கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் கண்ணீரில் கப்பல்விட்டு விளையாடுகிறாள்! அந்தக் கப்பலைப்போலவே... நனைந்து பாரமாகிறது என் மனசும்! என் மனதின் மழைக்காலங்களில்... அவள் நனைந்து பூரிக்கின்றாள்! இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய், என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது! என்னைப் படுத்தும் காலங்கள்... அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை! வரவிருக்கும் வசந்தத்தையும்... வண்ணத்துப் பூச்சிகளோடும் பூத்துக் குலுங்கும் பூக்களோடும் அவள் இரசிப்பாள்! அதிகாலைப் பனித்துளிகள் போல... கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்! மீண்டும் ஒரு மழை வரும்...! அந்த மழையிலும் அவள் கப்பல்விட்டுச் சிரிப்பாள்! சிரிக்கும் பொழுதில் தோன்றும் அவளின் கன்ன மடிப்புக்களில்... நான் அடங்கிப்போவேன்! சிறகடிக்கும் சிட்டுக்குருவிய…
-
- 7 replies
- 1.1k views
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 433 views
-
-
அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…
-
- 14 replies
- 6.3k views
-
-
அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …
-
- 15 replies
- 1.1k views
-
-
நுதலில் உலவும் அளகமே வேய்கொள் தோளுடன் புலவியோ ?? கன்னக் கதுபபுகளில் தவழ்ந்து காதுமடலுடன் கலவி கொள்கிறாய் !! நுதல் - நெற்றி அளகம் - முன்னுச்சி மயிர் வேய்கொள் - மூங்கில் போல் வளைந்த தோள் புலவி - ஊடல்
-
- 4 replies
- 1.2k views
-
-
கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த நிழல் படிந்து மறையும், வெயில் பட்டு தேகம் சிலிக்கும், மெல்லிய கூதல் காற்றில் பரவும். மாலை சரிகையில் _அந்தரத்தில் மழைப்பூச்சிகள் உலாவும் பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். நீர் மோதும் வரப்புகளில், கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் இரை தேடி, சிலநேரம் இடம் மாறும். வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம் மிதப்பவற்றில் எல்லாம் எரியெறும்புகள் ஏறித்தவிக்கும். காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில் விதைக்காத சில நிலத்தில் அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். பச்சைபிடித்து, அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் அடங்கி இருக…
-
- 16 replies
- 1.4k views
-
-
போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…
-
- 20 replies
- 5.5k views
-
-
முன்பை விட அதிகமாக கோபம் வருகிறது உன் கவிதைக்கு இன்னும் அது திருந்தவில்லையென பேசிக்கொள்கிறார்கள் அநீதிகள் இழுத்துச் செல்வதை அது விட்டு விடவில்லை உரத்து குரல் கொடுப்பதை அது நிறுத்திக்கொள்ளவில்லை துரத்தப்பட்டவனோடு கைகோர்த்து நிற்கிறது வெளியே நிறுத்தப்பட்டவனோடு வெயிலில் கிடக்கிறது பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் குழந்தைகளோடு ஏன் பேசிக்கொண்டிருக்கிறது அவர்களின் கைகளைத் தடவிக் கொடுப்பதும் இனி சுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்வதும் கவிதையின் வேலையில்லை மனு இன்னும் சாகவில்லை என்று குற்றம் சாட்டும் உன் கவிதை என்ன வக்கீலுக்கா படித்திருக்கிறது சாதியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் பங்கி குழந்தைகளை வண்டியில் ஏற்ற மறுப்பவர்கள் வால்மீகி பெண்களுக்கு கட்டளையிடுபவர…
-
- 1 reply
- 477 views
-
-
என்னை மன்னித்து விடு குவேனி மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது - இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெர…
-
- 3 replies
- 2.1k views
-
-
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால் ஊமைகள் அல்ல. நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால் முடங்களும் அல்ல. ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான் கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம். எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே எங்களின் கைகளை மெளனித்துள்ளோம். எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”. நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”. நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்” காலங்கள் மாறும் அது விதி. கவலைகள் தீரும் அதுவும் விதி. “எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ “அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!! “எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ “அது” முழைத…
-
- 0 replies
- 463 views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 553 views
-
-
பாரதியார் ஒரு நல்ல கவிஞர்.அவர் மறுபிறவி எடுத்து யாழ்களத்திற்கு வராமல் ஈழதமிழனாக சிட்னிக்கு வந்திருந்தால் எப்படி கவிதை வடித்திருப்பார் என்பதை பற்றி சிந்தித்தேன். அப்படியே கவிதையும் எழுதி விட்டேன்,அதற்காக எனக்கும் ஒரு மன்றத்தை ஆரம்பித்து போடாதையுங்கோ தொடர்ந்து பாரதியார் கவிதைகளை நான் ரீமிக்ஸ் பண்ண போறன். காணி நிலம் வேண்டும் - சாய்பாபா காணி நிலம் வேண்டும் - அங்கு அழகிய பளிங்கு மேல்மாடி "கோஸ்டிலி விட்டிங்குடன்" கட்டி தர வேண்டும் சுவீமிங்பூல் அருகினிலே - அப்பிள் மரத்தினிலே காயும்,பழமும் பத்து,பன்னிரன்டு -பார்ம் மரம் முற்றத்தில் வேண்டும் - நல்ல முத்து சுடர் போல் நிலாவொளி முன்பு வரவேண்டும் - அங்கு கத்தும் குக்குபுரா ஓசை - சற்றே வந்து காதில் ப…
-
- 34 replies
- 4.5k views
-
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 460 views
-
-
இந்த பிஞ்சு வயதினிலே உனக்கு நேர்ந்த கொடுரம் நினைக்கும் போது வாழ்வே வெறுகுதே நெஞ்சு முழுதும் சோகம் கண்களில் எல்லாம் ஈரம் இமைகள் மூடித் தூங்கும் வேளை பகை மீது கோபம் (முகநூல்)
-
- 0 replies
- 475 views
-
-
எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?
-
- 6 replies
- 598 views
-
-
எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …
-
- 1 reply
- 461 views
-
-
ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…
-
- 4 replies
- 762 views
-
-
ஒற்றையடிப் பாதை கன்னங் கரிய இருட்டு சில் வண்டின் ரீங்காரம் உடலை சிலிர்க்க வைக்கும் குளிர் தூரத்தில் கோட்டானின் கதறல் பக்கத்தில் இருந்த பதிந்த மரக்கிளையில் தொங்கி விழிகளை உருட்டிய வௌவால் எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம் எதையும் இவன் இலட்சியம் செய்யவில்லை இலட்சியம் எல்லாம் எதிரே தூரத்தில் ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை. இன்றோ நாளையோ இடிந்து விழுவேன் என்றே சொல்லிய குடிசை மண் மதில் அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில் எரிந்தும் எரியாததுமான மங்கலான கலண்டர் முருகன் படம் விடிந்தால் சூரியன் விழுந்தடித்து உள்ளே வரும் வித்தியாசமான ஓலைக் கூரை மூலையில் கிடந்த முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில் முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி முழுவட்டமாய் …
-
- 2 replies
- 1.3k views
-
-
இனி என்ன வாழ்க்கை என்ற சோகம் ராகம் வேண்டாமே விடுதலை தீயினை அணைத்திடும் துரோக எண்ணங்கள் வேண்டாமே உணர்வுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே உறவினை இழந்ததால் உறவுகள் முடியாதே நம்பிக்கை ஒன்றே வாழ்வை வெல்லும் நாணயம் ஆகிறதே கண்ணீரைத் துடை மனமே புதுக் காலம் இசை மனமே வெல்லும் நெஞ்சை உருவாக்கு வெற்றி வாழ்வை அரங்கேற்று !!!! (நன்றி முகநூல்)
-
- 0 replies
- 383 views
-
-
மூடிய கனவை இமையா பறிக்கும் சூரியப் பகலை முகிலா மறைக்கும் ஆடிய தெருவை சுவடா மறக்கும் ஆணவம் அதனை அறிவா மதிக்கும் நேரிய வழியை நிழலா தடுக்கும் நித்தியா தாமரையின் நிஜமா பொறுக்கும் மூழ்கிய படகை கரையான் அரிக்கும் முற்றிய பகையை மனமா சலிக்கும் நம்மை நாமே பழுது பார்க்கலாம் நாளை உண்டு சபதம் ஏற்கலாம் முகநூல்
-
- 1 reply
- 755 views
-
-
கொஞ்சி பேசத்தான் தெரிகிறது சிறை பிடித்தவர்களிடமும் உனக்கு இனி போர் பறையாய் முழங்கு விடுதலை பிறக்கும் உனக்கு kaaraimainden.blogspot.com
-
- 0 replies
- 446 views
-
-
ஆண்டான் அடிமை விடும் நிலை தன்னை பூண்டோடு ஒழித்து இங்கு நாம் மாற்றுவோம் நீண்ட நெடுங்கலாம் தொடரும் மடமைக் கருத்தினை களை எடுப்போம் ஒரு சாதி சமய பேதங்கள் இல்லாத சமூக நீதி படிப்போம் ! (முகநூல்)
-
- 1 reply
- 488 views
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 407 views
-
-
காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…
-
- 18 replies
- 2.8k views
-