கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....நான் சொல்லிவிடப்போகிறேன் ....?எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....புரிந்…
-
- 3 replies
- 5.3k views
-
-
ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…
-
- 0 replies
- 4.3k views
-
-
இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்
-
- 5 replies
- 865 views
-
-
ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்... ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித் தேட ஏலாதெண்டு’ திண்டவனைக் காப்பாற்றும் ஆணைக் குழுக்கள் முடிவாக்கும் இன்னும் எத்தனை வருஷங்கள் இவன் நோன்பு… இவன் போல் இன்னும் எத்தனை எத்தனை தகப்பன் தின்னிகளோ!... ஆடி …
-
- 1 reply
- 912 views
-
-
பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 740 views
-
-
கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.
-
- 1 reply
- 2.6k views
-
-
பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா பள்ளிப் பருவமதில் பகிடியாய் கடந்த நாட்கள் பாலர் வகுப்பினிலே பாட்டி வடை சுட்ட கதை படித்து பகுத்தறிய மறந்த நாட்கள் பக்கம் வந்து சீண்டுதம்மா புளியடிப் பள்ளியிலே புழுகத்தோடு பயின்ற நாட்கள் புட்டும் முட்டைப்பொரியலும் பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள் புரையேறி நெஞ்சமெங்கும் புத்துணர்வாய் கிடக்குதம்மா அம்மன் கோவிலிலே அழகான வ…
-
- 0 replies
- 854 views
-
-
மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
-
- 0 replies
- 947 views
-
-
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா? [கீதன்][19 - 07 - 2016][சமூகம்] எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும் மின்னாமல் முழங்காமல் பம்மிக்கொண்டிருந்தா பாவப்பட்டு தருவாங்கள் வல்லரசையே வளைச்சுப்போட்ட எங்களுக்கு தமிழரசை மலரவைக்க தெரியாதோ? இப்பிடித்தானே அந்த எடுபட்டு போனவனும் சொல்லிவந்தான். கனநீளா அவனையும் காணலையே. அறுபது வருசமாக அரசியல் ச…
-
- 0 replies
- 873 views
-
-
நாடிழத்தல். நான் பயணப்பட முடிவெடுத்த போது காலத்தின் துயரத்திற் பழுத்த மனங்கள் முதுவேனிற்கால மரங்களிற் தொங்கிக் கொண்டிருந்தன. வாழ்வென்னும் சுடர் அவிந்து விழுமியங்களின் சுவடுகள் அழிந்த வெளியினூடு செல்லும் போது வழிகாட்டுவதற்கு ஆட்காட்டி போதுமென்று நினைத்தேன். நானொரு நாடோடியாகக் கூடுமென்றும் தூரங்களைக் கடக்கும் போது எழுத்தாணியிற் கவிதை சுரக்குமென்றும் நினைப்பவர்கள் என்னை மன்னியுங்கள். இருந்த நாட்குறிப்புக்களையும் எரித்துவிட்டே பயணிக்கிறேன். நான் வழிப்பறிக்கு அஞ்சியவன். காலம் நெடுகிலும் தனித்தழும் மரங்களை மூடிக் கிடக்கும் புழுதியை அள்ளிப்பூசிக் கொள்கிறேன். உருவழிய, உதிர்ந்த இலைகளைத் தழுவும் …
-
- 1 reply
- 850 views
-
-
என்னவள் எனக்கு தந்த ....அத்தனை நினைவு பொருட்களும் .....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என்னையும் அவளையும் ....ஓவியமாய் வரைந்ததை ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என் காதலை திருப்பி தா ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....வலிகள் நெருஞ்சி முள்போல் ....குத்துகின்றன அவளுக்காக ....காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!அவளுக்காக எழுதிய அத்தனை .....கவிதைகளையும், கிழித்து விட்டேன்....வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....ஆயுள் வரை கவிதைக்காக ....ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!+கே இனியவன் காதல் சோக கவிதை உன்னை மறுக்கும் நேரத்தில்....என்னை மறக்கிறேன் ....உன்னை நினைக்கும் நேரத்தில் ...என்னை மறக்கிறேன் .....!!!என்னை மறக்கிறேன்...உன்னை நினைக்கிறன் .…
-
- 19 replies
- 31.5k views
-
-
2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை. 1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும். தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் * எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மலர் ஒன்று மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது.. காதலுக்கு காவலுக்கு அல்ல.. காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!! (அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. ) வெண்ணிற மேகங்களுக்கு சிவப்பு வர்ணம் தீட்டும் மலர்கள்.. தமக்குள் பேசிக் கொள்வது தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! பெண்ணுக்குள் நிலவை புதைக்கும் உலகம் தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து நிலவு மூழ்கி எழுகிறது என்ன கொடுமை இதுன்னு...!
-
- 11 replies
- 1.2k views
-
-
என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும் என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 968 views
-
-
நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …
-
- 1 reply
- 1.7k views
-
-
தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …
-
- 1 reply
- 1.3k views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது …
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…! பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார். மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர் “ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும் தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார். பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில…
-
- 3 replies
- 1.2k views
-
-
உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்
-
- 22 replies
- 30.2k views
-
-
சிறு பொறி - தீபச்செல்வன் மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கறியலில் ஏறியமர்ந்த தெருக்களில் உள் உறிஞ்சிய பெருமூச்சு நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி தனை அழித்த நாட்களில் நிராகரிக்கப்பட்டவனின் முனகல் தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட அடம்பிடிக்கும் குழந்தை போலோரு கவிஞனின் குரல் அதிகாரத்தை எதிர்த்தமையால் கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் இரகசிய முகம் மூ…
-
- 0 replies
- 882 views
-
-
-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் …
-
- 5 replies
- 2k views
-
-
உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01
-
- 3 replies
- 2k views
-
-
அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 971 views
-
-
வைரமுத்துவின் உதவியாளர் ஆர். அபிலாஷ் - எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன். என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தே…
-
- 0 replies
- 2.6k views
-
-
காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 1.1k views
-