கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வள்ளுவன் காதல்-1 மெல்லிராப்போது வான மேக மண்டலத்தின் கண்ணே வெண்ணிலா ஊரும் சற்றே விசும்பிடை மறையும்-மீண்டும் எண்ணிலா ஜாலம் காட்டி இதழ்க் கடை முறுவல் கூட்டி கண்ணினைச் சிமிட்டி நாணிக் களிப்புறு முகத்தைக் காட்டும். அவ்விராவதனில் தன்றன் ஆருயிரனையள் தன்னைக் கவ்விய இதழினூடு களிப்புறச் செய்தான் காளை. நாணிய பெண்மை அங்கே நகைத்தது-இதழ்கள் தன்னைக் கோணியே நெளித்து "உங்கள்குறும்பினைநிறுத்துங்(கோ)" - என்(று) ஆணிடம் சிணுங்கக் காளை ஆயிரம் சரசம் செய்தான். பூமகள் நெற்றிதன்னில் பொலிந்த குங்குமத் தூள் - அன்னான் மார்பினிற் புரள, கூந்தல் மலர் இதழ் கொட்ட - பெண்மை சோர்வினிற் துவண்டு வாயின் சொல்லற, முனக - அங்கோர் காவியம் பிறந்தது, அன்போ காமுறச் சிறந்தது. இத்தனை நிகழ்வும் ய…
-
- 0 replies
- 769 views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-
-
நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... ஏடும் எடுத்ததில்லை ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை ஏர்போட் ஏறி இறங்க எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்.. பாடமும் படிச்சதில்லை பட்டமும் பெற்றதில்லை பகட்டும் எனக்கு இல்லை.. எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்.. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... **** வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான் மடி மீது ஊஞ்சல் கட்ட மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன் காவல் காக்க நான் நாயும் இல்லை உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை கட்டிலில் …
-
- 6 replies
- 1.1k views
-
-
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
-
- 7 replies
- 2.4k views
-
-
பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்
-
- 4 replies
- 728 views
-
-
காதல் அழுகிறது ... என்னை காதலித்த என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல் போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே - தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள் தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!
-
- 0 replies
- 672 views
-
-
கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நம்ப தமிழ்நாடு சினிமா ராஜ்ஜியத்தின் ஆஸ்தான கவிஞர்கள் வைரமுத்துவும் வாலியும் கவிதை வாசித்தால் எப்பிடி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை....இதை நீங்கள் யாரவது கண்டினியூ பண்ணவும்... வைரமுத்து… அன்று சர்க்காரியா சொன்னார். நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று. ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய். வானில் உள்ள தேவர்களின் எ…
-
- 16 replies
- 4.2k views
-
-
தேவியே, தேவாரம் பாடும் பக்தன் நான் ஆவியே ஆராதனை உனக்கானபோது ஆரவாரம் எதற்கு தாரை தப்பட்டைகள் எதற்கு - உந்தன் முத்திரை ஒன்று என்மூச்சாக ஆகாதா! அபிசேகமும் ஆராதனையும் உனக்கென் றானபோது உன்வரம் ஒன்றே என் வார்த்தைகளின் வளமல்லவா வாய்பேசா விட்டால் என்ன உன் னுதடுகளின் ஒவ்வொரு ரேகைகளும் ஊட்டச் சத்தல்லவா? மனமேடைதனிலே மழைபொழியும் அன்பில் உளிபொழியும் அம்மி உணர்வுகளில் உயிர்த்தேன் தனமிடையில் சரிந்து தலைபுதைய மகிழ்ந்து உயிரோடு பரவும் உறவாக வளர்ந்தேன்!
-
- 0 replies
- 636 views
-
-
நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்
-
- 4 replies
- 653 views
-
-
ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் …
-
- 0 replies
- 4.2k views
-
-
உன் காலடி ஓசையில்தானே என் இதயம் பாசை கற்றுக்கொண்டது உன் கூந்தலின் சுருள்களில்தானே என் இதயம் கனவைப் பெற்றுக்கொண்டது சிந்தையும் மையலில் சிதைந்தபோதுதானே கண்களும் காந்தமாய் கவர்ந்தபோதுதானே அந்தரத்தில் அந்தரித்து நின்சுந்தரத்தில் சுயம்புரள அதரத்தில் ஆதாரம்தேட நீ அகல நின்றாய்! சுட்டும் சொற்களுக்குள் உன்னை சிறையாக கட்டிக்கொள்ள வகையறியா கபோதி மீட்டும் உன்விரல் பிறப்பில் ஊற்றும் உணர்வில் ஈட்டும் என்மனமே இன்ப இராகங்களே!!
-
- 3 replies
- 534 views
-
-
உத்தரிக்கும் இரவு அசமந்தமாக நகரும் சரக்கு ரயிலாக எரிச்சலுாட்டியபடி நீளுகின்றது இரவு. கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் முட மறுதலிக்கின்றன உறக்கமற்ற விழிகள். தீர்ந்து போன சக்கரை டப்பாவைச் சுரண்டுவது போல மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்துப் போன மனது. இன்னமும் மக்கிப் போகாத இறந்த காலத்தின் நினைவுப் புழுக்கள் நெளிந்து நெளிந்து மூளையை தின்னுகின்றன. அப்போதுதான் வீதியோரத்தில் அயரத் தொடங்கிய இராப் பிச்சைக்காரனை அப்புறப்படுத்தும் - மாடி வீட்டுக் காவலாளியின் தீவிரத்துடன் கண்களில் குத்துகிறது காலைச் சூரியன். ஓ.... ஒரு இரவைக் கடப்பதற்குள் ஒரு மாமாங்கத்தின் உத்தரிப்பு. 2.ஒரு தேவதையின் கனவு. எண்ண இழ…
-
- 0 replies
- 507 views
-
-
நீ என் தேகத்தின் மேல் கொண்ட மோகத்தினால் என் மனதை காதல் வார்தையால் வசப்படுத்தி மானத்தைச் சிதைத்து தலை கோணச் செய்து விட்டாயே! பூவின் தேனைச் சுவைத்து மற்ரொரு பூவினைத் தேடும் கருவண்டினைப் போல் என் வாழ்வினை கேள்விக்குறியாக்கி என் குடும்பத்திற்கு இழுக்கினை உண்டாக்கி விட்டு.... உன் இச்சைக்கு மறு துணை தேடுகிறாயோ? இதோ வருகிறேன் விளையாட!! காதல் விளையாட்டா? மரண விளையாட்டு... புலியினை முறத்தினால் விரட்டிய வீரத்தமிழச்சியின் வம்சமடா நான்! தன் மானம் சிதைத்தவனை உயிரோடு சிதைக்காமல் சிதையில் விழமாட்டேன்! பெண் கொஞ்சி மகிழ்ந்தால் மலர்... கொதித்து எழுந்தால் புயல்... நீயும் உணர்வாய் என் காலடியில் உன் உயிரினை விடிகையில்... இதோ வருகிறேன் ! நான் http://panip…
-
- 1 reply
- 908 views
-
-
யாழ் நிலம் 0 தீபச்செல்வன் ---------------------------------------- 01 குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது நிலம் அள்ள வரும் கைகள் யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன இந்த யாழ் உடைந்து போகட்டும்! அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!! என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன் யார் யாரோ வந்திறங்கி யாழெடுத்து எறிகிறார்கள் வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும் விளம்பரப்பலகைகளின் நிழலில் அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு யாழோடு நிலத்தை யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத் தின்று கொண்டிருக்கின்றனர் நகரெங்கும் நிலமெங்கும் …
-
- 0 replies
- 806 views
-
-
தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்; மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத் பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன http://www.jdslanka....-05-27-13-16-53 POEM WITH DHEPAM TV INTERVIEW Listen My poem and interview http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137 தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்…
-
- 41 replies
- 10.5k views
-
-
பக்கத்துவீட்டுக்காரன் செத்து புழுத்து மணந்தாலும் எட்டிப்பார்த்து ஏன் எண்டு கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்... இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் வாழ்கிறோம். எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் வாழும் என் நண்பன் ஓடி வருவான் அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன் கிழமையில் ஒருநாள் எண்டாலும் அவன் வருவான் இல்லையெண்டால் நான் போவன் பிறந்தநாள் மண்டபத்தில் கதிரை காணாமல் வருது கொத்துரொட்டியும் பாணும் பருப்பும் ரோல்சும் வடையும் உடன் ஆட்டிறைச்சியும் புட்டும் இடியப்பமும் சொதியும் சம்பலும் ஒடியற்கூழும் இன்னும் தமிழ்க்கடைகளில் விற்பனைக்கு இருக்கு கோயில்களும் திருவிழாவும் தேரும் தீர்த்தமும் கும்பாபிசேகங்களும் …
-
- 1 reply
- 892 views
-
-
தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன் பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில் தரை இறங்கும் செங்கால் நாரைகளாய் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. *என கவிதையிலே நீ வாழ ஈழம் கதறியழும் நியாய ம…
-
- 7 replies
- 1.1k views
-
-
விளக்கு கம்பங்கள் விடுமுறை இன்றிரவிற்கு இரவுக்காவலாளி வேலை ஞாயிறு வர காத்திருந்த திங்கள் குளமும், எரியும் நிறைந்த கார்காலம் முடிந்த முன்பனிக்காலம் குளத்தில் அன்னம் ஏற்படுத்திய நீர்த்திவலை தொடமுன் கரையை தொட நீந்தியதிலோன்று அகாலத்திலிருந்து காத்திக்கிடந்தவனின் நீர்த்திட்டில் வடக்கே பலமைல் பிரயாணம் சென்று நடுநிசியில் வீடு திரும்பிய குடியானவன் மனம்போல் ஆரவாரமின்றி அமைதியாய் சூரியகாந்தி ஆதவன் வரவைநோக்கி சரக்கு ரயில் தண்டவாளத்தை கடந்து வெகுநேரம் கழிந்த பின்னும் கையசைத்தபடி காலைக்கடன் முடிக்க சென்ற சிறுவர்குழாம் ஓட்டமும் நடையுமாய் வரப்பில்போகும் அன்னம்மா இடையில் மோதும் தூக்குவாளியின் ஓசைகேட்டு நிமிர்ந்த நடவுச்சிலைகளின் ச…
-
- 0 replies
- 974 views
-
-
அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல. நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் நுரிவத்தவில் வாழவில்லை. பின்னர் அவர்கள் வடக்கின் மகளீரிடம் வந்தார்கள் நான் பேசவில்லை கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா இவர்கள் என் சகோதரிகளல்ல. பின்னர் அவர்கள் வேறு தோல் நிறம்கொண்ட பெண்ணிடம் வந்தார்கள் கூட்டாய் எட்டுப்பேர் விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் அவள் வெளிநாட்டவள் என்பதால். அந்தக கோரக் கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
கவிதை அந்தாதி ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம். குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம். எங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன். முதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.
-
- 1.9k replies
- 182.1k views
- 2 followers
-
-
என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால் ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது கொடியது ... மனிதபிறவி கொடியது ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை
-
- 1 reply
- 1.3k views
-
-
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாத…
-
- 1 reply
- 759 views
-
-
இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் 1985 மே மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்தப் பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கன…
-
- 4 replies
- 1.1k views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உ…
-
- 1 reply
- 637 views
-
-
இன்றோடு.....! இன்னுமொரு ஆண்டு . எமைக் கடந்து செல்கின்றது!, முள்ளி வாய்க்காலின், வெள்ளைக் கடற்கரையில், துளை போடும் சிறு நண்டுகள், இடை நடுவில்....., துளையிடுதலை நிறுத்துகின்றன! ஏதோ...! அவற்றின் கால்களுக்குத், தடை போடுகின்றன! வேறென்ன...? இடை நடுவில் எமைப் பிரிந்த, எங்கள் சொந்தங்களின், எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்! உழுது விதைக்கப் பட்ட, பாளையங்கோட்டையின் நினைவில், மனம் புதையுண்டு போகின்றது! அன்றைய..., பாஞ்சாலங் குறிச்சியின், குறு நிலத்து மன்னர்கள், இன்றைய ராஜதந்திரிகளாய், எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்! பதின்மூன்று..பதினாலு., பத்தொன்பது என்று, தீர்வுத் திட்டங்களின், வரிசை நீள்கின்றது! எல்லோரும்....! இணைந்து வாழும் …
-
- 12 replies
- 2.9k views
-