Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விரிந்த எனது தேசத்தின், பரந்து படர்ந்த வெளியெங்கும், அறைந்து நிற்கிறது வெறுமை! நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை, நம்பக்கூட முடியவில்லை! உங்கள் நினைவுகள் சுமந்த, உயிர்க்கூடுகள் மீது. கோரை படர்ந்திருக்க, எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால், உங்களுக்கு நிவேதனமாகின்றது! அரவங கேட்டுச் சத்தமிடும், ஆட்காட்டிக் குருவிகள், உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன ! எங்களுக்கெல்லாம் இப்போது, இரண்டு விலாசங்கள்! பிறந்த இடமொன்று, மறையும் இடம் இன்னொன்று! கிழக்கே உதித்து, மேற்கில் மறைகின்ற, சூரியன்களாக, எங்களை நாங்களே, உருவகித்துக் கொள்கிறோம்! அரேபியப் பாலைவனங்களிலும், உருகும் பனிப் டலங்களிலும், எங்களால் வாழமுடிகின்றது! நகருகின்ற ஒவ்வொரு வினாடியும், எங்கள் தேசம்…

  2. மாவீரர்நாளை முன்னிட்டு தமிழ்காற்று வானொலியினால் எனது குரலில் வெளியிடப்பட்ட மாவீரர் கவிதையின் ஒலி ஒளி வடிவம்.

    • 4 replies
    • 874 views
  3. எனக்குள் ஒருவன் இருக்கின்றான் எனக்குள் ஒருவன் இருக்கின்றான் அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான் அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த அவனியே என் காலடியில் அடைக்கலம் போல் தோன்றும் அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும் அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என் ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம் போல் அமைதியானதுண்டு. 01.06.2004 http://inuvaijurmayuran.blogspot.ch/2013/12/blog-post.html

    • 0 replies
    • 584 views
  4. ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க... ஆலயங்களில் மணியொலிக்க ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க தாமாகவே கண்பனிக்க தரணியில் மீண்டுமோர் கார்த்திகை கார்த்திகை செல்வங்களான கண்மணிகளே மாவீரர்களே பார்தனில் தேடுகின்றோம் பாசங்களே உங்கள் கோவில் கோவிலதை உடைத்துப்பகை கோலவிழாக்கள் கொண்டாடினர் பாவியர்க்கு சந்தோசமாம் பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை துயிலுமில்லங்களைத் துடைத்தாலும் துடைபடுமோ உங்கள்நினைவு விழிகளில் வழிகின்றநீர் விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ நிற்கின்றவிக் கார்த்திகையில்நினைவெல்லாம் நீங்கள்தானே காற்றென வந்தவரே கனலென நின்ற கற்பூரங்களே கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம் கார்த்திகையில் விழாஎடுப்போம் தமிழராய் ஒன்றுபடுவோம் தரணியில் தமிழரசு அமைப்போம…

  5. தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்...! உங்கள் கனவு…

  6. எட்டுகோடிக்கு மேல்லானோர் எழுதி ஒட்டிய கடிதம் கேட்பார் அற்று ஆசியாவின் ஒரு பெருநிலத்தில் பரவி கிடந்ததது சிதறி இருந்தது .. எமக்கான பதிலையும் நாம் யார் ? என்னும் கேள்விக்கு விடையும் அதில் கேட்டு எழுதி இருந்தோம் கவனமா ஆனாலும் அதை உலக பெட்டியில் போட ... அஞ்சி பயந்து நடுங்கி கைகளில் வைத்து பைகளில் மறைத்து அன்னியர் பாரது .. பக்குவமா தலைமுறைகளுக்கு மாற்றி மாற்றி கொடுத்து பாதுகாத்து வைத்த கடிதம் ... வள்ளுவன் வந்தான் கம்பன் கூட வந்தான் நக்கீரர் நாவலர் என பலர் வந்து போயிம் எமக்கான கடிதத்தின் முகவரி கிடைக்க வில்லை நாங்களும் வருந்தவில்லை தேடியபடி இருந்தோம் .. கார்த்திகை திங்கள் வேளையில் வல்வையில் கிடைத்தது முகவரி உலக தமிழரின் நிஜ வரி தேங்கி கிடந்த அஞ்சல்கள் எல்…

  7. உப்புக் கண்ணீர் ஈரத்தில்.. குருதிக் காயாத கறையோடு முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட.. எம் உறவின் எலும்புக் கூடுகளின் வழியாய்.. எழும்புகிறது எம் மாவீரர்களைப் போலவே காந்தள் பூ! இன அழிப்பில் இறந்த காந்தள் மாவீரர் நாளில் முட்டி முளைத்து நிமிர்கிறது.. விடுதலை திறப்பின் அடையாளமாய்! கார்த்திகைப் பனிச்சாரலிலும் முற்றத்து ஓரங்களிலும் முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது தமிழீழம் நோக்கிய காந்தள்! உலகில் வாசனை பரப்பவே பூத்த பிற பூவெல்லாம் தலைகுனிந்தது… தன் மண்ணை வணங்க தலை நிமிரும் காந்தள் பூவைக் கண்டு “மாவீரர் நாளில்!” கார்த்திகைக் காந்தள் - கவிபாஸ்கர்

  8. (இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது) [size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010 மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வ…

    • 7 replies
    • 1.5k views
  9. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

    • 7 replies
    • 833 views
  10. கல்லறைமேனியர் காத்திருப்பர் இன்று விழிதிறந்தெதிர் பார்த்திருப்பர் போகும் வழி தெரியல்லையே அங்கொரு தீபம் ஏற்றிட வழியில்லையே வலிசுமந்து எழுகின்றோம் மாவீரரே உங்கள் திசை கண்டு தொழுகின்றோம். உற்றவர் யாருமின்றி பிள்ளைகள் உறங்கிட பகை தின்ற நிலத்தில் கோவில்கள் கலைந்திட காற்றெழுந்து முகம் பார்த்திடுமோ கார்த்திகை மேகம் சிந்திடுமோ யாருமின்றி நீர் எழுந்து நிற்கையிலே கத்தும் கடல் அழுதிடுமே எங்கள் ரத்தம் காய்கிறதைய்யா இங்கு விழிகள் தோய்கிறதைய்யா திசைகள் தாண்டி நீண்டிடும் நினைவு கரங் கொண்டு சேர்த்திடும் மான உணர்வு தூயவர் உறவுகள் இனி சேர்ந்திட தாயவள் நிலை இனி மாறிடும் தாரகைகள் தாமிறங்கி தொழுதிட வான் வளைந்து மாலை சூடிடும் நீரெழுந்து மலர்த்திட ஒளி கூடிடும் தேசத்தின் விடி…

  11. எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம் செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம் அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம் அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம் விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம் விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம் அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர் போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர் சொத்து சுகங்கள் சொந்தங்கள் இழந்தனர் பருவ வயதின் பற்றெல்லாம் துறந்தனர் அன்னை மண் காத்திட அத்தனை பேரும் ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர் புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர் சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் …

  12. எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்...!!! எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன...? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்து போகாது. நீங்கள் வந்து எங்கள் கல்லறைகளில் விளக்கேற்றா விட்டாலும் உங்கள் விழிகளில் விழிகளில்…

  13. வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி வீரத்திருவே எங்கள் வேரின் தணலே விடியாத வாழ்வுக்கு வெளிச்சம் தந்த ஈகப்பெரு நதியே.... அகவை ஐம்பத்து ஒன்பது காணும் அணையாச் சுடரே அன்பின் உருவே அலையாய் கரையாய் நிலவாய் நீராய் நெருப்பாய் நீயே எங்களின் நிச்சயம்.... ஏன்றென்றும் எங்களின் வழிகாட்டி ஒளிகாட்டி வுரலாற்றின் திசைகாட்டி எல்லாம் நீயே எங்களின் தலைவனே.... பெருமைமிகு தோழனே பெறுதற்கரிய பெருமையே தலைநிமிரும் வீரத்தையும் ஈகத்தையும் தந்த பேரூற்றே.... தளபதியே எங்களின் தந்தையே எல்லாமுமான வல்லமையே நீ பிறந்த பின்னாலே நாங்கள் வீரம் பெற்றோம் விடுதலையின் சுவையறிந்தோம்... நீயில்லாமலெங்களுக்கு நிமிர்வில்லை நண்பனே நீயே எங்களின் வல்…

  14. விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது. * * *…

  15. இடுகாட்டு இருட்டில் சிதைக்கு மூட்டும் தீயில் வெளிச்சம் பிறக்கும் என்று மாண்டார்கள் அடிமைகள் ஆழுக்கொரு கொள்ளிக்கட்டையை எடுத்து காலடி வெளிச்சம் பிடித்து எஜமான் வீடு நோக்கி நடந்தார்கள் நெஞ்சாங்கட்டையையும் பங்குபோட்ட அடிமைகளைப் பார்த்து சிதைகள் எழுந்து அழுது மீண்டும் மடிந்தது. எஜமானின் கோடிக்குள் திவசம் கொண்டாடவும் முடியாத அடிமைகள் காக்காவுக்கு சோறு வைக்க கரைகின்றார்கள். சீமைப்பசுவின் கோமயத்தில் முகம்கழுவி முக்தி பெற்ற பெருமக்கள் ஆங்காங்கே திவசம் கொண்டாடுகின்றார்கள். வடையும் வாய்பனும் கூடவே டோனற்றும் படைக்கின்றார்கள். காரிருளை கலைத்த சிதைகளின் தீயையும் சூறையாடிய அடிமைகள் மேற்கில் வெண்மேகம் மோதி மின்னல் பாய்ந்து தேசம் விடியும் என்ற கனவில் மிதக்கின்றார்கள். கதிரவன் …

  16. காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை காலத்தால் தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை காலத்தால் குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டை உள் நுழையு முன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால் தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ள…

  17. ரத்தக்காட்டேறி ராஜபக்‌ஷே! கவிதை, குரல் - பா.விஜய் இசை - தாஜ்நூர் கோர்வை - கார்த்திகேயன் ஆக்கம் - வா.கௌதமன்

  18. Started by Sembagan,

    தமிழீழ விடுதலை முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதுகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் கார்த்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் தமிழரின் விடுதலை தமிழீழமென்று சாத்வீக வழியில…

  19. Started by Sembagan,

    முகநூல் சுயவிளம்பரம் செய்வோருக்கு சுதந்திரமான வெளி இங்கு கட்டுப்பாடின்றி கண்டபடி புளுகலாம் அண்டப் புளுகென்ன ஆகாசப் புளுகென்ன அனைத்தையும் புளுகலாம் அது செய்தேன் இதுசெய்தேன் என தன்னைத் தானே தம்பட்டமும் அடிக்கலாம். விபரமும் சொல்லலாம் வீண் வாதமும் புரியலாம் வீட்டிலே இருந்தபடி வெளியுலகுக்கும் சொல்லலாம் ஆண்பெயரில் பெண்ணும் பெண் பெயரில் ஆணும் ஏமாறி ஏமாற்றிப் பித்தலாட்டமும் செய்யலாம். இங்கே கன்னியரும் வருவார்கள் காளையரும் வருவார்கள் கருத்துப்பரிமாறி காதலும் கொள்வார்கள். தாய் தந்தையரை ஏமாற்றி தாமும் ஏமாறிக் கண்ணீர் வடிக்கக்; கன்னியரும் வருவார்கள் காதலும் உண்டு காமமும் உண்டு காமலீலைகள் வீசும் காமுகரும் உண்டு கணவனைவிட்டு காமுகரை நாடுவோரும் மனைவியை…

  20. கார்த்திகை நாயகர்கள் உடலைத் திரியாக்கி உதிரத்தை நெய்யாக்கி உயிரை ஒளியாக்கிய உத்தமரே – எம் உணர்வுக்கு வித்தாகி – தமிழ் உலகுக்கு சொத்தாகி தமிழீழ விடிவுக்கு விளக்காகிய வித்தகரே! தீபத்தின் சுடரிலே உங்கள் தியாகம கண்டோம்- அது சுடர் விடும் நிறங்களிலே உங்கள்; முகம் கண்டோம் காத்திகை மலர்களிலே உங்கள் கனவு கண்டோம் - அதைக் கையினில் எடுக்கையிலே உங்கள் அழகு கண்டோம் கார்த்திகை மாதத்தின் நாயகராய் நீங்கள் காட்சியளிக்கும் காலம் இது கைகூப்பி நாங்கள் வணங்குகிறோம். காவல் தெய்வங்களாய் போற்றுகிறோம். செண்பகன் 21.11.2013

  21. கைகட்டி கதை கேட்டு உங்கள் புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம் திகைத்து நின்ற காலம் மறக்குமா ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ... பல யோசனை வரும் நடக்கபோகுது எல்லாம் சரியா திரும்ப திரும்ப நாலுதரம் சரிபார்த்து பதட்டமா வந்து நின்றால் நீங்களே சொல்லும் ... கதை வெட்டையில் மாடு நிக்கு . போய் அடிச்சுட்டு வாங்கோடா இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் .. பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும் பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் .... நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும் அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால் பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது எங்கடா ஆறு…

  22. இந்த கணங்களை கடந்து போவது எப்படி என்று தெரியாமல்.... கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன் வெறுமையை சுமந்தபடி ... நீ உனது பிரியங்களால் தின்று கொண்டிருக்கிறாய். கண்ணீர் கூடப் பிரியம் தான். கனவுகளை தின்னும் பூதத்திடம் மோதுகிற வண்ணத்துப்பூச்சியே, ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள் என் அறைகளில் அலைகின்றன.. திரண்டெழும் நீரை மறுப்பதாக நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு மௌனித்துப்போவதை விட வேறெதையும் செய்ய முடியவில்லை என்னால். என்ன செய்ய முடியும் என்னால் கண்ணீரை துடைப்பதற்கு விழி துடைக்கும் சிறுகரத்தினைவிடவா..!!! அநேக பொழுதுகளில், வணக்கத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில் மூழ்கிக்க…

  23. கார்த்திகை பெற்றெடுத்த கல்லறைகளே.. கலங்கரை விளக்குகளாய் நீவிர்... மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில் கார்த்திகைப் பூக்களுக்கு கண்ணீர் விட ஏது தேவை.?! கார்கால இருளின் மின்னல்களே ஒளிரும் தாரகைகளாய் நீவிர் விண்ணெங்கும் நிறைந்திருக்க.. காட்டுச் சிறுத்தைக்கு சிணுங்க ஏது தேவை...?! தேசக் காற்றின் வாசமான இளம் தென்றல்களே... உயிர் மூச்சுக்களாய் நீவிர் சுவாசப்பைகள் எங்கும் நிறைந்திருக்க... எங்கள் வாகைக்கு வாடி நிற்க ஏது தேவை..?! கடல் கொண்டாடும் அலையாகி நிற்போரே ஓயாத அலைகளாய் நீவிர் உயிரோடிருக்க தத்தித் திரியும் அந்தச் செம்பகத்துக்கு சோர்ந்திருக்க ஏது தேவை..??! கால வெளியில் கோலங்கள் மாறலாம் தேசங்கள் அலங்கோலமாகலாம் கண்மணிகளாய் நீவிர் …

  24. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் என்னை அவர்கள் பைத்தியம் என்றார்கள் இப்போது அவர்களைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டேன் பாவம் அவர்கள் பைத்தியம் என்று! :D

    • 6 replies
    • 956 views
  25. பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...! முல்லைத்தீவு வீதிகளில் நீயும் நானும் மோட்டார் சயிக்கிளில் காற்றள்ளும் வேகத்தில் ஓடிய நாட்கள்.....! முள்ளியவளை வீதியறிந்த எங்கள் முன்னைய கால நினைவுகள் இரவுகளில் நிலவு கரையும் வரை விழித்திருந்து கதைகள் பேசி கனவுகள் வளர்த்த இரவுகள்...! நந்திக்கடற்கரை நிலவொளியில் நின்றலைந்த நினைவுகள் அதிகாலை வரையும் அலுவலெனப் பொய்சொல்லி அந்தக்கடற்கரைகளில் நடந்த நாட்கள்....! சேரன் பாண்டியன் ஐஸ்கிறீம் இனிப்பும் இன்னும் நாவில் உலராத இனிமைகள் எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள் இதயத்தில் கனமாக....! யுத்தப் பொழுதுகளில் உன்னை உனது குடும்பத்தை உனது குழந்தைகளை தேடியலைந்த காலமொன்று அது முள்ளிவாய்க்கால் முடிந்த பின்னும் முற்றாத தேட…

    • 8 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.