கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கோபம்கொண்டு குமைந்தபோதும் துரோகம்கண்டு துவண்டபோதும் வறுமைகொண்டு வாடியபோதும் வெறுமைகொண்டு ஓடியபோதும் நறவுண்டு களித்தபோதும் உறவுகண்டு புளித்தபோதும் வாடைதழுவி உறைந்தபோதும் பேடைதழுவி கறைந்தபோதும் புலவிநீண்டு தீய்ந்தபோதும் கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில் இருப்பை உணர்த்திய நிழலே மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !! இரத்தம்கெட்டு சத்தம்கெட்டு எயிறுகெட்டு வயிறுகெட்டு வாசம்கெட்டு சுவாசம்கெட்டு இதயம்கெட்டு இதழ்கெட்டு ஊன்கெட்டு உறக்கம்கெட்டு உருவம்கெட்டு பருவம்கெட்டு அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?
-
- 8 replies
- 1.4k views
-
-
அன்பும் அறமும் சவப் பெட்டிக்குள் வைத்து அடைக்கப் பட்ட தினம்..! ******************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* காடுகள் கண்ணீர்விட்டு அழுத தினம்.. அதுவே தமிழன் செந்நீர் விட்டு மடிந்த தினம்! கூடுகள் பிய்த்தெறியப்பட்டு எமது குஞ்சுகள் ஆதரவின்றிக் கூக்குரல் இட்ட தினம்..! நாடுகள் பல ஒன்றுசேர்ந்து ஒ..நாய்கள்போல் நிம்மினத்தை வஞ்சகத்தால் அழித்த தினம்.. நம்.. பேடுகளின் சிறகுகள் நடுத்தெருவில் பெருச் சாளிகளால் சிதைக்கப் பட்ட தினம்..! முள்ளி வாய்க்கால் என்னும் களப்போரில் மூர்க்கப் புலிகள் வீர காவியம் ஆன தினம்..! கொள்ளிதனைக் கையில் ஏந்தி..வீதி வீதியாய் கொத்திவாய்ப் பிசாசுகள் கொடூரம் புரிந்த தினம்! அன்பும் அறமும…
-
- 1 reply
- 614 views
-
-
இவ்வார ஆனந்தவிகடன்(aug 9th) இதழில் வெளிவந்த கவிதை ''கள்ளத்தோணி"
-
- 3 replies
- 654 views
-
-
கண்ணீரால் முடியும் என் கவிதைகள்... --------------------- காதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்றன ஒளிர்கின்ற இரவை.. அறையெங்கும் நிரம்பிக்கிடக்கும் விளக்கொளியின் நடுவே கண்களுக்கு தெரியாமல் குறுக்கும் மறுக்குமாய் அலைகின்றன நினைவுகள்... பாறையெனக் கிடந்த உன் பொழுதுகளின் மீது பக்குவமாய் நான் வரைந்த காதல் ஓவியத்தை நீ கிழித்தெறிந்த போது சிதறியவைகளாக இருக்கலாம்.. புன்னகை எழுதிய முகத்தை கண்ணீர் மூடிமுடிக்கும் முன் நினைவுச்சிதறல்கள் சுழன்றெழும் வீச்சில் சிறைப்பிடிக்க வேண்டும் கவிதைகளில்... பாதைகள் எங்கும் காதலுடன் பரவிக்கிடந்த பூக்களை வாரி அணைக்க சேர்த்துவைத்த அன்ப…
-
- 18 replies
- 14.2k views
-
-
போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? கடற்காற்றின் மௌனம் உனது காலத்தை எழுதிச்சென்ற தடங்கள் கனவின் மீதத்தை இந்தக் கரைகளில் வந்தலையும் அலைகள் வந்து சொல்லியலைகிறது....! கால்புதையும் மணற்தரையில் உனது மௌனங்கள் நீ கரைந்த காற்றோடு வந்தலையும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒரு வரலாற்றின் சாட்சியாய்...! வழி நீளக்கிடக்கிற நினைவுத் துளிகளில் நீயும் நானும் எழுதத் துடித்த வாழ்வு ஈழக்கனவாய் ஆனபோது இடைவெளியின் நீளம் காலக்கரைவில் கண்ணீராய்....! நீ(மீ)ழும் நினைவுகளில் நிலையாய் காலம் கரையும் இந்தக் கடற்காற்று போய் வாவென்கிறது போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? மறுபிறவி உண்டென்றால் மறுபடியும் இதே கரைகள் தொடும் அலைகளோடு அலையாவ…
-
- 12 replies
- 1.5k views
-
-
உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…
-
- 14 replies
- 4.9k views
-
-
கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..! தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!! ஞாலத்தின் ஒளியாகி... ஞானத்தின் வழியாகி... முத்தேவிகளில் முத்தானவளே...! முத்தமிழின் வித்தானவளே...!! தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் -உனைத் தாயாகத் தொழுகின்றேன்! -என் தயவாக நீயிருந்து - என்றும் நான் தவறாமல் பார்த்துக்கொள்!
-
- 4 replies
- 1.5k views
-
-
காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html
-
- 13 replies
- 3.8k views
-
-
குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…
-
- 31 replies
- 1.9k views
-
-
சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன் அந்த இரவுகளில் - நீயோ கருவறையைக் கல்லறையாக்கும் பாடம் படித்துக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒற்றைச் சந்திரனாய் என்னினைவுகள் உன்னையே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு முறையும் காதலால் - உன்னுடன் உயிர்மொழி தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ வெறும் உதடுகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்…
-
- 28 replies
- 3.6k views
-
-
எஞ்சி இருக்கும் உடலங்களையும் அரிக்கத்தொடங்கிவிட்டது வார்த்தைகளால் வளைத்த கூட்டம், புதிய ஏற்பாடு என்றும், மீள்ந்தெழல் என்றும், அறையப்பட்ட ஆணிகளை அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும் செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர். நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய, மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும் தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும் அவல ஓலங்களையும் கடந்து, நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில் குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும் இறந்தவர்களின் உறுதிகளால் இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும் அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து, எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து குறிகசக்கி பல்லிழிப்பவனையும், சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து, த…
-
- 13 replies
- 952 views
-
-
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமித…
-
- 9 replies
- 787 views
-
-
முதற் பெண்மாவீரரான மாலதி அவர்களின் 26வது நினைவு சுமந்து வீரவணக்கங்கள்! தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்! ----------------------------------------------------------------------- வென்றிடச் சென்றவள் பெண்வேங்கையுள் முன்னவள் தாலியைத் தாங்கிடும் மரபிலே வந்தவள் தடை யுடைத்தவள் நஞ்சினைச் சூடினாள்! வேதனை கண்டவள் வெஞ்சினம் கொண்டவள் போரிலே புகுந்தவள் புதுயுகம் படைத்தவள் பாரிலே நிலைத்தவள் செங்கொடி ஏந்தினாள் போர்க்கலை காட்டினாள் தமிழ்ப்பெண்நிலை மாற்றினாள் அஞ்சுதல் போகினாள் ஆயுதம் சூடினாள் தூற்றுதல் துடைத்தவள் களப்பணி யாற்றினாள் வீறுடன் நடந்தவள் வித்தென வீழ்ந்தவள் அடையாளம் ஆகினாள் தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்!
-
- 8 replies
- 1.5k views
-
-
காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று.. ------------------------------------------ இப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காதலும் கவிதைகளுமாய் மாறி மாறி துலங்கிய அந்நாட்கள் தொலைந்துவிட்டன.. மாலை வெய்யில் தன் மஞ்சள் நிறமிழந்த ஒரு கோடையில்தான் நேசிப்பை விற்று காய்ந்துபோனது உன் இதயம்... நினைத்துப்பார்க்கையில் நெஞ்சத்தின் ஆழத்துள் மெல்ல இறங்குமொரு முள்.. அந்தரவெளியும் கலவர நிழலுமாய் நூறாயிரம் கதைகளை சுமந்தலையும் இதயத்தை உடைத்துவிடுகிறது ஒற்றைக்கண்ணீர்த்துளி.. பொழுதில்லை அழுவதற்கும்.. நினைத்துக் கவலையுற்று துன்புற்றுவிட்டு பனிக்குளிரில் வேலைக்கு இறங்கிச்செல்ல…
-
- 10 replies
- 1.5k views
-
-
என் வீட்டுக்கு வா வாசலில் கோலம் இல்லை கண்ணாடியில் பொட்டு இல்லை காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை என் வீட்டுக்கு வா ... நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய் என் வீட்டுக்கு வா ... அம்மா எப்பொழுதும் விரதம் .. கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு உன் வரவுக்காய் அடி என்னவளே என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே .. சீயக்காய் அரைத்து முழுகி உன் தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .
-
- 10 replies
- 2.1k views
-
-
பொய்யுக்கு தானடா பொம்பள வாழுறாள் மெய்தனை காட்டியே மாயங்கள் செய்யிறாள் ஆம்பள மனச கஷ்ட படுத்திறாள் கல்யாணம் கட்டிப்பின் கைவிட்டு செல்கிறாள் உலகம் சுத்துது தன்னாலே உலக சுத்திறன் பெண்ணாலே காதல் பற்றியே சொன்னாலே கோபம் கொள்கிறன் தன்னாலே பேஸ்புக்கில் காதல் மலர்வது தப்பப்பா பேஸ்புக்கால் காதல் அழிவதும் தப்பப்பா பட்ட துன்பமிது கேட்டால் நீ நண்பேண்டா ஏற்கமறுத்தால் நான் என்னத்த சொல்வேண்டா பேஸ்புக்கில் பசங்கள தேடிப்பிடிக்கிறாள் வயசுக்கு ஏற்றதாய் வேசங்கள் போடுறாள் அப்பப்ப பெயரை மாற்றி இடுகிறாள் செல்லம் என்றழைத்து சேட்டைகள் செய்கிறாள் எங்கடா எங்கடா காதல் மலருது வாலிபம் இப்போ காமத்தில் அலையுது காலேச்சு பொண்ணுக கர்ப்பமா போகுது சின்னச்சிறுசுக அப்பா ஆகுது ஆணுக்கும் பெண்ண…
-
- 6 replies
- 1.1k views
-
-
ரொம்பக் குளிருதடி... கொஞ்சம் பாரேன்டி! தேகம் நடுங்குதடி... பக்கம் வாயேன்டி! வெள்ளை நிறத் தேவதையே... வண்ண முலாம் பூசுறியே! கிட்ட வந்து முட்டுறியே... தட்டி விட்டுப் போகிறியே! தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! கண்ணைச் சிமிட்டாதே... கடித்துக் குதறுதடி! என்னை மிரட்டாதே... எண்ணம் சேர்ந்து மிரளுதடி! என்னைத் தூண்டி இழுக்கிறாய்... எல்லை தாண்ட அழைக்கிறாய்! இன்பத் தொல்லை தருகிறாய்... தீண்டும் முன்பே மறைகிறாய்! வண்ணம் தந்த வானவில்லே... எங்கேயுன்னைக் காணவில்லை! கனவில் வந்து போறவளே! -உன் நினைவில் நொந்து போகிறேன்டி!
-
- 20 replies
- 1.7k views
-
-
எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…
-
- 24 replies
- 1.5k views
-
-
தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!
-
- 6 replies
- 1.2k views
-
-
பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்.. ----------------- கனவுகளில் காய்ந்த நிலத்தில் விதைகளைதேடுகிறேன் என் காதலை துளிர்ப்பதற்காய்.. மனவெளியெங்கும் இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல காய்ந்துகிடக்கிறது கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்.. ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்.. நாம்தான் கரைபிரித்துக்கட்டப்பட்ட துருவ நதிகளாக திசை பிரிந்து... எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத சோகத்தில் அழுதபடி கடந்துபோகிறது ஒவ்வொரு இரவும் நிலவு.. இப்போதெல்லாம் நாம்பேசிய வார்த்தைகளில் சிதறிக்கிடக்கின்றன அன்பைத்தொலைத்த கண்ணீர்ப்பூக்கள்... ஏன் மெளனம் உன் கரைகளில்..? உன் எண்ணங்களை வனையத்தெரியா வண்ணாத்திப்பூச்சி நீயோ..? இல…
-
- 14 replies
- 1.3k views
-
-
இன்று தமிழ்த்தேசத்தின் புதல்வன் பாலச்சந்திரன் பிறந்தநாள். சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை இது. # பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. https://www.facebook.com/parani.krishnarajani?hc_location=stream
-
- 11 replies
- 1.6k views
-
-
ஈழம் என் உயிர் என்பார் தடைகள் உடைத்து தலைவன் வழியில் ஈழம் காண்போம் என்பார் வீர வசனம் பேசித் தம்மை விசுவாசி என்றும் கூறி வீணே காலத்தைக் கழிக்கின்றார் உணவின்றி மக்கள் உழல்கையில் உள்ளம் இரங்கார் ஒருபிடி உணவும் கூட உண்மையில் கொடார் கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு காப்பாற்றுவார் போல் மாற்றார் முன் கதறித் துடித்து நாடகமும் ஆடுவார் தன்னைத்த் தானே பீற்றித் தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து தானே தன்மானத் தமிழன் என்றுவேறு எக்காளமிடுவார் வார்த்தைகளில் வண்ணம் வைத்து வருவோரை மயக்கி வக்கணையாய்ப் பேசி வலைவீசி வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார் இத்தனை கேடு கேட்ட தமிழனை தெரிந்தும் போற்றுவோர் மனிதம் தெரியாத மூடர்களே உணர்ந்தும் உறவு கொள்வோர் உலகறியா மூடர்கள் …
-
- 18 replies
- 1.6k views
-
-
ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி சிங்களம் மகிழ்ந்து இருந்த போது... கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி எம்மை காக்க எவர் வருவார் என தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம் என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் .... நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு நானோ இறையாண்மை அடிமை நீயோ இன்னொரு அடிமை உனக்கு... என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம் சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை.. தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய் வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி எம்மை ஒரு பாதையில…
-
- 12 replies
- 869 views
-