கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் ஐயராத்து அம்மணி கவிதை - இளங்கவி... என் ஐயராத்து அம்மணி நீ அழகான என் கண்மணி.... உன் ஒற்றை மூக்குத்தியால் என்னை கொழுவி இழுத்தவள் நீ.... உன் தெத்திப் பல் சிரிப்பில் என்னை சிக்கவைத்தாய் நீயடி... உன் ஆளுயரக் கூந்தலில் என்னை அசரவைத்தாய் நீயடி.... உன்னை வீதியெங்க்கும் துரத்தி நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு.... அதனாலே நம் வீ.சி க்கு அதைத் திருத்துவதே வேலையாச்சு.... உன் கன்னக்குளி பார்க்க 'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால் தெருவில் இருந்த குளி விழுந்து என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்... வீட்டில் மீன் பொரியல் விடலைக் கோழிக்கறி விரும்பிய நேரம் உண்ண பூநகரி மொட்டைகறுப்பன் சோறு... அத்தனையும் சமைத்துவைத்து அம்மா …
-
- 34 replies
- 4.2k views
-
-
நான் கண்டது என்ன கனவா கனவா.. கன்னி அவள் கண்கள் எனைத் தீண்டியது என்ன நனவா நனவா..! பாதைகள் ஆயிரம் இருக்க பக்கம் வந்து முட்டிப் போனது என்ன முட்டுமுட்டு பாடலின் விளைவா விளைவா..! பார்வைகள் பரிமாறி மெளன மொழி பேசியது என்ன நாட்டியமா நாடகமா..! கருங் கூந்தல் பரப்பிய அவள் முதுகு என்ன சந்தனம் பரப்பிய அம்மிக் கல்லா கல்லா என் கண்கள் என்ன அதில் உருளும் அம்மிக் குழவியா குழவியா..! காற்றிலாடும் சுடிதார் என்ன சாமிக்கு வீசும் சாமரமா இந்த ஆசாமி அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன விதியா சதியா..!! முடிவாய் என்ன கண்களுக்குள் சிக்கி மூளையில் பதிவானது அவள் நினைவா நினைவா அதன் தவிப்பில் இவன் கமராவை நோண்டுவது என்ன தலை விதியா விதியா..! இதன் பெயர்தான் …
-
- 67 replies
- 7.5k views
-
-
என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…
-
- 3 replies
- 1.4k views
-
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம் என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக…
-
- 16 replies
- 4.6k views
-
-
என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …
-
- 6 replies
- 856 views
-
-
கவிதை ...........!!! தனியே வரிகளல்ல தனியே வலிகளல்ல தனியே வார்த்தையாளமல்ல தனியே உணர்வல்ல தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ... தனியே அறிவுமல்ல .... தனியே இன்பமுமல்ல தனியே துன்பமுமல்ல .... தனியே ஆசையுமல்ல .... தனியே மோகமுமல்ல ... தனியே ரசனையுமல்ல தனியே கற்பனையுமல்ல ... தனியே உண்மையுமல்ல கவிதை .....!!! ஆத்மாவின் வெளிப்பாடு ... ஆத்மாவின் உந்தல் ஆத்மாவின் உணர்வு ஆத்மாவின் செயற்பாடு ... ஆத்மாவின் தொழிற்பாடு ஆத்மாவின் கடமை ஆத்மாவின் தேவை ஆத்மாவின் தேடல் ஆத்மாவின் ஆரம்பம் ஆத்மாவின் முடிவு ........!!! கவிதை ......!!! எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ .... அதை எழுது…
-
- 0 replies
- 771 views
-
-
என் கவிதைகள் கண்மூடி சிந்தித்தவைகள் அல்ல இதயம் கதறிச் சிதறியவைகள்...
-
- 0 replies
- 3.6k views
-
-
கண்ணிலே நீர் இல்லை துடைப்பதற்கு கவிதையிலே பஞ்சம் இல்லை உங்கள் சிற்பத்துக்கு கவிஞனாக உயிர் தந்த உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாகதான் இருப்பேன் இந்த உறவுக்கு
-
- 4 replies
- 1.3k views
-
-
என் காதலனே!! கவிதை வரைந்தேன் உண்மை மூடி காதல் கொண்டேன் கண்ணை மூடி படிக்கச் சென்றேன் பையை மூடி பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று என் காதலனே!! உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால் உன்மீது பாசத்தைப் பொழிந்தேன் உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால் உன்மீது ஆதரவாக நடந்தேன் என் காதலனே!! காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக் காண வரும் போது உன் நரையை மறைத்தாய் கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக் காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய் என் காதலனே!! காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய் காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய் காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய் காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய் …
-
- 3 replies
- 2.2k views
-
-
என் காதலி தமிழீழச்சி...... இளங்கவி -தமிழீழ காதல் காணாத இறைவனிடம் வரம் கேட்கும் பக்தன் போல் நீ காட்டா பார்வைக்காய் காத்திருந்தேன் சிலவருடம் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்....... பெண்களின் உதடை கொவ்வைப்பழமாக வர்ணிப்பார் உன் உதட்டின் நிறமோ கரு நாவல் பழம் போல இருந்தும் முத்தமிட மனமேங்கிடும் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்...... பெண்ணின் மார்பழகு மாங்கனிக்கு உவமைகொள்ள உந்தன் மார்பழகோ தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள இருந்தாலும் ரசித்துக்கொள்வேன் காரணம் நீ தமிழீழச்சி என்பதால் நீ மறைந்திருக்கும் இதர அழகை வர்ணிக்க மனமேங்கிறது ஆனாலும் முடியவில்லை காரணம் நீ தமிழீழச்சி என்பதால் அதுதான் நம் தமிழீழத்தின் காதலின் சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
-
- 10 replies
- 4.1k views
-
-
என் கவிதையை ரசிக்கிறாய் கண்ணீர் விடுகிறாய் காதலை வெறுக்கிறாய் உயிரே ...!!! என் காதல் வரிகள் எழுத்துக்கள் அல்ல -உன்னை நினைத்து எழுதும் ஆத்மாவின் உயிர் வரிகள் ....!!!
-
- 2 replies
- 624 views
-
-
என் காதல் ...............................தோற்கவேண்டும் நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம் மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன் கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம் வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம் நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும் குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும் குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியன…
-
- 8 replies
- 2k views
-
-
நீ சிரித்து பேசும் பொழுதுகளை விட விட்டு விலகும் பொழுதுகளில் தான் என் காதல் அழுது அடம் பிடித்து உன் பின்னேயே வருகிறது...
-
- 2 replies
- 721 views
-
-
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது தாலிகட்டி கல்யாணம் செய்ய * உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது * நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன் * வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை * உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்க முடியாமல்ப் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று * தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்ட…
-
- 4 replies
- 2.1k views
-
-
என் காதல் தேவதை மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு குருவிகளின் கொஞ்சல்களில் கொஞ்சமாய் கண்விழித்து ஜன்னலோரம் பார்க்கிறேன். பூ மரங்கள் மேல் பனித்துளியில் தங்க நிற வளையங்களாய் மினுங்கிடும் நீர்துளிகள். அரைத்தூக்கம் கண்களிலே ஆசையாய் இருந்துவிட அவசரமாய் ஜன்னல் கதவுகளை திறக்கின்றேன் பளீரென்று ஓர் வெளிச்சம் என் பார்வையதை பறித்துவிட்டு சில வினாடிகளில் மறைகிறது மறுபடியும் பார்த்தால் புரிந்தது என் புத்திக்கு ஆம்! சூரியனின் விம்பம் சோடி வளையல்களில் எதிரொலித்து ஜன்னல்களின் இடைவெளியால் என் கண்களை தாக்கியது முகம் பார்ப்போம் என்றால் முடியவில்லை பூமரத்தால் அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை மரம் வளக்கும் கொள்கைவிட்டு மர…
-
- 8 replies
- 1.5k views
-
-
அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 975 views
-
-
நீ எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க.... எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என் காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன் நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.6k views
-
-
பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …
-
- 7 replies
- 1.2k views
-
-
பேனாவோடு நான்... என்னவளே... என்ன யோசிக்கிறாய்.. உனக்காய் நான் எழுதுவதை இன்னும் என் பேனா நிறுத்தவில்லையென்றா..? ஆமாம்.. அதைத்தான் நானும் யோசிக்கிறேன் உனக்கு தெரியுமோ தெரியாது ஏன் என் கவிதைகளில் எழுத்து பிழைகள் அதிகமென்று ஏன் தெரியுமா... என் கவிதைகளை நான் வாசிப்பதில்லை வாசித்தால் ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன் என்பதை படித்துக் கவலைப்படுவேன் என்பதால்தான். பேனா எடுத்தவர் யாரும் பேனாவால் இறந்ததில்லை நான் மட்டும்தான் உனக்காய் எழுதி எழுதி இறந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகம் கவலைப்படுகிறது உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்று உண்மைதான் அதற்காக நான் அதிகம் வருத்தப்படுவதுண்டு ஆனால் அவர்களுக்கு எப்ப…
-
- 20 replies
- 3.1k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
நேற்றுத்தான் மொட்டானேன்.. ஆயிரம் கனவுகள் தாங்கி விடிகாலை சூரியத் தழுவலில்.. பூவானேன்..! பனிக் குளியலில் மலர்ந்த என் தளிருடல்.. கூவி வரும் சிங்களத்தான் வீசும் செல்லுக்குக் கருகிய ஈழத்தமிழ் பிஞ்சாய்.. பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும். மனித விதி சமைத்த வேளை வரும் பரிசுப் பொருளாக பறித்துப் பரிமாற பாடையேறும் என் உடல்..! சோடி சோடியாய் அலையும் மனிதப் பதர்களின் கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..! மனசெல்லாம் கள்ளம் வைத்து நடக்கும் காதல்.. குத்தாட்டம் என் இறுதி யாத்திரையில்…! அது தான் வலண்டைன்ஸ் டே என் சாவுக்கு குறித்த நாள்..!! எங்கோ ஒரு மூலையில…
-
- 40 replies
- 6.6k views
-
-
அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …
-
- 6 replies
- 824 views
-