Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கதிரவன் கரங்கள் தீண்டக் கண்டால் சூரியகாந்தி நாணும்.. கார்முகில் வரவு கண்டால் மயில் தோகை கொண்டாடும் பனித்துளி ஒட்டக் கண்டால் புல்லும் கூசிக் கூனும் மழைத்துளி ஒளித்தொடுகை கண்டால் வானம் கோலங்கொள்ளும் தூறல்தன் முத்தம் கண்டால் நிலம் நிறம் மாறிப் பூரிக்கும் பூவிதழ் விரிதல் கண்டால் வண்டு போதை கொள்ளும் நீரோட்டம் தேடக் கண்டால் ஆறு சலசலத்து குதூகலிக்கும்.. தென்றல் தடவக் கண்டால் தென்னங்கீற்று தெம்மாங்கு பாடும் சோடியது கூடக் கண்டால் கானக்குயில் கவி பாடும்... சூரியனின் சூடு கண்டால் பனி உணர்ந்து உருகும்... வான் மழை புணரக் கண்டால் சிப்பி கர்ப்பம் தரிக்கும்.. பெண்ணே உனைப் புவி கண்டால் நயகரா உறையும்... நான் உன் அழகு கண்டால் சிலையாகிச் சரணடைவேன் உன்னிடம்..! இய…

  2. நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்

  3. மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo

  4. ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA

  5. Started by akootha,

    தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்; தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்! ... ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்; ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்! ... சோற்று வயிறின் விஸ்வரூபம் தோழர் ஜீவானந்தம்; ஆற்று மணலின் விஸ்வரூபம் தோழர் நல்லகண்ணு! ... தரையுலகம் விடுத்து திரையுலகம் பார்ப்போமாயின்… கொடையின் விஸ்வரூபம் கண்டி; கொள்கையின் விஸ்வரூபம் காஞ்சி; நடிப்பின் விஸ்வரூபம் விழுப்புரம்; வசனத்தின் விஸ்வரூபம் திருவாரூர்; ... இசையின் விஸ்வரூபம் பண்ணைப்புரம்; இயக்கத்தின் விஸ்வரூபம் அல்லி நகரம்; பாடலின் விஸ்வரூபம் சிறுகூடல்பட்டி; தேடலின் விஸ்வரூபம் பரமக்குடி; .... ஆம்; ஆழிசூழ் உலக நாயகனாம் - கமல் எனும் கலைஞன்… பரமக்குடியில்; ஒரு பார்ப்பனக் குடியில் - கதர…

  6. மலர்களும் வெட்கி தலைகுனிந்தன அவை கண்டது உந்தன் மலர்முகம். தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது திருடிப்போனாய் தண்மையெல்லாம். நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது உன் நினைவுகள் காதல். அவள் திறந்து பார்த்தது கடிதமல்ல என் இதயம். தூங்கும் போதும் விழித்தே இருந்தது இடம்மாறிய மனசு. முட்கள் குத்திய போதும் வலிக்கவில்லை - அது காதல். வல்வையூரான்.

  7. பேராவலுடன் பெய்யும் பெருமழையாய் எனக்குள் இறங்கிச் செல்கின்றாள் என்னுயிர்த் தோழி என் வரண்ட காடுகளுக்கிடையே பாய்ந்து செல்லும் பெரும் ஆறாய் பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும் பனிக்காற்றாய் மனவெளிகளில் புரண்டு எழும் கடலலைகளாய் எப்பவும் எனக்குள் வியாபித்த பெரும் பொருளாய் நீக்கமற நிற்கின்றாள் என் தோழி ஆயிரம் முத்தங்களை பதியும் இரு இதழ்களில் கோடி கணங்களை உறையவிடும் தந்திரக்காரி மார்புகளின் இடையே என்னை சோழிகளாய் சுழட்டி எறிந்து வித்தைகாட்டும் சாகசக்காரி தன் வாசல்கதவுகளால் வாரிச் சுருட்டி தனக்குள் பொதித்து இன்னும் இன்னும் என என்னை தனக்குள் பருகிக் களிக்கும் பேராசைக்காரி ஆற்றாத் துயர் மேவி நான் எனைத் தொலைந்த கணங்களில் எல்லாம் ஆயிரம் விரல்கள்…

    • 16 replies
    • 7.4k views
  8. படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை.... அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது--உன்னை நோகடிக்க அல்ல,,, எட்டு மாதமாய் சுமக்கும்--உன் முகம் பார்க்கவே. பிஞ்சு வயதில் நான் அழுதது,, பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில்--உன் இதயத்தை முத்தமிட.. பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது பயத்தினால் அல்ல,, உன் பாசத்தை பிரிகிறேனோ,, என்ற பயத்தினால். இளமையில் நான் அழுதது காதலில் கலங்கி அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை பிரிக்குமோ என்ற பயத்தினால்.. நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,, நான் உழைத்து உன்னை பார்க்கப்போகிறேன்--என்ற ஆனந்தத்தில்.. இங்கு தனிமையில் அழுகிறேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல உன் தாய்…

  9. நன்றி முகநூல் தவறுதலாக இங்கு .....

  10. நன்றி முகநூல்

  11. புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு பகுதி 01: http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 பகுதி 02 : http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2

    • 0 replies
    • 3.6k views
  12. வெறிச்சோடிப் போயிருந்த அந்த வெற்றுலகத்தில்... அன்புக்கான ஏக்கம் மட்டும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது! அந்த மண்டலத்தை என்னவென்று அழைப்பது? மனிதம் வாழும் கூடு என்றா? முதிர்ந்த குழந்தைகளின் கோவில் என்றா? பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த தனிக்குடித்தன கொட்டகை என்றா? புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட நெஞ்சங்களின் சரணாலயம் என்றா? அங்கே... நடக்கவே முடியாமல், நான்குச் சக்கர வண்டியில் நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி! தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில் தாங்கிப் பிடிக்க நாதியற்று, தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்! இவர்களைப் போலவே.. அங்கே.. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்... கூண்டுக்கிளிகளாகவும், குற்றவாளிகளாகவும்.. நன்றியில்லா நாய்களை சேய்களாய் ஈன்றெடுத்த தவறைத் தவிர, வேறேத…

  13. கௌதம முனிவரின் மனைவியை ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான் கண்ட பெண்களிடம் எல்லாம் காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான் பத்து இருவது என மனைவிகளை அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான் நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் . - வை .நடராஜன்

  14. வன்னி – மரணவெளிக் குறிப்புகள் கருணாகரன் முதற்காட்சி 1. பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை 2. நாட்களை மூடி காலங்களை மூடி மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம். போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை “எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“ என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்…

  15. பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்? வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே.. ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே பாரதியில் பாக்களாய் படிந்தேனே தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்.. தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்.. எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால் எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்? சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா? சொல்வளமும் சிறப்புற வேண்டாமா? பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே பாழாகி போவேன் நான் தரணியிலே.. எனது வழி தமிழனாய் பிறந்தவனே எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே எனை வளர்க்க மறந்த மானிடனே எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே நான்படும் வேதனைக்கு …

  16. பெரியதொரு குங்குமச் சிமிழும் சிறியதொரு சாம்பல் பொட்டலமும் போதுமானது... எம் இனத்தை அழிக்க! புரியாத மந்திரமும், அறியாத சடங்குகளும் போதுமானது... எம் சனத்தை கவிழ்க்க!! பால், பழம், தேன், வெண்ணை, சக்கரையென சகலத்தையும் புனிதக் குளியலுக்கு விரையமாக்கும் இடத்தை திருத்தலம் என்கிறார்கள்... திருந்தாத சென்மங்கள்!! பால் வடியும் முகங்கள், பாசத்திற்காக ஏங்கும்போது... "பாவம்" என்று ஒதுங்கி நின்று, பத்து காசை மட்டும் பாத்திரத்தில் போட்டுவிட்டு பாவம் கழிந்ததென பாரினில் பிதற்றிக்கொள்ளும் பாழாய்ப்போன நெஞ்சங்கள்!! வேண்டுதல் எனும் பெயரில்.. வேண்டாத அணுகல்கள்! கூரான ஆயுதத்தால் குருதியின் குவியல்களங்கே.. தானம் செய்ய வேண்டும்போது வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்! தேவையில்லா இடத்தில் விர…

  17. என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு, ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! என் வலிகளை ரசிப்பாய் என அப்பொழுதே தெரிந்திருந்தால், பூக்களை வெறுக்கும் வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்! வண்ணத்தில் மயங்கி... வாசத்தில் கிறங்கி... வலிகளை வாங்கிய கஷ்டம் எனக்கிருந்திருக்காது. காலங்கடந்த ஞானம் எனக்குள் -இப்போது! என் மெளன மொழிகளில் கெஞ்சிக் கேட்கிறேன், அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல், என் முறிந்த சிறகுகள் கூட, உன்னைக் காயப்படுத்தலாம்!!!

  18. மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)

  19. இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன். உண்மை அல்லது குழப்பம் பனைமரத்தின் கீழே பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பாலென்று சொல்லக் கள்ளென்று நம்பும் …

  20. முன் பின் தெரியா நகரில்... காலம் ஒரு பாம்பு போல் தன் ‘சட்டையைக்’ கழற்றும் இந்த மாலைப் பொழுதில் ஒரு கடற்கரை நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். இருள்வதும் பின் நீலம் பூசி மீள்வதுமாய் வானத்தின் வித்தைகள். சாலையெங்கும் இலைகளை வீழ்த்திக் கடக்கின்றது ஊசி விரல்களுடன் குளிர் காற்று. எதுவும் நிலையற்றதெனச் சொல்லக் காத்திருக்கின்றன மரங்கள். சூதாட்ட விடுதிகளும் கடைத் தெருவும் குளிர் மெழுகாய் உறைந்து போய்க் கிடக்கின்றன. நெடியவன் ஒருவன் தன் இடுப்பளவேயான சிறுமியைக் குனிந்து முத்தமிட்டவாறே தள்ளிக் கொண்டு செல்கின்றான். மதுப் புட்டிகளுடன் விரைகின்றனர் நகரவாசிகள். பொய்யின் ஏழுவர்ணங்களுடன் அகஸ்மாத்தாய் தோன்றுகிறது வடபுறத்தே ஒரு வானவில். முன் பின் அறியா அந்த …

  21. அனுமானங்களை சுமந்து பரவிக்கொண்டிருந்தது இருளடைந்த சொல்லொன்று. உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை ஆதங்க பெருமூச்சுக்களை ஓரந்தள்ளி, வக்கிர நிழல்களை பூசினார்கள். பின், திசைகளை தின்று வியாபித்த கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள். அது நிர்வாணத்தை துகிலுரித்தது இருளடைந்த சொல்லின் மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி கொண்டாடத்தொடங்கினார்கள் தங்களுக்குள். அவள் காற்றில் நிறைந்த வக்கிரங்களின் வெப்பத்தால் உருகத்தொடங்கினாள் கொஞ்சம் கொஞ்சமாக ..................

  22. ஒரு கூட்டு கிளிகளாக, கொட்டில் வகுப்பொன்றில், கூடிப்பழகிய இனிய கணமொன்று நொடிக்கனவாக மலர்ந்ததின்று. நட்பில் வஞ்சமில்லை.... பதற்றமில்லை நெஞ்சத்தில்... நொடிக்கனவை படம் பிடித்து, மனத்திடையே மாட்டி வைக்க, அழுத்தினேன் புகைப்பட கருவியை. பளிச்சென்று ஒரு வெளிச்சம்... மலரும் காலையின் சூரிய கீற்று கலைத்தது என் இனிய கனவை... மலர்ந்தன என் விழிகள் புலம்பெயர் வாழ்க்கையின் புழுங்கும் கணங்களை முழுநீளப்படமெடுக்க... (17/08/2010)

  23. எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே.... மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள் முடிந்தோடி விட்டாலும் நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில் நெருப்பெரிக்கும் நினைவுகள் ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது உள்ளத்தைக் குடைந்தெடுக்கும் தோற்றுப்போன நாட்களின் -மாறாத் தொடரும் உயிர்வலிகள் மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய் மரணித்த தேசத்தில் இன்னும் புல்பூண்டு-முளைத்து இயற்கை சிரிக்கவில்லை கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக் கண்ணகி எரித்தகதை இன்னும் சரித்திரத்தில்-படிக்க இலக்கியப் புத்தகத்தில் எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள் எங்கள் தேசத்தில் மண்ணுக்கு இரையானார்-மதுரைகள் இன்னும் எரியவில்லை வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு வளர்த்த கடாவெட்டி புருச…

  24. எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா? (இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.) பன்னிரண்டு மணி பட்டாடை கட்டி வானம் விழித்துக் கொள்கிறது. கருவானக் கதவுடைத்து கனவு கலைந்து வான வெளி கண்விழித்துக் கொள்கிறது. வண்ண வண்ண ஒளிக்கலவை... அழகின் இருப்பிடமெல்லாம் அகன்ற வானில் அள்ளிக் கொட்டியிருக்க வீதிகளில் புகைமூடி வர்ண ஒளிக்கீற்று வடிவுதான்.... பனித்துளி சொட்டப் பகலைத் தெளித்தது போல் பொழுது பட்டாசுகளால் பல்வர்ணம்.... புத்தாண்டுப் பிறப்பு பகற் சேமிப்பெல்லாவற்றையும் பட்டாசாய் வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.