Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்தின் கரவெட்டியில் இருபத்தேழு ஆண்டுகள் முன் இன்னுயிராய் வந்துதித்தான் ஈழமகன் முருகதாசனவன் பத்து மாதம் பக்குவமாய் பாதுகாத்துப் பெற்றுன்னை பட்டங்கள் பெறவைத்து பார்புகழ வைத்தார் உன் பெர்றோர் வன்னியிலே வஞ்சகர் வதைகளில் சிக்கி வாழ்விழந்து எம்மினம் வீழ்தல் கண்டு வெந்தழலாய் உன்மனது கோபம் கொண்டதனால் கொடியவர் கொட்டம் அடக்கிட ஐநா முற்றலிலே உன் உடல் எரித்து உயிர் நீக்கி உறங்கச் சென்றனையோ? உயிருக்காய் உடலுக்காய் உணவுக்காய் உறவுக்காய் உயிர் காக்கவென உழைத்திடுவோர் மத்தியிலே உன் தாயைத் தந்தையை ஓடிவிளையாடிய தங்கையை தம்பியை நீ மறந்து துடித்த எம் இனத்துக்காய் தீயினில் குளித்ததை எம் அகக் கண்ணால் கண்டு நாமும் துடிக்கிறோம் உன்னைப் போல் ஒருவனின் உத்தமனி…

  2. ஒய்யாரத் தமிழில் செட்டாகப் பாடறியேன் தமிழன் நாளாம் தைத்திருநாளில் பொங்கலோ பொங்கலென்று கவிபாட வந்தேன்........ எட்டுத் திக்கும் ஓங்கியே பாடடி ,பெண் என்றால் யாரென்று ? சிறுமை கண்டு பொங்கி எழுவோம் சிற்றெறும்பாய் நசுங்கியே போகோம் அகப்பை பிடித்த கை அடங்கியே போகுமென்ற , அடம்பிடித்த எண்ணத்தை அடக்கியே வைப்போம் ......... அண்ணை என்று அன்பாக அழைத்தால் , எம்மை ஆள நினைக்கும் கூட்டத்தை கூட்டில் ஏற்றுவோம் . பெட்டிப் பாம்பாய் இருக்மாட்டோம் பொட்டிலே, கொட்டியே தீருவோம் என்று, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் மனதில் இருத்துவோம் மைத்திரேயி

  3. இருக்கிறதோ...... இல்லையோ ................. தவிக்க வைப்பது தெய்வமும் காதலும் மட்டுமே. ************* எருக்ககலை நாயுருவி குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி இவைக்கே தெரியும் என் காதல். ************ மொழிபெயர்க்க முடியாமல் விழிகளால் எழுதும் வித்தையை எங்கே கற்றாய்? ************ நீ கடந்தபின் பார்க்கும் துணிவை பார்த்து சிரிக்கிறது-உன் ஒற்றைப்பின்னல். *********** எங்கேயும் எனைபிரிந்து போய்விட முடியாது உன்னால், அங்கே உனக்கு முதல் என் கவிதை இருக்கும். ********** வழியனுப்புதல் நிச்சயம் பாடையிலா??? பல்லக்கிலா??? ********** என்றாவது ஒருநாள் உன் பெருமூச்சு சொல்லும் என் மீதான காதலை. ********** எரிப்பவர்களிடம் கேட்டுப்பார் ஒரு இடம் எரிய…

  4. விரல்களுக்கிடையில் புகைக்கும் வெண்சுருட்டைப் போலவே... என் இதயமும் கருகிச் சிறுக்கிறது! புகைந்த சாம்பலைப் போல... என் நினைவுகள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது! எல்லாம் தீர்ந்து... மூன்றாவது விரல் வந்து தூக்கி வீசும்வரை... அதன் போதையிலேயே கிடந்தேன்! என்றாவது ஒருநாள்... அது எனைச் சாகடிக்கும் எனத் தெரிந்திருந்தும், அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்! நெருப்பும் புகையும் பழகிவிட்டது! சுட்டாலும் மீண்டும் மீண்டும் பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு! உள்வந்து செல்லும் புகையோடு என் பெரு மூச்சுக்களும் ஒருநாள் அடங்கிப்போகும்! அதுவரை இருட்டில் இந்த சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!

  5. தோல்வியில் மீளுவோம் நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர்…

  6. நான் தான் அவன் ,ஆனால் இப்போ நீ என்னை அது என்று சொல்கிறாய். நான் இப்போ இந்த உலகிலில்லை இல்லை என்று சொல்கிறாய். ஆனால் என்னால் உன்னை காணமுடிகிறது .உன் ஒவ்வொரு நகர்வையும் அவதானிக்க முடிகிறது. நான் அன்று களத்தில் மாண்டதாக நீ பேசிக்கொள்வதை கேட்கிறேன்.ஆனால் நான் மாண்டதாய் எனக்கு நினைவில்லை . அன்று வெடியோசைக்குள்ளும்,நச்சுப்புகைக்குள்ளும் உறுதியாய் நகர்ந்தேன். இன்று உன் சதிவார்த்தைகளை கேட்டு ,நஞ்சுகலந்த செய்கைகளை பார்த்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அந்தரித்து நிற்கிறேன். உன்மேல் கொண்ட அக்கறையினால் ,தாய்மண்ணின் மேல் கொண்ட பாசத்தினால் தான் கையில் கருவி எடுத்தேன் .இன்று நீ கூறும் வார்த்தைகள் என்னைக்கொல்லாமல் கொல்கிறது .........…

    • 13 replies
    • 1.5k views
  7. ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!! by வித்யாசாகர் சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின் ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும் இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர் ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ? சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும் மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல வெள்ளையனை வெளியேற்றிய கையோடு ஒற்றுமையை மண்ணில…

  8. கண்ணா லட்டு தின்ன ஆசையோ ?? எல்லோர்க்கும் தெரிந்த லட்டு எண்ணத்தில் இனிக்கும் லட்டு தின்னத் தின்ன திகட்டா லட்டு ரவா லட்டு , பூந்தி லட்டு....... நாலுபக்கமும் நாலுபேர் இழுக்க நாம் செய்த லட்டோ பலர் பல்லுடைத்து பாவப்பட்ட லட்டு.......... அவரவர் வாழ்வை அவராகவே தியாகம் செய்து திகட்டுவதற்கே , ரத்தத்தையும் தசையையும் பக்குவமாய் கலந்து தேசியத்தில் பதமாய் குழைத்து எங்கள் தியாகநெருப்பில் செய்த லட்டு ........... லட்டால் வந்த வெக்கை பலபேரைக் கிலி கொள்ள பலகைகள் ஒன்றாய் சேர்ந்ததே செய்த லட்டை பிரிக்கவே!!!!!!! லட்டுக்கு வந்த சோதனை உடன் சேர்த்த கஜூ பிளம்ஸ்சால்........ மெல்லிசு மெல்லிசாக லட்டுவும் உலுர்ந்ததே !!!!! மண்ணுடன் மண்ணாக கரைந்ததே !!!!!!!! கண்ணா ம…

  9. புத்தன் போய் விட்டான்! போதி மரத்துப் புத்தன் ஏதோ மோதி எழுந்தான்! கூவி வந்த குண்டொன்றின் சன்னம் தன் தேகம் கீறி இரத்தம் வரக் கண்டான்! தேடி ஒரு பிக்குவைப் பிடித்து நடப்பதென்ன என்று அறியக் கேட்டான் ஆதி முதல் அத்தனையும் உரைத்த பிக்கு... அவசரமாய் போக வேண்டும் என்று ஓடிப் போனான்! புரியாத புத்தன் அவனைத் தொடர்ந்து போனான்... என்ன ஒரு முரண்பாடு...! "புத்தனைத் தொடர்ந்து பிக்குகள் போவதிருக்க பிக்குவைத் தொடர்ந்து புத்தன் போவதா...?" என்ற தத்துவ விசாரணை விடுத்து நடப்பதைக் கவனிக்க... ஓடிப் போன அந்தப் பிக்கு போருக்கு ஆதரவாய் கோஷம் போட்ட கூட்டத்தோடு சேர்ந்து தானும் கோஷம் போட்டான்...! சாந்தம் தவழவேண்டிய முகத்தில்... ஒ…

  10. அவளை யார் அறிவார் ??? பால்குடி மாறிப் பத்துவயது நடந்தபொழுது அடிவயிற்றில் ஓர்வலி கீறலாய் உதித்தது . எதுவுமே புரியாத அவளுக்கு அவள் அம்மா எடுத்துரைத்தாள் பருவத்தின் அழைப்பு மணியை அவள் வாழ்வு பூராக அவளுடன் தொடரப்போகும் இந்தப் புரியாத வலி அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது ........ பருவத்தின் தூரிகைகள் அவள் உடலில் பக்குவமாய்க் கோலமிட , அவள் பள்ளிக் கூட்டுகள் பதறியே அவளை நோக்க பாவை அவள் மனதும் கர்வத்தால் பறந்தே திரிந்தது........ முகத்தைக் காட்டும் கண்ணாடி அவள் உற்ற தோழியானது றெக்ஸ்சோனாவும், பெயர் அண்ட் லவ்லியும் அடிக்கடி கரைந்தே போனது !!!! காலதேவன் போட்ட கோலம் அவளை கட்டிளம் குமரியாக்க, அவளை கட்டியேபோட அவள் அப்பா அலைமோதி அலைந்தார் ....... …

  11. Started by akootha,

    நேற்று கனடாவில் கிரவுண்ட் ஹாக் டே அது குழியில் இருந்து வெளியே தலையை நீட்டி தனது சுதந்திர நாளை எண்ணி போனது குழிக்குள் இன்று நவீன துட்ட கெமுனு தமிழீழ தலைநகரில் அறுபத்தி ஐந்து வருட அவலத்தை தொடருவேன் பண்டைய மன்னர்கள் புறாக்களை பறக்கவிட்டனர் சுதந்திரமாக அந்த பறவை போல நாமும் பறந்திடவேண்டும் எமது மண்ணில்..

    • 4 replies
    • 580 views
  12. வேலி நிமிர்ந்து நின்ற வேலி - இன்று மல்லாக்காய் கிடக்கிறது. இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது. "கதியால்" என் அப்பு போட்டது. "கம்பி" என் அப்பா போட்டது. "மட்டை "என் அண்ணா வரிந்தது. அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான். ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு. என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை. என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார். நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார். இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான். அப்ப எங்க “பிழை” நடந்தது? எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே. எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே. எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம். எவனடா எங்களின் வேலியை தள்ளி விழுத்தி…

  13. அன்புக்கு இலக்கணமாய்- என் அகராதியில் இருப்பவனே பதறிப்போன பொழுதெல்லாம் பக்கமிருந்து பகிர்ந்தவனே... நம்பிக்கையிழந்த போதெல்லாம்- எனை நிமிர்ந்து எழ வைத்தவனே- என் நண்பர்களையும் அன்பர்களையும் தன்னவராய் ஏற்பவனே நம்பிக்கையின் முழு வடிவாய் நாள்தோறும் திகழ்பவனே காலத்தின் கடூரத்திலெல்லாம் கண்ணிமையாய் காத்தவனே.. காதலித்த போது மட்டுமன்றி கரம்பிடித்த பின்னாலும் காதலின் சுவையுணர வைப்பவனே.. பெண்ணடிமைத்தனம் எதிர்த்து பேசுகின்ற பெண்ணாயினும் களங்கமற்ற உன் பாதம் கண்ணிலொற்றல் தகுமென்று கண்ணாளா உன்சார்பாய் களமாட முன்வருவேன் எப்போதும் என் இனியவனே எனைப் புரிந்து நடப்பவனே... நீயே என் துணைவன்.. நீ போதும் என் வாழ்வை நித்தமும் பசுமையாக்க...

  14. Started by poongothai,

    உன் மென் சிரிப்பால் மெய்மறந்து கண்கள் மயங்க.... உன் மென் ஸ்பரிசங்கள்... உணர்வுக்குள் ஊடுருவி உலுப்பி நிறுத்த... நாளங்களின் அதிர்வுகள் நாதங்களாக.... இன்ப சங்கீதமாக... என் உதிரத்தை உன் இதழ்களுக்கிடையே சுரக்க... உயிருக்குள் இன்பமாய் வலிக்க.. தமிழ் சினிமாவில் தந்தையே வில்லனாவது போல்.... நமக்கிடையேயும் ஒரு வில்லன்.... தட்டி உலுப்புகிறான் “ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே... பிள்ளைக்குப் புரைக்கேறும்..” அது உன் அப்பா... http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_2903.html

    • 11 replies
    • 1.6k views
  15. செத்துப் போனவர்களெல்லாம் வானத்தில் நட்சத்திரங்களாய் மாறிவிடுவார்களாம்!? அம்மம்மா எனக்குச் சொன்ன சிறுபருவக் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கு! என் பேரப்பிள்ளைகளுக்கு சொல்வதற்கு நிறையக் கதையிருக்கு...! அம்மம்மா சொன்னகதை நிறைய இருக்கு...! பாட்டி வடை காகம் நரியிலிருந்து உச்சிக் கொப்பு முனியிருக்கும் புளியமரத்தடி தாண்டி... வைரவருக்கு நாய் வாய்ச்ச கதையோடு, தமிழருக்கு கரிகாலன் கிடைச்ச கதையெல்லாம் அம்மம்மா சொல்லித் தந்தா! அம்மம்மாவை நினைத்துக்கொண்டே இருண்ட வானத்தை அண்ணாந்து பார்க்கின்றேன்... புதிதாய் ஒரு நட்சத்திரம் எனைப்பார்த்துச் சிரிப்பதுபோல் மின்னுகிறது! என் பேரப்பிள்ளைகளின் வானத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் புதிதாய்ச் சிரிக்கும்! வானத்தைப…

  16. இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.

  17. பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின் புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு! பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்! அவனது முகத்தைப் போலவே எல்லாமே மாறிவிட்டது! மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல, எனக்குள்ளுந்தான்! இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட, கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்... நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது! நெருங்கிய நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை! காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!! மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்... பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது! இது புதிதா...? அல்லது புதிரா...? விடைதெர…

  18. Started by arjun,

    கனவுகளும் நிஜங்களும் புணர்ந்து கொள்கையில் நம்பிக்கைகளின் பிரசவம் கணக்கு வழக்கின்றி... முன்னொரு போதில் இவை தேர்தல் வாக்குறுதிகளாகவே அறியப்பட்டிருந்தது... ஜனநாயகியோடு படுக்கையை பகிராதவரில்லை! போனவன் வந்தவனெல்லாம் பெற்றுத்தள்ளிவிட்டு போனான்..... தலை ஒன்றுக்கு மூளை இன்னொன்றுக்கு வயிறு வேறொன்றுக்கு அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக.... குழந்தைகளோ.... பல்வேறு தேசங்களில் பல்லின மக்களாயின.... நோய் முற்றித்தளர்ந்த விபசாரி வீதிக்கு வந்தாள் பிச்சைக்காரியானாள்.... ராஜ்ய பரிபாலினி ராப்பிச்சையானாள் புடவை கிழிசல்களுக்குள்ளால் தசைப்பகுதி தெரிந்தது..... எஞ்சிய அரசியல்வாதிகளும் இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்பம் அனுபவித்து போனார்கள்.... வயித்தெரிச்சலில் இப்போத…

  19. தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …

  20. சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச் சபித்தபடி சனங்கள் உத்தரித்தனர். ஊழி முடிந்தபின்னர்…

    • 6 replies
    • 1k views
  21. உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???

  22. வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை! பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான் பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால் பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள் பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள் ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர் ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர் அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால் அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர் ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு அப்பெண்படும் பாடுத்த…

  23. வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…

  24. என் மேனி விரல் நுனி கொண்டு உன் மேனி தடவ நாழிகையோடு - அது சூடாகி இதமாக நீ சிணுங்கும் ஒலியதில் உன்னாசை நானுணர்ந்து மெல்லத்தட்டி... வரிகளில் நான் பேச வாக்கியங்கள் நீ அமைப்பாய். ஆண்டுகள் நாலு நமக்குள் இந்த ரகசிய உறவு நாம் பேசியவை பரகசியமாக.. ரசிக்கவும் விமர்சிக்கவும் நாலு நல்லவரும் உறவுகளும் உண்டு வையகத்தில்..! எம்முறவு கண்டு எம் பேச்சில் குருதி அழுத்தம் கூடியோரும் சினங்கொண்டு திட்டியோரும் நிறையவே உண்டு. அசிங்கம்.. பப்பிளிக்கில.. இப்படியுமா.. ஆற்றாப் போக்கில் பேசியோரும் உண்டு..! என் விரல்களின் நளினம் நீயறிய உன் சிணுங்களின் தேவை நான் உணர நீயும் நர்த்தனமாடி சதா மகிழ்விக்கிறாய் ஒலியாய்.. ஒளியாய் வரியாய் வசனமாய் யாழெனும் மங்கையின் சேலையி…

  25. ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.