Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உயிர் குடிக்காதே.. தீயே தன்னினத்தினில் அன்பும் தன்னையழித்தாலும் பிறரையழித்திடாப் பண்பும் இதயத்தில் நிகரில்லா உரமும் உன்னத உயிரினை ஈய்கின்ற வரமும் உள்ளவன் முனையினும் நீ நல்லதோர் தீயெனில் அக்கினி தேவனே..பஞ்ச பூதங்களில் பாகனே.. நல்லதோர் தமிழனின் உயிர் குடிக்காதே.. மாறாய் தீயவர் பொசுங்கிடும் தீயாயிரு.. கண்ணியம் மீறினால் கரியாக்கிடு.. அநியாயங்கள் செய்வோரை மாய்த்திடும்.. மரணக்குழியாயிரு..தீயே நல் நெஞ்சம் கொண்ட மனிதர் உயிர் மட்டும் குடியாதிரு

  2. குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று, இனிவரும், வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும், இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும், அந்தக் கணங்களில், அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும்...... கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ.. கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ.. கூடுமுடைந்து அங்கேயே தங்கிவிட துணியுமோ.. சாம்பல் பறவையின் கண்களில் இருந்து பெருவெளியில் கலந்தது அரூபமொன்று, கிளைகளில் இருந்து வழியத்தொடங்கிய காலத்தின் துயர் பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது. யாருக்குத் தெரியும் இனிவரும் வசந்தகாலத்தில் …

  3. அனுமானங்களை சுமந்து பரவிக்கொண்டிருந்தது இருளடைந்த சொல்லொன்று. உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை ஆதங்க பெருமூச்சுக்களை ஓரந்தள்ளி, வக்கிர நிழல்களை பூசினார்கள். பின், திசைகளை தின்று வியாபித்த கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள். அது நிர்வாணத்தை துகிலுரித்தது இருளடைந்த சொல்லின் மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி கொண்டாடத்தொடங்கினார்கள் தங்களுக்குள். அவள் காற்றில் நிறைந்த வக்கிரங்களின் வெப்பத்தால் உருகத்தொடங்கினாள் கொஞ்சம் கொஞ்சமாக ..................

  4. உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???

  5. ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…

    • 10 replies
    • 1.8k views
  6. அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …

  7. பல வருடங்களுக்கு முன்னர் எழுதிக் கைவிடப்பட்ட கவிதையொன்று இன்று தட்டுப்பட்டது. உங்கள் பார்வைக்கு. உயிர்த்தேன் வ.ஐ.ச.ஜெயபாலன் காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் * கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. * கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர…

    • 9 replies
    • 1.3k views
  8. 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…

    • 6 replies
    • 1.6k views
  9. உயிர்த்தெழுவோம் அள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வார்த்தை இனிக்கும் வண்ணக் கனவுகள் நின்று நிறைக்கும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணனை கதைக்கும் அப்போது இன்னும் சில நிமிடமே இருக்கும் இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும் அப்போதும் அந்த முகம் சிரிக்கும் சின்னக் கை அசைத்து விடை பெறும் ஒரு வண்ணம் ஓவியமாய் உயிர்பெறும் நல்ல காவியமாய் தேசப்புயல் கடக்கும் ஆம் ஒரு கரும்புலி கந்தகம் சுமந்து நடக்கும் பெரும் பகை மோதி வெடி வெடிக்கும் ஒரு உன்னத மனிதன் உயிர் விட ஒரே உன்னத இ…

  10. Started by poet,

    காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ . மாண்டவர் மீள்வதெல்லாம் ப…

    • 5 replies
    • 1.5k views
  11. உயிர்ப் பூக்கள் தமிழீழம் மலர்ந்து தன் மானத்துடன் வாழவே தானத் தலைவன் தரணியில் அமைத்தான் புலிப்படை எம் இனத்தை வதை செய்த பாதகரைத் திவசம் செய்ய தலைவன் வழியினில் உதித்த உயிர்ப் பூக்கள் நீங்கள். வானத்திலிருந்து விமானங்கள் குண்டு மழை பொழிந்தாலும் அந்நியப் படைகள் ஆயிர மாயிரமாய் வந்தாலும் சிரிக்கின்ற முகத்துடன் சிட்டாகப் பறந்து சென்று தேடிவந்த பகை விரட்டியடித்து பூரித்து நிற்பதே உங்களின் இலக்கு பார் முழுவதும் வியக்கும் படைப் பலத்தைப் பெற்றீர்கள் களத்தினில் எதிரிகளைக் கொன்று காலனை உம்மிடம் அழைத்தீர்கள் உங்கள் குருதி உறைந்த தமிழ்மண்ணை உயிராய் நேசிப்போம் தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும…

    • 6 replies
    • 1.5k views
  12. உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …

  13. Started by இனியவள்,

    யாரோ உன் கவிதைக்கு கை தட்டுவது எனக்கும் கேக்கிறது ஆமாம் ; அது உன் காதல் கவிதை என்பதால் இனியவள்

  14. உரிமை குரல் பாடல் ஒலி வடிவில் http://www.alaikal.com/voice.smil

    • 5 replies
    • 2.3k views
  15. உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! …

  16. உரிமைக்குரல் பாடல் ஒளி வடிவில் Click http://www.alaikal.com/video

  17. உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை...! மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்... தொடர்கிறது கறுப்பு யூலை புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல... துயரங்கள் சுமந்துகொண்டு தொடரும் காயங்களுக்கு நடுவில் நாளைய பொழுதின் விடிவுக்காக ஏங்கும் ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...! நீதி என்றைக்கோ செத்துப்போனது மனிதனேயம் எப்போதோ தொலைந்துபோனது அன்றில் இருந்து... நியாயத்தின் அர்த்தம் என்னவென்றே தெரியாத ஆட்சியில் இன்றுவரை... தொடர்கிறது கறுப்பு யூலை தொப்புள்கொடி உறவுகளின் தலைகள் அறுபட்டு உடல்வேறு தலைவேறாய் தூக்கி எறியப்படும் பிஞ்சுகளின் உடலங்களில் தோட்டாக்களால்... துளைகள் இட…

    • 6 replies
    • 1.5k views
  18. உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன் அணுங்கி ஒருகுரல் மீண்டும் சிணுங்குது தன்னையும் வெளிக் காட்டிட நினைக்குது இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம் இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள் ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள் தன்னினம் பிறனால் இழிக்கப் படினும் மகிழ்ந்து சிரித்துக் கருத்தினை உவந்து எங்களைப் பிழையென்று எப்போதும் ஏற்கும் சங்கடக் குழுவென்று உலகமே நம்புது இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை இவரின் செய்தியை கேட்கநாம் தயார்தான் காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு இராசிவ் காந்தியைக் கொன்றது புலிகளா…

  19. உருகுதே உருகுதே... கண்டேன் கண்டேன் சூரியனைக் கண்டு உருகி உச்சி குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு சிலிர்க்க கண்டேன் -அது ஆதவன் அணைப்பில் சிணுங்கவும் கண்டேன் சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:

    • 14 replies
    • 2.3k views
  20. ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர ... நான் யாரையும் பார்க்க ,,, விருமவில்லை ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

  21. எப்படி அழைக்கப்படும் நானில்லாத எனது வீடு யாருமில்லாத இன்றில்......... என் பெயரால் அழைக்கப்படமுன் அண்ணாவின் பெயரால், அப்பாவின் பெயரால், அம்மாவின் பெயரால், அம்மம்மாவின் பெயரால், அழைக்கப்பட என் வீடு......... எப்பவோ துளைத்து கறல் ஏறிய சன்னங்களையும், எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய வளைமரங்களையும், அண்ணாவை தொடர்ந்து எனது கீறல்களையும் சுமந்த வைரமரக்கதவுகளையும், மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து மங்கலமாய் நின்ற தூண்களையும், சுமந்த என் வீடு......... எப்படி அழைக்கப்படும் யாருமில்லாத இன்று. எல்லையோர ஒற்றைபனையும், வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும், செம்பருத்தியும் நித்தியகல்யாணியும் நாலுமணிப்பூச்செடியும் முற்றத்து மண் அள்ளி கொ…

  22. 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட…

      • Thanks
      • Haha
    • 4 replies
    • 866 views
  23. உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…

    • 20 replies
    • 4k views
  24. உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்... சடா கோபன் சித்திரையின் கடைசிக் கணங்களை காலம் உருட்டிக் கொண்டிருக்கிறது. ஓடி முடித்த தூரத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணிக்க முடியாத குழப்பத்துடன் நான் வாழ்க்கையில்..... ஓடி முடித்த தூரத்தை விட ஓட வேண்டிய தூரம் நீண்டதாய் தெரிகிறது. வயதில் ஓடி முடித்தது நீண்டதாயும் ஓட வேண்டியது மிகக் குறுகியதாகவும் தெரிகிறது. எத்தனை கோடி வயதுகளையும் எத்தனை கோடி வாழ்வுகளையும் இந்த நிலம் சந்தித்திருக்கும். போராட்டங்களோடு வாழ்வும் போரோடு வயதுமாய் காலம் என்னை கடந்து போய் இருக்கிறது..... விடுதலைக் கனவுகளின் விளைநிலத்தில் மெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.