கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
உலா - வ.ஐ.ச.ஜெயபாலன் நீலப் பாவாடையில் குங்குமமாய் எழுஞாயிறு கசிய பூத்தது விடலை வானம். வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள். எனினும் அன்பே உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான் இந்த வசந்த நாளை அழகாக்கியது, வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக. காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான் உலாவை ஆரம்பித்தோம். காடு வருக என கதவுகளாய்த் திறந்தது. சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய் வண்டாடும் மரங்களின்கீழ் உதிரிப்பூ கம்பளங்கள். என் அன்பே முகமறைப்பில் இருளில் இணையத்தில் கண்காணா தொலைவில்தான் இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க ம…
-
- 18 replies
- 2.1k views
-
-
உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…
-
- 14 replies
- 4.9k views
-
-
தலையிடிக்கிறது இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக , தூக்கமாத்திரை இல்லாத இரவுகள் இனி இல்லாமல் போகுமோ ? பயமாய் இருக்கிறது ........ வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும் புத்தகத்தை தொட்டால் , அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால் கோர்க்க இயலாமல் போன சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக , காதடைக்கும் ஒலி கடந்து ஒளியனைத்து விழி மூடினால் , ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........ அறுந்தறுந்து வரும்_அந்த நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு தற்கொலை செய்கின்றன ..... எங்கும் சகிக்க முடியாத மயான எரிதலின் வாசம் பரவ கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை , நிலவும் நீள் நிசப்தத்தில் அந்தரங்கமாய் அழுதுமுடிகையில் அநாதரவாய் அந்தரத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் நில்லுங்கள் மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு எங்கள் வாழ்க்கையை வனைய வேண்டாம் நிறையப் புனைகதை புனைந்து எங்களுக்கு அனுதாபம் தேடித்தரவும் வேண்டாம் நாங்கள் தொலைத்ததில் கொஞ்சத்தையும் சுமப்பதில் கொஞ்சத்தையும் அங்கங்கே எழுத்துப்பிழைகளோடாவது எழுதினால் போதும் நாங்கள் மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள் மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள் முளைத்து நிற்பவை எங்கள் கனவுகளின் சமாதிகளே மீட்பின் பெயரால் நடந்துகொண்டிருப்பது அழிப்பின் அதி உச்சமே இங்கு வசந்தம் என்பது வாடகைக்கு கூட இல்லை மறுவாழ்வு என்பது மருந்துக்கும் இல்லை ஒரு இரவுக்கும் பகலுக்கும் இடையில் பல …
-
- 4 replies
- 1.1k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள் (உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)
-
- 1 reply
- 724 views
-
-
[size=5]சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான் எனை தாண்டிஎனக்குள் நின்றவன் தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன், நிறுத்து உன் புலம்பல்களை நிறையறிந்தவன் நிகழ்த்தியவுன் தரமறிந்தவன் நான் என்றான். மௌனமாக்கிக்கொண்டேன் எனை! கழற்றிஏறி மௌனசட்டை உனை குற்றவாளியாக்குகிறது என்றான். விழிகளால் கேள்வி தொடுத்தேன். கேள்வி கேட்காதே, உனக்கான கேள்வியை தேடு_நீ விடையாய் மாறாதே மற்றவர்களுக்கு என்றான். தப்பிக்க திரும்பிப்பார்த்தேன் தப்பு செய்கிறாய் நீ உனக்காக இல்லாமல் எதுக்காக இருக்கிறாய் உன்னில் இருந்து ஆரம்பி என்றான் பதிலுரைக்க வாயெடுத்தேன் காதுகளை போத்திக்கொண்டவன் கற்றுக்கொள் தன்னிடம், எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான் …
-
- 1 reply
- 548 views
-
-
இதைப் பார்க்கும்போது வன்னியில் வாடிக்கொண்டிருக்கும் எம் குழந்தைகளின் நினைவுகள் வந்துபோயின...பின் ஒருகணம் வெளிநாட்டில் எம் உறவுகளின் பிள்ளைகளையும் நினைத்தேன்...கண்ணீர்களுக்குள் என்னால் கவிதைகளை தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை..ஆற்றாமையில் மனம் துடிக்கிறது... இந்தப்படம் உங்கள் மனங்களுக்குள் தூண்டிவிடும் உணர்வுகளை கவிதை ஆக்குங்கள்...
-
- 1 reply
- 1.1k views
-
-
துயர் காவிகளாய் இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள் முகம் மழுங்கிச் சிதைந்து எழுகிறது ஒளிமுதல் விதை விழுந்த நிலத்தில் கிளையெறிந்த பெருமரங்கள் இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன, நீண்ட வீதிகள் இனங்களை இணைத்துவிடவென்று மக்கிப்போகாத உடலங்கள் மீதேறிப் போகின்றன, முள்வேலிகட்டிய பகை, நெஞ்சுக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்புரை நிகழ்த்துகிறது. காற்றினில் கந்தகநெடி இல்லை வானில் மிகையொலி விமானங்கள் இல்லை கடலினில் செங்குருதி மிதக்கவில்லை தீசூழ்ந்து எம்மூர்மனைகள் அழியவுமில்லை இருந்துமொரு, தீபம் ஏற்றிட வழியில்லை மணியொலித்துக் காந்தள் தொடுத்து, கல்லறை தொழுதிடவொரு களமும் இல்லை. மண்சுமந்த வேழங்கள் நடந்த தடத்தில் கண்ணீர் சொரிந்த…
-
- 1 reply
- 588 views
-
-
ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்வாகும்! தென்றல் வந்த பாதையில் சென்றனவே சோகங்கள்! வாழ்வில் சேர்ந்த வலிகள் எல்லாம் வானில் திரண்ட மேகங்கள்! மழை நீரின் விந்தை மண்ணில்; இன்ப ஊற்றின் ஆரம்பம்! மீதம் உள்ள உந்தன் வாழ்வில் என்றும் பொங்கும் பேரின்பம்! உறவுகள் பலம் கொண்டு உவகையில் உருவாகும் சிநேகிதம் கரும்பாகும்; பகைமைகள் துரும்பாகும்; தோழமை மருந்தானால் நோய் நொடி நெருங்காது; வேதனையும் திரும்பாது; துணையாகும் வருங்காலம்! ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஊடக விபச்சாரம் கொழும்பில் குண்டு வெடித்தால் அது பயங்கரவாதமெனக் கூச்சல் தமிழன் மேல் குண்டு விழுந்தால் அவர் பேசா மடந்தையாவர் காசாவில் மக்கள் இறந்தால் காது கிழியக் கத்துவார்கள் ஈழத்தில் குழந்தைகள் இறந்தால் காதிலேயும் போட மாட்டார்
-
- 4 replies
- 2.4k views
-
-
ஊடக காரனா நீ...? மக்களின் தொண்டனாய் மன்றேறி வந்தவரே நீதியை கொன்றிங்கே நின்றென்ன உரைக்கின்றாய்..? பிழைகள் செய்தாரென்று பிழையாய் உரைக்கின்றாய் வதைகள் செய்வதற்கா வந்தாய் நீயிங்கே...? கும்பிடு போட்டுனக்கு குலவி வந்தால் தான் சந்திக்கு விடுவாயா சம்பந்த காறனே...? மறையது கழன்றாரென்று மன்றில் நீயுரைத்தால் செருப்பதை எறியாமல்- என்ன செங்கம்பளமா விரிப்பார்...? சுதந்திர தா்மத்தை சுடு காடனுப்பி விட்டு மன்ரேறி என் செய்வாய் மடையனே நீ சொல்லு...? விதி முறை போட்டென்ன விலையா பேசுகின்றாய்..? சீா் கேடி என்செய்வான்- அவன் சிந்தை இது காண்... மதியது தானிழந்தாய் மறையது நீ கழன்றாய் உடையில்லா அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும் அவள் அணிந்த ஆடைகளையும் அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள் படம்காட்டி செய்தியாய் செவ்வியாய் செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்….. இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாளாம்….. அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி….. ஆளாளுக்கு விளக்கங்கள் அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான். மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம் அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும் பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட விட்டு வைக்காத இனம் நாங்கள். நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான். விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....
-
- 38 replies
- 2.8k views
-
-
வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…
-
- 9 replies
- 1.5k views
-
-
உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..
-
- 12 replies
- 7.8k views
-
-
எப்போதோ நீ எழுதிய கடிதம் இப்போதுதான் எனக்குக் கிடைத்தது ஊர் எப்படி? உறவினர் எப்படி? உருக்கமுடன் கேட்டிருந்தாய் தோழனே நீயும் நானும் அப்போது பார்த்ததுபோல் இப்போது நம் கிராமம் இல்லை விமானத்தாக்குதல்களால் ஊரார் வீடெல்லாம் ஊனமாகிப்போய்விட்டது உன் வீடும் தப்பவில்லை எழில் மிக்க எமது கிராமம் எழிலுக்கு எழிலூட்டிய அம்மன் ஆலயம் கூட ஆக்கிரமிப்பாளரின் அராஜகத்தால் அடியோடு சாய்ந்து விட்டது தோழா வடை கடித்து தேனீர் அருந்தி வகைவகையாய் வம்புக்கதை வாய் வலிக்க கதைத்து சிரித்த வல்லிபுரத்தாரின் கடையும் பொல்லாத தக்குதலால் பொழிவிழந்து போய்விட்டது நீயும் நானும் பத்திரிகை படித்து நாட்டு நடப்பு எல்லாம் அலசி ஆராந்த் அந்த வாசிகசாலை இருந்த் இடம…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் க…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஆசையாய்ப் பெயரிட்டு மெல்ல நடை பழக வைத்து சிந்திய சோற்றுப் பருக்கைகளை சிரித்தவாறு சாப்பிட்டு " **கா " வை மிதிக்காதே என்று அதைக் கையினால் எடுத்ததுவும் பல முறை தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு நெஞ்சின் மேல் தாலாட்டியதவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றதுவும் மானத்தை விற்றுக் கடன் வாங்கி் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததுவும் தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்கக் காசு கொடுத்ததுவும் இருந்த நிலத்தை விற்றுக் கல்லூரிக்கு அனுப்பியதுவும் கண் பார்வை மங்கிய பின்னும் அதிகாலை எழுந்து பால் வாங்கி வந்ததுவும் இல்லாத பரிட்சைக்குப் பணம் கொடுத்ததுவும் வேலைக்கு சேர்வதற்காக உயிராய்க் கலந்திட்ட வீட்டை விற்ற…
-
- 0 replies
- 743 views
-
-
ஒத்தையா பிறந்தவனே பாசமா வளந்தவனே கத்ததை கண்டறிஞ்சு பேர்வாங்கி நடப்பாயா சொத்தையா போனபிள்ளை ஊரிலே பல இருக்கு மந்தையா வளத்தாரே அவர் பெத்தவரா செத்தவரா பதினெட்டு ஆயாச்சு பயிற்சிக்கும் அழைச்சாச்சு மினக்கெட்டு போயிப்போ ஒருவருசம் கழிஞ்சாச்சு தாய்நாடு காப்பதற்கு உன்போல மைந்தர்கள்-அதைத் தொட்டவனின் தலையெடுப்பர் அவரெல்லோ வீரர்கள். அமைதிப் படையாக ஈராக்கு சென்றுவர ஆசையாய் கேட்டாய்நீ பயந்துநான் போனேனே அமெரிக்கன் தனக்காக பலத்தோட ஆக்கிவைச்ச அரசியல் பலிக்களந்தான் பிறர்ஆவி போக்கிவைக்க அவனுக்கு ஒயில் வேணும் கால்மிதிச்சா நிலம்வேணும் சிவனுக்கும் மேலாலை புஸ்சுக்கு பவர்வேணும் கணக்குக்கு சொல்லிவைக்க வானளவு பணம் இருக்கு பிணக்கொன்றை தீர்ப்பதற்கு பிணக்குவியல் த…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது! எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது! அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்... சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!! சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து, அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம், பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!! பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி, பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று! வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!! பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும், பறித்து விட்டல்லோ தொடங்கியத…
-
- 14 replies
- 1.7k views
-
-
1987 அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத, அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....! ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு, எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு! ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள், பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்! அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை, என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!! மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே, "அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று, இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!! பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்... எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்.... "ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் …
-
- 30 replies
- 2.8k views
-
-
வந்த பகை கூடுகட்டி பள்ளிகொள்ள... நம் பள்ளிக் கூடங்கள்தான் கிடைத்தன போல்!? பாலகர் பாலுக்கழ... படித்தவர் நொந்தழ... காலங் கொஞ்சம் மாறிக்கொண்டிருந்தது....!! இந்தியம் போட்ட பரசூட் பொட்டலங்களை... பசியில் திரிந்த ஈழத்து நாய்கள்கூட, முகர்ந்து பார்த்துவிட்டு ... குரைத்தபடி தூர ஓடின! பெயருக்கு ஒரு..... "எல்லைமீறிய மனிதநேயம்"!? ஒரு விளையாட்டில் இரு விதிமுறைகள் என்பதைப்போல், சில(இ)ந்தி வலையில் அல்லாடியது ஈழப் போராட்டம்! பதுங்கியது போதுமென... பாயத் தயாரான வரிப் புலிகள், முதன் முறையாக... தனிக் கறுப்பாடை தரித்தனர்!!! மகாபாரதம் கண்ட ஒரு அரவானின் ஆரம்பமாய்... ஈழத்தில் உதித்த கருவேங்கைகளின் முதல்வனாய்... வேகமாய் முட்டிமோதி கனலான கறுப்பு வீரன்!!! உலகமெ…
-
- 5 replies
- 2.2k views
-
-
கப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ] சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான், நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்! கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன், எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்... மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!! "மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்! இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்! அவன் கருங்குழல் ஆயுதந்தனை …
-
- 10 replies
- 2.9k views
-
-
வணக்கம் என் அன்புறவுகளே! "ஊருக்குப் போக விருப்பமில்லை" என்ற இந்தக் கவிதை ஒரு .....தொடர் கவிதை! இதை தொடராக வாசிக்கும் பொறுமையும் பக்குவமும், யாழ் உறவுகளிடம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கதையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் கவிவரிகளில் பல விடயங்களை கதைபோலன்றி ஒரு சில வரிகளுக்குள் அடக்கிச் சொல்வது பொருத்தமானதாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த கவித்தொடரை ஆரம்பிக்கின்றேன்! (இந்தக் கவிதைத் தொடரை முடிக்கும் முன்னரே "ஊருக்குப் போகப் போறன்" என்ற நிலை வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்!) என் சின்ன வயதின் நினைவுகள்,நிகழ்வுகளிலிருந்து ஆரம்பிக்கப்போகும் இந்தக் கவித்தொடர் என் நினைவறிந்த 1987 காலப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. என்னையும், என் மண்ணையும்...…
-
- 8 replies
- 1.8k views
-
-
வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின! கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள் நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே! வான் பறவைகளின் இரைச்சல்களில்.. அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்! இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும், பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்! வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் , பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே... உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து, இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்…
-
- 13 replies
- 1.8k views
-