்வமான எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! எந்தன் கண்களில் வாழ்க்கையின் இரகசியம் எதுவெனச் சொல்லும் பூவே நீ வாழ்க! வண்டுகள் கால்களில் மகரந்த தூதுவிட்டு மணியான காதல்செய்யும் பூவே நீ வாழ்க! தன்னிலை மறந்து துன்புறும் மனிதனுக்கு அன்பினை போதிக்கின்ற பூவே நீ வாழ்க! ஓர்நாளில் நீ வாடிப் போனாலும் என்நெஞ்சில் நீங்காத இடம்பிடித்து நீடூழி வாழ்வாய்! என் உயிருடன் உறவாடும் உன் மெல்லிய இதழ்களில் தருவேன் நான் என்றும் ஒருகோடி முத்தங்கள்!

    • 18 replies
    • 4.9k views
  13. காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…

  14. பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …

    • 18 replies
    • 2.9k views
  15. "யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணி…

    • 18 replies
    • 1.3k views
  16. காதல் மலர்ந்தது! காதலர் தினமும் மலர்ந்தது! காதலர் மனமும் மலர்ந்தது! வருடம் ஒரு தடவை மலர்ந்தது! வசந்தம் அந்நாளில் வீசி செல்வது காதலர்களின் சுதந்திர தினமது காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது படித்ததில் பிடித்தது சுட்டது வீரகேசரி

  17. அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...! இளங்கவி - கவிதை பூக்களும் பூக்காத கந்தக பூமியாய்.... பிணங்களின் குவியலில் நிரம்பிட்ட பூமியாய்..... கரும்புலி வேட்டைகள் பல நடத்திட்ட பூமியாய்.... பாய்ந்த இரத்தத்தின் ஈரம் காயாத பூமியாய்..... நாம் வாழ்ந்த பூமியின்று நடுத்தெருவில் தத்தழிக்க நாய்களும் நரிகளும் நக்குத் தீனிக்கு அலைகிறது..... புத்தரின் சரித்திரம் புதைந்து கிடக்குதாம்..... அதை புனரமைத்துக் கட்டிவிட புத்த பிக்குகள் அலையுதாம்.... போய்விடுங்கள் இங்கிருந்து எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது..... நீர் விதைத்துவிட்ட விதைகளின்று முளைப்பதற்காய் தவிக்கிறது..... அநியாயத்தின் வெற்றி அதிக நாள் நிலைக்காது…

  18. இவனும் எழுதுவான்... ஈழ.. வரைபடம் வற்றியதில் வயிற்றைக் கலக்குகின்றதாம்... வான்புலி யாவும் முடங்கிப்போயிற்றாம் கடல்புலி எங்கோ காணாமல் போனதுவாம்.. இராணுவத்துக்கே வெற்றி வெற்றியாம்... சொல்வார் சொல்லட்டும் தமிழா... நடப்பு...இதய நமைச்சலா உனக்கு தோல்வி என்ற சொல் துவள வைக்கிறதா உன்னை நீ என்ன ஆற்றாமை கொண்டு அழப்பிறந்தவனா? உன் எதிரி பலம் மிக்கவன்தான்.. உலகத்தை திரட்டி நிற்கிறான் அதற்காக மண்டிபோட்டு மடிந்து போவாயா? அறு பதிலிறுக்காமல் மக்கிப் போவாயா? அப்படியானால் நீ தமிழனல்ல.. தமிழன் இருக்கிறான் வீரத்தமிழன்.. அவன் பதிலிறுப்பான் வரலாறுகள் பார் ரசியாவில் சிதைந்த கிட்லர் படைகள் சிதைந்த விதம் கேட்டுப்பார்... …

  19. அப்பா ஒரு அழகிய சிற்பி.. என்னை செதுக்கிய போது வலித்தது .. செதுக்கிய பின் என்னை பார்த்தா .. எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு .. பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா .. என் பார்வையில் அப்படியே ஆனால் .. உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று .. எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை .. இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் .. எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே .. பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் .. சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் .. மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என .. சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா .. என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை .. கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா .. பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் .. அவன் என்னைபோல எங்கு போனாலும் .. தன்னை காத்து கொள…

  20. Started by வானவில்,

    கைபிடித்து நடந்த கால்தடங்கள் என் பின்னால் வருகின்றன! ஆனால்... நான் இறுக பிடித்த கையையும் காணவில்லை.. ஊரி குத்தும் எனதூர் தெருக்களையும் காணவில்லை! காலமாகிப்போன தெருக்கள்.. ஊனமாகிப்போன உறவுகள்.. என் கண்தேடும் எனதூரின் அழகை காணமுடியவில்லை! கவிபாடும் பனைமரங்கள் தலையறுந்த முண்டங்களாக.... பேயாட்டம் ஆடும் தென்னைகள் பேச்சு மூச்சற்று உறங்குகின்றன! ஊர் அரண்மனையாக திகழ்ந்த கோவில் வௌவால்களின் இருப்பிடமாக.... மழைக்காலத்தில் கூட புல் முளைக்காத எனதூர் மைதானங்கள் பற்றைகளாக.... கோவில் தேர்முட்டியில் குடியிருக்கும் ஆட்டுக் கூட்டம் எங்கே.. மடிந்து விட்டதா.......? கோவில் மடத்தில் கச்சான் விக்கும் ஆச்சியின் குரல் எங்கே..... ஓய்ந்து …

  21. யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…

  22. நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…! வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய் போராட்டம் நிகழ்கிறது….! நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும் நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்….. ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி துரோகம் அநியாயம் வசைபாடல் நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில் போராடியோர் குரல்களும் உயிர்களும் நசுங்கிக் கொண்டிருக்க நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது. செய்திகளும் அறிக்கைகளும் கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக…. எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும் புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின் …

  23. நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. ஆனையிறவின் நாயகனே வன்னிவிக்கிரமவில் புயலவனே..! தீரத்தின் விளைநிலமே வன்னியின் செல்வ மைந்தனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. தமிழர் சேனைத் தலைவனின் வீரத் தளபதியே தலைவன் செய்திகள் சேருமுன் சாதிக்கத் துடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. கூவி வந்த யாழ்தேவி புரட்டி விட்டவனே திமிரெடுத்து வந்த சிங்களத்தின் கதை முடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீர…

  24. அன்றைய இட(இதய)ப் பெயர்வும் அவளும்.... கவிதை - இளங்கவி முகத்தில் சிறுமுடிகள்... அதுதான் மீசையாம்..... சொல்லக்கேட்டதும் உடலில் ஓர் சிலு சிலுப்பு..... சிட்டுக்குருவி சிறைபிடிக்க இந்த சின்னப்பறவைக்கும் ஓர் ஆசை.... மலர் மஞ்சத்தில் படுப்பதற்கு மனதில் ஆசையெனும் பேரலை என் ஆசையெல்லாம் அடக்கிய அந்த ஓர் இடப்பெயர்வு...... ஆம்.. அன்று முகாமில்லில்லை உறவினரின் முற்றத்தில்...... அந்தக் கூட்டத்திலும் அழகான ஓர் பொற்சிலை.. என் ஆசைப் பேரலைக்கு அணைபோட்ட ஓர் தங்கச்சிலை...... என் அகதி நிலை புரியவில்லை அடிவயிற்றுப் பசிகூட தெரியவில்லை.... மூளைமுதல் முழங்கால் வரை முழுவதும் நிரப்பியது அழகான அவள் பிம்பம்...... பார்க்க மறுத்தாள் பி…

  25. Started by கோமகன்,

    வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.