Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விடியலோட வந்தவள் வியக்கும் பல வினாக்கள்... விடைகள் தந்தவள் விடைபெறும் தருணமிது..! விடலை இவன் விடயத்திலும் விதைத்து விட்ட தடயங்கள் பல. விரியும் அந்த வாழ்வெனும் வான்வெளியில் விரித்து விட்டால் வயதொன்றை கூட்டியே அதிகம்..! விந்தை இவள் வரவோடு வியந்து பல விடயங்கள் நடக்கும் என்றார் விபரம் இன்றியோர் - அவளோ விளையாடிச் செல்கிறாள் விலை கூட்டிய பொருண்மிய விடயங்கள் தந்துமே..! விடியலுக்காய் விழித்திருக்கும் தாய் மண்ணில்.. விழுமியங்கள் தொலைந்து விழும் பிணங்களே விடையாய் இம்முறையும்.! விடுதலைக்கும் விரியுது தூரம் இன்னும் நீண்டே..! விண்வெளியில் வியத்தகு மாற்றம் விரித்த மாயனின் கூற்றை விழுங்கி விட்டுச் செல்பவளே - நீ விட்டுச் செல்லும் தங்கையவள் பின் வர…

  2. காற்றில் கரையும் இலையின் பனித்துளி போல் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது சுயநலத்தில் கரையும் மனிதநேயம் சொந்தங்களுக்காக வாழும் இரவல் வாழ்க்கை... மனசுக்கும் செயலுக்கும் இடையே செயற்க்கையாக செய்யப் பட்ட நாகரீக மதில்சுவர் – இவைகளின் மத்தியில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... ஏழையின் வயிற்று பசி போக்காத இறை வழிபாடு... மனிததுவம் வளர்க்காத மானிட வளர்ச்ச்சி... அகம் மறை(ரு)க்கும் அறிவியல் வளர்ச்சி... பூவின் இதழினை ரசிக்க புள்வெளி பனித்துளி ருசிக்க அம்மாவின் அன்பில் மயங்க மனித வாழ்வின் உன்னதம் உணர இடமளிக்காத அவசர உலகில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... மனதை ரணமாக்கும் கெளரவ கொலைகள்... கண்ணெதிரே மறையு…

    • 0 replies
    • 514 views
  3. 01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …

  4. கடலம்மா கடலம்மா கருணை கொண்ட தாயம்மா அலை மடி மீது தாலாட்டி அமுதூட்டிச் சீராட்டி வளர்த்திட்ட சேயும் நானம்மா…! முடிவில்லாப் பயணங்கள் உன் மடிமீது நாம் செய்தோம் அளவில்லாப் பொறுமை தந்து அருள்பவளும் நீயம்மா…! ஆதிக்க வெறியர்கள் அடுக்கடுக்காய் குண்டுதள்ள உன் வயிற்றில் அவை தாங்கிக் காத்தவளும் நீயம்மா..! அமைதியின் கோலமாய் சீரான அலை கொண்டு கரையோடு மோதுபவளே அழிவில்லா அழகு தந்து அகம் மகிழ அழைப்பவளே அழிவுக்கு வகை செய்ய ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா…! இன்று…. கணமும் எங்கள் தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த ஏக்கத்தின் முதலாய் நீயம்மா…! உறவுகளின் உயிர் குடித்த பூதத்தின் விளை நிலமாய் ஆகினையே ஏனம்மா…?! மடி தாங்கிய மகவுகளின் மகத்தான் உயிர் குடித்து சாதிக்க நினைத்ததுவும…

  5. இன்னும் எலும்புக‌ள் - சுகுமார‌ன் என‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும். ம‌ர‌ண‌த்தால் விறைத்திருக்கிற‌து என் வீடு நான் உன‌க்குத் த‌ரும் சொற்க‌ளில் மிருக‌ங்க‌ளின் கோரைப் ப‌ற்க‌ள் முளைத்திருக்க‌லாம் உன்னுட‌ன் ப‌கிர்ந்து கொள்ளும் சிக‌ரெட்டில் விஷ‌த்தின் துக‌ள்க‌ள் இருக்க‌லாம் உன்னுடைய‌ த‌ட்டில் ப‌ரிமாறும் உண‌வில் ச‌கோத‌ர‌ர்க‌ளின் மாமிச‌ம் க‌ல‌ந்திருக்க‌லாம் உன‌க்குத் த‌யாரிக்கும் தேநீரில் க‌ண்ணீரின் உப்பு க‌ரைந்திருக்க‌லாம் இந்த‌ நாட்க‌ள் காக்கிநிற‌ப் பேய்க‌ளால் நிர்வ‌கிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ இன்று பூக‌க‌ளும் ப‌ற‌வைக‌ளும் குழ‌ந்தைக‌ளின் புன்ன‌கைக‌ளும் பெண்க‌ளும் எரிந்து போயினர் உறுப்புக்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள் …

    • 0 replies
    • 512 views
  6. இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள் ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி... [ http://southasiaspeaks.wordpress.com/2009/11/23/hr-collective-in-india-calls-for-total-repeal-of-armed-forces-special-powers-act/ ] வானலையில் குயிலாய் ஒலித்தவள் இதய நோயாளி.. வன்னி ஆக்கிரமிப்பில் பல்லாயிரம் தோழிகளோடு பிணமாய்..! தமிழ் பெண்களை புணர்ந்திழுத்தே கொன்ற சிங்கள இன வெறிநாய்களின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் கொடூரத்தின் முன்னே.. மக்களின் கண்ணீர் காய்வதற்கிடையில்.. நாலே வயது நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை காம வெறியில் பிரிச்சு மேஞ்சு மோச்சரியில் போடுகிற ஆக…

  7. உன்னை முத்தமிட எனக்கு விருப்பமில்லை என் காதலை சத்தமிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை தொடுதலுக்காக மட்டும் காதலில்லை என்பதில் என் மனம் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை மறதியை வெல்லும் ஆற்றல் உன் நினைவுக்கு மட்டும் தானடி உள்ளது சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப் போன அத்தனை வார்த்தைகளும் உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறது உன் கண்கள் மட்டும் ஏனோ அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது எது வரை …என்பதில் தான் எனக்கும் உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம் இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம். http://vinmugil.blogspot.fr/2012/12/blog-post_29.html

  8. <span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூ…

  9. உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…

  10. அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…

  11. முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்

  12. மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ வண்ணமும் வாசமும் தான் நாளுக்குநாள் மாறிக்கொண்டன. நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் மலர்தலை தடுக்கவா முடியும். உன் விழிகள் ஏணியாகவும் இருந்தது _எனை தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது. சிரித்தேன். கடந்தும் திரும்பி பார்த்தாய். விரும்பித்தானே பார்த்தாய்? முடக்கில் போட்ட பனங்குத்தி மக்கி மடங்கும்வரை அரியாசனம். அப்புறமென்ன தரையே ஆசனம். கடந்து போனது நீ மட்டுமா, காலமும் தான். பகிர்ந்த சில வார்த்தைகளில் பொதிந்திருக்குமோ என்றெண்ணி, பகுத்தறிந்து அதுவா இதுவா என்றங்கலாய்த்தல்லவா_என் அனேக அந்திகள் கலைந்தது. மாரடிக்கும் பெண்(டு)கள் கூட ஓய்ந்ததுண்டு_உனை தேடிதிரிந்த நான்? எரிகல் விழுகையிலும் கல் எறிகையிலும் உன்னைத்தான் நினைக்கிறேன்…

  13. எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்

  14. வேண்டாம் அம்மா வேண்டாம் !!! ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம் அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ? மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை மலைபோல உயர உயர – எம் மனம் பட்ட பாடு யார் அறிவார் இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது உனக்கும் என்னம்மா கோபம் சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க எத்தணித்த வேளையிலே இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து அள்ளிச் சென்றது ஏனம்மா? பாலகன் யேசு ப…

    • 11 replies
    • 930 views
  15. விண்மலர் பூத்தது பூமியிலே.... மண்ணுலகில் பார்புகழும் மன்னவனை வரவேற்க விண்ணதிலே விடிவெள்ளி வேந்தருக்கு வழிகாட்ட தண்மதியோ வெண்சுடராய் கண்விழித்துக் காத்திருக்க மண்ணகத்தில் மன்னவனாய் மரிமகனும் அவதரித்தார் பாவிகளாய் நாமிருக்க பாவமற்ற செம்மறியாய் பூமிதனில் புதுமலராய் புண்ணியனாய் வந்துதித்த தேவனவன் செய்வீக ஜோதிமயமாய் ஜொலிக்க ஆயர்கள் பாடியிலே அன்பு மகன் அவதரித்தார் மாசற்ற மாமரியோ மலர்ந்த மகன் மாதவனின் நேசத்தில்தான் நெகிழ்ந்து நெஞ்சத்தில்தான் வியந்து பாசத்தில் தாவீது குலத்துதித்த சூசையுடன் பூசித்து புதுப் பொலிவாய் பொன்மகனை வரவேற்றார் தேவனின் தூதர்களோ தெய்வீக ஒளியுடனே வானகமும் வையகமும் வாழ்த்தியே ஒலியிசைக்க ஆதவன் வருகை கண்டு அலர்ந்திடும் தாமரைபோல் கானங்கள் பல இச…

  16. ஆக்ரோசமான நீலவானில்... அரைமதி நிலவின் மீதேறி... அலைக்கழிந்த பயணம்! நிலமிழந்த நிலையில்... புலம்பெயரும் விலையில்... யாரோ தலைமையில்... போவோர் கவலையில்... ஏதேதோ தேவைகள்! சில கால முன்னெடுப்பில்... பல தடவை பின்னெடுப்பு! மனதில் அணையா அடுப்பாய்... நடுக்கடலில் அசையும் துடுப்பு! மலை அலை தாவி... நீர்த் திவலைகள் மேவி... புயல் மழை தூவ... கரு முகில்களுக்குள் நிலவு மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்! பசியோடு தாகத்தோடும் பழகிய தொண்டைக்குழிகள் களைத்துப் போகும்! வந்தோர் கண்ணீர் உப்புநீரில் கலக்க, மீன் தின்றது போக... மீதி மிதந்து சில நாளில் கரையொதுங்கும்!

  17. என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன மரபியல் தாண்டிய முடிவுகளால்... மரத்துப்போய் விடுகின்றது மனசு...! புதிதாய் எதையோ தேடுகின்றது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்காகவே ஏங்குகிறது நேரகாலம் தெரியாமல்... வந்துபோகும் நினைவுகளால், கண்களோடு சேர்ந்து... நனைந்துபோகின்றது மனசும். பாரமான இதயம் பற்றியெரிய... ஈரமான மனசு கொதித்து, ஆவியாகிக் கிளம்புகின்றன ஏமாற்றங்கள். கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில், என் அழுகையைத்தவிர... வேறெதுவும் உண்மையில்லை...!

  18. எல்லாருக்கும் வணக்கம், நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி! பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு! சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில் தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு! அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட நண்ப…

  19. தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும் ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் கார்த்திகையில் இல்லம…

  20. Started by கவிதை,

    என் தோளில் சாய்ந்து சிரிப்பாள், என் நெஞ்சில் முகம் புதைத்து அழுவாள், பலமுறை அவளைச் சுமந்திருக்கிறேன்! அப்பொழுதெல்லாம் சுமையாகத் தெரியாதாவள்... இப்பொழுது தன் நினைவுகளாலேயே பாரமாக்குகிறாள்! கனத்துத் தொங்கும் என் இதயம்... அறுந்துவிழத் துடிக்கிறது...! என் இதயத் துடிப்புகளின் கடைசி ஏக்கங்கள்கூட... அவளுக்குத் தெரியாமலே அடங்கிப் போகலாம்! ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள், ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு... தெரியாமலேயே போகட்டும்! ஆடி முடிந்து வரும்போது... எல்லாமே அடங்கிப் போயிருக்கும்! பல காதல்களின் சரித்திரங்களைப் போலவே... என் காதலின் ஆத்மாவும்... கல்லறைக்குள்ளேயே முடங்கட்டும்!

  21. இடிவிழுந்த மனதோடு இயங்குகிறேன் _இங்கு தடியிளந்த கொடியென தளம்புகிறேன் .... வெப்பமூச்சு வெடித்தெழும்ப தேடுகிறேன் _இங்கு எப்பவாச்சும் ஒருகண் மூடி எப்படியோ தூங்குகிறேன் .......... தப்பாச்சோ நான் வந்தவழி _இன்னும் முப்பாச்சல் போடுது பட்டகடன் ! கஞ்சியோடு கந்தல்துணியோடு கவலையற்றிருந்தவன் _அடுத்த கணத்துக்கே அஞ்சி வாழ்கிறேன் வண்ணமாக ......... இல்லையென்றால் அசிங்கமென்று நெஞ்சிலுதைக்குது ௬ட்டம் ! முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம் சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல் பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க . தொந்தரவென்று புலம்புகினம் ........ எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு ஏங்கவேண்டுமா என்னால் ? ஒற்றை வார்த்தையில் மு…

  22. Started by கோமகன்,

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்... பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ... படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்... அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் .... அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் .... பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் .... மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் ..... பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ... முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் .... வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதென…

  23. நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…

  24. சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட மலரே உன்னை மலர்ச் சிறகாக்கி என்றோ என் நினைவுச் சிலையில் செதுக்கி வைத்தேன்...! தோப்பிருந்து புறப்பட்டு இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை மலரே உன் நினைவு மட்டும் மனதோடு இல்லைக் கண்டால் அடிக்கும் என் சிறகும் ஓய்தல் காண்கிறேன் அதற்காய் நான் உன்னடிமையில்லை...! உன் அன்புக்கு அடிமையாகி உன்னினைவின் சக்தியில் பறப்பதாய் மட்டுமே உணர்கிறேன் பார்...! அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....! நாளை என் சிறகுகள் பலமிழந்தால்.... உடல் வீழ்வது உறுதி என் இலட்சியம் என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும் அவ்வேளை உன் அன்பு மட்டும் எனைத் தாங்கும் கோலம் கண்டால் மீண்டும் எழுவேன்...! வேற்றுமையில்லா உன்னன்பு போதுமடி என் ச…

  25. உலகம் அழிந்தால்.... கவிஞர் வைரமுத்து ''48மணிநேரத்தில் உலகப்பந்து கிழியப்போகிறது. ஏறுவோர் ஏறுக, என்சிறகில். இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன். இரண்டே இரண்டு நிபந்தனைகள்: எழுவர் மட்டுமே ஏறலாம்.உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும் உடன்கொண்டு வரலாம்". திடீரென்று... ... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை. ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று. பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி. மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது. வான்வெளியில் ஒரு வைரக்கோடு. கோடு வளர்ந்து வெளிச்சமானது. வெளிச்சம் விரிந்து சிறகு முளைத்த தேவதையானது. சிறகு நடுங்க தேவதை சொன்னது: ''48 மணி நேரத்தில் உலகப்பந்து கிழியப் போகிறது. ஏறுவோர் ஏறுக என்சிறகில் இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.