கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
மூக்கறையனிசம். முன்னுரை: தேசம் என்றான் ஒருவன் தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன் தேவையில்லை இவையெல்லாம் மாயையென்றான் மூன்றாமவன் முதலாமவனுரை: என்னிடம் தேசமில்லை தேசம் எனக்குத் தேவையில்லாதிருந்தது இருப்பினும் தேசம் உள்ளவர்கள் என்னுரிமைகளை மறுத்தார்கள் என்னுரிமைகளை மீட்டெடுத்து உயிர் கொடுக்க எனக்குமோர் தேசம் தேவையென தங்களையறியாமலே எனக்கு அறிவுறுத்தினார்கள் தமக்கெனத் தேசமிருந்ததால் என்னை ஒடுக்கியவர்கள் தேசியத்தை அவர்கள் என்மீது திணித்தார்கள் தேசம் என்பது என் இருத்தலின் தேவை தேசம் இன்றி என்னால் தப்பி வாழமுடியாது ஆகையினால் நான் தேசம் வேண்டிப் போராடுகிறேன். யாருக்கெனவும் ஒரு தேசமின்றி உலகம் முழுவதும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
எது சுகமோ? தொடர் - 2 அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா?
-
- 12 replies
- 2.3k views
-
-
அம்மா அம்மா நீதான் எந்தன் உயிரம்மா..... கருவை உயிராக்கி சுமையை இதமாக்கி வலியை சுகமாக்கி உதிரத்தைப் பாலாக்கி அன்பை உணர்வாக்கி மொழியைத் தமிழ்ழாக்கி என்னை உருவாக்கி உன்னை மெழுகாக்கி என்னை ஒளியாக்கிய என் அன்புத்தாயே_________________
-
- 18 replies
- 2.3k views
-
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
சொல்லு தலைவா ! எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா நில்லு தமிழா! நீ பக்கம் நிற்க அண்ணன் படை வெல்லும் அல்லவா! (சொல்லு) கண்ணில் தெரியுதெங்கள் தேசம் - நாளை கையில் வந்து சேருமல்லவா! வையம் போற்றுமொரு நாடு - நாளை எங்களது ஈழம் அல்லவா! (சொல்லு) பாவம் கொஞ்சம் பாரு! ஓடச் சொல்லிக் கேளு!! ஓடாப்பகை நாமழித்து வீடனுப்பலாம் ஈழமண்ணை மீட்டெடுத்து நாடமைக்கலாம். வன்னி மண்ணைப் பாரு - மண்ணை தொட்டு நெற்றி பூசு வீரம் வாழும் மண்ணு என்று வாழ்த்துப்பாடலாம் வீழ்ந்த வீரர் காலடியில் பூக்கள் தூவலாம். அணைகட்ட உழைத்திட்ட அணிலாய் - நம் அண்ணனின் அணியிலே செல்வோம். பகையென்று வருகின்ற எவர்க்கும் - நம் மண்ணிலே புதைகுழி அமைப்போம் ப…
-
- 11 replies
- 2.3k views
-
-
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …
-
- 5 replies
- 2.3k views
-
-
என் தங்கை இசைப்பிரியா கண்ணுக்கு எதிரிலேயே கற்பழித்துக் கொல்லப்பட்ட அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு ஒரு கையாலாகாத அண்ணனின் கண்ணீர் அஞ்சலி. என்ன அழகடி உன் தமிழும் தைரியமும்! சின்னஞ்சிறு இதழ் விரித்து சிங்கார உச்சரிப்பில் செய்திகள் வாசிப்பாயே! இப்போது நீயுமொரு செய்தியாகிப் போவாய் என்று கனவிலேனும் யோசித்தாயா? இப்போதுதான் பூத்த பனித்துளிகூட விலகாத ஒரு காலைரோஜாவின் அழகைக் கொண்டவளே! எப்படியடி சிக்கிக் கொண்டாய் திமிர் பிடித்த சிங்களனின் திணவெடுத்த கரங்களுக்குள்? ஆடையின்றி பிணமாக ஒரு சிங்கள காட்டுக்குள் நீ படுத்திருந்த காட்சி...! நீ துடிதுடிக்க கொல்லப்பட்ட போதும், உன் துணிமணிகள் அவிழ்க்கப்…
-
- 13 replies
- 2.3k views
-
-
இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந…
-
- 8 replies
- 2.3k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)
-
- 10 replies
- 2.3k views
-
-
நான் ஒர் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு மார்க்ஸ் எனது மானசீக குரு மாவோ சித்தாந்தம் மானிடத்தின் சிறப்பு பெடல் கஸ்ரோ பெருந்தலைவன் நவயுகத்தின் செகுவாரா புரட்சியின் செந்தணல் அம்பேத்கார் தலித்களின் அழியாச் சுடர் நான் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு கவிக்கோர் கண்ணதாசன் கதைக்கோர் சுஜாதா கலைக்கோர் கமல் கடவுளுகோர் பாபா புலிகளின் தோல்விக்கு காரணம் தனிமனித வழிபாடு
-
- 7 replies
- 2.3k views
-
-
”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…
-
- 2 replies
- 2.3k views
-
-
விழித்தெழு தமிழா விழித்தெழு- நீ விடியலின் எல்லையில் விழித்தெழு... பகையவர் கோட்டைகள் சரித்திடுவோம்- புலியென ஆகியே புறப்படுவாய்... இது வரை இருந்தாய் இது போதும் இனியும் எழுவாய் புயலென நீயும்... பதுங்கும் புலியது பாய்வது முறையே படுக்கைக்கு போகுமா பாருக்கு உரைப்பாய்... கிளி பிள்ளை வந்தின்று கிண்டல்கள் பொழியுது பார்த்தே சிரித்து புலியது பதுங்குது... அர்த்தங்கள் புரிவாய் அணியாய் திரள்வாய் பறையது அடித்து பட்டாசு கொளுத்து.. பொய்யா பகையதின் பொய்யதை எறிவாய்... உன் தமிழ் வெல்லும் உரித்துடன் ஏற்ப்பாய்...
-
- 12 replies
- 2.3k views
-
-
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!! ------ அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள் யார் எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
-
- 4 replies
- 2.3k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் …
-
- 11 replies
- 2.3k views
-
-
புல தமிழா!!!! உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும் உனக்கு தேவை சிங்க கொடி துடுபாட்டமும் சிவஜியின் நாயகன் ரஜனியும் சின்ன திரை மெகாசீரியலும் சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின் சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என சிந்தாந்தம் பேசுகிறாய் சிவாஜி பகிஷ்கரிக்க கோரின் சினிமா வேறு அரசியல் வேறு என சீற்றம் கொள்கிறாய்....... சின்ன திரை வேண்டாம் எனின் சீரியல் இல்லை எனின் சீவியம் என்கிறாய் முடியவில்லை உன்னால் உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும் உன் பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லை.................
-
- 16 replies
- 2.3k views
-
-
செந்தமிழ் தாயே... செந்தமிழ் தாயே - நீ அந்தமின்றி வளர்க.... பைந்தமிழ் இனிமை... எந்நாளும் பெருமை - என்றும் உலகிலோங்கி வளர்க... தமிழ்த்தாயே..நீயும் வாழ்க-இந்த தரணி வணங்க வாழ்க... தமிழின் பெருமை மறந்து தமிழன்..... தாய் நாட்டிலும்... வாழ.. தமிழை மறந்து.. தரத்தையிழந்து.. வேற்று நாட்டிலும் வாழ... வெறும் பிழைப்புக்காக பேச்சு என்ன பேச்சு.... தமிழ்த்தாயின் பிள்ளை தமிழ் மறந்து போச்சு... சங்கத்தமிழ் வந்து யாதென மொழிய-தமிழ்க் கொற்றவன் காத்த முத்தமிழே..எவ்வகையறிய... அழகுதமிழை.. ஆசைமொழியை பேசவென்ன வெட்கமா.... கொஞ்சும் நடையை.. கோலத்தமிழை..பிஞ்சுவிதழ்கள் பேசத்தடையா... இலக்கியநூல்களைத் தூசு தட்ட இலக்க…
-
- 12 replies
- 2.3k views
-
-
பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்... பால பாடங்களில்... பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு...! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை... ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை.... தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்... புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் …
-
- 19 replies
- 2.3k views
-
-
-
என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…
-
- 8 replies
- 2.3k views
-
-
பனிச் சோலை உன்னைப் பகலெல்லாம் பார்த்துக் கனிச்சாற்றே சொன்னேன் கவிதை_தனியே உன்னை மறந்து இங்கே உயிர்வாழ்வதென்றால் நினைவிளந்து போகாதோ என் மனம் மூச்சாகி என் மனசில் மோக நினைவூட்ட நீச்சலிட்டு ஆடிடும் நித்திலமே_பூச்சாரம் போல் என் இதயத்தில் பூத்தவளே ஏந்திழையுன் எண்ணமின்றி இன்னொன்று இல்லை இனி தூங்க மறுத்துத் துடிக்கின்ற கண்ணிமையும் ஏங்கி தவிக்கும் இதயமும்_பூங்கொடியே உனை எண்ணி புலம்பிடுதே உன் இன்முகம் காண துடிக்குதே என் கண் நம்மை தொட்டுப் போன தென்றல் நாளை வருமென்றே_நான் இமை கொட்டாதிருக்கின்றேனே துயிலின்றி உள்ளேன் துடித்து
-
- 10 replies
- 2.3k views
-
-
பேய்கள் கூட்டத்தில் இரண்டு பெரிய பேய்கள் சுடுகாட்டை ஆழ்வதற்கு அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும் ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை இரண்டு பேய்களின் வாய்களிலும் குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது இன்னும் வாயை கழுவக்கூட இல்லை சும்மா சொல்லக் கூடாது எங்கள் சனத்தை இரண்டுபேரும் நல்லாத் தின்றவங்கள் ஏவறை விட்டபடி வலம்வரும் பேய்களில் எமக்குப் பிடித்த பேய் எது? பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்? இல்லை தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது அவரவர் ஜனநாயக உரிமை தானே? நிச்சயமாக எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும் இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியா…
-
- 11 replies
- 2.2k views
-
-
என் நினைவுகள் நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன தினம் தினம் என் உணர்வுகளை உனக்குக் கூற நினைக்கின்றன என் வேதனைகளை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன வேதனைகள் வாட்டும் நேரத்தில் உன் தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன குரலின் மயக்கத்தில் துன்பங்கள் பறந்து சொல்கின்றன என் துயரங்களை கேட்டு நீ அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை உன் மேல் உள்ள பாசங்கள் அதைக் கூற மறுக்கின்றன என் சோகங்கள் என் பாதையில் தொடரட்டும் உன் பாதைகள் பூவாய் பூக்கட்டும் இனியவனே எங்கிருந்தாலும் நீ வாழ்க!!!!
-
- 7 replies
- 2.2k views
-
-
இளமைக்காலம் இதுவொரு இனிய காலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பட்டாம் பூச்சி போன்று படபடத்து திரியும் காலம் பட்டென்று பாசமும் சட்டென்று காதலும் நச்சென்று கோபமும் கூடியே வரும் காலம் துடி துடிப்புடனே உற்சாகத்துடன் துள்ளித் திரியும் -ஒரு இனிமையான காலமது
-
- 8 replies
- 2.2k views
-