கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தியாக தீபமே தமிழ் மக்களுக்காய உண்ணாநோன்பிருந்து (15-09-1987 தொடக்கம் 26-09- ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதையை மீள்பிரசுரம் செய்கிறேன்.... தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே…
-
- 5 replies
- 714 views
-
-
ஒற்றைப் பேச்சில் ஒடிந்தே போனான்..! இனத்துக்காய் வீழ்ந்தோரை தூற்ற நீ யார்..??! கேள்விகள் கேட்க யாருமற்ற நேரத்தில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்..! அகோரமாய் தேசத்தில் நடந்ததை தரிசித்தவனுக்கு... ஊமையாகித் துணை நின்று அழித்தவனின் செயல் பாராட்டி சாகடித்துப் பின்... மனித உயிர்க்கான உரிமைகள் தேடும் "உண்மையை"க் கண்டறிவோரின் வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..! வெகுண்டு எழுந்தவன் வேதனையில் துடித்தான்...! தன்னின மக்களுக்காய் குண்டு சுமந்த மண்டேலாவுக்கு ஒரு நீதி..!!! "உலக அமைதிக்கென்று" பசப்பி உலகை அடிமையாக்க.. ஊரூராய் குண்டு போடும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு..! சொந்த மண்ணில் இன அழிப்பை தடுத்து நின்றவனுக்கு "பயங்கரவாதிப்" பட்டம்...! அந்தப் பட்டம் அவ…
-
- 5 replies
- 707 views
-
-
அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்- இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும் கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்........ அ.சங்கரி http://noolaham.net/project/01/16/16.htm
-
- 4 replies
- 2.3k views
-
-
யாருக்காக இது யாருக்காக இந்த விசாரனை மனித உரிமை விசாரனை யாருக்காக பிள்ளையே நவீ பிள்ளையே போ போ புத்தனே தெய்யனே வா வா மரணம் என்னும் தூது வந்தது அது ஐக்கிய நாசபை வடிவில் வந்தது சொர்க்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது தமிழனைத் தானே நான் கொன்றது பலி ஏன் என்மீது வந்தது தமிழனுடன் உறவைத்தானே நான்நினைத்தது மாகாணசபை பிரிவு வந்து ஏன் என்னை பயம் காட்டுது எழுதுங்கள் என் நாட்டில் நான் ஆயுள்கால ஜனாதிபதி என்று ஒலமிடுங்கள் என் நாட்டில் ஐ.நாடுகள் சபை நுளம்பு சபை என்று ஐநாசபை அங்கத்துவம் என்பது எம்மை பித்தனாக்கி அலைய வைப்பது எங்கிருந்து அறிக்கை வந்தது இன்று எங்கிருந்து விசாரனை வந்தது இந்தியாவிலிருந்து தினம் ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது
-
- 15 replies
- 1.4k views
-
-
ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more
-
- 5 replies
- 813 views
-
-
பொதுவாகவே தமிழ்நாட்டுகாவல்துறையினர் அனைவரும் என்றில்லாது விட்டாலும் அதிகமானவர்கள் ஈழத்தவன் ஒருவனை ஆத்திரத்தில் பேசும்போதும் அடிக்கும்போது வன்மத்துடன் அழைக்கும் பெயர் 'அநாதை அகதிப்பயலுகளா' என்பதுதான்.போனவாரம்கூட செங்கல்பட்டுதடுப்புமுகாமில் இப்படி சொல்லியே தாக்கியுள்ளனர்.அதனையே தலைப்பாக வைத்து ஒரு கவிதை (நன்றி: Tamil_Araichchi கூகிள் குழுமத்தில் ச.ச.முத்து) அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து செப் 6, 2013 1 அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோ, முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத…
-
- 2 replies
- 938 views
-
-
ஊரை உறங்க செய்து நாய்களுக்கு தெரியாமல் நடந்து வெள்ளி பார்த்து திசை பிடித்து அவன் எல்லையை தொடும்போது ஆந்தைகள் முழித்து இருக்கும் அவன் மட்டும் விடிகாலை பொழுதில் குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து அவனை கடந்து போகும்போது உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள் உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும் யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன் சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும் ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும் சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து எம்மை காப்பற்ற…
-
- 4 replies
- 694 views
-
-
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள் எதுவுமே நடக்கவில்லை...! வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...! வாங்க வந்தார்கள்!! தேவதைகளுக்கும் தேவை அதிகம் தேவையில்லாமல் தேடி வந்தார்கள்! அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்! வந்துபோனபின்... எம்மிடம் மிச்சம் மீதியாய் இருந்ததையும் அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!! வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு காட்சிதரும் தேவதைகளே! பாவம் நாங்கள்... சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!! போர் என்றும் சமாதானமென்றும் போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும் தீர்வென்றும் தீர்மானமென்றும் எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்! எதுவுமே நடக்கவில்லை! சாவின் விளிம்பில் நின்று கதறியபோது சாப்பிட ஏதுமின்றி திணறியபோது செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறி…
-
- 6 replies
- 795 views
-
-
யுகமாறு காலம் நிலாந்தன் முந்தித் தப்பினவன் நீதிபதியானபோது பிந்தித் தப்பினவன் துரோகியாக்கப்பட்டான் குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு முந்தித் தப்பினவன் தனது வம்சத்தையும் வம்சவிருத்தியையும் பாதுகாத்துக் கொண்டான் பாதுகாப்பான ஒரு இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளன் ஆனான் சீவியத்தில் நேசித்தவரை மரண நேரத்தில் கைவிட்டுச் சென்றவனெல்லாம் இறந்த காலத்தைத் தத்தெடுத்து விட்டான் சீவியத்தில் நேசித்தவரை மரணம் வரை பின்தொடர்ந்தவனோ மரணத்தால் உமிந்து விடப்பட்டு கைதியும் அகதியுமானான். வீரயுகமொன்றின் முடிவில் கொல்லப்படாதவனெல்லாம் கோழையெனில் தற்கொலை செய்யாதவனெல்லாம் ஒற்றனெனில் எங்களில் எ…
-
- 3 replies
- 678 views
-
-
பசியாறல் அரிசி நன்றாக பூத்திருந்தது முன் விரிக்கப்பட்ட இலையில் பக்கத்தில் துணையாக காய்கறிகள் கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது அரைத்தும் நிறம் மாறா பருப்புகள் நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து நீர் விளாவி உண்ணச் செல்ல மணம் ஈர்த்தது மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள் பசியடங்குதல் பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல… ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக http://new.panbudan.com/archives/11
-
- 0 replies
- 561 views
-
-
1 பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்…
-
- 1 reply
- 547 views
-
-
இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்.... இப்படியே ! உன்னை மறந்து நெடுநாளாயிற்று. என் நினைவுகளிலிருந்து - நீ இன்னமும் விடுபடாமல்.....! உன் பெயரைக்க கேட்டால் அல்லது யாராவது உன் பெயரில் இருந்தால் நான் நானாயில்லை..... உன்னை உடன் பார்க்க வேண்டும் போல்.... பேசவேண்டும் போல்....., ஆயிரம் அதிர…
-
- 10 replies
- 4k views
-
-
கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்
-
- 19 replies
- 1.7k views
-
-
மாதா பிதா குரு தெய்வம் முன்னிலை இழந்தது ஆணியம் தாய் நாடு தன்னிலை இழந்தது ஆணியம் கருப்பையில்லா உடல் உயிரின் உன்னத இயல்பு இழந்தது ஆணியம் தாயைப் போல சேய் அடையாளம் இழந்தது ஆணியம் மொத்தத்தில்... தங்கு நிலையில் தொங்கி வாழுது ஆணியம். திடம் படு தோள் திமிரிரு ஆண்மை வீர வசனங்கள் குறைசலின்றி.. தோளின் வலு சுமையோ தாங்க முடியாது திணறியே போகுது திறனிழந்த நெம்பாக துணையிழந்த ஆணியம். பூமிதனை மிதிக்காமல் பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ? பூப்பாதம் என்ன பூம் பஞ்சால் ஆனதுவோ தசையும் எலும்பும் 45 முதல் 100 கிலோ.... பெண்ணே பெண்ணை மிதிக்கும் கொடுமை காண மறுக்கும் குருட்டு ஆணியம். கங்கை சரஸ்வதி காவேரி வற்றுதல் உயிர்க்கு இழப்பு பூமிக்கு வறட்சி. பெண்ணின் அன்பு பெண்ணி…
-
- 4 replies
- 1k views
-
-
இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…
-
- 17 replies
- 1.1k views
-
-
கேளு மச்சான் கேளு ! நாங்க சொல்லுறத கேளு...! வேணாம் உனக்கு Girl ! நெஞ்சில் கொட்டிடும் தேள்! சுத்தி வரும் World ! இங்கு பொண்ணுங்க ரொம்ப Bold ! உன்னிதயம் ஆகும் Malt ! அதைத் தாக்கிடும் Hi-Volt! நீ ஒரு white board ! அவள் இதயம் ரொம்ப Hard ! அவளுக்கு எல்லாமே Sport ! அவள் காதலும் ரொம்ப short ! உன் மனசோ மெல்லிய Glass ! அவள் பார்ப்பாள் Hi-Class ! அவளுக்கு நீ Useless ! ஆவாய் நீ Needless ! அவளுக்கு தேவை காசு! அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!? தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு! இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு! காதலித்துப் பாரு! கண்ணில் ஓடும் ஆறு! தேடித் திரிவாய் Bar ! நீ அடிப்பாய் Beer ! நீயும் கொஞ்சம் மாறு! உன் இலட்சியங்கள் வேறு! முட்டிமோதிப் பாரு! வெற்றி பெறு…
-
- 17 replies
- 1.7k views
-
-
காலைக் கதிரொளியில் காற்று வரும் வழியில் - புதுக் காதல் கண்களுடன் உன் முகம் மாலை மயங்குகையில் மார்பில் ஜடை தவள -நகை மலரும் கண்களுடன் உன் முகம் நீண்ட இரவொன்றில் நிலவின் கீற்றொளியில்- நீர் மல்கும் கண்களுடன் உன் முகம் பாழும் பகலொன்றில் பாதைகள் மாறிய போது - துயர் நிறைந்த கண்களுடன் உன் முகம்....
-
- 7 replies
- 774 views
-
-
-
கைகள் இரண்டை கழுவாமல் கோக்குறாங்க உடல்கள் இரண்டை குளிக்காமல் தழுவுறாங்க இதழ்கள் இரண்டை எச்சிலுன்னு பாராமல் கவ்வுறாங்க நாக்கு இரண்டை நாதாரிகள் நக்கிறாங்க..! வாய்கள் இரண்டில் வார்த்தைகளோ ஆபாசம் கண்கள் இரண்டில் காட்சிகளோ அபந்தம் கைகள் இரண்டில் வேலைகளோ அசிங்கம்..! சோடி இரண்டு புதர்களுக்குள் குத்தாட்டம் உடல்கள் இரண்டு கார்களுக்குள் பந்தாட்டம் கால்கள் இரண்டு போடுவதோ கரகாட்டம்..! இணையத்தில் இணையுது இரண்டு FB இல் உடையுது இரண்டு துணிகள் துறந்து நடக்குது நாடகம் அதை காணொளின்னு பதியுது பகிருது காமத்தில் கோலோஞ்சினது..! கடைசியில்.. கொஸ்பிற்றல் நிறையுது பக்கெட்டுக்கள் குமியுது மாத்திரைகள் தீருது கூடவே கிருமிகளுக்கும் கொண்டாட்டம் அதுகளும் இது…
-
- 0 replies
- 708 views
-
-
அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )
-
- 6 replies
- 1.3k views
-
-
மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…
-
- 25 replies
- 17.6k views
-
-
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் ( மாலினோஸ்க்னா ) மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம் கடத்தப் போகின்றன நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு என்னவொரு மனமிருக்கப்போகிறது பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து சொல்லும் கொக்குகளை மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள் செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு முன்பொரு நாள் குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள் மீண்டும் குளத்திடமே வந்தன தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு நீர்த்தணலில் வாழும் மற்றோர் மீன் பறவை நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின கொக்குகளிடமிருந்து மூத்திர நெட…
-
- 2 replies
- 538 views
-
-
அவர் அப்படி ஒன்றும் திறமில்லை அவருக்கு யாரும் இணையில்லை அவருக்கு இளமையில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவர் பெரிதாக சட்டம் படிக்கவில்லை அவரை நாம் படிக்கவில்லை அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை அவனின் துட்டு பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை
-
- 13 replies
- 1k views
-
-
ஊர் நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில் இருளெனும் எழிலிருந்தது. அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது. ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில் தேவ நிலை சித்தித்தது. ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும், கூத்துப் பாட்டும், நாதஸ்வர மங்கலமும் தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு எங்கே துரத்திப் பிடியென்பதாய் ப…
-
- 5 replies
- 653 views
-
-
http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…
-
- 1 reply
- 585 views
-